வீற்றினிதிருந்த பெருமங்கலம்: Difference between revisions
(Created page with "வீற்றினிதிருந்த பெருமங்கலம் பாடாண் திணையின் துறைகளில் ஒன்று. அரசன் இனிதாக அரியணையில் வீற்றிருக்கும் மங்கலத் தோற்றத்தைப் பாடுவது. == விளக்கம் == ======புறப்பொருள் வெண்பாமாலை======...") |
No edit summary |
||
| Line 17: | Line 17: | ||
</poem> | </poem> | ||
பொருள்:அரசர்கள் பலரும் வாழ்த்தி நிற்க, கடல் சூழ்ந்த நாவலம் தீவு முழுமைக்கும் அரசன் எனக் கழல் அணிந்து அரியணையில் வீற்றிருந்தான் என அரசனின் செம்மாந்த நிலையை வெண்பா சிறப்பிக்கிறது. | பொருள்:அரசர்கள் பலரும் வாழ்த்தி நிற்க, கடல் சூழ்ந்த நாவலம் தீவு முழுமைக்கும் அரசன் எனக் கழல் அணிந்து அரியணையில் வீற்றிருந்தான் என அரசனின் செம்மாந்த நிலையை வெண்பா சிறப்பிக்கிறது. | ||
==உசாத்துணை== | ==உசாத்துணை== | ||
[https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214334-19875 பாடாண் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்] | [https://www.tamilvu.org/ta/courses-degree-d021-d0214-html-d0214334-19875 பாடாண் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்] | ||
{{ | {{Second review completed}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
Revision as of 02:56, 1 March 2025
வீற்றினிதிருந்த பெருமங்கலம் பாடாண் திணையின் துறைகளில் ஒன்று. அரசன் இனிதாக அரியணையில் வீற்றிருக்கும் மங்கலத் தோற்றத்தைப் பாடுவது.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் கூற்றுவன் குடியிருப்பது போன்ற கொடுந்தன்மை மிக்க வேலையுடைய அரசன் வீற்றிருக்கும் சிறப்பைக் கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
கூற்றிருந்த கொலைவேலான்
வீற்றிருந்த விறல் மிகுத்தன்று (கொளு.20)
வெண்பா
அழல் அவிர் பைங்கண் அரிமான் அமளி
நிழல் அவிர்பூண் மன்னர் நின்று ஏத்தக் - கழல் புனைந்து
வீமலி தார் மன்னவனாய் வீற்றிருந்தான் வீங்கு ஒலிநீர்ப்
பூமலி நாவல் பொழிற்கு (208)
பொருள்:அரசர்கள் பலரும் வாழ்த்தி நிற்க, கடல் சூழ்ந்த நாவலம் தீவு முழுமைக்கும் அரசன் எனக் கழல் அணிந்து அரியணையில் வீற்றிருந்தான் என அரசனின் செம்மாந்த நிலையை வெண்பா சிறப்பிக்கிறது.
உசாத்துணை
பாடாண் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✔ Second review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.