being created

ரெங்கநாயகர் ஊசற்றிரு நாமப் பாடல்கள்: Difference between revisions

From Tamil Wiki
Line 7: Line 7:
திருவரங்கத்தில் கோவில் கொண்ட ரங்கநாதர் மேல் இயற்றப்பட்ட [[ஊசல் (சிற்றிலக்கியம்)|ஊசல்]] என்பதால் இப்பெயர் பெற்றது. பாயிரம், காப்பு தவிர 32 ஆசிரிய விருத்தப் பாக்களால் ஆனது. பல பாடலும் திருவரங்கத்தின், அரங்கரின் பெருமையைச்  சொல்லி, 'ஆடீரூசல்' என முடிவடைகிறது.  ஆழ்வார்கள், நாதமுனிகள், பெரிய நம்பி,  [[ராமானுஜர்]], கூரத்தாழ்வார், முதலியாண்டான் போன்ற ஆசார்யர்கள் பற்றிய குறிப்புகளும், மாவலியிடம் மண் பெற்றது, கிருஷ்ணாவதாரம் போன்ற புராண நிகழ்குகளும் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலின் முதல் பகுதியும் ஆழ்வார்கள், ராமானுஜர் மற்றும் வைணவ ஆசார்யர்களின் பெருமையைகூறி, அவர்களால் வணங்கப்பட்ட அரங்கனின் பெருமையைக் கூறி 'ஆடீரூசல்' என முடிவடைகிறது.

பல அஷ்டப் பிரபந்த நூல்களில்  ரெங்கநாயகர் ஊசற்றிருநாமப் பாடல்களுக்கடுத்து இறுதியாக  பிள்ளைபெருமாள் ஐயங்காரின் பெயரர் கோனேரியப்பவனையங்கார் பாடிய சீரக்கநாயகியாரூசல் (16 பாடல்கள்)  இடம்பெறுகிறது. இவையிரண்டுமிணைந்து திருவரங்கத்து ஊசற்றிருநாமம் என வழங்கப்படுகின்றன.   
பல அஷ்டப் பிரபந்த நூல்களில்  ரெங்கநாயகர் ஊசற்றிருநாமப் பாடல்களுக்கடுத்து இறுதியாக  பிள்ளைபெருமாள் ஐயங்காரின் பெயரர் கோனேரியப்பவனையங்கார் பாடிய சீரங்கநாயகியாரூசல் (16 பாடல்கள்)  இடம்பெறுகிறது. இவையிரண்டுமிணைந்து திருவரங்கத்து ஊசற்றிருநாமம் என வழங்கப்படுகின்றன.   
==பாடல் நடை==
==பாடல் நடை==
<poem>
<poem>

Revision as of 00:08, 22 December 2024

ரெங்கநாயகர் ஊசற்றிருநாமப் பாடல்கள் பிள்ளைப்பெருமாள் ஐயங்காரின் அஷ்ட பிரபந்தங்களில் இறுதிப் பிரபந்தம். ஶ்ரீரங்கத்தில் கோவில் கொண்ட ரங்கநாதரைப் பாடும் ஊசல் என்னும் சிற்றிலக்கியம்

ஆசிரியர்

ரெங்கநாயகர் ஊசற்றிருநாமப் பாடல்களை இயற்றியவர் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்.

நூல் அமைப்பு

திருவரங்கத்தில் கோவில் கொண்ட ரங்கநாதர் மேல் இயற்றப்பட்ட ஊசல் என்பதால் இப்பெயர் பெற்றது. பாயிரம், காப்பு தவிர 32 ஆசிரிய விருத்தப் பாக்களால் ஆனது. பல பாடலும் திருவரங்கத்தின், அரங்கரின் பெருமையைச் சொல்லி, 'ஆடீரூசல்' என முடிவடைகிறது. ஆழ்வார்கள், நாதமுனிகள், பெரிய நம்பி, ராமானுஜர், கூரத்தாழ்வார், முதலியாண்டான் போன்ற ஆசார்யர்கள் பற்றிய குறிப்புகளும், மாவலியிடம் மண் பெற்றது, கிருஷ்ணாவதாரம் போன்ற புராண நிகழ்குகளும் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடலின் முதல் பகுதியும் ஆழ்வார்கள், ராமானுஜர் மற்றும் வைணவ ஆசார்யர்களின் பெருமையைகூறி, அவர்களால் வணங்கப்பட்ட அரங்கனின் பெருமையைக் கூறி 'ஆடீரூசல்' என முடிவடைகிறது.

பல அஷ்டப் பிரபந்த நூல்களில் ரெங்கநாயகர் ஊசற்றிருநாமப் பாடல்களுக்கடுத்து இறுதியாக பிள்ளைபெருமாள் ஐயங்காரின் பெயரர் கோனேரியப்பவனையங்கார் பாடிய சீரங்கநாயகியாரூசல் (16 பாடல்கள்) இடம்பெறுகிறது. இவையிரண்டுமிணைந்து திருவரங்கத்து ஊசற்றிருநாமம் என வழங்கப்படுகின்றன.

பாடல் நடை

புண்டரிகத் தவன்றவஞ்செய் திறைஞ்சுங் கோயில்
புரிசடையோன் புராணஞ்செய் தேத்துங் கோயில்
பண்டிரவி குலத்தரசர் பணிந்த கோயில்
பரிந்திலங்கைக் கோன்கொணர்ந்து பதித்த கோயில்
மண்டபமுங் கோபுரமு மதிலுஞ் செம்பொன்
மாளிகையுந் தண்டலையு மலிந்த கோயில்
அண்டர்தொழுந் திருவரங்கம் பெரிய கோயில்
அமர்ந்துறையும் பெருமானா ராடி ரூசல்

உசாத்துணை

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.