second review completed

யமகம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
யமகம் சொல்லணிகளில் ஒன்று.  மடக்கணியின் ஒரு வகை.
யமகம் சொல்லணிகளில் ஒன்று.  மடக்கணியின் ஒரு வகை. நான்கு அடிகளிலும் முதல்தொடர் ஒன்றாக வந்து பிரிந்து வேறுவேறு பொருலைத் தருவது யமகம்.  

== விளக்கம் ==
==விளக்கம்==
மடக்கணியில் ஒரு பாடல் அடியில் உள்ள சில சீர்கள் அடுத்த அடியில் வரும்போது முன்னடியின் எதுகையும் மோனையும் ஒன்றாக வருவது யமகம். ஓர் அடியின் முதலில் வந்த சொற்களே மற்ற அடிகளின் முதலிலும் வந்து,  அச்சொற்கள் ஒவ்வொரு அடியிலும் வேறு வேறு பொருளைத் தருவது யமகம்.

தமிழில் யமக அந்தாதி என்னும் வகை நூல்கள் முழுவதும் யமகப் பாடல்களால் ஆனவை. [[திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி]], திருசிராமாலை யமக அந்தாதி, [[திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி|திருத்தில்லை யமக அந்தாதி]] போன்ற  நூல்கள் முழுதும் யமகப்பாடல்களால் ஆனவை.
தமிழில் யமக அந்தாதி என்னும் வகை நூல்கள் முழுவதும் யமகப் பாடல்களால் ஆனவை. [[கந்தர் அந்தாதி]] முழுவதும் யமகப் பாடல்களால் ஆனது.  [[திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி]], திருசிராமாலை யமக அந்தாதி, [[திருத்தில்லை நிரோட்டக யமக வந்தாதி|திருத்தில்லை யமக அந்தாதி]] போன்ற  நூல்கள் முழுதும் யமகப்பாடல்களால் ஆனவை.

==எடுத்துக்காட்டுகள்==
==எடுத்துக்காட்டுகள்==
Line 18: Line 18:
பதம் பிரித்துப் பொருள்
பதம் பிரித்துப் பொருள்

சாரங்கஞ்சங்கரி -சாரங்கம்-மான். சங்கரி-இறைவி.  
*சாரங்கஞ்சங்கரி -சாரங்கம்-மான். சங்கரி-இறைவி.
 
*சாரங்கஞ் சங்கரி தாஞ்சக்கரங்கையிற் சாரங்கம்+சங்கு +அரிதாம் சக்கரம்
சாரங்கஞ் சங்கரி தாஞ்சக்கரங்கையிற் சாரங்கம்+சங்கு +அரிதாம் சக்கரம்  
*சாரங்கஞ் சங்கரியா சார்+அங்கம்+சங்கரியாசார் அங்கம்-பொருந்தியஉடல்.
 
*ஆசாரம்-சீலம். கஞ்சம்-தாமரை.
சாரங்கஞ் சங்கரியா சார்+அங்கம்+சங்கரியாசார் அங்கம்-பொருந்தியஉடல்.  
 
ஆசாரம்-சீலம். கஞ்சம்-தாமரை.
 
======கந்தர் அந்தாதி======
<poem>
திருவாவி னன்குடி பங்காள ரெண்முது சீருரைச
திருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய்
திருவாவி னன்குடி யேரகங் குன்றுதொ றாடல்சென்ற
திருவாவி னன்குடி கொண்டதண் கார்வரை செப்புமினே.
</poem>

*முதலடி- திரு+ஆவி+நன்குடி +பங்காளர் -திருமகளுக்கு உயிரான திருமாலும், தேவியை பாகம் கொண்ட சிவனும்
*இரண்டாம் அடி- சதிர்+ உவாவிநன்+குடி பெருமைடைய இளையவன் முருகன் உறையும்
*மூன்றாம் அடி -திருவாவிநன்குடி-பழனி
*நான்காம் அடி-அதிர்+உவா+இனன்குடி -அதிரும்(முழங்கும்) யானை இனங்களைக் கொண்ட பழமுதிர்ச்சோலை
==உசாத்துணை==
==உசாத்துணை==
[https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2021/Jun/12/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-3641655.html மகாவித்துவானின் யமக அந்தாதி]

*[https://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2021/Jun/12/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-3641655.html மகாவித்துவானின் யமக அந்தாதி]
*[https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0040256/ACL-FTS_00438_%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_1937.pdf தமிழ் இணைய மின்னூலகம்-கந்தர் அந்தாதி]

{{Being created}}
{{Second review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 19:08, 30 March 2025

யமகம் சொல்லணிகளில் ஒன்று. மடக்கணியின் ஒரு வகை. நான்கு அடிகளிலும் முதல்தொடர் ஒன்றாக வந்து பிரிந்து வேறுவேறு பொருலைத் தருவது யமகம்.

விளக்கம்

மடக்கணியில் ஒரு பாடல் அடியில் உள்ள சில சீர்கள் அடுத்த அடியில் வரும்போது முன்னடியின் எதுகையும் மோனையும் ஒன்றாக வருவது யமகம். ஓர் அடியின் முதலில் வந்த சொற்களே மற்ற அடிகளின் முதலிலும் வந்து, அச்சொற்கள் ஒவ்வொரு அடியிலும் வேறு வேறு பொருளைத் தருவது யமகம்.

தமிழில் யமக அந்தாதி என்னும் வகை நூல்கள் முழுவதும் யமகப் பாடல்களால் ஆனவை. கந்தர் அந்தாதி முழுவதும் யமகப் பாடல்களால் ஆனது. திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி, திருசிராமாலை யமக அந்தாதி, திருத்தில்லை யமக அந்தாதி போன்ற நூல்கள் முழுதும் யமகப்பாடல்களால் ஆனவை.

எடுத்துக்காட்டுகள்

திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி

சாரங்கஞ் சங்கரி கட்சிச்சித் தேய்ந்தகைச் சங்கரனார்
சாரங்கஞ் சங்கரி தாஞ்சக் கரங்கையிற் றாங்கினன்சேய்
சாராங்கஞ் சங்கரி யாநண் ணினர்க்கந்தத் தந்திரத்தா
சாரங்கஞ் சங்கரி தேயெனச் செய்நின் சரண்டந்ததே. (7)

பதம் பிரித்துப் பொருள்

  • சாரங்கஞ்சங்கரி -சாரங்கம்-மான். சங்கரி-இறைவி.
  • சாரங்கஞ் சங்கரி தாஞ்சக்கரங்கையிற் சாரங்கம்+சங்கு +அரிதாம் சக்கரம்
  • சாரங்கஞ் சங்கரியா சார்+அங்கம்+சங்கரியாசார் அங்கம்-பொருந்தியஉடல்.
  • ஆசாரம்-சீலம். கஞ்சம்-தாமரை.
கந்தர் அந்தாதி

திருவாவி னன்குடி பங்காள ரெண்முது சீருரைச
திருவாவி னன்குடி வானார் பரங்குன்று சீரலைவாய்
திருவாவி னன்குடி யேரகங் குன்றுதொ றாடல்சென்ற
திருவாவி னன்குடி கொண்டதண் கார்வரை செப்புமினே.

  • முதலடி- திரு+ஆவி+நன்குடி +பங்காளர் -திருமகளுக்கு உயிரான திருமாலும், தேவியை பாகம் கொண்ட சிவனும்
  • இரண்டாம் அடி- சதிர்+ உவாவிநன்+குடி பெருமைடைய இளையவன் முருகன் உறையும்
  • மூன்றாம் அடி -திருவாவிநன்குடி-பழனி
  • நான்காம் அடி-அதிர்+உவா+இனன்குடி -அதிரும்(முழங்கும்) யானை இனங்களைக் கொண்ட பழமுதிர்ச்சோலை

உசாத்துணை

✔ Second review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.