ஆத்மாநாம்: Difference between revisions
Logamadevi (talk | contribs) No edit summary |
(changed single quotes) |
||
Line 7: | Line 7: | ||
நவீனத் தமிழ்க் கவிதைக்குப் பெரும் பங்களிப்பு செய்த ஆத்மாநாமின் தாய்மொழி கன்னடம். சதர்ன் சுவிட்ச் கியர்ஸ், கோரமண்டல் கார்மென்ட்ஸ், ரெங்கா அப்பாரெல்ஸ் ஆகிய கம்பெனிகளில் வேலைசெய்தார். டாப் டென் (1978) என்ற ரெடிமேட் ஆடை உற்பத்தி நிறுவனத்தைப் பெருங்கனவுகளுடன் தொடங்கினார். | நவீனத் தமிழ்க் கவிதைக்குப் பெரும் பங்களிப்பு செய்த ஆத்மாநாமின் தாய்மொழி கன்னடம். சதர்ன் சுவிட்ச் கியர்ஸ், கோரமண்டல் கார்மென்ட்ஸ், ரெங்கா அப்பாரெல்ஸ் ஆகிய கம்பெனிகளில் வேலைசெய்தார். டாப் டென் (1978) என்ற ரெடிமேட் ஆடை உற்பத்தி நிறுவனத்தைப் பெருங்கனவுகளுடன் தொடங்கினார். | ||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
[[File: ஆத்மாநாம்_படைப்புகள்.JPG |thumb| ஆத்மாநாம் படைப்புகள் நன்றி panuval.com]] நவீனக் கவிதைக்காக, | [[File: ஆத்மாநாம்_படைப்புகள்.JPG |thumb| ஆத்மாநாம் படைப்புகள் நன்றி panuval.com]] நவீனக் கவிதைக்காக, 'ழ’ என்ற ஒரு முன்னோடி இதழைத் தொடங்கி, 24 இதழ்களைக் கொண்டு வந்தார். ஆத்மாநாம் கவிதைகள் மட்டுமின்றி இசை, ஓவியம் போன்ற பல்துறை சார்ந்த கலைஞர்களோடும் நட்பில் இருந்தார். | ||
பிரெஞ்சுக் கவிஞர் ஆர்தர் ரைம்போவின் சில கவிதை மொழிபெயர்ப்புகளை முழுமையாக்காது பென்சிலில் எழுதி வைத்திருந்தார் ஆத்மாநாம். | பிரெஞ்சுக் கவிஞர் ஆர்தர் ரைம்போவின் சில கவிதை மொழிபெயர்ப்புகளை முழுமையாக்காது பென்சிலில் எழுதி வைத்திருந்தார் ஆத்மாநாம். | ||
'எல்சால்வாடாரில் காணாமல் போன நினாவுக்கு’ என்ற லத்தீன் அமெரிக்கக் கவிதையை மொழி பெயர்த்துள்ளார். | |||
புத்தக விமர்சனங்களை எழுதுவதிலும், பொறுப்பும் ஈடுபாடும் ஆத்மாநாமுக்கு இருந்தது. விமலாதித்த மாமல்லனின் சிறுகதைத் தொகுப்பிற்கும், ஆனந்தின் 'இரண்டு சிகரங்களுக்கு இடையே' என்ற குறுநாவலுக்கும் அவர் எழுதிய மதிப்புரைகள் மீட்சி இதழில் (மாத இதழாக வெளிவந்த சமயத்தில்) வந்தன. 'ழ' கவிதை இதழின் ஆசிரியராக இருந்தபோதே அவர் '2083 ஒரு அகால ஏடு' என்ற, ஒற்றைத் தாளில் அச்சிடப்பட்ட ஒரு இதழைத் துவக்கினார். | புத்தக விமர்சனங்களை எழுதுவதிலும், பொறுப்பும் ஈடுபாடும் ஆத்மாநாமுக்கு இருந்தது. விமலாதித்த மாமல்லனின் சிறுகதைத் தொகுப்பிற்கும், ஆனந்தின் 'இரண்டு சிகரங்களுக்கு இடையே' என்ற குறுநாவலுக்கும் அவர் எழுதிய மதிப்புரைகள் மீட்சி இதழில் (மாத இதழாக வெளிவந்த சமயத்தில்) வந்தன. 'ழ' கவிதை இதழின் ஆசிரியராக இருந்தபோதே அவர் '2083 ஒரு அகால ஏடு' என்ற, ஒற்றைத் தாளில் அச்சிடப்பட்ட ஒரு இதழைத் துவக்கினார். | ||
Line 19: | Line 19: | ||
== விருதுகள் == | == விருதுகள் == | ||
== கவிஞர் ஆத்மாநாம் விருது == | == கவிஞர் ஆத்மாநாம் விருது == | ||
கவிஞர் ஆத்மாநாம் அவர்களின் இலக்கியப் பங்களிப்புகளை நினைவூட்டும் வகையிலும் கொண்டாடும் வகையிலும் மெய்ப்பொருள் பதிப்பகம் | கவிஞர் ஆத்மாநாம் அவர்களின் இலக்கியப் பங்களிப்புகளை நினைவூட்டும் வகையிலும் கொண்டாடும் வகையிலும் மெய்ப்பொருள் பதிப்பகம் 'கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை’யைக் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் கவிஞர் ஆத்மாநாம் பெயரில் ரூ.25,000 பரிசுத்தொகையும் விருதும் வழங்கி வருகிறது. | ||
==மறைவு== | ==மறைவு== | ||
அகச்சிக்கலாலும் புறநெருக்கடிகளாலும் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்ட ஆத்மாநாம், அஃபெக்ட்டிவ் டிஸார்டர் என்ற மனமுறிவு நோய்க்குள்ளாகி, 1984-ல் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். | அகச்சிக்கலாலும் புறநெருக்கடிகளாலும் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்ட ஆத்மாநாம், அஃபெக்ட்டிவ் டிஸார்டர் என்ற மனமுறிவு நோய்க்குள்ளாகி, 1984-ல் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார். | ||
Line 37: | Line 37: | ||
* 156 கவிதைகள் | * 156 கவிதைகள் | ||
* நவீனக் கவிதைக்காக, | * நவீனக் கவிதைக்காக, 'ழ’ என்ற ஒரு முன்னோடி இதழைத் தொடங்கி, 24 இதழ்களைக் கொண்டுவந்தார். | ||
==== கவிதைத் தொகுப்புகள் ==== | ==== கவிதைத் தொகுப்புகள் ==== | ||
* ஆத்மாநாம் படைப்புகள் (பதிப்பாசிரியர் | * ஆத்மாநாம் படைப்புகள் (பதிப்பாசிரியர் |
Revision as of 09:07, 23 August 2022
ஆத்மாநாம் [ஜனவரி 18, 1951 - ஜூலை 06, 1984] கவிஞர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், விமர்சகர். 'ழ' என்ற கவிதை ஏட்டின் ஆசிரியர்.
பிறப்பு மற்றும் கல்வி
சென்னையில் ஜனவரி 18, 1951-ல் பிறந்தார். இயற்பெயர் எஸ்.கே.மதுசூதன். 34 வயதுகூட முடியாமல் இளம் வயதிலேயே ஜூலை 06, 1984-ல் பெங்களூரில் இறந்துபோனார். அம்பத்தூர் சர் ராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியிலும் அரும்பாக்கம் து.கோ.வைணவக் கல்லூரியிலும் (பிகாம்) பயின்றார்.
தனி வாழ்க்கை
நவீனத் தமிழ்க் கவிதைக்குப் பெரும் பங்களிப்பு செய்த ஆத்மாநாமின் தாய்மொழி கன்னடம். சதர்ன் சுவிட்ச் கியர்ஸ், கோரமண்டல் கார்மென்ட்ஸ், ரெங்கா அப்பாரெல்ஸ் ஆகிய கம்பெனிகளில் வேலைசெய்தார். டாப் டென் (1978) என்ற ரெடிமேட் ஆடை உற்பத்தி நிறுவனத்தைப் பெருங்கனவுகளுடன் தொடங்கினார்.
இலக்கிய வாழ்க்கை
நவீனக் கவிதைக்காக, 'ழ’ என்ற ஒரு முன்னோடி இதழைத் தொடங்கி, 24 இதழ்களைக் கொண்டு வந்தார். ஆத்மாநாம் கவிதைகள் மட்டுமின்றி இசை, ஓவியம் போன்ற பல்துறை சார்ந்த கலைஞர்களோடும் நட்பில் இருந்தார்.
பிரெஞ்சுக் கவிஞர் ஆர்தர் ரைம்போவின் சில கவிதை மொழிபெயர்ப்புகளை முழுமையாக்காது பென்சிலில் எழுதி வைத்திருந்தார் ஆத்மாநாம்.
'எல்சால்வாடாரில் காணாமல் போன நினாவுக்கு’ என்ற லத்தீன் அமெரிக்கக் கவிதையை மொழி பெயர்த்துள்ளார்.
புத்தக விமர்சனங்களை எழுதுவதிலும், பொறுப்பும் ஈடுபாடும் ஆத்மாநாமுக்கு இருந்தது. விமலாதித்த மாமல்லனின் சிறுகதைத் தொகுப்பிற்கும், ஆனந்தின் 'இரண்டு சிகரங்களுக்கு இடையே' என்ற குறுநாவலுக்கும் அவர் எழுதிய மதிப்புரைகள் மீட்சி இதழில் (மாத இதழாக வெளிவந்த சமயத்தில்) வந்தன. 'ழ' கவிதை இதழின் ஆசிரியராக இருந்தபோதே அவர் '2083 ஒரு அகால ஏடு' என்ற, ஒற்றைத் தாளில் அச்சிடப்பட்ட ஒரு இதழைத் துவக்கினார்.
அவர் செய்ய நினைத்துத் தொடங்கிய வேறுசில ஐரோப்பியக் கவிஞர்களின் கவிதை மொழிபெயர்ப்புகளையும் முடிக்காமலே விட்டுவிட்டார். குறிப்பாக அவருக்குப் பிடித்த அரசியல் நிலைப்பாடு கொண்ட பெர்டோல்ட் ப்ரக்டின் கவிதைத் தேர்வொன்றிற்கு அவர் திட்டம் வைத்திருந்தார். ஆனால் அதில் ஒரு கவிதையை மாத்திரமே மொழிபெயர்த்து முடித்திருந்தார். அந்தோனின் பார்த்துஸெக் என்ற கிழக்கு ஐரோப்பியக் கவிஞரின் சில கவிதை மொழிபெயர்ப்புகளை செய்திருந்தார்.
இன்றுவரை ஆத்மாநாம் எழுதியவையாக, நமக்கு 156 கவிதைகள் கிடைத்துள்ளன. இவற்றைத் தொகுப்பாக்கித் தமிழ் வாசகர்களிடம் ஆத்மாநாமை நிலைநிறுத்தியதில் கவிஞர் பிரம்மராஜனுக்குத் தலையாய பங்குண்டு.
விருதுகள்
கவிஞர் ஆத்மாநாம் விருது
கவிஞர் ஆத்மாநாம் அவர்களின் இலக்கியப் பங்களிப்புகளை நினைவூட்டும் வகையிலும் கொண்டாடும் வகையிலும் மெய்ப்பொருள் பதிப்பகம் 'கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை’யைக் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் கவிஞர் ஆத்மாநாம் பெயரில் ரூ.25,000 பரிசுத்தொகையும் விருதும் வழங்கி வருகிறது.
மறைவு
அகச்சிக்கலாலும் புறநெருக்கடிகளாலும் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்ட ஆத்மாநாம், அஃபெக்ட்டிவ் டிஸார்டர் என்ற மனமுறிவு நோய்க்குள்ளாகி, 1984-ல் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
இலக்கிய இடம்
தமிழ் நவீனக் கவிதையின் செழுமையான காலகட்டமான 1970-களில் தனது ஈடுபாடுமிக்க கவி ஆர்வத்தைக் கவிதைகள், கவிதையியல் பற்றிய உரையாடல், கவிதைக்கென ஒரு பத்திரிகை, கவிதை மொழிபெயர்ப்பு எனப் பன்முகமான பங்களிப்பின் மூலமாக வழங்கியவர் ஆத்மாநாம்.
"புதுக் கவிஞர்களில் பிரக்ஞைபூர்வமான கவிஞர்கள் மிகக்குறைவு. ஆத்மாநாம் பிரக்ஞைபூர்வமானவர். தன் செயல்பாடுகள் குறித்தும் தான் ஆற்ற வேண்டிய பங்கு குறித்தும் அவருக்கு யோசனைகள் இருந்திருக்கின்றன. தன்னுடைய கவிதைகளை கண்டுபிடிக்கும் முயற்சியாகவே இவர் கவிதைகள் இருக்கின்றன. பிரதிபலிப்பு படைப்பாகாது என்ற விழிப்பு இவரிடம் கூர்மையாக செயல்பட்டிருக்கிறது.
வாழ்நிலையில் தான் பெற்ற அனுபவங்களை கவிதை மூலம் இவர் ஆராய்ந்து கொண்டே போகிறார். தன்னை அறிந்து தன் பார்வையைத் தெளிவு படுத்திக் கொள்ளும் முனைப்பு இது.
தன் கவிதைகள் மூலம் ஒரு உயர்நிலை பாதிப்பை நிகழ்த்த வேண்டும் என்பதில் விருப்பம் கொண்டிருந்தார் ஆத்மாநாம். இதனால் தன் கவிதை மொழி தன் சக மனிதனுக்குப் புரிய வேண்டும் என்பதில் அவருக்கு கவனம் இருந்தது. உலக இலக்கியத்தின் தரம் மீது பற்றுக் கொண்டிருந்தார்.
அனுபவங்களின் சாரங்களை அறிய தனக்கு உகந்த தயாரிப்புகளிலும் இவர் கவனம் கொண்டிருந்தார். படிப்பும், தொடர்புகளும், விவாதங்களும், இதனால் காலத்தைப் பற்றிய உணர்வு இவருக்குச் சாத்தியமாயிற்று.
பிறப்பு, வளர்ப்பு, தேசம், மொழி, ஜாதி, மதம் இவற்றின் குறுகல்கள் தாண்டிய முகம் இவருடையது. ஒரு தமிழ் நகரத்தில் வாழ்ந்த தமிழனின் நவீனக்கவிதைகளாக இவை இருக்கின்றன. இந்தக் கவிதைகளின் வேர் இந்த மண்ணில் இருக்கிறது. இந்த மண்ணின் வேதனை இந்தக் கவிதையிலும் இருக்கிறது." என்று எழுத்தாளர் சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார்.
படைப்புகள்
- 156 கவிதைகள்
- நவீனக் கவிதைக்காக, 'ழ’ என்ற ஒரு முன்னோடி இதழைத் தொடங்கி, 24 இதழ்களைக் கொண்டுவந்தார்.
கவிதைத் தொகுப்புகள்
- ஆத்மாநாம் படைப்புகள் (பதிப்பாசிரியர்
பிரம்மராஜன்)
உசாத்துணை
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.