நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை(1906) தமிழ் நாடக வளர்ச்சியில் பங்காற்றியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர். == வாழ்க்கைக் குறிப்பு == நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை 1906இல் தஞ்சாவூரில் சுப்ரய பிள...")
 
No edit summary
Line 3: Line 3:
== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை 1906இல் தஞ்சாவூரில் சுப்ரய பிள்ளை, குப்பம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். திண்ணைப்பள்ளிக்கூடத்தில் பயின்றார். தந்தை காச்ஸ்டபிள். சகோதரர் கோவிந்தராஜ்பிள்ளை. சிறுவயதிலிருந்தே நாடகம் பார்த்து வளர்ந்ததால் படிப்பை விட நாடகத்தில் நாட்டம் கொண்டார்.  

== தனிவாழ்க்கை ==
நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை அங்கையற்கண்ணி அம்மையை திருமணம் செய்து கொண்டார். மகன் தேவிபாதன் பிறந்தார்.
== கலை வாழ்க்கை ==
== கலை வாழ்க்கை ==
நாடகப் பயிற்சிக்காக ஹார்மோனியம் நடராஜப்பிள்ளை கம்பெனியில் சேர்ந்தார். பின்னர் ஜகந்நாதஐயர் நாடகக் குழுவில் சேர்ந்தார். இதில் ஐந்து வயதுக்கும் மேற்பட்ட பதினைந்து வயதிற்கும் உட்பட்ட சிறுவர்கள் அதிகம் நடித்ததால் “பாய்ஸ் கம்பெனி” என்று அறியப்பட்டது. இங்கு நாடக நுணுக்கங்கள் கற்றார்.   

ஜகந்நாதஐயர் நாடகக் குழுவிலிருந்து வெளியேறி பங்குதாரர்களைச் சேர்த்து ’ஸ்ரீ தேவிபாலவிநோத சபா’ என்ற பெயரில் நாடகக் கம்பெனி தொடங்கினார். முதல் நாடகத்தை தஞ்சையில் அரங்கேற்றினார். தொடர்ந்து திருச்சி, தஞ்சை, திருப்பூரில் நாடகம் அரங்கேற்றினார். அறுபதுக்கும் பேற்பட்ட நாடக உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக கம்பெனி மாறியது. வசனங்கள் மட்டுமல்லாமல் காட்சிக்கும், கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். புராண நாடகங்களை அரங்கேற்றுவதில் ஆர்வம் காட்டினார்.  
ஜகந்நாதஐயர் நாடகக் குழுவிலிருந்து வெளியேறி பங்குதாரர்களைச் சேர்த்து ’ஸ்ரீ தேவிபாலவிநோத சபா’ என்ற பெயரில் நாடகக் கம்பெனி தொடங்கினார். முதல் நாடகத்தை தஞ்சையில் அரங்கேற்றினார். தொடர்ந்து திருச்சி, தஞ்சை, திருப்பூரில் நாடகம் அரங்கேற்றினார். அறுபதுக்கும் பேற்பட்ட நாடக உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக கம்பெனி மாறியது. வசனங்கள் மட்டுமல்லாமல் காட்சிக்கும், கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். புராண நாடகங்களை அரங்கேற்றுவதில் ஆர்வம் காட்டினார். புராண நாடகங்களில் தந்திரக் காட்சிகள் வடிவமைத்ததால் மக்கள் அதிகம் கவரப்பட்டனர். ராம பக்தரான சமர்த்ததாஸ் கதையில் அவரை சிறையிலிட்டு வாட்டும் நவாபாக நடித்து புகழ்பெற்றதால்  ‘நவாப் ராஜமாணிக்கம்பிள்ளை’ என்று அழைத்தனர்.
 
பெண்களுக்கு இடமில்லாத கம்பெனி. நேரக்கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றை வலியுறுத்தினார். நடிகர்களுக்கு இசை, நடனம், வால்சண்டை போன்ற பயிற்சி கொடுத்தார். தேசப்பற்று கொண்டவராதலால் தன் நாடகத்தில் தேசப்பற்று வசனங்கள், பாடல்கள் இடம்பெறுமாறு செய்தார். 1934இல் நந்தனார் நாடகத்தை காந்தி முன்பு அரங்கார்றுகை செய்து அதில் வந்த தொகையை விடுதலைப் போராட்டத்திற்கு அளித்தார். இவர் அரங்காற்றுகை செய்த ’இன்பசாகரன் நாடகம்’ 178 நாட்கள் தொடர்ந்து மேடையேற்றப்பட்டதாக முக்தா சீனிவாசன் தனது ‘இணையற்ற சாதனையாளர்கள்’ புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.
===== மாணவர்கள் =====
* எம்.என். நம்பியார்
* டி.கே.எஸ். நடராஜன்
* கே.எஸ். கோபாலகிருஷ்ணன்
* கே.டி. சீனிவாசன்
* டி.கே. பாலச்சந்திரன்
== திரைப்படம் ==
1935இல் ’பக்த ராமதாஸ்’ திரைப்படம் ஜூப்பிட்டர் சோமுவின் தயாரிப்பில் முருகதாஸின் இயக்கத்தில் திரைப்படமாக வெளியாகி வெற்றிபெற்றது. இதில் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, எம்.என். நம்பியார் ஆகியோர் நடித்தனர்.  இவர் அரங்காற்றுகை செய்த ’இன்பசாகரன் நாடகம்’ அதே பெயரில் திரைப்படமாக வெளியானது. ஹிந்தியில் இப்படம் ’பிரேம் சாகர்’ என்ற பெயரில் வெளியானது.
== பக்தி ==
தீவிர தேவி பக்தர். பக்தி நாடகங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். சுவாமி ஐயப்பன் வரலாற்றை முதன் முதலாக நாடகமாகப் அரங்கேற்றியவர். இந்த நாடக அரங்காற்றுகை செய்யும்போது ஐயப்பன் ஊர்வலத்தையும், பஜனையையும் நிகழ்த்தினார்.
== சிறப்புகள் ==
* நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் ராமாயணம் நாடகம் நடந்த இடத்திற்கு ’ராமாயணம் ஸ்டாப்’ என்று பெயரிடப்பட்டது.
== முடிவு ==
திரைப்படங்களின் செல்வாக்கால் நாடகங்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன. நடிகர்களும் திரைப்படங்கள் நோக்கி செல்ல ஆரம்பித்தனர். ஒருமுறை ஏற்பட்ட கடும் புயல், மழையால் கம்பெனி நஷ்டமடைந்தது. மகன் தேவி பாதன் முயன்றும் நிலமையை சரிசெய்ய இயலவில்லை. வறுமை நிலை ஏற்பட்டது.
== மறைவு ==
தன் இறுதி காலத்தை ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை 1974இல் காலமானார்.  
== நடித்த நாடகங்கள் ==
== நடித்த நாடகங்கள் ==
* பவளக்கொடி
* பவளக்கொடி
Line 18: Line 38:
* சக்திலீலா
* சக்திலீலா
* ஞானசெளந்தரி
* ஞானசெளந்தரி
 
* சமர்த்ததாஸ்
== விருதுகள் ==
* நந்தனார் நாடகம்m
* இன்பசாகரன்
* ஐயப்பன் நாடகம்
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7679

Revision as of 15:57, 6 July 2022

நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை(1906) தமிழ் நாடக வளர்ச்சியில் பங்காற்றியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை 1906இல் தஞ்சாவூரில் சுப்ரய பிள்ளை, குப்பம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். திண்ணைப்பள்ளிக்கூடத்தில் பயின்றார். தந்தை காச்ஸ்டபிள். சகோதரர் கோவிந்தராஜ்பிள்ளை. சிறுவயதிலிருந்தே நாடகம் பார்த்து வளர்ந்ததால் படிப்பை விட நாடகத்தில் நாட்டம் கொண்டார்.

தனிவாழ்க்கை

நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை அங்கையற்கண்ணி அம்மையை திருமணம் செய்து கொண்டார். மகன் தேவிபாதன் பிறந்தார்.

கலை வாழ்க்கை

நாடகப் பயிற்சிக்காக ஹார்மோனியம் நடராஜப்பிள்ளை கம்பெனியில் சேர்ந்தார். பின்னர் ஜகந்நாதஐயர் நாடகக் குழுவில் சேர்ந்தார். இதில் ஐந்து வயதுக்கும் மேற்பட்ட பதினைந்து வயதிற்கும் உட்பட்ட சிறுவர்கள் அதிகம் நடித்ததால் “பாய்ஸ் கம்பெனி” என்று அறியப்பட்டது. இங்கு நாடக நுணுக்கங்கள் கற்றார்.

ஜகந்நாதஐயர் நாடகக் குழுவிலிருந்து வெளியேறி பங்குதாரர்களைச் சேர்த்து ’ஸ்ரீ தேவிபாலவிநோத சபா’ என்ற பெயரில் நாடகக் கம்பெனி தொடங்கினார். முதல் நாடகத்தை தஞ்சையில் அரங்கேற்றினார். தொடர்ந்து திருச்சி, தஞ்சை, திருப்பூரில் நாடகம் அரங்கேற்றினார். அறுபதுக்கும் பேற்பட்ட நாடக உறுப்பினர்களைக் கொண்ட குழுவாக கம்பெனி மாறியது. வசனங்கள் மட்டுமல்லாமல் காட்சிக்கும், கருத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். புராண நாடகங்களை அரங்கேற்றுவதில் ஆர்வம் காட்டினார். புராண நாடகங்களில் தந்திரக் காட்சிகள் வடிவமைத்ததால் மக்கள் அதிகம் கவரப்பட்டனர். ராம பக்தரான சமர்த்ததாஸ் கதையில் அவரை சிறையிலிட்டு வாட்டும் நவாபாக நடித்து புகழ்பெற்றதால் ‘நவாப் ராஜமாணிக்கம்பிள்ளை’ என்று அழைத்தனர்.

பெண்களுக்கு இடமில்லாத கம்பெனி. நேரக்கட்டுப்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றை வலியுறுத்தினார். நடிகர்களுக்கு இசை, நடனம், வால்சண்டை போன்ற பயிற்சி கொடுத்தார். தேசப்பற்று கொண்டவராதலால் தன் நாடகத்தில் தேசப்பற்று வசனங்கள், பாடல்கள் இடம்பெறுமாறு செய்தார். 1934இல் நந்தனார் நாடகத்தை காந்தி முன்பு அரங்கார்றுகை செய்து அதில் வந்த தொகையை விடுதலைப் போராட்டத்திற்கு அளித்தார். இவர் அரங்காற்றுகை செய்த ’இன்பசாகரன் நாடகம்’ 178 நாட்கள் தொடர்ந்து மேடையேற்றப்பட்டதாக முக்தா சீனிவாசன் தனது ‘இணையற்ற சாதனையாளர்கள்’ புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

மாணவர்கள்
  • எம்.என். நம்பியார்
  • டி.கே.எஸ். நடராஜன்
  • கே.எஸ். கோபாலகிருஷ்ணன்
  • கே.டி. சீனிவாசன்
  • டி.கே. பாலச்சந்திரன்

திரைப்படம்

1935இல் ’பக்த ராமதாஸ்’ திரைப்படம் ஜூப்பிட்டர் சோமுவின் தயாரிப்பில் முருகதாஸின் இயக்கத்தில் திரைப்படமாக வெளியாகி வெற்றிபெற்றது. இதில் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, எம்.என். நம்பியார் ஆகியோர் நடித்தனர். இவர் அரங்காற்றுகை செய்த ’இன்பசாகரன் நாடகம்’ அதே பெயரில் திரைப்படமாக வெளியானது. ஹிந்தியில் இப்படம் ’பிரேம் சாகர்’ என்ற பெயரில் வெளியானது.

பக்தி

தீவிர தேவி பக்தர். பக்தி நாடகங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். சுவாமி ஐயப்பன் வரலாற்றை முதன் முதலாக நாடகமாகப் அரங்கேற்றியவர். இந்த நாடக அரங்காற்றுகை செய்யும்போது ஐயப்பன் ஊர்வலத்தையும், பஜனையையும் நிகழ்த்தினார்.

சிறப்புகள்

  • நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின் ராமாயணம் நாடகம் நடந்த இடத்திற்கு ’ராமாயணம் ஸ்டாப்’ என்று பெயரிடப்பட்டது.

முடிவு

திரைப்படங்களின் செல்வாக்கால் நாடகங்களுக்கு வாய்ப்புகள் குறைந்தன. நடிகர்களும் திரைப்படங்கள் நோக்கி செல்ல ஆரம்பித்தனர். ஒருமுறை ஏற்பட்ட கடும் புயல், மழையால் கம்பெனி நஷ்டமடைந்தது. மகன் தேவி பாதன் முயன்றும் நிலமையை சரிசெய்ய இயலவில்லை. வறுமை நிலை ஏற்பட்டது.

மறைவு

தன் இறுதி காலத்தை ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை 1974இல் காலமானார்.

நடித்த நாடகங்கள்

  • பவளக்கொடி
  • வள்ளி திருமணம்

அரங்கேற்றிய நாடகங்கள்

  • கிருஷ்ணலீலா
  • தசாவதாரம்
  • சம்பூர்ண ராமாயணம்
  • ஏசுநாதர்
  • குமார விஜயம்
  • சக்திலீலா
  • ஞானசெளந்தரி
  • சமர்த்ததாஸ்
  • நந்தனார் நாடகம்m
  • இன்பசாகரன்
  • ஐயப்பன் நாடகம்

உசாத்துணை