under review

சிவசங்கரி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 8: Line 8:
சிவசங்கரி 1963-ல் பொறியாளர் சந்திரசேகரனை மணந்தார். சிவசங்கரி சிடி பாங்க்கில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றினார். பரத நாட்டியம் முறையாக பயின்று அரங்கேற்றம் செய்திருக்கிறார். கர்நாடக சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றவர்.
சிவசங்கரி 1963-ல் பொறியாளர் சந்திரசேகரனை மணந்தார். சிவசங்கரி சிடி பாங்க்கில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றினார். பரத நாட்டியம் முறையாக பயின்று அரங்கேற்றம் செய்திருக்கிறார். கர்நாடக சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றவர்.
==இலக்கிய வாழ்க்கை==
==இலக்கிய வாழ்க்கை==
சிவசங்கரியின் முதல் சிறுகதை ’அவர்கள் பேசட்டும்’ 1968-ஆம் ஆண்டு கல்கி இதழில் பிரசுரமாகியது. இச்சிறுகதை, குழந்தை இல்லாத தம்பதியினரின் மெல் உணர்வுகளை பேசுவதாக அமைந்தது. 1980-ஆம் ஆண்டு ஆனந்த விகடன் பத்திரிக்கையில் தொடராக வெளி வந்த 'ஒரு மனிதனின் கதை' குடிபோதையின் சீரழிவுகளையும் அதிலிருந்து கதாநாயகன் மீள்வதை பற்றியுமானது.  
சிவசங்கரியின் முதல் சிறுகதை ’அவர்கள் பேசட்டும்’ 1968-ஆம் ஆண்டு கல்கி இதழில் பிரசுரமாகியது. இச்சிறுகதை, குழந்தை இல்லாத தம்பதியினரின் மெல் உணர்வுகளை பேசுவதாக அமைந்தது. 1980-ஆம் ஆண்டு ஆனந்த விகடன் பத்திரிக்கையில் தொடராக வெளி வந்த '[[ஒரு மனிதனின் கதை]]' குடிபோதையின் சீரழிவுகளையும் அதிலிருந்து கதாநாயகன் மீள்வதை பற்றியுமானது.  


ஆனந்த விகடன் இதழில் 1983-ஆம் ஆண்டு வெளியான பாலங்கள் தொடர் தமிழ் பிராமண சமூகத்தில் மாறிவரும் பழக்க வழக்கங்களையும், பெண்களின் உளவியல் மாற்றங்களையும் மூன்று தலைமுறையை சார்ந்த பெண்கள் மூலம் சொன்னது.  
ஆனந்த விகடன் இதழில் 1983-ஆம் ஆண்டு வெளியான [[பாலங்கள்]] தொடர் தமிழ் பிராமண சமூகத்தில் மாறிவரும் பழக்க வழக்கங்களையும், பெண்களின் உளவியல் மாற்றங்களையும் மூன்று தலைமுறையை சார்ந்த பெண்கள் மூலம் சொன்னது..  
 
சிவசங்கரியின் மேற் சொன்ன இரு நாவல்களையும், எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய "தமிழின் சிறந்த பொழுது போக்கு நாவல்கள்" பட்டியலில், சமூக மிகுகற்பனை படைப்புகள் வரிசையில் சேர்க்கிறார்.  
=====இந்தியாவை இணைத்துக்கட்டு=====
=====இந்தியாவை இணைத்துக்கட்டு=====
[[File:Siva3.jpg|thumb|சிவசங்கரி]]
[[File:Siva3.jpg|thumb|சிவசங்கரி]]
சிவசங்கரி இந்தியாவை இணைத்துக்கட்டு (''KNIT INDIA THROUGH LITERATURE,'' in June 2009) என்னும் திட்டத்தின்படி இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 18 மொழிகளில் எழுதும் வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் நேரில் கண்டு பேட்டி எடுத்து அவர்களின் படைப்பு ஒன்றையும் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். தினமணி கதிர் இதழில் வெளியான அந்த தொடர் பின்னர் நூல்களாக வெளிவந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலுமாக தெற்கு, கிழக்கு, மேற்கு, வடக்கு என்னும் நான்கு தொகுதிகளாக அந்நூல்கள் 1998, 2000, 2004, 2009-ஆம் ஆண்டுகளில் வெளிவந்தன.
சிவசங்கரி இந்தியாவை இணைத்துக்கட்டு (''KNIT INDIA THROUGH LITERATURE,'' in June 2009) என்னும் திட்டத்தின்படி இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 18 மொழிகளில் எழுதும் வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் நேரில் கண்டு பேட்டி எடுத்து அவர்களின் படைப்பு ஒன்றையும் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். தினமணி கதிர் இதழில் வெளியான அந்த தொடர் பின்னர் நூல்களாக வெளிவந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலுமாக தெற்கு, கிழக்கு, மேற்கு, வடக்கு என்னும் நான்கு தொகுதிகளாக அந்நூல்கள் 1998, 2000, 2004, 2009-ஆம் ஆண்டுகளில் வெளிவந்தன.
=====திரைப்பட பங்களிப்பு=====
==திரைப்படம்==
[[File:Siva1.jpg|thumb|சிவசங்கரி]]
[[File:Siva1.jpg|thumb|சிவசங்கரி]]
சிவசங்கரியின் நான்கு நாவல்கள் தமிழில் திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கின்றன.  
சிவசங்கரியின் நான்கு நாவல்கள் தமிழில் திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கின்றன.  
Line 24: Line 22:
* குட்டி - 2001
* குட்டி - 2001
==இலக்கிய இடம்==
==இலக்கிய இடம்==
தமிழில் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் சிவசங்கரி. முதல் தலைமுறையைச் சேர்ந்த வை.மு. கோதைநாயகி அம்மாள் போன்றவர்கள் பெண்கல்விக்காக போராடியவர்கள். இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த ஆர். சூடாமணி போன்றவர்கள் குடும்பத்தில் பெண்ணின் இடம் சார்ந்து எழுதியவர்கள். சிவசங்கரி பெண்ணின் வெளியுலகம் பற்றி எழுதியவர். வேலைக்குப் போகும் பெண்கள், தனக்கான ஆணை தேர்வுசெய்யும் பெண்கள், உறவுகளை மாற்றிக்கொள்ளும் பெண்களைப் பற்றி எழுதினார். ஆகவே பெண்களால் விரும்பப்பட்ட எழுத்தாளராக இருந்தார். மெல்லுணர்ச்சிகளை முன்வைக்கும் நடையும் நிகழ்வுப்போக்குகளும் கொண்ட பொதுப்போக்கு எழுத்து சிவசங்கரி எழுதியது. அவை புகழ்மிக்க வார இதழ்களில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்டன. குடியின் தீமை பற்றி சிவசங்கரி எழுதிய 'ஒரு மனிதனின் கதை' ஒரு நல்லெண்ண எழுத்து. புனைவு என்னும் வகையில் பாலங்கள் அவருடைய சிறந்த ஆக்கம் என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள். மூன்று தலைமுறைப் பெண்களின் வாழ்க்கையின் விழுமிய மாறுதல்களைச் சொல்லும் நாவல் அது.  
தமிழில் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் சிவசங்கரி. முதல் தலைமுறையைச் சேர்ந்த [[வை.மு.கோதைநாயகி அம்மாள்]] போன்றவர்கள் பெண்கல்விக்காக போராடியவர்கள். இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த [[ஆர்.சூடாமணி|ஆர். சூடாமணி]] போன்றவர்கள் குடும்பத்தில் பெண்ணின் இடம் சார்ந்து எழுதியவர்கள். சிவசங்கரி பெண்ணின் வெளியுலகம் பற்றி எழுதியவர். வேலைக்குப் போகும் பெண்கள், தனக்கான ஆணை தேர்வுசெய்யும் பெண்கள், உறவுகளை மாற்றிக்கொள்ளும் பெண்களைப் பற்றி எழுதினார். ஆகவே பெண்களால் விரும்பப்பட்ட எழுத்தாளராக இருந்தார். மெல்லுணர்ச்சிகளை முன்வைக்கும் நடையும் நிகழ்வுப்போக்குகளும் கொண்ட பொதுப்போக்கு எழுத்து சிவசங்கரி எழுதியது. அவை புகழ்மிக்க வார இதழ்களில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்டன. குடியின் தீமை பற்றி சிவசங்கரி எழுதிய 'ஒரு மனிதனின் கதை' ஒரு நல்லெண்ண எழுத்து. புனைவு என்னும் வகையில் பாலங்கள் அவருடைய சிறந்த ஆக்கம் என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள். மூன்று தலைமுறைப் பெண்களின் வாழ்க்கையின் விழுமிய மாறுதல்களைச் சொல்லும் நாவல் அது. சிவசங்கரியின் மேற் சொன்ன இரு நாவல்களையும், எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய "தமிழின் சிறந்த பொழுது போக்கு நாவல்கள்" பட்டியலில், சமூக மிகுகற்பனை படைப்புகள் வரிசையில் சேர்க்கிறார்
==விருதுகள்==
==விருதுகள்==
சிவசங்கரி பெற்ற விருதுகள்
சிவசங்கரி பெற்ற விருதுகள்

Revision as of 06:50, 4 June 2022

To read the article in English: Sivasankari. ‎

சிவசங்கரி

சிவசங்கரி (அக்டோபர் 14, 1942) தமிழில் பொது வாசிப்புக்கான சமூக நாவல்களை எழுதிய எழுத்தாளர். இவர் மத்திய தர மக்களின் வாழ்க்கையை கதைக்களனாக கொண்டு பல சிறுகதைகள், நாவல்கள், குறு நாவல்கள் எழுதியிருக்கிறார். பெண்களின் உரிமைகள் மற்றும் பாலியல் சுதந்திரம் ஆகியவற்றை கருக்களாகக் கொண்டு எழுதியவர். குடி முதலிய சமூகத்தீங்குகளை எதிர்த்தும் எழுதியிருக்கிறார். இந்திய இலக்கியத்தை ஒட்டுமொத்தமாக தொகுத்துப்பார்க்கும் இலக்கிய முயற்சியான ‘இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு’ தமிழுக்கு இவருடைய கொடை.

பிறப்பு, கல்வி

சிவசங்கரி அக்டோபர் 14, 1942-ல் சூர்யநாராயணன், ராஜலெக்ஷ்மி இணையருக்கு நான்காவது குழந்தையாக சென்னையில் பிறந்தார். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயத்தில் உயர்நிலை கல்வி கற்றார். பின் சென்னை, SIET மகளிர் கல்லூரியில் விலங்கியலில் இளநிலை பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

Siva2.jpg

சிவசங்கரி 1963-ல் பொறியாளர் சந்திரசேகரனை மணந்தார். சிவசங்கரி சிடி பாங்க்கில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றினார். பரத நாட்டியம் முறையாக பயின்று அரங்கேற்றம் செய்திருக்கிறார். கர்நாடக சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்றவர்.

இலக்கிய வாழ்க்கை

சிவசங்கரியின் முதல் சிறுகதை ’அவர்கள் பேசட்டும்’ 1968-ஆம் ஆண்டு கல்கி இதழில் பிரசுரமாகியது. இச்சிறுகதை, குழந்தை இல்லாத தம்பதியினரின் மெல் உணர்வுகளை பேசுவதாக அமைந்தது. 1980-ஆம் ஆண்டு ஆனந்த விகடன் பத்திரிக்கையில் தொடராக வெளி வந்த 'ஒரு மனிதனின் கதை' குடிபோதையின் சீரழிவுகளையும் அதிலிருந்து கதாநாயகன் மீள்வதை பற்றியுமானது.

ஆனந்த விகடன் இதழில் 1983-ஆம் ஆண்டு வெளியான பாலங்கள் தொடர் தமிழ் பிராமண சமூகத்தில் மாறிவரும் பழக்க வழக்கங்களையும், பெண்களின் உளவியல் மாற்றங்களையும் மூன்று தலைமுறையை சார்ந்த பெண்கள் மூலம் சொன்னது..

இந்தியாவை இணைத்துக்கட்டு
சிவசங்கரி

சிவசங்கரி இந்தியாவை இணைத்துக்கட்டு (KNIT INDIA THROUGH LITERATURE, in June 2009) என்னும் திட்டத்தின்படி இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 18 மொழிகளில் எழுதும் வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் நேரில் கண்டு பேட்டி எடுத்து அவர்களின் படைப்பு ஒன்றையும் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். தினமணி கதிர் இதழில் வெளியான அந்த தொடர் பின்னர் நூல்களாக வெளிவந்தது. தமிழிலும் ஆங்கிலத்திலுமாக தெற்கு, கிழக்கு, மேற்கு, வடக்கு என்னும் நான்கு தொகுதிகளாக அந்நூல்கள் 1998, 2000, 2004, 2009-ஆம் ஆண்டுகளில் வெளிவந்தன.

திரைப்படம்

சிவசங்கரி

சிவசங்கரியின் நான்கு நாவல்கள் தமிழில் திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கின்றன.

  • அவன் அவள் அது (ஒரு சிங்கம் முயலாகிறது நாவல்) - 1980
  • 47 நாட்கள் - 1981
  • நண்டு - 1981
  • குட்டி - 2001

இலக்கிய இடம்

தமிழில் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் சிவசங்கரி. முதல் தலைமுறையைச் சேர்ந்த வை.மு.கோதைநாயகி அம்மாள் போன்றவர்கள் பெண்கல்விக்காக போராடியவர்கள். இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த ஆர். சூடாமணி போன்றவர்கள் குடும்பத்தில் பெண்ணின் இடம் சார்ந்து எழுதியவர்கள். சிவசங்கரி பெண்ணின் வெளியுலகம் பற்றி எழுதியவர். வேலைக்குப் போகும் பெண்கள், தனக்கான ஆணை தேர்வுசெய்யும் பெண்கள், உறவுகளை மாற்றிக்கொள்ளும் பெண்களைப் பற்றி எழுதினார். ஆகவே பெண்களால் விரும்பப்பட்ட எழுத்தாளராக இருந்தார். மெல்லுணர்ச்சிகளை முன்வைக்கும் நடையும் நிகழ்வுப்போக்குகளும் கொண்ட பொதுப்போக்கு எழுத்து சிவசங்கரி எழுதியது. அவை புகழ்மிக்க வார இதழ்களில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்டன. குடியின் தீமை பற்றி சிவசங்கரி எழுதிய 'ஒரு மனிதனின் கதை' ஒரு நல்லெண்ண எழுத்து. புனைவு என்னும் வகையில் பாலங்கள் அவருடைய சிறந்த ஆக்கம் என்று விமர்சகர்கள் சொல்கிறார்கள். மூன்று தலைமுறைப் பெண்களின் வாழ்க்கையின் விழுமிய மாறுதல்களைச் சொல்லும் நாவல் அது. சிவசங்கரியின் மேற் சொன்ன இரு நாவல்களையும், எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய "தமிழின் சிறந்த பொழுது போக்கு நாவல்கள்" பட்டியலில், சமூக மிகுகற்பனை படைப்புகள் வரிசையில் சேர்க்கிறார்

விருதுகள்

சிவசங்கரி பெற்ற விருதுகள்

  • கஸ்துரி சீனிவாசன் விருது, பாலங்கள் நாவலுக்காக - 1983-1984
  • ராஜா சர் அண்ணாமலைச்செட்டியார் விருது, சின்னநூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது கட்டுரைத்தொகுதிக்காக - 1988
  • பாரதீய பாஷாபரிஷத் விருது, வேரில்லாத மரங்கள் நாவலுக்காக - 1989-1990
  • தஞ்சை தமிழ்ப்பல்கலையின் தமிழன்னை விருது - 1989
  • ராஜீவ் காந்தி தேசிய ஒருமைப்பாட்டு விருது, இந்தியாவை இணைத்துக்கட்டு நூல்களுக்காக
  • திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, குழந்தை இலக்கியம், அம்மா சொன்ன கதைகள் நூலுக்காக - 1998
  • ப்ரேம்சந்த் ராஷ்ட்ரீய சாகித்ய சம்மான் விருது - 2001
  • நல்லி திசையெட்டும் விருது, மொழியாக்கம், நான் நானாக நூலின் தெலுங்கு வடிவம் - 2007
  • கோபிசந்த் இலக்கிய விருது, யுவகலாவாணி, ஆந்திரா - 2008
  • கே. சுவாமிநாதன் நினைவு விருது, கம்பன் கழகம், சென்னை - 2009
  • வாழ்நாள் சாதனையாளர் விருது, ஜஸ்டிஸ் பஷீர் அகமது சையத் கல்லூரி - 2010
  • பொற்றாமரை விருது, பொற்றாமரை கலையிலக்கிய கழகம் - 2013
  • இலக்கியசிந்தனை வாழ்நாள் விருது - 2015
  • கோவை தமிழ்க்கலாச்சாரக் கழக விருது - 2016
  • பாரதியார் விருது, பாரதிசங்கம், சென்னை - 2017
  • குலோத்துங்கன் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை விருது, சென்னை - 2017
  • தங்கத்தாரகை விருது, நியூஸ்7 ஊடகம் - 2018
  • இந்திய வட்டமேஜை அமைப்பு, இந்தியாவின் பெருமிதம் விருது - 2018
  • வாழ்நாள் சாதனை விருது, Tag Corporation - 2019
  • பாரதி தேசிய விருது, தமிழ்நாடு அரசு - 2019

நூல்கள்

சிவசங்கரி 150 சிறுகதைகள், 36 நாவல்கள், 48 குறு நாவல்கள் எழுதியுள்ளார். 1996-ஆம் ஆண்டு அம்மா சொன்ன கதைகள் என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான பேசும் புத்தகம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

நாவல்கள்
  • எதற்காக? - 1970
  • திரிவேணி சங்கமம் - 1971
  • ஏன்? - 1973
  • சியாமா - 1973
  • நண்டு - 1975
  • நதியின் வேகத்தோடு - 1975
  • மெள்ள மெள்ள - 1978
  • 47 நாட்கள் - 1978
  • அம்மா, ப்ளீஸ் எனக்காக - 1979
  • ஆயுள் தண்டனை - 1979
  • வளர்த்த கடா - 1979
  • இரண்டு பேர் - 1979
  • ஒரு மனிதனின் கதை - 1980
  • பிராயச்சித்தம் - 1981
  • போகப்போக - 1981
  • நெருஞ்சி முள் - 1981
  • தவம் - 1982
  • திரிசங்கு சொர்க்கம் - 1982
  • மாலையில் பூக்கும் மலர்கள் - 1982
  • பறவை - 1982
  • பாலங்கள் - 1983
  • ஆயிரங்காலத்துப் பயிர் - 1983
  • கருணைக் கொலை - 1984
  • அவன் - 1985 ('சுபஹ்' என்ற ஹிந்தி தொலைகாட்சித் தொடராக வெளியிடப்பட்டது)
  • ஒற்றைப் பறவை - 1985
  • அது சரி, அப்புறம்? - 1985
  • நூலேணி - 1985
  • அம்மா பிள்ளை - 1986
  • மலையின் அடுத்த பக்கம் - 1987
  • வேரில்லாத மரங்கள் - 1987
  • வானத்து நிலா - 1989
  • ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் - 1989
  • நான் நானாக - 1990
  • சுட்டமண் - 1991
  • இன்னொருத்தி + இன்னொருத்தி - 1992
  • இனி - 1993
குறுநாவல்கள்
  • சந்தியா ஏன் அழுகிறாள்?
  • காத்திருக்கிறேன்
  • தனிமை
  • எஃப்.பி.ஐ.
  • சுறாமீன்கள்
  • தப்புக்கணக்கு
  • ராமனைப்போல் ஒரு பிள்ளை
  • ஒரு சிங்கம் முயலாகிறது
  • துள்ளமுடியாத புள்ளி மான்
  • ஒருபகல் ஒரு இரவு
  • வெட்கம் கெட்டவர்கள்
  • அம்மா
  • இவளும் அவளும்
  • அவர்களுக்குப்புரியாது
  • தான் தன் சுகம்
  • பார்வை
  • காளான்
  • கடைசியில்
  • கோழைகள்
  • விமோசனம்
  • மூக்கணாங்கயிறு
  • அப்போதும் இப்போதும்
  • நட்பு
  • ஓவர்டோஸ்
  • தகப்பன் சாமி
  • காரணங்கள்
  • அடிமாடுகள்
  • கண்கெட்ட பிறகு
  • இதுவும் தாஜ்மகால்தான்
  • இன்னொரு காரணம்
  • பயிரை மேயும் வேலிகள்
  • தீர்வு
  • மண்குதிரைகள்
  • ருசிகண்ட பூனை
  • இனி தொடராது
  • இரட்டை நாக்குகள்
  • அந்தம்மா ரொம்ப நல்லவங்க
  • கிணற்றுத்தவளைகள்
  • விலை
  • பச்சோந்திகள்
  • ஏரிக்கடியில்
  • உயர்ந்தவர்கள்
  • முதல்கோணன்
  • குட்டி
  • காதல் என்பது எதுவரை
  • நப்பாசை
பயணக்கட்டுரைகள்
  • புதுப்புது அனுபவங்கள் (நான்கு தொகுதிகள்)
  • பாரத தரிசனம்
  • பிரதமருடன் பயணங்கள்
  • மனம் கவர்ந்த மலேசியா
  • புதியசுவடுகள்
  • ஹாங்காங் சைனா பாங்காக்
சிறுகதைகள்
  • உண்மைக்கதைகள்
  • குழப்பங்கள்
  • டிரங்கால்
  • கழுகு
  • அணில்கள்
  • புல்தடுக்கிப் பயில்வான்கள்
  • நட்பு
  • அரவிந்தர் சொல்கிறார்
  • தெப்பக்குளம்
  • அவர்கள் பேசட்டும்
  • பட்டாம்பூச்சியும் தூக்கமும்
  • சிவசங்கரியின் 60 சிறுகதைகள் (இரு தொகுதிகள்)
குழந்தைகளுக்கான பேசும் புத்தகம்
  • அம்மா சொன்ன கதைகள் (புத்தகமும் ஒலிநாடாவும் இணைந்தது) - 1996
வாழ்க்கை வரலாறு
  • இந்திராவின் கதை (இந்திராகாந்தி)
  • அப்பா(ஜி.டி. நாயுடு)
  • அறியாத முகங்கள்( ஜி.கே. மூப்பனார் பற்றி)
  • சூரியவம்சம்
இலக்கிய ஆய்வு
  • இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 1 - தெற்கு - 1998
  • இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 2 - கிழக்கு - 2000
  • இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 3 - மேற்கு - 2004
  • இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு - பாகம் 4 - வடக்கு - 2009
மொழியாக்கப்படைப்புகள்
  • கடவுள் ஏன் சிறந்த நண்பர் (சுவாமி சுத்தானந்தா உரைகள்)
  • எண்ணம் வசப்படும் (சுவாமி சுத்தானந்தா உரைகள்)
  • ராவி நதியில் குல்ஸார் சிறுகதைகள்
  • சாய் பாபா இன்னும் வாழ்கிறார் - ஜய வாஹி
  • தீர்க்கதரிசி (டாக்டர் பி.சி. ரெட்டி வாழ்க்கை வரலாறு)
  • ஸ்ரீ சாயி சரித்திர தரிசனம்
மொழியாக்கங்கள்
  • The Betrayal and Other Stories
  • Portable Roots
  • Deception
  • Bridges
  • The Trip to Nowhere
  • Tyagu

உசாத்துணை


✅Finalised Page