இயன்மொழி: Difference between revisions
No edit summary |
Logamadevi (talk | contribs) No edit summary |
||
| Line 78: | Line 78: | ||
*[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214333-19874 புறநானூறு இயன்மொழி-தமிழ் இணைய கல்விக் கழகம்] | *[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214333-19874 புறநானூறு இயன்மொழி-தமிழ் இணைய கல்விக் கழகம்] | ||
{{ | {{Finalised}} | ||
[[Category: Tamil Content]] | [[Category: Tamil Content]] | ||
Revision as of 17:29, 18 March 2025
இயன்மொழி பாடாண் திணையின் துறைகளில் ஒன்று. அரசனின் இயல்பைக் கூறி வாழ்த்துதல் அல்லது பரிசில் பெறுவதற்காக வாழ்த்துதல் என இத்துறைக்கு இரண்டு விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
விளக்கம்
இயன் மொழி அல்லது இயன்மொழி வாழ்த்து என்னும் இத்துறைக்கு இயல்பைக் கூறி வாழ்த்துதல் என்பது பொருள்.பரிசில் பெறுவதற்காக இத்தகைய வாழ்த்து மொழியப்படும். புறப்பொருள் வெண்பாமாலை இத்துறைக்கு இரண்டு விளக்கங்கள் தருகிறது. கொளு இதனை
‘இன்னோர் இன்னவை கொடுத்தார் நீயும்
அன்னார் போல அவை எமக்(கு) ஈக என
என்னோரும் அறிய எடுத்துரைத் தன்று (கொளு.6)
‘இத்தன்மையையுடையவர்கள் இத்தன்மையுடைய பொருளை வழங்கினார்கள்; நீயும் அத்தன்மையுடைய பொருள்களை வழங்குவாயாக என எல்லோரும் அறியச் சொல்லுதல்’ என்று விளக்குகிறது.
பாரியும் பேகனும் கொடுத்த கொடைகளைக் காட்டி அதுபோலத் தர வேண்டுமெனக் காட்டுகிறது, வெண்பா.
முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
எல்லைநீர் ஞாலத்(து) இசைவிளங்கத் - தொல்லை
இரவாமல் ஈந்த இறைவர்போல் நீயும்
கரவாமல் ஈகை கடன்
மன்னனின் சிறப்பு இயல்புகளைக் கூறுவதும் இயன்மொழி என இரண்டாவது விளக்கம் அமைந்துள்ளது.
மயல்அறு சீர்த்தி மான்தேர் மன்னவன்
இயல்பே மொழியினும் அத்துறை ஆகும்’ (கொளு.7)
‘மிக்க புகழையும் தேரினையும் உடைய அரசனின் தனிமையைச் சொல்லுதலும் அத்துறை சார்ந்தது’ என்பது பொருள். வெண்பா, ‘போரில் அரசன் தன் உயிரைப் பாதுகாத்தலை நினையான்; இரவலர்க்குக் கொடுக்கும்போது இவ்வளவுதான் கொடுக்க வேண்டும் என வரையறை கொள்ளான்; உயிர்களைப் பேணுதலில் இன்னாரையே காக்க வேண்டும் என்று வரையறை செய்யான்’ எனச் சிறப்பு இயல்புகளை எடுத்துக்காட்டுகிறது.
தொல்காப்பியம்
அடுத்துர்ந்தேத்திய இயன்மொழி வாழ்த்து
என்றி இதன் இலக்கணத்தைக் கூறுகிறது.
புறநானூற்றிலுள்ள இத் துறைப் பாடல்கள் பாட்டுடைத் தலைவனின் இயல்புகளையே கூறுகின்றன.
எடுத்துக்காட்டு
புறநானூறு 12
- திணை : பாடாண் துறை இயன்மொழி.
- பாடியவர் : நெட்டிமையார்
- பாடப்பட்டவன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
பாணர் தாமரை மலையவும், புலவர்
பூ நுதல் யானையொடு புனை தேர் பண்ணவும்,
அறனோ மற்று இது விறல் மாண் குடுமி!
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு,
இனிய செய்தி, நின் ஆர்வலர் முகத்தே?
உன்னைப் பாடும் பாணர்கள் நீ வழங்கும் பொற்றாமரை விருது அணிகலனைத் தலையில் சூடிக்கொள்கின்றனர். புலவர்கள் நீ வழங்கும் யானைமீதும் தேர்மீதும் ஏறிச் செல்கின்றனர். வெற்றியைக் குவிக்கும் ‘குடுமி’ வேந்தே! பிறர் மண்ணைக் கைப்பற்றும் கொடுமையைச் செய்து அங்குக் கிடைத்த பொருள்களைக் கொண்டு நீ விரும்புபவர்களுக்கு மட்டும் இன்ஃபம் தரும் செயல்களைச் செய்தல் அறச்செயலோ?- எனப் பாண்டியனின் இயல்பைப் பாடுவதால் இது இயன்மொழி.
புறநானூறு 30
- திணை : பாடாண் துறை : இயன்மொழி.
- பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார்.
- பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி.
செஞ்ஞா யிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,
பரிப்புச் சூழ்ந்த மண் டிலமும்,
வளி திரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்றிவை 5
சென்றளந்து அறிந்தார் போல, என்றும்
இனைத்து என்போரும் உளரே அனைத்தும்
அறிவுஅறி வாகச் செறிவினை யாகிக்,
களிறுகவுள் அடுத்த எறிகல் போல
ஒளித்த துப்பினை ஆதலின், வெளிப்பட 10
யாங்ஙனம் பாடுவர், புலவர்? கூம்பொடு
மீப்பாய் களையாது, மிசைப் பரந் தோண்டாது,
புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடல்பல் தாரத்த நாடுகிழ வோயே!
அளவிட்டுக் கூறமுடியாத அடக்கம் கொண்டவன் நீ.யானை வாயில் பட்ட விளாம்பழம் போலச் செரிக்கும் வலிமையை மறைத்துக்கொண்டிருப்பவன் நீ. இப்படிப்பட்ட உன்னைப் புலவர் எப்படிப் பாடமுடியும்? கூம்பின் பாய்மரத்தைத் தொய்ய விடாமல் புகார் நகரத்தில் புகுந்த பெருங்கலத்தை (பெருங்கப்பலை)த் தடுத்து நிறுத்தி அதிலுள்ள பண்டங்களை உள்நாட்டுப் பகுதிகளுக்குக் கொண்டுவந்து கொடுக்கும் கடல்பஃறாரம் (கடல்படு செல்வம்) நிறைந்த நாட்டுக்கு உரியவன் நீ - என அரசனின் இயல்பைப் பாடுவதால் இது இயன்மொழி.
உசாத்துணை
✅Finalised Page