நா.வை. விசுவலிங்கம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "நா.வை. விசுவலிங்கம் (ஜூன் 1, 1930) ஈழத்து இசை நாடகக் கலைஞர். நாடகங்கள் பல நடித்ததுடன், பல நாடகங்களாஇ நெறியாள்கை செய்தார். == வாழ்க்கைக் குறிப்பு == இலங்கை நயினாத்தீவில் ஜூன் 1, 1930இல் நா.வை....")
 
No edit summary
Line 1: Line 1:
நா.வை. விசுவலிங்கம் (ஜூன் 1, 1930) ஈழத்து இசை நாடகக் கலைஞர். நாடகங்கள் பல நடித்ததுடன், பல நாடகங்களாஇ நெறியாள்கை செய்தார்.
நா.வை. விசுவலிங்கம் (ஜூன் 1, 1930) ஈழத்து இசை நாடகக் கலைஞர். நாடகங்கள் பல நடித்ததுடன், பல நாடகங்களை நெறியாள்கை செய்தார்.


== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==

Revision as of 14:08, 24 June 2022

நா.வை. விசுவலிங்கம் (ஜூன் 1, 1930) ஈழத்து இசை நாடகக் கலைஞர். நாடகங்கள் பல நடித்ததுடன், பல நாடகங்களை நெறியாள்கை செய்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை நயினாத்தீவில் ஜூன் 1, 1930இல் நா.வை. விசுவலிங்கம் பிறந்தார். ஆரம்பக்கல்வியை நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி வித்தியாசாலையில் பயின்றார். ஆங்கிலக்கல்வியை அரசினர் ஆங்கிலப்பாடசாலையில் பயின்றார். 1944இல் சிரேஷ்டதராதரப் பரிட்சையும், 1956இல் உயர்தரப்பரிட்சையிலும் தேர்ச்சி பெற்றார். அக்டோபர் 1, 1947முதல் தபால் இலாகாவில் நிரந்தர ஊழியராகி பதின்மூன்று வருடங்கள் பணியாற்றினார். 1958ஆம் ஆண்டிலிருந்து பொ.எ.வி. சேவையில் சேர்ந்து மட்டக்களப்பு, கொழும்பு, மன்னார் குருனாகல், திருகோணமலை ஆகிய இடங்களிலும் யாழ்ப்பாணத்திலும் பணியாற்றினார்.

கலை வாழ்க்கை

1942இல் மூளாய் ஆறுமுகம் அவர்களிடம் தவில் பழகினார். 1950இல் யாழ் முதலாம் குறுக்குத்தெருவிலுள்ள நாடகக் கல்லூரியில் நாடகம் பயின்றார். 1952களில் சங்கீதபூசணம் ஏ.எஸ். ராமநாதன் அவர்களிடம் மிருதங்கம் கற்றுக் கொண்டார். நாடகம் , வில்லுப்பாட்டு, கதாபிரசங்கம், மிருதங்கம் நிகழ்ச்சிகளை நடத்தினார். இலங்கை வானொலியிலும் நிழ்ச்சிகள் நடத்தினார்.

இணைந்து நடித்தவர்கள்
  • நா. கணபதிப்பிள்ளை
  • சபா ஆனந்தர்
  • வித்துவான் சி. குமாரசாமி
  • ப.க. பரமலிங்கம்
  • க.க. சந்திரன்
  • சி. நடேசபிள்ளை
  • சண்முகராசா
  • வித்துவான் ப.க. காமாட்சி சுந்தரன்
  • புலவர் அரியதாயகம்
  • நா.க. சன்முகநாதபிள்ளை
  • இ. கனகசபை
  • பண்டிதர் நா. சுந்தசாமி

விருதுகள்

  • 1964 - 1970 வரை திருகோணமலை ஆலயத்தில் மிருதங்கம் வாசித்து ”மிருதங்கமாமணி” “மிருதங்க சாகரச்சுடர்” “மிருதங்கவிற்பன்னர்” என்ற பட்டங்களையும், ”லயஞான வித்தகர்” என்ற பெயரையும் பெற்றார்.

நடித்த நாடங்கள், பாத்திரங்கள்

  • சத்தியவான் சாவித்திரி - சத்தியவான்
  • யவீன யமதர்மபார் - யமன்
  • சகுந்தலா - துஷ்யந்தன்
  • வாழ்க்கைப்படகு - தகப்பன்
  • வேலைக்காரி - வில்லன்
  • சுப்பிரமணியபாரதி - பாரதி
  • வீரபாண்டியகட்டபொம்மன் - கட்டப்பொம்மன்
  • அடங்காப்பிடாரி - பிடாரி
  • வாடகைவீடு - தகப்பன்
  • பாதுகாபட்டாபிஷேகம் - தசரதர்
  • காத்தவராயன் - பூமாதேவி, கழுக்காத்தான்

பழக்கிய கூத்துக்கள்

  • வாலிவதம்
  • நொண்டிநாடகம்
  • காத்தவராயன்

உசாத்துணை