under review

நெடுநல்வாடை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
mNo edit summary
Line 81: Line 81:
* நெடுநல்வாடை மூலமும் உரையும் <nowiki>http://www.tamilsurangam.in/literatures/patthu_paddu/nedunalvaadai.html</nowiki>
* நெடுநல்வாடை மூலமும் உரையும் <nowiki>http://www.tamilsurangam.in/literatures/patthu_paddu/nedunalvaadai.html</nowiki>
* பத்துபாட்டு மூலமும் உரையும், தமிழ் மின் நூலகம் <nowiki>https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZh0jZQy&tag=%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D#book1/46</nowiki>
* பத்துபாட்டு மூலமும் உரையும், தமிழ் மின் நூலகம் <nowiki>https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZh0jZQy&tag=%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D#book1/46</nowiki>
{{Ready for Review}}
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 10:12, 2 July 2022

Ready for Review

நெடுநல்வாடை சங்க இலக்கிய. நூல் தொகுதியான பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று. நெடுநல்வாடை நூலை இயற்றியவர் நக்கீரர்.

ஆசிரியர் குறிப்பு

நெடுநல்வாடை நூலை எழுதியவர் நக்கீரர். இவர் பண்டைய பாண்டிய நாட்டிலுள்ள மதுரையில் வாழ்ந்தவர். நக்கீரர் பத்துப்பாட்டு தொகுப்பிலுள்ள திருமுருகாற்றுப்படை நூலையும் இயற்றியுள்ளார்..சங்கப்பாடல்கள் சிலவற்றில், சங்ககாலப் புலவர் நக்கீரரின் பெயர் 'நக்கீரன்', நக்கீரனார்', 'மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்' என்றெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தம் நக்கீரர் பாடியதாகச் சங்கநூல் தொகுப்பில் 37 பாடல்கள் உள்ளன.

பொருண்மை

நெடுநல்வாடை நூல் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டதாகும். நெடுநல்வாடை நூலில் பெருமளவு அகப்பொருள் அம்சங்கள் பொதிந்துள்ளன. இந் நூல் அகப் பொருளையே பேசினாலும் புறப்பொருள் நூல்கள் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது.

பொருள் சுருக்கம்;

நெடுநல்வாடை பாடல் முதலில் வாடைக்காற்று, ஆயர்கள், ஆநிரைகள், பறவைகள், விலங்குகள், மக்கள் முதலியவர்களுக்கு வாட்டம் தந்து நடுக்கமுறச் செய்கிறது. இடையில் தலைவனைப் பிரிந்து துயருறும் தலைவியின் செய்தி கூறப்படுகின்றது. அரண்மனை, அந்தப்புரம், கட்டில் முதலியன பாங்குற வர்ணிக்கப்படுகின்றன. புனையா ஓவியம்போல் கிடக்கிறாள் அரசமாதேவி. அவள் உறையும் அந்தப்புரம் கலை மேம்பாட்டுடனும் சிறந்து  விளங்குகின்றன. இறுதியில் அரசன் பாசறையில் உறக்கம் கொள்ளாது நள்ளிரவில் தீவட்டி உடன்வரச் சென்று போரில் புண்பட்ட வீரர்களுக்கு இனிய ஆறுதல் மொழிகளைக் கூறிவருகிறான்.

புறத்திணை

நெடுநல்வாடை அகத்திணையா, புறத்திணையா என்ற கேள்வியை எழுப்பியவர் நச்சினார்க்கினியர் என்னும் உரையாசிரியர். இவர் நெடுநல்வாடை தோன்றிய காலத்திற்குப் பல நூற்றாண்டுகள் பிற்பட்ட காலத்தில் தோன்றியவர்.  நெடுநல்வாடையில் புறச்செய்திகள் நெடுகப் பேசப்பட்டாலும், இறுதி நிலையில் சாராம்சமாக அகமே பேசப்படுகிறது. ஆயினும் தொல்காப்பியரின் விதிப்படி, அது அகம் இல்லை என்கிறார் நச்சினார்க்கினியர்.

அன்பின் ஐந்திணையில் ‘தலைவனோ தலைவியோ சுட்டி ஒருவர்ப் பெயர் கொளப் பெறாஅர்’ - இது தொல்காப்பியர் கூற்று. நெடுநல்வாடையில் தலைவனின் இயற்பெயர்   சுட்டப் பெறவில்லைதான்; ஆனால், வேம்பு தலையாத்த நோன்காழ் எஃகம்    எனப்    பாண்டிய மன்னர்களின் அடையாளப் பூவாகிய வேப்பம்பூவைக் கூறியமையால் இது அகம் அல்ல  என  நச்சினார்க்கினியர் கூறுகிறார். இதன் பாட்டுடைத் தலைவன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனே என்று அவர் உறுதியாகக் கூறுகிறார்.

ஆனால், அதற்குரிய சான்று நெடுநல்வாடை நூலில் இல்லை. மேலும் பாட்டுடைத் தலைவனின்    இயற்பெயர் சுட்டப்பெறாத போது தொல்காப்பியர் வழிநின்று கூட அதனைப் புறம் என்று கூறமுடியாது. இருப்பினும் நச்சினார்க்கினியார் விதி முறைத் திறனாய்வை மனதிற் கொண்டு அவ்வாறு அதனை அகம் என்று கூறுவதை மறுத்துப் ‘புறம்’ என்று கூறுகிறார்.

நூல் அமைப்பு

நெடுநல்வாடை நூல் ஆசிரியப்பாவால் ஆன  188 அடிகளைக்  கொண்டது. நூலுள் எடுத்தாளப்பட்டுள்ள நிகழ்வுகள் வாடைக்காலத்தில் நிகழ்வதாலும், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவிக்கு இது நீண்ட (நெடு) வாடையாகவும், போர் வெற்றியைப் பெற்ற கூதிர்ப்பாசறையின்கண் இருக்கும் தலைவனுக்கு இஃது ஒரு நல்ல வாடையாகவும் அமைந்தது குறித்தே இந்நூல் நீண்ட நல்ல வாடை என்னும் பொருளில் நெடுநல்வாடை  எனப்  பெயர் பெற்றதாகக் கூறுவர். இந்நூல் 188 அடிகளுடன் கீழ்காணுமாறு அமைந்துள்ளது;

வெள்ளம் ( அடி 1-2 )

கோவலர் நிலை ( அடி 3-8 )

விலங்கு பறவை முதலியவற்றின் நிலை ( அடி 9-12 )

கூதிர்ப்பருவ நிகழ்வுகள் ( அடி 13-20 )

நீர்வளம், நிலவளம் ( அடி 21-28 )

முழுவலி மாக்கள் செயல் ( அடி 29-85 )

மகளிர் வழிபாடு ( அடி 36-44 )

கூதிர்க்காலம் நிலைபெற்றமையால்

நேர்ந்த விளைவுகள் (அடி 45-48)

மங்கையர் கோலம் ( அடி 49-56 )

பயன்படாதவை ( அடி 57-63)

குளிர்காய்தல் ( அடி 64-66 )

ஆடல் மங்கையர் ( அடி 67-70 )

கூதிர்க்காலம் ஆனது ( அடி 71-73 )

அரண்மனை ( அடி 72-79 )

கோபுர வாயில் அமைத்தல் ( அடி 80-86 )

முன்றில் ( அடி 87-100 )

அருங்கடிவரைப்பு ( அடி 101-107)

கருப்பக்கிரகம் ( அடி 108-114 )

பாண்டில் என்ற கட்டில் ( அடி 115-123)

கட்டில் அலங்காரம் ( அடி 124-131)

மென்மையான அணை ( அடி 132-135 )

தேவியார் துணை துறந்திருக்கின்றமை ( அடி 136-147)

தோழியர் செய்கை ( அடி 148-151)

செவிலியர் உரை ( அடி 152-156 )

அரிவையின் ஒழுக்கம் ( அடி 156-166)

கொற்றவையை வேண்டல் ( அடி 167-168 )

போரில் விழுப்புண் பட்ட வீரர் ( அடி 168-172)

வாடைக்காற்று ( அடி 173-175)

விழுப்புண் காட்டுதல் ( அடி 176-180 )

வேந்தன்‌ கண்டான் விழுப்புண் ( அடி 181-188)

உசாத்துணை

  • பத்துபாட்டு மூலமும் உரையும், புலவர் அ. மாணிக்கனார், வர்த்தமானன் பதிப்பகம்
  • நெடுநல்வாடை மூலமும் உரையும் http://www.tamilsurangam.in/literatures/patthu_paddu/nedunalvaadai.html
  • பத்துபாட்டு மூலமும் உரையும், தமிழ் மின் நூலகம் https://www.tamildigitallibrary.in/book-detail?id=jZY9lup2kZl6TuXGlZQdjZh0jZQy&tag=%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D#book1/46


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.