being created

நான்முகன் திருவந்தாதி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 5: Line 5:

==பெயர்க்காரணம்==
==பெயர்க்காரணம்==
முதல் பாடல் 'நான்முகன்' எனத் தொடங்குவதால் 'நான்முகன் திருவந்தாதி' எனப் பெயர் பெற்றது.
திருமாலைப் பற்றிய பிரபந்தமாக இருந்தாலும் முதல் பாடல் 'நான்முகன்' எனத் தொடங்குவதால் 'நான்முகன் திருவந்தாதி' எனப் பெயர் பெற்றது.  

==நூல் அமைப்பு==
==நூல் அமைப்பு==
நான்முகன் திருவந்தாதி அந்தாதித் தொடையில் 95 வெண்பாக்களைக் கொண்டது.
நான்முகன் திருவந்தாதி அந்தாதித் தொடையில் 95 வெண்பாக்களைக் கொண்டது. உலக வாழ்வின் நிலையாமை, இறையனுபவத்தால் கிடைக்கும் ஆனந்தம், சரனாகதி தத்துவம், பக்தி மார்க்கத்தின் சிரப்பு, வாத்ஸல்ய பக்தி, அவதாரங்கள் (வாமன, நரசிம்ம, வராக, ராம அவதாரங்கள்) குறிப்பாக கிருஷ்ணாவதாரத்தின் சிறப்புகள் போன்றவை இந்தப் பாடல்களின் பேசுபொருள்கள். நாராயணனின் பரத்வம் பேசப்படுகிறது.  பகவத் கீதையின் சாரமான சரம ஸ்லோகத்தின் கருத்தும் கூறப்படுகிறது.
 
கடல் நீரிலிருந்து அலைகள் தோன்றி, மீண்டும் அவை அதிலேயே அடங்கிவிடுவதுபோல பரம்பொருளாகிய நாராயணனிடமிருந்தே பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருள்களும் தோன்றி, மகாபிரளயத்தில் அவனிடமே அடங்குகின்றன என்று திருமழிசையாழ்வார் படைப்பின் முழுமுதற் பொருளாக நாராயணனையே காண்கிறார்.

சைவம், சமணம் உள்ளிட்ட பிற சமயங்களை நிந்தனை செய்யும் போக்கு காணப்படுகிறது. நாரயணனே பரம் என்பதால் சிவன், பிரம்மா போன்ற தெய்வங்களை அவன் அருள் வேண்டி நிற்பவர்களாகவும்,  பிற தெய்வ தெய்வங்களை வழிபடுபவர்கள் அடையும் துன்பங்களும்  கூறப்படுகின்றன.

ஆழ்வார்களின் படைப்புகளில் முதல் முறையாக மாதுர்ய பக்தி திருமழிசை ஆழ்வாரின் பாடல்களிலேயே காணக் கிடைக்கிரது.
==பாடல் நடை==

==பாடல் நடை==
====== நான்முகனை நாராயணன் படைத்தான் ======
<poem>
<poem>
நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனும்

Line 23: Line 25:
</poem>
</poem>

====== நானுன்னை அன்றி இலேன் ======
<poem>
<poem>
இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்
இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்

Revision as of 21:23, 22 April 2025

நான்முகன் திருவந்தாதி நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் மூன்றாம் ஆயிரத்தில் இயற்பா தொகுப்பில் இடம்பெறும் பிரபந்தம். திருமழிசை ஆழ்வாரால் இயற்றப்பட்டது.

ஆசிரியர்

நான்முகன் திருவந்தாதியை இயற்றியவர் திருமழிசை ஆழ்வார்.

பெயர்க்காரணம்

திருமாலைப் பற்றிய பிரபந்தமாக இருந்தாலும் முதல் பாடல் 'நான்முகன்' எனத் தொடங்குவதால் 'நான்முகன் திருவந்தாதி' எனப் பெயர் பெற்றது.

நூல் அமைப்பு

நான்முகன் திருவந்தாதி அந்தாதித் தொடையில் 95 வெண்பாக்களைக் கொண்டது. உலக வாழ்வின் நிலையாமை, இறையனுபவத்தால் கிடைக்கும் ஆனந்தம், சரனாகதி தத்துவம், பக்தி மார்க்கத்தின் சிரப்பு, வாத்ஸல்ய பக்தி, அவதாரங்கள் (வாமன, நரசிம்ம, வராக, ராம அவதாரங்கள்) குறிப்பாக கிருஷ்ணாவதாரத்தின் சிறப்புகள் போன்றவை இந்தப் பாடல்களின் பேசுபொருள்கள். நாராயணனின் பரத்வம் பேசப்படுகிறது. பகவத் கீதையின் சாரமான சரம ஸ்லோகத்தின் கருத்தும் கூறப்படுகிறது.

கடல் நீரிலிருந்து அலைகள் தோன்றி, மீண்டும் அவை அதிலேயே அடங்கிவிடுவதுபோல பரம்பொருளாகிய நாராயணனிடமிருந்தே பிரபஞ்சத்தின் அனைத்துப் பொருள்களும் தோன்றி, மகாபிரளயத்தில் அவனிடமே அடங்குகின்றன என்று திருமழிசையாழ்வார் படைப்பின் முழுமுதற் பொருளாக நாராயணனையே காண்கிறார்.

சைவம், சமணம் உள்ளிட்ட பிற சமயங்களை நிந்தனை செய்யும் போக்கு காணப்படுகிறது. நாரயணனே பரம் என்பதால் சிவன், பிரம்மா போன்ற தெய்வங்களை அவன் அருள் வேண்டி நிற்பவர்களாகவும், பிற தெய்வ தெய்வங்களை வழிபடுபவர்கள் அடையும் துன்பங்களும் கூறப்படுகின்றன.

ஆழ்வார்களின் படைப்புகளில் முதல் முறையாக மாதுர்ய பக்தி திருமழிசை ஆழ்வாரின் பாடல்களிலேயே காணக் கிடைக்கிரது.

பாடல் நடை

நான்முகனை நாராயணன் படைத்தான்

நான்முகனை நாராயணன் படைத்தான், நான்முகனும்
தான்முகமாய்ச் சங்கரனைத் தான்படைத்தான், – யான்முகமாய்
அந்தாதி மேலிட் டறிவித்தேன் ஆழ்பொருளை,
சிந்தாமல் கொண்மினீர் தேர்ந்து.

நானுன்னை அன்றி இலேன்

இன்றாக நாளையே யாக, இனிச்சிறிதும்
நின்றாக நின்னருளென் பாலதே, – நன்றாக
நானுன்னை யன்றி யிலேன்கண்டாய், நாரணனே
நீயென்னை யன்றி யிலை.

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.