பா. நாகமணிப்போடி அண்ணாவியார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
பா. நாகமணிப்போடி அண்ணாவியார் (ஜூலை 22, 1910- ) ஈழத்தமிழ் கூத்துக் கலைஞர். தன் வாழ்நாளில் இருபத்தியெட்டு கூத்துக்களை அரங்கேற்றம் செய்துள்ளார்.
பா. நாகமணிப்போடி அண்ணாவியார் (ஜூலை 22, 1910- ) ஈழத்தமிழ் கூத்துக் கலைஞர். கூத்தில் முக்கியமான கதாநாயகியாக ஆடும் குமாரத்தி வேடத்திற்காக பெரிதும் ரசிக்கப்பட்டார். தன் வாழ்நாளில் இருபத்தியெட்டு கூத்துக்களை அரங்கேற்றம் செய்துள்ளார். மட்டக்களப்புப் படுவோன் கரையில் தென்மோடி அண்ணாவி பரம்பரையை உருவாக்கினார்.  

== வாழ்க்கைக் குறிப்பு ==
== வாழ்க்கைக் குறிப்பு ==
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மன்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தமிழர்கள் வாழும் கிராமமான கன்னன்குடாவில் பாலகப்போடிக்கு மகனாக  ஜூலை 22, 1910இல் நாகமணிப்போடி பிறந்தார். தந்தை பாலகப்போடி மத்தள அடிகாரர். தன் ஐந்து வயதிலிருந்து மத்தளம் கற்றார். தந்தையுடன் கூத்துக்கலை பார்க்கச் சென்று தாளக்கட்டுகளைக் கற்றார். அதற்கு அருகிலுள்ள சாளம்பக்கேணியிலுள்ள பெண்ணைத் திருமணம் செய்து அங்கே குடியேறியதால் ”சாளம்பக்கேணி நாகமணிப்போடி” என்றழைக்கப்பட்டார். நாகமணிப்போடி, வித்துவான் சீனித்தம்பி அண்ணாவியிடம் தென்மோடி பயின்றார். நாகமணிப்போடி தென்மோடி, வடமோடி இரண்டிலும் வல்லவர்.  
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மன்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தமிழர்கள் வாழும் கிராமமான கன்னன்குடாவில் பாலகப்போடிக்கு மகனாக  ஜூலை 22, 1910இல் நாகமணிப்போடி பிறந்தார். தந்தை பாலகப்போடி மத்தள அடிகாரர். தன் ஐந்து வயதிலிருந்து மத்தளம் கற்றார். தந்தையுடன் கூத்துக்கலை பார்க்கச் சென்று தாளக்கட்டுகளைக் கற்றார். கன்னன்குடாவிற்கு அருகிலுள்ள சாளம்பக்கேணியிலுள்ள பெண்ணைத் திருமணம் செய்து அங்கே குடியேறியதால் ”சாளம்பக்கேணி நாகமணிப்போடி” என்றழைக்கப்பட்டார். நாகமணிப்போடியின் பெண்வேடமிட்டு ஆடும் கூத்திற்கு ரசிகையே அவரைத் திருமணம் செய்து கொண்டார். நாகமணிப்போடி, வித்துவான் சீனித்தம்பி அண்ணாவியிடம் தென்மோடி பயின்றார். நாகமணிப்போடி தென்மோடி, வடமோடி இரண்டிலும் வல்லவர்.  
===== தோற்ற அடையாளம் =====
===== தோற்ற அடையாளம் =====
== கலை பங்களிப்பு ==
== கலை பங்களிப்பு ==
ஐம்பது வருட காலம் தொடர்ச்சியாக கூத்து பழகினார். ஆடுதல், பாடுதல், மத்தளம் வாசித்தல் போன்ற திறமைகளைக் கொண்டிருந்தார். தென்மோடி பெண்ணாட்டம் ஆடக்கூடியவர். மட்டக்களப்புப் படுவோன் கரையில் தென்மோடி அண்ணாவி பரம்பரையை உருவாக்கினார். முப்பது ஐந்து விடிய விடிய ஆடும் முழுநீளக் கூத்துகள் பழகியுள்ளார். பதினாறாம் வயதில் வள்ளியம்மன் நாடகம் என்ற முதல் கூத்தை தன் தந்தையின் உதவியோடு அரங்கேற்றினார்.
நாகமணிப்போடி ஐம்பது வருட காலம் தொடர்ச்சியாக கூத்து பழகினார். ஆடுதல், பாடுதல், மத்தளம் வாசித்தல் போன்ற திறமைகளைக் கொண்டிருந்தார். தென்மோடி பெண்ணாட்டம் ஆடக்கூடியவர். மட்டக்களப்புப் படுவோன் கரையில் தென்மோடி அண்ணாவி பரம்பரையை உருவாக்கினார். முப்பது ஐந்து விடிய விடிய ஆடும் முழுநீளக் கூத்துகள் பழகியுள்ளார். பதினாறாம் வயதில் வள்ளியம்மன் நாடகம் என்ற முதல் கூத்தை தன் தந்தையின் உதவியோடு அரங்கேற்றினார்.
 
நாகமணிப்போடியின் திறமையைக் கண்டுகொண்ட கன்னன்குடா வலையறவின் பெரும் அண்ணாவியரான சீனி அண்ணாவியார் தான் பழக்கிய கூத்தில் நாகமணிப்போடியை குமாரத்தியாக தேர்வு செய்தார். ஒருவர் அண்ணாவியாக வேண்டுமென்றால் அந்த அண்ணாவியார் முக்கியமான கதாநாயகியாக (குமாரத்தி) ஒரு பெண் கூத்து பாத்திரம் ஆடியிருக்க வேண்டும். மென்மையான் குரல் வளமும், உச்சத்தில் பாடக்கூடிய திறமையும், ஒற்றை நாடி உடம்பு, அழகான தோற்றமும் கொண்ட நாகமணிப்போடி தன் இளம் வயதிலேயே குமாரத்தியாக ஆடி சீனி அண்ணாவியாரின் மதிப்பைப் பெற்றார். இவரின் பெண் ஆட்டம் மக்களாலும், குறிப்பாக பெண்களாலும் பெரிதும் ரசிக்கப்பட்டது.  

பேராசிரியர் சி. மெளனகுருவின் “மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்” ஆய்வு நூலில் பதிவு செய்துள்ள தென்மோடித் தாளக்கட்டும், ஆட்டகோலங்களும் நாகமணிப்போடி அண்ணாவியாரும், ஆறுமுகப்போடி அண்ணாவியாரும் வாயால் சொன்ன தாளக்கட்டுகள் என மெளனகுரு குறிப்பிடுகிறார்.  

Revision as of 15:11, 9 June 2022

பா. நாகமணிப்போடி அண்ணாவியார் (ஜூலை 22, 1910- ) ஈழத்தமிழ் கூத்துக் கலைஞர். கூத்தில் முக்கியமான கதாநாயகியாக ஆடும் குமாரத்தி வேடத்திற்காக பெரிதும் ரசிக்கப்பட்டார். தன் வாழ்நாளில் இருபத்தியெட்டு கூத்துக்களை அரங்கேற்றம் செய்துள்ளார். மட்டக்களப்புப் படுவோன் கரையில் தென்மோடி அண்ணாவி பரம்பரையை உருவாக்கினார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மன்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தமிழர்கள் வாழும் கிராமமான கன்னன்குடாவில் பாலகப்போடிக்கு மகனாக ஜூலை 22, 1910இல் நாகமணிப்போடி பிறந்தார். தந்தை பாலகப்போடி மத்தள அடிகாரர். தன் ஐந்து வயதிலிருந்து மத்தளம் கற்றார். தந்தையுடன் கூத்துக்கலை பார்க்கச் சென்று தாளக்கட்டுகளைக் கற்றார். கன்னன்குடாவிற்கு அருகிலுள்ள சாளம்பக்கேணியிலுள்ள பெண்ணைத் திருமணம் செய்து அங்கே குடியேறியதால் ”சாளம்பக்கேணி நாகமணிப்போடி” என்றழைக்கப்பட்டார். நாகமணிப்போடியின் பெண்வேடமிட்டு ஆடும் கூத்திற்கு ரசிகையே அவரைத் திருமணம் செய்து கொண்டார். நாகமணிப்போடி, வித்துவான் சீனித்தம்பி அண்ணாவியிடம் தென்மோடி பயின்றார். நாகமணிப்போடி தென்மோடி, வடமோடி இரண்டிலும் வல்லவர்.

தோற்ற அடையாளம்

கலை பங்களிப்பு

நாகமணிப்போடி ஐம்பது வருட காலம் தொடர்ச்சியாக கூத்து பழகினார். ஆடுதல், பாடுதல், மத்தளம் வாசித்தல் போன்ற திறமைகளைக் கொண்டிருந்தார். தென்மோடி பெண்ணாட்டம் ஆடக்கூடியவர். மட்டக்களப்புப் படுவோன் கரையில் தென்மோடி அண்ணாவி பரம்பரையை உருவாக்கினார். முப்பது ஐந்து விடிய விடிய ஆடும் முழுநீளக் கூத்துகள் பழகியுள்ளார். பதினாறாம் வயதில் வள்ளியம்மன் நாடகம் என்ற முதல் கூத்தை தன் தந்தையின் உதவியோடு அரங்கேற்றினார்.

நாகமணிப்போடியின் திறமையைக் கண்டுகொண்ட கன்னன்குடா வலையறவின் பெரும் அண்ணாவியரான சீனி அண்ணாவியார் தான் பழக்கிய கூத்தில் நாகமணிப்போடியை குமாரத்தியாக தேர்வு செய்தார். ஒருவர் அண்ணாவியாக வேண்டுமென்றால் அந்த அண்ணாவியார் முக்கியமான கதாநாயகியாக (குமாரத்தி) ஒரு பெண் கூத்து பாத்திரம் ஆடியிருக்க வேண்டும். மென்மையான் குரல் வளமும், உச்சத்தில் பாடக்கூடிய திறமையும், ஒற்றை நாடி உடம்பு, அழகான தோற்றமும் கொண்ட நாகமணிப்போடி தன் இளம் வயதிலேயே குமாரத்தியாக ஆடி சீனி அண்ணாவியாரின் மதிப்பைப் பெற்றார். இவரின் பெண் ஆட்டம் மக்களாலும், குறிப்பாக பெண்களாலும் பெரிதும் ரசிக்கப்பட்டது.

பேராசிரியர் சி. மெளனகுருவின் “மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்” ஆய்வு நூலில் பதிவு செய்துள்ள தென்மோடித் தாளக்கட்டும், ஆட்டகோலங்களும் நாகமணிப்போடி அண்ணாவியாரும், ஆறுமுகப்போடி அண்ணாவியாரும் வாயால் சொன்ன தாளக்கட்டுகள் என மெளனகுரு குறிப்பிடுகிறார்.

சீடர்கள்

  • பாலகப்போடி அண்ணாவியார்

விருது

  • 1996இல் இலங்கை அரசு தேசிய அளவில் ”கலாபூசண விருது” அளித்தது.
  • 2003இல் நாட்டிய மயில் விருதும், பணப்பரிசும் பெற்றார்.

அரங்கேற்றிய கூத்துகள்

வடமோடி
  • வள்ளியம்மன் நாடகம்
  • வீரகுமாரன் நாடகம்
  • சூர சம்ஹாரம் நாடகம்
  • மாடுபிடி சண்டை நாடகம்
  • ஆரவல்லி சூரவல்லி
  • தரும புத்திரன்
  • பரிமழகாயன்
தென்மோடி
  • மதுரவாசகன் நாடகம்
  • அல்லி நாடகம்
  • அலங்கார ரூபன் நாடகம்
  • பவளவள்ளி நாடகம்
  • மதுர வாழன் நாடகம்
  • மயிலிராவணன்
  • லீலாவதி நாடகம்
  • நரேந்திரபூபதி நாடகம்
  • சாரங்கதாரன்
  • தம்பதி
  • புவனேந்திரன்
  • சித்திரசேனன்
  • அனுருத்திரன்
  • செட்டி வர்த்தகன்
  • பவளக்கொடி
  • அழகேந்திரன்
  • அரிச்சந்திரன்
  • புரூரவச் சக்கரவர்த்தி
  • தக்கன் யாகம்
பிற
  • 17ஆம் 18ஆம் போர்
  • மதன துரந்தன் நாடகம்

உசாத்துணை

  • ”நாடகம் – அரங்கியல்: பழையதும் புதியதும்” பேராசிரியர் சி. மெளனகுரு: குமரன் புத்தக இல்லம்: கொழும்பு-சென்னை 2021
  • 1997: மட்டக்களப்பு மாவட்டச் செயலகம்: கூத்துக்கலை ஆவணத்தொகுப்பு வீடியோப் பேழைகளின் சிறப்பு மலர்