under review

முத்தம்பெருமாள் (கணியான்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
கலைமாமணி பி. முத்தம்பெருமாள் (பிறப்பு: ஏப்ரல் 1, 1970) கணியான் கூத்துக் கலைஞர். முத்தம்பெருமாள் கணியான் குழுவின் அண்ணாவியாக பாடுபவர். நாங்குனேரி பி. வானமாமலை கணியானின் மகன். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மகுட கலைஞர்கள் நல சங்கத்தின் துணைத் தலைவராக உள்ளார்.
[[File:Muthamperumal.jpg|thumb]]
கலைமாமணி வா. முத்தம்பெருமாள் (பிறப்பு: ஏப்ரல் 1, 1970) [[கணியான் கூத்து|கணியான் கூத்துக்]] கலைஞர். முத்தம்பெருமாள் கணியான் குழுவின் அண்ணாவியாக பாடுபவர். நாங்குனேரி பி. வானமாமலை கணியானின் மகன். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மகுட கலைஞர்கள் நல சங்கத்தின் துணைத் தலைவராக உள்ளார்.
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
பி. முத்தம்பெருமாள் ஏப்ரல் 1, 1970 அன்று நாங்குனேரி அரசு மருத்துவமனையில் நாங்குனேரி பி. வானமாமலை, கோமதியம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். முத்தம் பெருமாளுடன் பிறந்தவர்கள் ஆறு பேர். மூன்று தம்பி, மூன்று தங்கை. முத்தம் பெருமாளின் பூர்வீகம் களக்காடு அருகே உள்ள பத்மனேரி. பத்மனேரி கொம்பு மாடன் இவரது குடும்பத்தின் குலதெய்வம்.
[[File:Muthamperumal1.jpg|thumb|''முத்தம்பெருமாள் குழுவுடன், சென்னைப் பல்கலைக்கழகம்'']]
 
வா. முத்தம்பெருமாள் ஏப்ரல் 1, 1970 அன்று நாங்குனேரி அரசு மருத்துவமனையில் நாங்குனேரி பி. வானமாமலை, கோமதியம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். முத்தம் பெருமாளுடன் பிறந்தவர்கள் ஆறு பேர். மூன்று தம்பி, மூன்று தங்கை. முத்தம் பெருமாளின் பூர்வீகம் களக்காடு அருகே உள்ள பத்மனேரி. பத்மனேரி கொம்பு மாடன் இவரது குடும்பத்தின் குலதெய்வம்.
[[File:Muthamperumal9.jpg|thumb|''தந்தை வானமாமலையுடன் முத்தும்பெருமாள்'']]
தாத்தா பெருமாள் தாஸ் நாடகக் கலைஞர். நாங்குனேரியில் தனியாக நாடகக் கம்பெனி வைத்திருந்தார்.
முத்தம்பெருமாள் நாங்குனேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். குடும்பத்தின் வறுமை நிலைக் காரணமாக அவரால் மேலே படிக்க இயலவில்லை.
முத்தம்பெருமாள் நாங்குனேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். குடும்பத்தின் வறுமை நிலைக் காரணமாக அவரால் மேலே படிக்க இயலவில்லை.
== தனி வாழ்க்கை ==
== தனி வாழ்க்கை ==
முத்தம் பெருமாள் 1988 ஆம் ஆண்டு பத்தொன்பதாம் வயதில் பானுமதியை திருமணம் செய்தார். முத்தம்பெருமாள், பானுமதி தம்பதியருக்கு மூன்று குழந்தைகள். மூத்த மகன் சிவராமகிருஷ்ணன் பி.இ முடித்து ஹெ.டி.எப்.சி வங்கியில் கிளை நிர்வாகியாக உள்ளார். இரண்டு மகள்கள், கோகிலாதேவி (வக்கீல்), கார்த்திகேயாயினி (எம்.ஏ. படித்துக் கொண்டிருக்கிறார்).
[[File:Muthamperumal2.jpg|thumb|''முத்தம்பெருமாள் குழுவுடன்'']]
முத்தம் பெருமாள் 1988 ஆம் ஆண்டு பத்தொன்பதாம் வயதில் பானுமதியை திருமணம் செய்தார். முத்தம்பெருமாள், பானுமதி தம்பதியருக்கு மூன்று குழந்தைகள். மூத்த மகன் சிவராமகிருஷ்ணன் பி.இ முடித்து ஹெ.டி.எப்.சி வங்கியில் கிளை நிர்வாகியாக பணியாற்றுகிறார். இரண்டு மகள்கள், கோகிலாதேவி (வக்கீல்), கார்த்திகேயாயினி (எம்.ஏ. படித்துக் கொண்டிருக்கிறார்).
[[File:Muthamperumal10.jpg|thumb|''தம்பி மணிகண்டனுடன்'']]
முத்தம் பெருமாளின் தந்தை பி. வானமாமலை கணியான் அண்ணாவியாகப் பாடுபவர். 1987 ஆம் ஆண்டு இந்திய தேசிய ஒற்றுமை கலை விழாவிற்காக ஒரு மாத காலம் டெல்லியில் தங்கி கூத்து நடத்தினார். அங்கிருந்து நாங்குனேரி திரும்பிய போது அவரது சாரீரம் பழுதடைந்திருந்தது. தன் ஐம்பத்திரண்டாவது வயதில் குரலை இழந்த வானமாமலை அதன்பின் கூத்துக் கட்டுவதை நிறுத்திக் கொண்டார். வானமாமலை குடும்பத்தில் ஏற்பட்ட வறுமையால் நாங்குனேரியில் உள்ள பூர்வீக சொத்துக்களை விற்று குடும்பத்துடன் வள்ளியூருக்கு குடிபெயர்ந்தார்.
[[File:Muthamperumal3.jpg|thumb]]
முத்தம் பெருமாள் 1989 ஆம் ஆண்டு குடும்ப வறுமை நிலைக் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டும் பணியில் சேர்ந்தார். அங்கிருந்து அரசு ரயில்வே பணியில் வாகனம் ஓட்டும் பொருட்டு கோவா சென்றார். 1991 முதல் 1994 வரை முழு நேர வாகனம் ஓட்டியாக கோவாவில் இருந்தார். ரயில்வே அதிகாரிகள் பழுதடைந்த வாகனத்தை ஓட்டச் சொன்னபோது அதனை மறுத்து வேலையை ராஜனாமா செய்து வள்ளியூர் திரும்பினார்.
முத்தம்பெருமாள் தற்போது குடும்பத்துடன் சேரன்மகாதேவியில் வசித்து வருகிறார்.
== கலை வாழ்க்கை ==
[[File:Muthamperumal4.jpg|thumb]]
முத்தம்பெருமாள் பதினாழு வயதில் தந்தை பி. வானமாமலை அண்ணாவியாக பாடும் கூத்தில் பின்பாட்டுக்காரராகப் பாடத் தொடங்கினார். ஐந்து வருடம் தந்தையுடன் இணைந்து கூத்துக் கட்டினார். பின் ஆறு வருடம் பணி காரணமாக எந்த கூத்திலும் பங்கேற்கவில்லை.
 
1994-ல் கோவாவில் இருந்து வள்ளியூர் திரும்பிய போது நேஷ்னல் பர்மிட் லாரியில் வேலைச் சேர எண்ணியிருந்தார். அப்போது நாகர்கோவில் மாவட்டம் தரிசனங்கோப்பு அருகே உள்ள மத்தியூர் சுடலைமாடன் சுவாமி கோவிலில் கூத்துக் கட்ட வேண்டி வானமாமலையை அழைக்க வந்திருந்தனர். வீட்டில் வானமாமலை இல்லாததால் வந்தவர்கள் முத்தம்பெருமாளை விசாரித்தனர். முத்தம்பெருமாள், “நான் வானமாமலையின் மூத்த மகன். இப்போது நான் கூத்துக் கட்டிக் கொண்டிருக்கிறேன்” எனக் கூறினார். மத்தியூரில் இருந்து வந்தவர்கள் வானமாமலை சரீரம் பற்றி ஏற்கனவே அறிந்திருந்த காரணத்தினால் முத்தம்பெருமாளைப் பாடும் படி வேண்டி முன் பணம் கொடுத்துச் சென்றனர். வீடு திரும்பியது விஷயம் அறிந்த வானமாமலை, ”நீ தனியா பாடினது இல்லையே. உன்னால பாட முடியுமா?” எனக் கேட்டார். முத்தம்பெருமாள் ”நான் பாடுவேன்” எனச் சொல்லி சித்திரை மாதம் கடைசி வெள்ளி அன்று மத்தியூர் சுடலைமாடன் சுவாமி கோவிலில் முதல் முறை அண்ணாவியாகப் பாடினார். அதுவே அவர் அண்ணாவியாகப் பாடிய முதல் கூத்து.
[[File:Muthamperumal5.jpg|thumb|''முத்தம்பெருமாள், 2020-ல் கலைமாமணி விருது பெற்ற போது'']]
பின்னர் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் மாவட்டங்களில் உள்ள கோவில் கொடை, பங்குனி உத்திரம், சித்திரை, ஆடி திருவிழாக்களில் முத்தம் பெருமாளைப் பாட அழைத்தனர். கணியான்  வழக்கம் போல் முத்தம்பெருமாளும் சுடலைமாடன் சுவாமி கதை, அரிச்சந்திரன் கதை, மகிஷாசுரமர்த்தினி கதை, உஜ்ஜைனி மாகாளி கதை, சந்தன் மாரியம்மன் கதை, பிரம்ம சித்தி கதை, அஷ்ட கன்னிகள் கதை  எனப் பாடும் கோவிலுக்குத் தகுந்தார் போல் கதை அமைப்பார்.
 
கோவில் திருவிழாக்கள் இல்லாமல் அரசு விழாக்களிலும் பாடியுள்ளார். சினிமாவிலும் சில பாடல்கள் எழுதியுள்ளார்.
 
== திரைத்துறை ==
[[File:Muthamperumal7.jpg|thumb|''இளையராஜாவுடன் முத்தம்பெருமாள்'']]
தமிழ் சினிமாவில் சத்ரபதி, வெந்து தணிந்தது காடு என இரண்டு படங்களுக்கு கதைக் கருவில் சுடலை மாடன் சம்பந்தமாக பாடல் எழுதிக் கொடுத்துள்ளார். அதற்கான இசை மெட்டுகளுக்கும் உதவியுள்ளார்.
 
== கலைத்துறையில் இடம் ==
[[File:Muthamperumal6.jpg|thumb]]
முத்தம்பெருமாள் சமகால கணியான் கலைஞர்களில் முதன்மையான அண்ணாவிகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது தந்தை பி. வானமாமலை அவரது காலத்தில் தலைசிறந்த கணியானாக இருந்தார். வழக்கில் இருக்கும் கதைகளில் நவீன விஷயங்களை (அரசியல், செய்தி, பொது நிகழ்வு) சேர்த்துப் பாடுவது முத்தம்பெருமாளின் இயல்புகளுள் ஒன்று.
 
”முத்தம்பெருமாளின் கம்பீரமான குரலும், தொய்வில்லாமல் சொல்லும் கதை திறமும், வசன உச்சரிப்பில் இருக்கும் நேர்த்தியும் தான் அவரை கணியான் கூத்து கலைஞர்களுள் முதன்மையானவராக ஆக்குகிறது” என முனைவர் [[அ.கா. பெருமாள்]] குறிப்பிடுகிறார்.
 
== கணியான் குழு ==
[[File:Muthamperumal8.jpg|thumb|''முத்தம்பெருமாள் குழு, பழங்குடியினர் கலை விழாவில்'']]
முத்தம்பெருமாளின் கணியான் குழுவில் பிரதானமாக ஏழு பேர் இடம்பெற்றிருப்பர்.
 
* மகுடம் வாசிப்பது – சங்கரன், மந்திரமூர்த்தி, முருகன்
* வேஷங் கட்டி ஆடுவது – சித்திரவேல்<ref>சித்திரவேல் கணியான் இனத்தை சேர்ந்தவர் அல்ல. இவர் தோல்பாவைக் கூத்துக் கலைஞர். தோல்பாவைக் கூத்து நலிவடைந்து வருவதால் முத்தம்பெருமாளுடன் இணைந்து கூத்துக் கட்டி வருகிறார். 2008 முதல் சித்திரவேல் முத்தம்பெருமாள் குழுவில் வேஷம் கட்டி ஆடி வருகிறார்.
 
இவரைப் போல் முப்பத்தைந்து தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள் கணியான் கூத்திற்கு மாறியுள்ளனர்.</ref> , சிவகுமார்
* பின்பாட்டுக்காரர் – பரமசிவம் (முத்தம்பெருமாளின் மாமா)
 
1994 முதல் முத்தம்பெருமாளுக்கு பதினோரு பேர் பின்பாட்டுக்காரர்களாக இருந்துள்ளனர். அதில் காடங்குளம் பிச்சைய்யா, மனப்பாறை வீடு நடராஜன், தென்காசி ராமசந்திரன், துணமாலை, திருவடி நயினார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
 
== சங்கம் ==
முத்தம்பெருமாள் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மகுட கலைஞர்கள் நல சங்கத்திலும், கணியான் சங்கத்திலும் துணைத் தலைவராக உள்ளார்.
 
== விருதுகள் ==
 
* 2005 - திருநெல்வேலி மாவட்டக் கலைச்சுடர்மணி விருது
* 2019 - சர்வதேச முத்தமிழ் விருது
* 2020 - தமிழக அரசின் கலைமாமணி விருது
 
== வெளி இணைப்புகள் ==

முத்தம் பெருமாளின் தந்தை பி. வானமாமலை கணியான் அண்ணாவியாகப் பாடுபவர். 1987 ஆம் ஆண்டு இந்திய தேசிய ஒற்றுமை கலை விழாவிற்காக ஒரு மாத காலம் டெல்லியில் தங்கி கூத்து நடத்தினார். அங்கிருந்து நாங்குனேரி திரும்பிய போது அவரது சாரீரம் பழுதடைந்திருந்தது. அவரது குரல் அதன்பின் பாட இயலாமல் ஆனது. குடும்பத்தில் ஏற்பட்ட வறுமையால் வானமாமலை நாங்குனேரியில் உள்ள பூர்வீக சொத்துக்களை விற்று குடும்பத்துடன் வள்ளியூருக்கு குடிபெயர்ந்தார்.
* [https://www.youtube.com/watch?v=lLjamiKt9ZM சுடலை சுவாமி வரத்து, கணியான் கூத்து, முத்தம் பெருமாள் கணியான், யூடியூப்.காம் (பதிவேற்றியது கிராமத்து ஆன்மீகம்)]
* [https://www.youtube.com/watch?v=d8wZPZoJtSI நாங்குநேரி இறைப்புவாரி கோவில் கொடை, 2019, முத்தம் பெருமாள் மகுடம் கலை இசை, யூடியூப்.காம் (பதிவேற்றியது முத்துமாரி வில்லிசை)]
* [https://www.youtube.com/watch?v=zpeMQ7oBTGU திரு முத்தம் பெருமாள் கணியான் கூத்து மகுட ஆட்டம் கஞ்சிபுர சுடலை மாடசாமி திருக்கோவில் தோவாளை, 2022, யூடியூப்.காம்]
* [https://www.youtube.com/watch?v=JurIHgvJXGI Magudam: Rural Rhythms, The Hindu, youtube.com]
* [https://www.youtube.com/watch?v=yioLCZzMl1Q முத்தம்பெருமாள் புகைப்படக் காணொளி, முத்தம்பெருமாள் குழுவுடன், யூடியூப்.காம்]
* [https://www.youtube.com/watch?v=3gKVxw7PCas தோவாளை சீவலப்பேரியான் சுடலைமாடன் கோவில் கணியான் கூத்து, முத்தம்பெருமாள் கணியான் குழு, யூடியூப்.காம்]
* [https://www.thehindu.com/society/the-art-form-kaniyan-koothu-of-tamil-nadu-is-dedicated-to-the-graveyard-god-sudalai-madan/article24287788.ece On 'kaniyan koothu', an art form dedicated to the graveyard god, The Hindu, June 30, 2018]

1989 ஆம் குடும்ப வறுமை நிலைக் காரணமாக முத்தம் பெருமாள் தன் பத்தொன்பதாம் வயதில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டும் பணியில் சேர்ந்தார். அங்கிருந்து அரசு ரயில்வே பணியில் வாகனம் ஓட்டும் பொருட்டு கோவா சென்றார். 1991 முதல் 1994 வரை முழு நேர வாகனம் ஓட்டியாக கோவாவில் இருந்தார். ரயில்வே அதிகாரிகள் பழுதடைந்த வாகனத்தை ஓட்டச் சொன்னபோது அதனை மறுத்து வேலையை ராஜனாமா செய்து வள்ளியூர் திரும்பினார்.
== அடிக்குறிப்புகள் ==
<references />

== கலை வாழ்க்கை ==

{{Being created}}
{{Ready for review}}

Revision as of 15:29, 3 June 2022

Muthamperumal.jpg

கலைமாமணி வா. முத்தம்பெருமாள் (பிறப்பு: ஏப்ரல் 1, 1970) கணியான் கூத்துக் கலைஞர். முத்தம்பெருமாள் கணியான் குழுவின் அண்ணாவியாக பாடுபவர். நாங்குனேரி பி. வானமாமலை கணியானின் மகன். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மகுட கலைஞர்கள் நல சங்கத்தின் துணைத் தலைவராக உள்ளார்.

பிறப்பு, கல்வி

முத்தம்பெருமாள் குழுவுடன், சென்னைப் பல்கலைக்கழகம்

வா. முத்தம்பெருமாள் ஏப்ரல் 1, 1970 அன்று நாங்குனேரி அரசு மருத்துவமனையில் நாங்குனேரி பி. வானமாமலை, கோமதியம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். முத்தம் பெருமாளுடன் பிறந்தவர்கள் ஆறு பேர். மூன்று தம்பி, மூன்று தங்கை. முத்தம் பெருமாளின் பூர்வீகம் களக்காடு அருகே உள்ள பத்மனேரி. பத்மனேரி கொம்பு மாடன் இவரது குடும்பத்தின் குலதெய்வம்.

தந்தை வானமாமலையுடன் முத்தும்பெருமாள்

தாத்தா பெருமாள் தாஸ் நாடகக் கலைஞர். நாங்குனேரியில் தனியாக நாடகக் கம்பெனி வைத்திருந்தார். முத்தம்பெருமாள் நாங்குனேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை பயின்றார். குடும்பத்தின் வறுமை நிலைக் காரணமாக அவரால் மேலே படிக்க இயலவில்லை.

தனி வாழ்க்கை

முத்தம்பெருமாள் குழுவுடன்

முத்தம் பெருமாள் 1988 ஆம் ஆண்டு பத்தொன்பதாம் வயதில் பானுமதியை திருமணம் செய்தார். முத்தம்பெருமாள், பானுமதி தம்பதியருக்கு மூன்று குழந்தைகள். மூத்த மகன் சிவராமகிருஷ்ணன் பி.இ முடித்து ஹெ.டி.எப்.சி வங்கியில் கிளை நிர்வாகியாக பணியாற்றுகிறார். இரண்டு மகள்கள், கோகிலாதேவி (வக்கீல்), கார்த்திகேயாயினி (எம்.ஏ. படித்துக் கொண்டிருக்கிறார்).

தம்பி மணிகண்டனுடன்

முத்தம் பெருமாளின் தந்தை பி. வானமாமலை கணியான் அண்ணாவியாகப் பாடுபவர். 1987 ஆம் ஆண்டு இந்திய தேசிய ஒற்றுமை கலை விழாவிற்காக ஒரு மாத காலம் டெல்லியில் தங்கி கூத்து நடத்தினார். அங்கிருந்து நாங்குனேரி திரும்பிய போது அவரது சாரீரம் பழுதடைந்திருந்தது. தன் ஐம்பத்திரண்டாவது வயதில் குரலை இழந்த வானமாமலை அதன்பின் கூத்துக் கட்டுவதை நிறுத்திக் கொண்டார். வானமாமலை குடும்பத்தில் ஏற்பட்ட வறுமையால் நாங்குனேரியில் உள்ள பூர்வீக சொத்துக்களை விற்று குடும்பத்துடன் வள்ளியூருக்கு குடிபெயர்ந்தார்.

Muthamperumal3.jpg

முத்தம் பெருமாள் 1989 ஆம் ஆண்டு குடும்ப வறுமை நிலைக் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டும் பணியில் சேர்ந்தார். அங்கிருந்து அரசு ரயில்வே பணியில் வாகனம் ஓட்டும் பொருட்டு கோவா சென்றார். 1991 முதல் 1994 வரை முழு நேர வாகனம் ஓட்டியாக கோவாவில் இருந்தார். ரயில்வே அதிகாரிகள் பழுதடைந்த வாகனத்தை ஓட்டச் சொன்னபோது அதனை மறுத்து வேலையை ராஜனாமா செய்து வள்ளியூர் திரும்பினார். முத்தம்பெருமாள் தற்போது குடும்பத்துடன் சேரன்மகாதேவியில் வசித்து வருகிறார்.

கலை வாழ்க்கை

Muthamperumal4.jpg

முத்தம்பெருமாள் பதினாழு வயதில் தந்தை பி. வானமாமலை அண்ணாவியாக பாடும் கூத்தில் பின்பாட்டுக்காரராகப் பாடத் தொடங்கினார். ஐந்து வருடம் தந்தையுடன் இணைந்து கூத்துக் கட்டினார். பின் ஆறு வருடம் பணி காரணமாக எந்த கூத்திலும் பங்கேற்கவில்லை.

1994-ல் கோவாவில் இருந்து வள்ளியூர் திரும்பிய போது நேஷ்னல் பர்மிட் லாரியில் வேலைச் சேர எண்ணியிருந்தார். அப்போது நாகர்கோவில் மாவட்டம் தரிசனங்கோப்பு அருகே உள்ள மத்தியூர் சுடலைமாடன் சுவாமி கோவிலில் கூத்துக் கட்ட வேண்டி வானமாமலையை அழைக்க வந்திருந்தனர். வீட்டில் வானமாமலை இல்லாததால் வந்தவர்கள் முத்தம்பெருமாளை விசாரித்தனர். முத்தம்பெருமாள், “நான் வானமாமலையின் மூத்த மகன். இப்போது நான் கூத்துக் கட்டிக் கொண்டிருக்கிறேன்” எனக் கூறினார். மத்தியூரில் இருந்து வந்தவர்கள் வானமாமலை சரீரம் பற்றி ஏற்கனவே அறிந்திருந்த காரணத்தினால் முத்தம்பெருமாளைப் பாடும் படி வேண்டி முன் பணம் கொடுத்துச் சென்றனர். வீடு திரும்பியது விஷயம் அறிந்த வானமாமலை, ”நீ தனியா பாடினது இல்லையே. உன்னால பாட முடியுமா?” எனக் கேட்டார். முத்தம்பெருமாள் ”நான் பாடுவேன்” எனச் சொல்லி சித்திரை மாதம் கடைசி வெள்ளி அன்று மத்தியூர் சுடலைமாடன் சுவாமி கோவிலில் முதல் முறை அண்ணாவியாகப் பாடினார். அதுவே அவர் அண்ணாவியாகப் பாடிய முதல் கூத்து.

முத்தம்பெருமாள், 2020-ல் கலைமாமணி விருது பெற்ற போது

பின்னர் திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் மாவட்டங்களில் உள்ள கோவில் கொடை, பங்குனி உத்திரம், சித்திரை, ஆடி திருவிழாக்களில் முத்தம் பெருமாளைப் பாட அழைத்தனர். கணியான் வழக்கம் போல் முத்தம்பெருமாளும் சுடலைமாடன் சுவாமி கதை, அரிச்சந்திரன் கதை, மகிஷாசுரமர்த்தினி கதை, உஜ்ஜைனி மாகாளி கதை, சந்தன் மாரியம்மன் கதை, பிரம்ம சித்தி கதை, அஷ்ட கன்னிகள் கதை எனப் பாடும் கோவிலுக்குத் தகுந்தார் போல் கதை அமைப்பார்.

கோவில் திருவிழாக்கள் இல்லாமல் அரசு விழாக்களிலும் பாடியுள்ளார். சினிமாவிலும் சில பாடல்கள் எழுதியுள்ளார்.

திரைத்துறை

இளையராஜாவுடன் முத்தம்பெருமாள்

தமிழ் சினிமாவில் சத்ரபதி, வெந்து தணிந்தது காடு என இரண்டு படங்களுக்கு கதைக் கருவில் சுடலை மாடன் சம்பந்தமாக பாடல் எழுதிக் கொடுத்துள்ளார். அதற்கான இசை மெட்டுகளுக்கும் உதவியுள்ளார்.

கலைத்துறையில் இடம்

Muthamperumal6.jpg

முத்தம்பெருமாள் சமகால கணியான் கலைஞர்களில் முதன்மையான அண்ணாவிகளுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவரது தந்தை பி. வானமாமலை அவரது காலத்தில் தலைசிறந்த கணியானாக இருந்தார். வழக்கில் இருக்கும் கதைகளில் நவீன விஷயங்களை (அரசியல், செய்தி, பொது நிகழ்வு) சேர்த்துப் பாடுவது முத்தம்பெருமாளின் இயல்புகளுள் ஒன்று.

”முத்தம்பெருமாளின் கம்பீரமான குரலும், தொய்வில்லாமல் சொல்லும் கதை திறமும், வசன உச்சரிப்பில் இருக்கும் நேர்த்தியும் தான் அவரை கணியான் கூத்து கலைஞர்களுள் முதன்மையானவராக ஆக்குகிறது” என முனைவர் அ.கா. பெருமாள் குறிப்பிடுகிறார்.

கணியான் குழு

முத்தம்பெருமாள் குழு, பழங்குடியினர் கலை விழாவில்

முத்தம்பெருமாளின் கணியான் குழுவில் பிரதானமாக ஏழு பேர் இடம்பெற்றிருப்பர்.

  • மகுடம் வாசிப்பது – சங்கரன், மந்திரமூர்த்தி, முருகன்
  • வேஷங் கட்டி ஆடுவது – சித்திரவேல்[1] , சிவகுமார்
  • பின்பாட்டுக்காரர் – பரமசிவம் (முத்தம்பெருமாளின் மாமா)

1994 முதல் முத்தம்பெருமாளுக்கு பதினோரு பேர் பின்பாட்டுக்காரர்களாக இருந்துள்ளனர். அதில் காடங்குளம் பிச்சைய்யா, மனப்பாறை வீடு நடராஜன், தென்காசி ராமசந்திரன், துணமாலை, திருவடி நயினார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

சங்கம்

முத்தம்பெருமாள் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்ட மகுட கலைஞர்கள் நல சங்கத்திலும், கணியான் சங்கத்திலும் துணைத் தலைவராக உள்ளார்.

விருதுகள்

  • 2005 - திருநெல்வேலி மாவட்டக் கலைச்சுடர்மணி விருது
  • 2019 - சர்வதேச முத்தமிழ் விருது
  • 2020 - தமிழக அரசின் கலைமாமணி விருது

வெளி இணைப்புகள்

அடிக்குறிப்புகள்

  1. சித்திரவேல் கணியான் இனத்தை சேர்ந்தவர் அல்ல. இவர் தோல்பாவைக் கூத்துக் கலைஞர். தோல்பாவைக் கூத்து நலிவடைந்து வருவதால் முத்தம்பெருமாளுடன் இணைந்து கூத்துக் கட்டி வருகிறார். 2008 முதல் சித்திரவேல் முத்தம்பெருமாள் குழுவில் வேஷம் கட்டி ஆடி வருகிறார். இவரைப் போல் முப்பத்தைந்து தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள் கணியான் கூத்திற்கு மாறியுள்ளனர்.

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்

Ready for review

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.