தம்பிமார் கதை: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "தம்பிமார் கதை கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கில் உள்ள கதைப்பாடல். == தம்பிமார் கதை == திருவிதாங்கூர் நாட்டை ராமவர்மத் தம்புரான் ஆண்டு வந்த போது திருவிதாங்கூரிலும், திருவனந்தப...")
 
No edit summary
Line 1: Line 1:
தம்பிமார் கதை கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கில் உள்ள கதைப்பாடல்.  

== தம்பிமார் கதை ==
== தம்பிமார் கதை ==
திருவிதாங்கூர் நாட்டை ராமவர்மத் தம்புரான் ஆண்டு வந்த போது திருவிதாங்கூரிலும், திருவனந்தபுரத்திலும், பத்மநாபபுரத்திலும் பெரிய பெரிய துரைமார்கள் வாழ்ந்தனர். மன்னரின் கட்டளைப்படி நாட்டில் ஆறாட்டும், திருவிழா முறையாக நடந்தன. சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் மார்கழி திருவிழாவைக் காண மன்னர் வந்தார்.

அயோத்தி நகரில் இடையர் குலத்தில் பிறந்த அபிராமியும் அவள் அண்ணன் கிருஷ்ணனும் அயோத்தி மகாதேவர் கோவிலில் நடனப்பணி செய்து வந்தனர். அயோத்தியில் பெரும் பஞ்சம் வந்த போது நகர் நீங்கி தட்சண பூமி நோக்கி நடந்தனர். அயோத்தி நகரைக் கடந்து கங்கைகொண்டான், கயத்தாறு ஊர்களைத் தாண்டி ஆசிரமம் என்னும் ஊருக்கு வந்தனர். அங்கே இரவு தங்கி திருக்குறுங்குடி, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, நாங்குநேரி, வள்ளியூர், பனக்குடி கடந்து ஆரல்வாய்மொழி வந்தனர். அங்கே இரண்டாம் நாள் இரவு தங்கிவிட்டு தோவாளை, வெள்ளமடம் வழியே ஆனைப்பாலம் தாண்டி சுசீந்திரம் வந்தனர்.
அப்போது சுசீந்திரத்தில் மன்னன் ராமவர்மா காண வந்த மார்கழி திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அபிராமி சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயனைத் தொழுந்தாள். தன் கஷ்டங்களை வேண்டி பிரார்த்தனை செய்தாள். தெய்வத்தை தொழுத கையோடு நேராக சென்று மன்னனைத் தொழுதாள். மன்னன் ராமவர்மா முன் சென்று, “மன்னா, என் பெயர் அபிராமி, இது என் அண்ணன் கிருஷ்ணன். நாங்கள் அயோத்தி நகரிலிருந்து பஞ்சத்தின் பொருட்டு இந்நகர் வந்தவர்கள். நாங்கள் பிழைக்க நீங்கள் தான் ஏதேனும் வழி செய்ய வேண்டும்” என வேண்டினாள். நடன மங்கையான அபிராமியின் அழகைக் கண்ட ராமவர்மா அவள் மேல் காதல் கொண்டாள். அத்தருணத்திலே அவளுக்கு பட்டும், கச்சையும் கொடுக்க விரும்பினார். இதனை அறிந்த தளவாய் மன்னரை சமாதானம் செய்து நல்ல நாள் பார்த்துக் கொடுக்கலாம் என அழைத்து வந்தார்.
ராமவர்மா அரண்மனை திரும்பியதும் சோதிடர்களைப் பார்த்து பட்டும், கச்சையும் கொடுக்க நல்ல நாள் குறித்து தரச் சொன்னார். மன்னரின் ஆணை படி நல்ல நேரம் குறிக்கப்பட்டது. அன்று ராமவர்மா அபிராமிக்கு பட்டும், கச்சையும் வழங்கினார். மன்னருக்கான மங்கல நாளில் நாதஸ்வரமும், குழவும் இசைக்கப்பட்டது. மன்னர் சுசீந்திரத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டார். மன்னரின் அருகே பல்லக்கில் அபிராமி வந்தாள். அவர்களுக்கு பின்னால் குதிரையில் கிருஷ்ணன் வந்தான். நாகர்கோவில், சுங்கான்கடை, செட்டிமடம் கடந்து இரணியல் வந்த மன்னர் அபிராமியை அம்மை தம்புரான் என அழைத்தார். கிருஷ்ணனுக்கு கொச்சுமாறப் பிள்ளை என்ற பட்டமும் வழங்கினார்.
தான் கண்ட பேரழகி அரசியாக வந்ததில் ராமவர்மாவின் மகிழ்ச்சி இரட்டிப்பானது. அம்மை தம்புரானும், மன்னரும் பள்ளியறை சேர்ந்தனர். அம்மை தம்புரான் கர்ப்பமுற்றாள். பத்தாவது மாதத்தில் அழகிய ஆண் குழந்தை ஒன்றை ஈன்றேடுத்தாள். அக்குழந்தை வலது கையில் சங்கு, சக்கர ரேகையுடன் பிறந்தது. ராமவர்மா ஆண் குழந்தை பிறந்த நேரத்தைக் கொண்டு ஜாதகம் கணித்தார். சோதிடன் பரல்களைப் பார்த்தான். நாள் கிரகங்களைக் கணித்தான். ஜாதகத்தை முழுதாக கணித்த சோதிடன் தம்புரானைப் பார்த்து, “தம்புரானே குழந்தை உத்திர நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறது. யோகம் கூடிய நட்சத்திரம். இவருக்கு ஒரு தம்பி, தங்கை பிறப்பார்கள். பின்னால் இந்நாட்டை ஆளப்போகும் மன்னர் அம்மை தம்புரானின் மகளை மணமுடிக்கக் கேட்டார். அதற்கு அண்ணன்மார்கள் சம்மதிக்காமல் மறுத்ததால் அவர்கள் கொல்லப்படுவார்கள்” என்றார். குழந்தை பிறந்தவுடன் இறப்பு பற்றிய செய்தி வந்ததும் மன்னர் அதிர்ச்சியடைத்தார். அன்றிலிருந்து ராமவர்மா மிக கவனமாக இருந்தார்.
மகனுக்கு வலிய தம்பி எனப் பெயரிட்டார். வலிய தம்பிக்கு ஆபரணங்கள் செய்ய தட்டானை வரவழைத்தார். வலிய தம்பிக்கு நிகரான பொன்னை அளந்துக் கொடுத்தார். வலிய தம்பி மூன்று வயதான போது அம்மை தம்புரான் ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். மன்னர் அக்குழந்தைக்கு குஞ்சு தம்பி எனப் பெயரிட்டார். வலிய தம்பி ஆறு வயதானபோது கொச்சுமணித் தங்கை பிறந்தாள்.
கொச்சுமணித் தங்கையின் பிறப்பைக் கணிக்க சோடதர் அழைத்து வரப்பட்டார். சோதிடர் பரல்களைப் பரப்பி பலன் சொன்னார். “மன்னா வலிய தம்பிக்கு 22 வயதாகும் போது கொச்சுமணித் தங்கை 16 வயதில் பருவமடைந்திருப்பாள். அப்போது வன்கொலை நிகழும். நாட்டின் மன்னராக பின்னர் பட்டமேற்க போகிறவர் கொச்சுமணியை பெண் கேட்டு வருவார். அண்ணன்கள் இருவரும் அதற்கு மறுப்பு தெரிவிப்பர். அதனால் மன்னருக்கும் தம்பிகளுக்கும் பிணக்கு வரும். மன்னர் தம்பிகளின் அதிகாரத்தை ஒடுக்கி சொத்துகளைப் பரிப்பார். இருவரையும் அவரே கொலையும் செய்வார்.” என்றார். சோதடர் சொல் கேட்ட மன்னர் மீண்டும் கலக்கமுற்றார். தன் வாழ்நாளில் பிள்ளைகள் மூவரையும் பத்திரமாக்க திட்டங்கள் தீட்டினார்.
வலிய தம்பி ஏழு வயதான போது எழுத்தறிவிக்க வேண்டும் என மன்னர் ராமவர்மா விரும்பினார். மந்திரியை அழைத்து விஷயத்தை சொன்ன போது மந்திரி, “பத்மநாபபுரத்தில் உள்ள நீலகண்ட பிள்ளை குடும்பத்திற்கு கல்வி கற்பிப்பதில் சமர்த்தர்.  அவரை அழைக்கலாம்” என்றார். மந்திரி சொல்படி ராமவர்மா நீலகண்ட பிள்ளைக்கு ஆள் அனுப்பி அழைத்து வந்தார். ஒட்டனின் சொல் கேட்டு நீலகண்ட பிள்ளை வலிய தம்பிக்கு, குஞ்சு தம்பிக்கு கல்வி கற்றுக் கொடுக்க சம்மதித்தார்.

Revision as of 14:20, 25 June 2022

தம்பிமார் கதை கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கில் உள்ள கதைப்பாடல்.

தம்பிமார் கதை