ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட்: Difference between revisions
No edit summary |
|||
| Line 2: | Line 2: | ||
பார்க்க [[சயாம் மரண ரயில்பாதை]] | பார்க்க [[சயாம் மரண ரயில்பாதை]] | ||
== பிறப்பு,கல்வி == | |||
பிரிட்டனில் 1913ல் பிறந்த ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட் நார்தாம்ப்டன் கவின்கலைக் கல்லுரியில் பயின்றார். அங்கே உடற்கூறு ஓவியக்கலை பயின்றார். புகழ்பெற்ற சார்ல்டன் ஆர்ட்டிஸ்ட்ஸ் (Carlton Artists) என்னும் கலைநிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர் சேம்பர்வில் (Camberwell School of Art) கவின்கலைக் கல்லூரியில் பயின்றார். | |||
== சயாம் மரணரயில் == | |||
ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட் 1942ல் சிங்கப்பூருக்கு பிரிட்டிஷ் ராணுவ வீரராகச் சென்றார். அங்கே ஜப்பானியர்களிடம் போர்க்கைதியாக பிடிபட்டு சாங்கி முகாமிலும் பின்னர் தாய்ந்தாந்தில் சுவர்னபுரி முகாமிலும் இருந்தார். சயாம் மரணரயில்பாதை திட்டத்தில் பணியாற்றினார். அங்கே நிகழ்ந்த கொடுமைகளையும் ஒடுக்குமுறைகளையும் அவர் பழைய காகிதங்களில் கரியாலும் பென்சிலாலும் வரைந்தார். அந்த ஓவியங்கள் பின்னாளில் சிங்கப்பூரில் ஜப்பானியர்களுக்கு எதிராக நடந்த போர்க்குற்ற விசாரணையில் முதன்மைச் சாட்சியங்களாக திகழ்ந்தன. | |||
== போர்க்கால முகச்சித்திரங்கள் == | |||
ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட் போர்க்கைதியாக இருந்தபோது தன்னுடனிருந்த படைவீரர்களையும் தளபதிகளையும் காகிதங்களில் முகச்சித்திரங்களாக வரைந்தார். ஏறத்தாழ ஆயிரம் ஓவியங்களை அவர் வரைந்தார். அவற்றில் 18 ஒவியங்களே எஞ்சியிருக்கின்றன. டஸ்டி ரோட்ஸ் என்னும் தளபதியை அவர் மூன்று நிமிடங்களில் வரைந்த முகச்சித்திரம் ஆஷ்லியின் திறனுக்குச் சான்றாக கருதப்படுகின்றது. அவருடைய ஓவியங்கள் ஸ்திரேலிய போர் அருங்காட்சியகத்திலும்.(Australian War Memorial) லண்டன், இம்பீரியல் போர் அருங்காட்சியகத்திலும் (Imperial War Museum) உள்ளன. அவருடன் சயாம் மரணரயில் பாதை திட்டத்தில் பணியாற்றிய [[ஜாக் பிரிட்ஜர் சாக்கர்]], [[ரொனால்ட் சியர்ல்]], [[பிலிப் மெனின்ஸ்கி]] ஆகியோருடய ஓவியங்களுடன் அவருடைய ஓவியங்களும் வைக்கப்பட்டுள்ளன. 15 ஆகஸ்ட் முதல் டிசம்பர் 1995 வரை இம்பீரியல் போர் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கண்காட்சியில் ஐம்பதாண்டுகளுக்குப் பின் ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட் மெனின்ஸ்கியை மீண்டும் சந்தித்தார் | |||
== பிற்கால கலைப்படைப்புகள் == | |||
ஜார்ஜ் ஓல்ட் தொடர்ச்சியாக வரைந்துகொண்டிருந்தார். பெரும்பாலும் உருமாறிக்கொண்டிருந்த நகரங்களின் இயற்கைக் காட்சிகள். இறுதிநாள் வரை போர்க்கைதியாக இருந்த நாட்களின் நினைவுகள் அளித்த உள அழுத்தம் அவருக்கு இருந்தது. அது அவர் ஓவியங்களில் வெளிப்பட்டது | |||
== மறைவு == | |||
ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட் 2001 ல் மறைந்தார் | |||
== உசாத்துணை == | |||
* [http://search.slv.vic.gov.au/primo_library/libweb/action/search.do?ct=didym&fn=search&tab=default_tab&mode=Basic&scp.scps=scope%3a%28SLV_VOYAGER%29%2cscope%3a%28SLV_DIGITOOL%29%2cscope%3a%28SLVPRIMO%29&vl%28freeText0%29=ashley+++george++old+1913-2001%2c+&vl%28freeText0%29=ashley+++george++old+1913-2001%2c&vl%281UI0%29=exact&vl%2810247183UI0%29=creator&vl%2811480836UI1%29=all_items ஆஷ்லி ஜார்ஜ் ஓவியங்கள் ஆஸ்திரேலிய அருங்காட்சியகம்] | |||
* [https://www.iwm.org.uk/collections/item/object/20591 ஆஷ்லி ஜார்ஜ் ஓவியங்கள் லண்டன் அருங்காட்சியகம்] | |||
* ஆஷ்லி ஓவியங்கள் [https://blogs.slv.vic.gov.au/such-was-life/the-major-moon-collection/#.VEgxst5yc-Y மேஜர் மூன் சேகரிப்பு, ஆஸ்திரேலியா] | |||
* [https://www.lstmed.ac.uk/history/far-eastern-prisoners-of-war-fepow/burma-railway-medicine Burma Railway Medicine ஆஷ்லி ஜார்ஜ் ஓவியங்களுடன்] | |||
. | |||
Revision as of 02:53, 22 June 2022
ஆஷ்லி ஜார் ஓல்ட் ( Ashley George Old) (1913-2001) ஆங்கிலேய ஓவியர். சயாம் மரணரயில்பாதையின் கொடுமைகளை பதிவுசெய்தவர். அவை போர்க்குற்ற விசாரணையில் சான்றுகளாக இருந்தன்
பார்க்க சயாம் மரண ரயில்பாதை
பிறப்பு,கல்வி
பிரிட்டனில் 1913ல் பிறந்த ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட் நார்தாம்ப்டன் கவின்கலைக் கல்லுரியில் பயின்றார். அங்கே உடற்கூறு ஓவியக்கலை பயின்றார். புகழ்பெற்ற சார்ல்டன் ஆர்ட்டிஸ்ட்ஸ் (Carlton Artists) என்னும் கலைநிறுவனத்தில் பணியாற்றினார். பின்னர் சேம்பர்வில் (Camberwell School of Art) கவின்கலைக் கல்லூரியில் பயின்றார்.
சயாம் மரணரயில்
ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட் 1942ல் சிங்கப்பூருக்கு பிரிட்டிஷ் ராணுவ வீரராகச் சென்றார். அங்கே ஜப்பானியர்களிடம் போர்க்கைதியாக பிடிபட்டு சாங்கி முகாமிலும் பின்னர் தாய்ந்தாந்தில் சுவர்னபுரி முகாமிலும் இருந்தார். சயாம் மரணரயில்பாதை திட்டத்தில் பணியாற்றினார். அங்கே நிகழ்ந்த கொடுமைகளையும் ஒடுக்குமுறைகளையும் அவர் பழைய காகிதங்களில் கரியாலும் பென்சிலாலும் வரைந்தார். அந்த ஓவியங்கள் பின்னாளில் சிங்கப்பூரில் ஜப்பானியர்களுக்கு எதிராக நடந்த போர்க்குற்ற விசாரணையில் முதன்மைச் சாட்சியங்களாக திகழ்ந்தன.
போர்க்கால முகச்சித்திரங்கள்
ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட் போர்க்கைதியாக இருந்தபோது தன்னுடனிருந்த படைவீரர்களையும் தளபதிகளையும் காகிதங்களில் முகச்சித்திரங்களாக வரைந்தார். ஏறத்தாழ ஆயிரம் ஓவியங்களை அவர் வரைந்தார். அவற்றில் 18 ஒவியங்களே எஞ்சியிருக்கின்றன. டஸ்டி ரோட்ஸ் என்னும் தளபதியை அவர் மூன்று நிமிடங்களில் வரைந்த முகச்சித்திரம் ஆஷ்லியின் திறனுக்குச் சான்றாக கருதப்படுகின்றது. அவருடைய ஓவியங்கள் ஸ்திரேலிய போர் அருங்காட்சியகத்திலும்.(Australian War Memorial) லண்டன், இம்பீரியல் போர் அருங்காட்சியகத்திலும் (Imperial War Museum) உள்ளன. அவருடன் சயாம் மரணரயில் பாதை திட்டத்தில் பணியாற்றிய ஜாக் பிரிட்ஜர் சாக்கர், ரொனால்ட் சியர்ல், பிலிப் மெனின்ஸ்கி ஆகியோருடய ஓவியங்களுடன் அவருடைய ஓவியங்களும் வைக்கப்பட்டுள்ளன. 15 ஆகஸ்ட் முதல் டிசம்பர் 1995 வரை இம்பீரியல் போர் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற கண்காட்சியில் ஐம்பதாண்டுகளுக்குப் பின் ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட் மெனின்ஸ்கியை மீண்டும் சந்தித்தார்
பிற்கால கலைப்படைப்புகள்
ஜார்ஜ் ஓல்ட் தொடர்ச்சியாக வரைந்துகொண்டிருந்தார். பெரும்பாலும் உருமாறிக்கொண்டிருந்த நகரங்களின் இயற்கைக் காட்சிகள். இறுதிநாள் வரை போர்க்கைதியாக இருந்த நாட்களின் நினைவுகள் அளித்த உள அழுத்தம் அவருக்கு இருந்தது. அது அவர் ஓவியங்களில் வெளிப்பட்டது
மறைவு
ஆஷ்லி ஜார்ஜ் ஓல்ட் 2001 ல் மறைந்தார்
உசாத்துணை
- ஆஷ்லி ஜார்ஜ் ஓவியங்கள் ஆஸ்திரேலிய அருங்காட்சியகம்
- ஆஷ்லி ஜார்ஜ் ஓவியங்கள் லண்டன் அருங்காட்சியகம்
- ஆஷ்லி ஓவியங்கள் மேஜர் மூன் சேகரிப்பு, ஆஸ்திரேலியா
- Burma Railway Medicine ஆஷ்லி ஜார்ஜ் ஓவியங்களுடன்
.