நோன்பு: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "நோன்பு : தன்னை தூய்மை செய்துகொள்ளவோ, வழிபாட்டின்பொருட்டோ செய்யப்படும் தற்கட்டுப்பாடுகள் நோன்பு எனப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக செய்யப்படும் தற்கட்டுப்பாடும...")
 
No edit summary
Line 1: Line 1:
நோன்பு : தன்னை தூய்மை செய்துகொள்ளவோ, வழிபாட்டின்பொருட்டோ செய்யப்படும் தற்கட்டுப்பாடுகள் நோன்பு எனப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக செய்யப்படும் தற்கட்டுப்பாடும் நோன்பு எனப்படுகிறது. உண்ணாமை, பேசாமை உட்பட பலவகையான தற்கட்டுப்பாடுகள் நோன்புநெறிகளாக உள்ளன.

வேர்ச்சொல்
== சொல் வளர்ச்சி ==

நோன்பு என்னும் சொல்லின் வேர் நோய். நோய் என்னும் வேர்ச்சொல்லுக்கு எஸ். வையாபுரிப்பிள்ளை பேரகராதி அளிக்கும் பொருள்களாவன. வியாதி,துன்பம், அச்சம், வலி. சங்ககாலத்தில் நோய் என்ற சொல் வருந்துதல், மெலிதல் என்னும் பொருளில் அகத்துறை பாடல்களில் பயன்படுத்தப்படுகிறது. (...நாடன் நோய் தந்தனனே தோழி.பசலை ஆர்த்தன குவளை அம் கண்ணே”. கபிலர். குறுந்தொகை 13) நோதல் என்னும் சொல் வருந்துதல் என்று பொருளில் பயன்படுகிறது. (நோதலும் தணிதலும் அவற்றோரன்ன. கணியன் பூங்குன்றன், புறநாநூறு 192) . வையாபுரிப்பிள்ளை பேரகராதி நோய்த்தல் என்னும் சொல்லுக்கு மெலிதல், வாடுதல் என்னும் பொருள்களை அளிக்கிறது. கருவுற்ற பெண் அடையும் மெலிவும் தளர்வும் நோய்த்தல் எனப்படுகிறது.  
====== நோய் ======

நோற்றல் என்பது காத்திருத்தல் என்னும் பொருளில், குறிப்பாக பசித்துக் காத்திருத்தல் என்னும் பொருளில் மலையாளத்தில் புழக்கத்தில் உள்ளது.(ஈற்றப்புலி நோற்றுகிடக்கும் ஈரன் கண்ணு துறந்நும். கடம்மனிட்ட ராமகிருஷ்ணன். காட்டாளன் கவிதை) நோற்றல் என்பது தவத்தை குறிக்கிறது (இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல்- திருக்குறள் 70 ) நோற்பு என்னும் சொல்லுக்கு பேரகராதி பொறுத்துக்கொள்ளுதல்,தவம் என்னும் பொருட்களை அளிக்கிறது. நோன்றல், நோன்றுதல் ஆகிய சொற்கள் சங்க காலம் முதல் பொறுத்துக்கொள்ளுதலை குறிக்க பயன்பட்டன. (பட்டென கண்டது நோனான் ஆகி. அகநாநூறு.44) திவாகர நிகண்டு நோன்றல் என்பதற்கு தள்ளுதல், துறத்தல் என்று பொருள் அளிக்கிறது.பிங்கல நிகண்டு நோன்றல் என்ற சொல்லுக்கு நிலைநிறுத்துதல், உறுதிகொள்ளுதல் என பொருள் விளக்கம் அளிக்கிறது.   
====== நோற்றல் ======
நோற்றல் என்பது காத்திருத்தல் என்னும் பொருளில், குறிப்பாக பசித்துக் காத்திருத்தல் என்னும் பொருளில் மலையாளத்தில் புழக்கத்தில் உள்ளது.(ஈற்றப்புலி நோற்றுகிடக்கும் ஈரன் கண்ணு துறந்நும். கடம்மனிட்ட ராமகிருஷ்ணன். காட்டாளன் கவிதை) நோற்றல் என்பது தவத்தை குறிக்கிறது (இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல்- திருக்குறள் 70 ) நோற்பு என்னும் சொல்லுக்கு பேரகராதி பொறுத்துக்கொள்ளுதல்,தவம் என்னும் பொருட்களை அளிக்கிறது.   

இச்சொற்களில் இருந்து நோன்பு என்னும் சொல் உருவானது.
====== நோன்றல் ======
நோன்றல், நோன்றுதல் ஆகிய சொற்கள் சங்க காலம் முதல் பொறுத்துக்கொள்ளுதலை குறிக்க பயன்பட்டன. (பட்டென கண்டது நோனான் ஆகி. அகநாநூறு.44) திவாகர நிகண்டு நோன்றல் என்பதற்கு தள்ளுதல், துறத்தல் என்று பொருள் அளிக்கிறது.பிங்கல நிகண்டு நோன்றல் என்ற சொல்லுக்கு நிலைநிறுத்துதல், உறுதிகொள்ளுதல் என பொருள் விளக்கம் அளிக்கிறது. அதில் இருந்து நோன்மை எனும் சொல் உருவானது. அது வருந்தி காத்திருத்தலைக்  குறிக்கிறது. (வயல் மிகு சிறப்பின் வருத்தமும் நோன்மையும் வியல் மனைக் கிழவனைப் பகட்டொடு பொரீஇயன்று.- முல்லை பொதுயியல்) பெருமை (துவன்றிலேன் மனிதனோன்மை- கம்பராமாயணம் 288) சிறப்பு (நுந்த மாமக ணோன்மை- பிரபுலிங்கலீலை) ஆகிய பொருள்களும் அதற்குள்ளன. கலித்தொகை நோன்றல் என்னும் சொல்லை சகித்தல் என்னும் பொருளில் பயன்படுத்துகிறது. (பேதையர் சொன்னோன்றல் கலித்தொகை 133) நோனாமை என்றால் தாங்கிக்கொள்ளாமல் இருத்தல். நொனார் என்றால் பகைவர்.நோற்பாள் என்றால் தவம் செய்பவள் (சூடாமணி நிகண்டு) 
 
====== நோன்பு ======
இச்சொற்களில் இருந்து நோன்பு என்னும் சொல் உருவானது. (ஆயிடைப் படிந்தனர் அரனை உன்னியே மாயிரு நோன்பினை இயற்றி வைகினார். கந்தபுராணம், தக்கன் மகப்பெறு படலம்) மதவழிபாட்டுக்காக தன்னை வருத்திக்கொள்ளுதல் நோன்பு எனப்பட்டது. (நோற்பாரின் நோன்மையுடைத்து. திருக்குறள் 48)

Revision as of 11:50, 2 July 2022

நோன்பு : தன்னை தூய்மை செய்துகொள்ளவோ, வழிபாட்டின்பொருட்டோ செய்யப்படும் தற்கட்டுப்பாடுகள் நோன்பு எனப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக செய்யப்படும் தற்கட்டுப்பாடும் நோன்பு எனப்படுகிறது. உண்ணாமை, பேசாமை உட்பட பலவகையான தற்கட்டுப்பாடுகள் நோன்புநெறிகளாக உள்ளன.

சொல் வளர்ச்சி

நோய்

நோன்பு என்னும் சொல்லின் வேர் நோய். நோய் என்னும் வேர்ச்சொல்லுக்கு எஸ். வையாபுரிப்பிள்ளை பேரகராதி அளிக்கும் பொருள்களாவன. வியாதி,துன்பம், அச்சம், வலி. சங்ககாலத்தில் நோய் என்ற சொல் வருந்துதல், மெலிதல் என்னும் பொருளில் அகத்துறை பாடல்களில் பயன்படுத்தப்படுகிறது. (...நாடன் நோய் தந்தனனே தோழி.பசலை ஆர்த்தன குவளை அம் கண்ணே”. கபிலர். குறுந்தொகை 13) நோதல் என்னும் சொல் வருந்துதல் என்று பொருளில் பயன்படுகிறது. (நோதலும் தணிதலும் அவற்றோரன்ன. கணியன் பூங்குன்றன், புறநாநூறு 192) . வையாபுரிப்பிள்ளை பேரகராதி நோய்த்தல் என்னும் சொல்லுக்கு மெலிதல், வாடுதல் என்னும் பொருள்களை அளிக்கிறது. கருவுற்ற பெண் அடையும் மெலிவும் தளர்வும் நோய்த்தல் எனப்படுகிறது.

நோற்றல்

நோற்றல் என்பது காத்திருத்தல் என்னும் பொருளில், குறிப்பாக பசித்துக் காத்திருத்தல் என்னும் பொருளில் மலையாளத்தில் புழக்கத்தில் உள்ளது.(ஈற்றப்புலி நோற்றுகிடக்கும் ஈரன் கண்ணு துறந்நும். கடம்மனிட்ட ராமகிருஷ்ணன். காட்டாளன் கவிதை) நோற்றல் என்பது தவத்தை குறிக்கிறது (இவன் தந்தை என் நோற்றான் கொல் எனும் சொல்- திருக்குறள் 70 ) நோற்பு என்னும் சொல்லுக்கு பேரகராதி பொறுத்துக்கொள்ளுதல்,தவம் என்னும் பொருட்களை அளிக்கிறது.

நோன்றல்

நோன்றல், நோன்றுதல் ஆகிய சொற்கள் சங்க காலம் முதல் பொறுத்துக்கொள்ளுதலை குறிக்க பயன்பட்டன. (பட்டென கண்டது நோனான் ஆகி. அகநாநூறு.44) திவாகர நிகண்டு நோன்றல் என்பதற்கு தள்ளுதல், துறத்தல் என்று பொருள் அளிக்கிறது.பிங்கல நிகண்டு நோன்றல் என்ற சொல்லுக்கு நிலைநிறுத்துதல், உறுதிகொள்ளுதல் என பொருள் விளக்கம் அளிக்கிறது. அதில் இருந்து நோன்மை எனும் சொல் உருவானது. அது வருந்தி காத்திருத்தலைக் குறிக்கிறது. (வயல் மிகு சிறப்பின் வருத்தமும் நோன்மையும் வியல் மனைக் கிழவனைப் பகட்டொடு பொரீஇயன்று.- முல்லை பொதுயியல்) பெருமை (துவன்றிலேன் மனிதனோன்மை- கம்பராமாயணம் 288) சிறப்பு (நுந்த மாமக ணோன்மை- பிரபுலிங்கலீலை) ஆகிய பொருள்களும் அதற்குள்ளன. கலித்தொகை நோன்றல் என்னும் சொல்லை சகித்தல் என்னும் பொருளில் பயன்படுத்துகிறது. (பேதையர் சொன்னோன்றல் கலித்தொகை 133) நோனாமை என்றால் தாங்கிக்கொள்ளாமல் இருத்தல். நொனார் என்றால் பகைவர்.நோற்பாள் என்றால் தவம் செய்பவள் (சூடாமணி நிகண்டு)

நோன்பு