under review

ஜான் மென்னி: Difference between revisions

From Tamil Wiki
(changed template text)
Line 31: Line 31:
* [https://www.pressandjournal.co.uk/fp/entertainment/whats-on/2319902/recalling-the-aberdeen-artist-who-captured-the-horror-of-life-in-a-japanese-pow-camp/ The Aberdeen artist who captured the abject horror]   
* [https://www.pressandjournal.co.uk/fp/entertainment/whats-on/2319902/recalling-the-aberdeen-artist-who-captured-the-horror-of-life-in-a-japanese-pow-camp/ The Aberdeen artist who captured the abject horror]   
* [https://mosaicscience.com/story/far-east-prisoners-of-war/ Unspoken: the forgotten prisoners of war]
* [https://mosaicscience.com/story/far-east-prisoners-of-war/ Unspoken: the forgotten prisoners of war]
{{finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 13:38, 15 November 2022

ஜான் மென்னி- ராணுவப் புகைப்படம்
ஜான் மென்னி ஓவியம்
ஜான் மென்னி ஓவியம்
ஜான் மென்னி ஓவியம்
ஜான் மென்னி ஓவியம்

ஜான் மென்னி (John George Mennie) , ( நவம்பர் 26, 1911 – ஆகஸ்ட் 24, 1982) ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஓவியர். சயாம் மரண ரயில்பாதை பற்றிய ஓவியங்களுக்காக புகழ்பெற்றவர்.

(பார்க்க சயாம் மரண ரயில்பாதை )

பிறப்பு, கல்வி

ஜான் மென்னி 28, கிளாரன்ஸ் தெரு, அபெர்தீன், ஸ்காட்லாந்தில் ( 28 Clarence Street, Aberdeen, Scotland) நவம்பர் 26, 1911-ல் ராபர்ட் மென்னிக்கும் மாரக்கரெட்டுக்கும் பிறந்தார். அவர் வீட்டில் ஜாக் என அழைக்கப்பட்டார். அபெர்தீனில் க்ரே கவின்கலைப் பள்ளியில் கலை பயின்றார் (Gray's School of Art) பின்னர் வெஸ்ட்மினிஸ்டர் கவின்கலைப் பள்ளியிலும் பயின்றார். படிப்புக்குப்பின் தொழில்முறை ஓவியராக லண்டனில் பணியாற்றும்போது 1940-ல் ராணுவ சேவைக்கு அழைக்கப்பட்டார்.

சயாம் மரண ரயில்பாதையில்

ஜான் மென்னி 1941-ல் சிங்கப்பூருக்கு அழைக்கப்பட்டார் (எண் 1604539 , 2nd Highland A.A. regiment, H.K.S.R.A. ) பிப்ரவரி 15, 1942-ல் அவர் ஜப்பானியர்களிடம் கைதியாக பிடிபட்டார். 1945 ஆகஸ்ட் வரை ஜப்பானியர்களிடம் மென்னி போர்க்கைதியாக இருந்தார். 1946-ல் படையில் இருந்து விடுபட்டு அபெர்தீன் திருப்பினார்.

சயாம் மரண ரயில்பாதை திட்டத்தில் மிகக்கடுமையான வாழ்க்கையை அனுபவித்தவர்களில் மென்னி ஒருவர் மென்னி செப்டெம்பர் 5, 1946-ல், போர்முடிந்து தாய்லாந்தில் பிரட்சி ( ) மீட்பு முகாமில் இருந்த போது அந்த அனுபவத்தை தன் அம்மாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 1942 முதல் அவர் சாங்கி சிறையில் இருந்தார். ஐந்துநாள் ரயில் பயணத்தில் அவர் தாய்லாந்துக்கு கொண்டுசெல்லப்பட்டார். நவம்பர் 3-ஆம் தேதி அவர் தாய்லாந்துக்குக் கொண்டுசெல்லப்பட்டார். கொண்டோன்புரி (Kontonburi) என்னும் ஊரிலிருந்து மேலும் நான்குநாள் மே கிளாங் (Mae Klong) ஆறு வழியாக அகன்ற படகில் பயணம் செய்து ஒரு மலைச்சரிவில் ஆற்றங்கரையில் கொண்டுசென்று இறக்கப்பட்டார். அவர்கள் அங்கேயே கிடைக்கும் மூங்கில்களையும் ஓலைகளையும் கொண்டு ஒரு முகாம் அமைக்கும்படி ஆணையிடப்பட்டனர். தாய்லாந்தில் கானோ என அழைக்கப்பட்ட அவ்விடத்தில் அவர்கள் பத்து மைல் தொலைவுக்கு மலைகளை வெட்டி ரயில்பாதை அமைக்கும்படி பணிக்கப்பட்டனர். அவர்கள் அறுநூறுபேர் இருந்தனர். ஆறுமாத காலத்தில் அவர்களில் 125 பேர் மரணம் அடைந்தனர்

மென்னி கானோ முகாமிலிருந்து 1943ல் இருந்து கிளம்பி கண்டோன்புரியில் இருந்து இரண்டு கிமீ தொலைவில் இருந்த சுங்காய் என்னும் ஊரை 1944-ல் சென்றடைந்தார். அங்கிருந்து நாகோம் பாதோம் (Nakhon Pathom) என்னும் ஊரைச் சென்றடைந்தார். உலகின் இரண்டாவது பெரிய புத்தர் ஆலயம் இருக்கும் ஊர் அது என அவர் தன் அன்னைக்கு எழுதினார். ஜனவரி 1945-ல் மென்னி டாம் அவான் என்னும் முகாமுக்கும் மே 1945-ல் அங்கிருந்து பிராட்சி முகாமுக்கும் மாற்றப்பட்டார். அங்கு அவர்கள் வெடிமருந்துகளை பாதுகாப்பாக வைக்கும்பொருட்டு பாறையை வெட்டி சுரங்கப்பாதை அமைக்கும்படி ஆணையிடப்பட்டனர்.

சயாம் மரணரயில் ஓவியங்கள்

மென்னி சயாம் மரணரயில் அமைப்புப் பணியில் நிகழ்ந்த கொடுமைகளை தொடர்ச்சியாக ஓவியங்களாக வரைந்துகொண்டிருந்தார். அவர் இரண்டு வகையான ஓவியங்களை வரைந்தார். ஜப்பானியர் நடத்திய போர்க்கொடுமைகளின் சித்தரிப்புகளை கோட்டோவியங்களாக வரைந்து ஒரு மூங்கில் கழிக்குள் சுருட்டி மறைத்து வைத்திருந்தார். தன் தோழர்களின் முகங்களை ஏறத்தாழ எண்பது கோட்டோவியங்களாக வரைந்து ஒரு மூங்கில் கழிக்குள் வைத்திருந்தார். அது ஜப்பானியர்களால் கண்டெடுக்கப்பட்டு பின்னர் திருடி மீட்கப்பட்டது. அவற்றை மென்னி தன் அம்மாவுக்கு எழுதிய கடிதங்களுடன் அனுப்பினார். மென்னி பென்சில், மையூற்றிய பேனா ஆகியவற்றால் துண்டுத்தாள்களில் வரைந்தார். ஒரு நீர்வண்ணச்சாய பெட்டி கிடைக்க அவற்றையும் பயன்படுத்திக்கொண்டார்.

மென்னி 1978-ல் தன் ஓவியங்களில் ஐம்பதை லண்டன் இம்பீரியல் போர் அருங்காட்சியகத்துக்கு (Imperial War Museum, London) நன்கொடையாக அளித்துவிட்டார். மென்னியின் ஓவியங்கள் அங்கே அவருடன் சயாம் மரணரயில் பாதை திட்டத்தில் பணியாற்றிய ஜாக் பிரிட்ஜர் சாக்கர், ரொனால்ட் சியர்ல், பிலிப் மெனின்ஸ்கி ஆகியோருடய ஓவியங்களுடன் அவருடைய ஓவியங்களும் வைக்கப்பட்டுள்ளன.

தனி வாழ்க்கை

1947-ல், போருக்குப்பின் மென்னில் மார்ல்போன் கலைக்கல்லூரியில் (Marylebone Institute of Adult Education) ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் லண்டன் கல்வித்துறை அதிகாரியாகவும் இருந்தார். போர்ட்டோபெலோ சாலையில் இருந்த நிகோல்ஸ் தொல்பொருள் கண்காட்சி (tNicolls Antique Market in Portobello Road)யில் ஒரு கடை நடத்தினார். மென்னி ராயல் சிற்றோவியம் மற்றும் சிற்பக் கழக (Royal Society of Miniature Painters Sculptors and Gravers) உறுப்பினராகவும் இருந்தார்.

மென்னி டோரதி ((Bertha Dorothy Linter Cole)யை மார்ல்போன் கலைக்கல்லூரியில் மாணவியாக சந்தித்தார். அவர்கள் லண்டனில் வாழ்ந்தனர்.

மறைவு

ஜான் மென்னி ஆகஸ்ட் 24, 1982-ல் மறைந்தார்

உசாத்துணை


✅Finalised Page