being created

ஜாம்பவான்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
ஜாம்பவான் இராமாயணத்தில் கிஷ்கிந்தை நகரை ஆண்ட சுக்ரீவனின் அமைச்சர்களுள் ஒருவன். இராவணன் உடனான போரில் ஜாம்பவான் இராமனுக்கு துணை நின்றான். ஜாம்பவான் வம்ச வழியில் வந்த ஜாம்பவானின் மகள் ஜாம்பவதி கிருஷ்ணனின் மனைவியருள் ஒருவர். ஜாம்பவான் விஷ்ணுவின் பத்து அவதாரத்திலும் துணைக் கதாப்பாத்திரமாக வருகிறான். ஜாம்பவ இனம் கரடி குலத்தவர்களாகவும், குரங்கு இனத்தவர்களாகவும் விஷ்ணு புராணங்களில் சித்தரிக்கப்படுகிறது.1
ஜாம்பவான் இராமாயணத்தில் கிஷ்கிந்தை நகரை ஆண்ட சுக்ரீவனின் அமைச்சர்களுள் ஒருவன். இராவணன் உடனான போரில் ஜாம்பவான் இராமனுக்கு துணை நின்றான். ஜாம்பவான் வம்ச வழியில் வந்த ஜாம்பவானின் மகள் ஜாம்பவதி கிருஷ்ணனின் மனைவியருள் ஒருவர். ஜாம்பவான் விஷ்ணுவின் பத்து அவதாரத்திலும் துணைக் கதாப்பாத்திரமாக வருகிறான். ஜாம்பவ இனம் கரடி குலத்தவர்களாகவும், குரங்கு இனத்தவர்களாகவும் விஷ்ணு புராணங்களில் சித்தரிக்கப்படுகிறது.<ref>[https://www.wisdomlib.org/hinduism/compilation/puranic-encyclopaedia/d/doc241637.html ஜாம்பவான் உருவம்]</ref>
== பிறப்பு ==
== பிறப்பு ==
இராவணன் பூலோகத்தில் பல தொல்லைகளையும், அக்கிரமங்களையும் செய்து வந்தான். இராவணின் கொடுமைகளைத் தாங்க முடியாத பூமாதேவி அவனை தேவருலகிற்கு செல்லுமாறு கூறினாள். பூமாதேவியின் சொல் கேட்டு இராவணன் தேவருலகம் விரைந்தான். அங்கே தேவர்களுக்கு பல தொல்லைகள் செய்தான். இராவணனைக் கண்டு அஞ்சிய தேவர்கள் பிரம்மாவினிடம் ஓடினர். பிரம்மா விஷ்ணுவிடம் சென்று நடந்ததைச் சொன்னார்.
இராவணன் பூலோகத்தில் பல தொல்லைகளையும், அக்கிரமங்களையும் செய்து வந்தான். இராவணின் கொடுமைகளைத் தாங்க முடியாத பூமாதேவி அவனை தேவருலகிற்கு செல்லுமாறு கூறினாள். பூமாதேவியின் சொல் கேட்டு இராவணன் தேவருலகம் விரைந்தான். அங்கே தேவர்களுக்கு பல தொல்லைகள் செய்தான். இராவணனைக் கண்டு அஞ்சிய தேவர்கள் பிரம்மாவிடம் ஓடினர். பிரம்மா பாற்கடலுள் சென்று விஷ்ணுவிடம் நடந்ததைச் சொன்னார்.
[[Category:Tamil Content]]
பிரம்மா சொல்வதைக் கேட்ட விஷ்ணு, “பிரம்ம தேவரை அந்த இராவணனை அழிக்க நான் அயோத்தி ஆளும் தசரதரின் மகனாகப் பிறப்பேன். இராமன் என்ற அவதாரம் எடுத்ததும் நான் இராவணனை அழிப்பேன்” என்றார். விஷ்ணுவின் சொல் கேட்டு பிரம்மா தேவர்களிடம் விஷயத்தைச் சொல்லி பிரம்ம லோகம் திரும்பினார். அங்கிருந்து விஷ்ணுவின் அவதாரத்திற்கு உதவ குரங்கு இனக்குழு அரசான கிஷ்கிந்தையை தோற்றுவித்தார். கிஷ்கிந்தையில் ஜாம்பவான் மற்றும் பிற வானரப் படைகளை உருவாக்கினார்.

பிரம்மா சொல்வதைக் கேட்ட விஷ்ணு, “பிரம்ம தேவரை அந்த இராவணனை அழிக்க நான் அயோத்தி ஆளும் தசரதரின் மகனாகப் பிறப்பேன். அந்த அவதாரம் எடுத்தது நான் இராவணனை அழிப்பேன்” என்றார். விஷ்ணுவின் சொல் கேட்டு பிரம்மா பிரம்ம லோகம் திரும்பினார். அங்கிருந்து விஷ்ணுவின் அவதாரத்திற்கு உதவ குரங்கு இனக்குழு ஒன்றை கிஷ்கிந்தையை தோற்றுவித்தார். கிஷ்கிந்தையில் ஜாம்பவான் மற்றும் பிற வானரப் படைகளை பிரம்மா உருவாக்கினார்.
== புராணக் கதைகள் ==
ஜாம்பவனின் பிறப்பு குறித்து வேறு இரண்டு புராணக் கதைகளும் உண்டு.
 
===== வால்மீகி இராமாயணம் =====
வால்மீகி இராமாயணத்தின் பால காண்டத்தில் வரும் கதை இது. பிரம்மன் வானர படைகளால் ஆன இனத்தை உருவாக்க விரும்பி நீண்ட யோசனையில் இருந்தார். அவர் கண்ணயர்ந்த போது அவரது கொட்டாவியில் இருந்து ஜாம்பவான் தோன்றினான். தூங்கி எழுந்ததும் தன் முன் கரடி முகத்துடன் ஒருவன் நிற்பதைக் கண்ட பிரம்மா, “இதோ நான் ஒரு அழகிய கரடியை உருவாக்கினேன். என் வாயில் இருந்து வந்த கொட்டாவியில் தோன்றியவன்.” என தன் பிரஜாதிபதிகளுக்கு காட்டினார். இக்கதை வால்மீகி இராமாயணத்தின் பால காண்டத்தில் சர்கம் பதினேழு, பாடல் ஆறில் இடம்பெற்றிருக்கும்.
 
===== கம்ப இராமாயணம் =====
பிரம்ம லோகத்தில் ஒரு நாள் காலை மறைந்து இரவு இரண்டு சாமம் அதிகம் நீண்டது. பாற்கடலில் இருள் சூழ்ந்த போது மதுகைதபன் என்னும் அசுரன் விஷ்ணுவின் காது துவாரத்தில் இருந்து வெளி வந்தான். மதுகைதபன் பாற்கடலுள் மூழ்கி அங்கே பெருவெள்ளம் வரச் செய்தான். அப்பெருவெள்ளத்திலும் ஒற்றை தாமரை மிதந்து வருவதைக் கண்டான். அதனைக் கையில் எடுத்து உள்ளே பார்த்த போது பிரம்மா அதனுள் தூங்கிக் கொண்டிருந்தார். பிரம்மனை எழுப்பிய அசுரன் அவரை தனிப் போருக்கு அழைத்தான்.
 
மதுகைதபனின் சொல் கேட்டு திகைத்த பிரம்மனின் உடலிலிருந்து வியர்வை வழிந்தது. ஜாம்பவான் அந்த வியர்வைத் துளியிலிருந்து பிறந்து வந்து மதுகைதபனுடன் போர் செய்து வென்றான். தன் வியர்வையில் இருந்து பிறந்ததால் பிரம்மா அவனுக்கு அம்புஜதன் எனப் பெயரிட்டார். புடவி உருவாகாத அச்சமயத்தில் பிரம்மா அவனை ஜாம்பவ நாட்டிற்கு போகும் படி சொன்னார். ஜாம்பவ நாட்டில் முதலில் சென்றதால் அவன் பெயர் ஜாம்பவான் என்றானது. ஜாம்பவான் உதயமான போது புடவி இல்லாததால் காலமும் இல்லை அதனால் ஜாம்பவான் பிறந்த நேரத்தைக் கணிக்க முடியவில்லை. ஸ்ரீ இராமருக்கு உதவிய ஜாம்பவான் ஆறு மன்வந்தரமும் நூற்றி அறுபத்தி நான்கு சதுர்யுகம் (நான்கு யுகங்களின் காலம்) வயதானவன். ஜாம்பவான் மச்ச முதல் இராம அவதாரம் வரை விஷ்ணுவின் எல்லா அவதாரத்திலும் துணை இருந்தான் என்ற குறிப்பு கம்ப ராமாயணத்தின் பூர்வ பருவத்தில் வருகிறது.
 
== இராம ஜாம்பவான் ==
இராமாயணக் கதையில் வரும் ஜாம்பவான் சுக்ரீவனின் அமைச்சர்களுள் ஒருவன். வால்மீகி இராமாயணத்தின் கிஷ்கிந்தக் காண்டத்தின் நாற்பத்தி ஒன்றாவது சர்கத்தில்  இது பற்றிய குறிப்பு வருகிறது. நிலவு, அக்னியின் புதல்வன், அனுமன், ஜாம்பவன், சுகோத்திரன், சராரி, சரகுல்மன், கஜன், கவஸ்கன், கவயன், சுசேனன், ரிஷபன், மந்தன், திவிவிடன், விஜயன், கந்தமதனன், உள்காமுகன், அசங்கன், அங்கதன் என்பவர்கள் சுக்ரீவனின் அமைச்சர்களாக இருந்தனர்.
 
வானர படைகள் இராமேஸ்வரம் அடைந்த போது அங்கே கடலைக் கடக்க ஒவ்வொருவராக முன்வந்து தோல்வியுற்றனர். இதனைக் கண்ட ஜாம்பவான் அனுமனை அழைத்து கடலைத் தாண்டும்படிச் சொன்னான். அனுமன் தயக்கம் காட்டவே அவன் பிறப்பின் ரகசியத்தை ஜாம்பவான் விளக்கினான். அனுமன் பெற்ற வரத்தைப் பற்றியும் சொன்னான். ஜாம்பவானின் சொல் கேட்ட அனுமன் இராமேஸ்வரத்தில் இருந்து லங்கைக்குத் தாவிச் சென்றான் என்ற குறிப்பு வால்மீகி இராமாயணத்தின் கிஷ்கிந்தக் காண்டத்தில் வருகிறது.
 
== வாமன ஜாம்பவான் ==
விஷ்ணுவின் வாமன அவதாரத்தில் ஜாம்பவான் விஷ்ணுவை சுற்றி இருந்தான். விஷ்ணு வாமன அவதாரம் கொண்டு மகாபலியை வெல்ல வந்த போது ஜாம்பவான் பெரும் வல்லமையுடன் இருந்தான். இராம அவதாரத்தில் ஜாம்பவானின் பலம் குன்றிவிட்டது. இதைப் பற்றி வானர படையும் ஜாம்பவான் சொல்லும் போது, “பண்டைய நாட்களில் என் ஆற்றில் நீங்கள் இப்போது காணும் என் ஆற்றிலை விட நூறாயிரம் மடங்கு பெரியது. மகாவிஷ்ணு வாமன அவதாரத்தில் மூவுலகையும் அளந்த போது அவருடன் நான் துணையாக மூவுலகையும் சுற்றி வந்தேன். இப்போது வயதாகி விட்டதால் என்னால் இந்த கடலைக் கூட கடக்க இயலவில்லை” என்றான்.
 
== கிருஷ்ண ஜாம்பவான் ==
ஜாம்பவான் பற்றிய குறிப்பு விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ணனின் கதையிலும் வருகிறது. விஷ்ணுவின் ஒன்பது அவதாரத்தை கண்ட ஜாம்பவான் சியமந்தக மணியை உடையவனாக கிருஷண பாரதத்தில் வருகிறான். சூரிய தேவர் இந்த மணியை சத்ரஜித் மன்னனுக்கு கொடுக்கிறார். சத்ரஜித்தின் சகோதரன் பிரசன்னா அதனை அணிந்து காட்டிற்கு வேட்டைக்குச் சென்றான். காட்டில் புலி அவனைக் கொன்று மணியைக் கவ்விச் சென்றது. ஜாம்பவான் அந்த புலியைக் கொன்று மணியை எடுத்துவந்து தன் மகளின் கழுத்தில் இட்டான். கிருஷ்ணின் பகைவர்கள் சத்ரஜித் மன்னனிடம் பிரசன்னாவை கிருஷ்ணன் கொன்று சியமந்தக மணியை எடுத்ததாகக் கூறினர். அப்பழியை போக்க கிருஷ்ணன் சியமந்தக மணியைத் தேடி காட்டிற்குச் சென்றார்.
 
காட்டில் ஜாம்பவதியின் கழுத்தில் சியமந்தகம் இருப்பதைக் கண்ட கிருஷ்ணன் ஜாம்பவானுடன் போர் புரிந்தான். இருவருக்கும் இடையே பன்னிரெண்டு நாட்கள் துவந்தம் நிகழ்ந்தது. பன்னிரெண்டாம் நாள் இறுதியில் கிருஷ்ணன் ஜாம்பவானை வென்று ஜாம்பவதை திருமணம் செய்தார். மணக் கொடையாக சியமந்தக மணியைப் பெற்றுத் திரும்பினார்.  
 
== ஜைன இராமாயணம் ==
ஜைன இராமாயணத்திலும் ஜாம்பவான் பற்றிய குறிப்பு வருகிறது. ஜாம்பவான் இராவணனுடன் போர் செய்ய இராமனுக்கு துணைப் புரிந்ததாக ஸ்வயம்புதேவரின் பௌமாசரியத்தில் குறிப்பு வருகிறது. ஸ்வயம்பு தேவர் பொ.யு. ஒன்பதாம் நூற்றாண்டில் கர்நாடக பகுதியில் வாழ்ந்தவர். இதில் ஜாம்பவ படைகள் பற்றிய குறிப்புகளில் பல்லாயிரம் யானை, குதிரை, காலாட் படைகள் இருந்ததாக செய்தி உள்ளது.
 
== ஜாம்பவான் சாபம் ==
வாமன அவதாரத்தில் ஜாம்பவான் அதீத சக்தி பெற்றவனாக இருந்தான். விஷ்ணு மூவுலகைக் அளந்த போது அச்செய்தியை சுமந்து மூவுலகும் பதினெட்டு மடங்கு வேகத்தில் பறந்து சென்றான். ஜாம்பவான் பூலோகத்தில் உள்ள மகாமேரு மலையைக் கடக்கும் போது கர்வம் கொண்டான். அதனை கண்ட மேரு, “உன் ஆற்றலாலும், இளமையாலும் கர்வம் கொண்டாய் இனி உனக்கு அவை இரண்டு இல்லாமல் ஆகுக. நீ இனி எப்போதும் முதுமையுடேனே இருப்பாய். உன் மனம் அறியும் வேகத்தை உடலால் செலுத்த முடியாது” என்றான். அதனால் இராம அவதாரத்தில் ஜாம்பவானால் பறந்து சென்று இராமனுக்கு உதவ முடியாமல் போனது.
 
== ஜாம்பவதி ==
ஜாம்பவானுக்கு [[ஜாம்பவதி]] என்றொரு மகள் இருந்தாள். அவன் பாரத காலத்தில் கிருஷ்ணனை மணந்தாள்.
 
== மறைவு ==
இராம பட்டாபிஷேக சத்சங்கத்தில் ஜாம்பவான் முக்தியடைந்தான் என்ற குறிப்பு விஷ்ணு புராணத்தில் உள்ளது.
 
== உசாத்துணை ==
 
* Puranic Encyclopedia - Vettam Mani
* [https://www.wisdomlib.org/definition/jambavan Wisdom Library - Jambavan, Jāmbavān]
 
== குறிப்புகள் ==
<references />
{{Being created}}
{{Being created}}
[[Category:Tamil Content]]

Revision as of 10:23, 1 June 2022

ஜாம்பவான் இராமாயணத்தில் கிஷ்கிந்தை நகரை ஆண்ட சுக்ரீவனின் அமைச்சர்களுள் ஒருவன். இராவணன் உடனான போரில் ஜாம்பவான் இராமனுக்கு துணை நின்றான். ஜாம்பவான் வம்ச வழியில் வந்த ஜாம்பவானின் மகள் ஜாம்பவதி கிருஷ்ணனின் மனைவியருள் ஒருவர். ஜாம்பவான் விஷ்ணுவின் பத்து அவதாரத்திலும் துணைக் கதாப்பாத்திரமாக வருகிறான். ஜாம்பவ இனம் கரடி குலத்தவர்களாகவும், குரங்கு இனத்தவர்களாகவும் விஷ்ணு புராணங்களில் சித்தரிக்கப்படுகிறது.[1]

பிறப்பு

இராவணன் பூலோகத்தில் பல தொல்லைகளையும், அக்கிரமங்களையும் செய்து வந்தான். இராவணின் கொடுமைகளைத் தாங்க முடியாத பூமாதேவி அவனை தேவருலகிற்கு செல்லுமாறு கூறினாள். பூமாதேவியின் சொல் கேட்டு இராவணன் தேவருலகம் விரைந்தான். அங்கே தேவர்களுக்கு பல தொல்லைகள் செய்தான். இராவணனைக் கண்டு அஞ்சிய தேவர்கள் பிரம்மாவிடம் ஓடினர். பிரம்மா பாற்கடலுள் சென்று விஷ்ணுவிடம் நடந்ததைச் சொன்னார். பிரம்மா சொல்வதைக் கேட்ட விஷ்ணு, “பிரம்ம தேவரை அந்த இராவணனை அழிக்க நான் அயோத்தி ஆளும் தசரதரின் மகனாகப் பிறப்பேன். இராமன் என்ற அவதாரம் எடுத்ததும் நான் இராவணனை அழிப்பேன்” என்றார். விஷ்ணுவின் சொல் கேட்டு பிரம்மா தேவர்களிடம் விஷயத்தைச் சொல்லி பிரம்ம லோகம் திரும்பினார். அங்கிருந்து விஷ்ணுவின் அவதாரத்திற்கு உதவ குரங்கு இனக்குழு அரசான கிஷ்கிந்தையை தோற்றுவித்தார். கிஷ்கிந்தையில் ஜாம்பவான் மற்றும் பிற வானரப் படைகளை உருவாக்கினார்.

புராணக் கதைகள்

ஜாம்பவனின் பிறப்பு குறித்து வேறு இரண்டு புராணக் கதைகளும் உண்டு.

வால்மீகி இராமாயணம்

வால்மீகி இராமாயணத்தின் பால காண்டத்தில் வரும் கதை இது. பிரம்மன் வானர படைகளால் ஆன இனத்தை உருவாக்க விரும்பி நீண்ட யோசனையில் இருந்தார். அவர் கண்ணயர்ந்த போது அவரது கொட்டாவியில் இருந்து ஜாம்பவான் தோன்றினான். தூங்கி எழுந்ததும் தன் முன் கரடி முகத்துடன் ஒருவன் நிற்பதைக் கண்ட பிரம்மா, “இதோ நான் ஒரு அழகிய கரடியை உருவாக்கினேன். என் வாயில் இருந்து வந்த கொட்டாவியில் தோன்றியவன்.” என தன் பிரஜாதிபதிகளுக்கு காட்டினார். இக்கதை வால்மீகி இராமாயணத்தின் பால காண்டத்தில் சர்கம் பதினேழு, பாடல் ஆறில் இடம்பெற்றிருக்கும்.

கம்ப இராமாயணம்

பிரம்ம லோகத்தில் ஒரு நாள் காலை மறைந்து இரவு இரண்டு சாமம் அதிகம் நீண்டது. பாற்கடலில் இருள் சூழ்ந்த போது மதுகைதபன் என்னும் அசுரன் விஷ்ணுவின் காது துவாரத்தில் இருந்து வெளி வந்தான். மதுகைதபன் பாற்கடலுள் மூழ்கி அங்கே பெருவெள்ளம் வரச் செய்தான். அப்பெருவெள்ளத்திலும் ஒற்றை தாமரை மிதந்து வருவதைக் கண்டான். அதனைக் கையில் எடுத்து உள்ளே பார்த்த போது பிரம்மா அதனுள் தூங்கிக் கொண்டிருந்தார். பிரம்மனை எழுப்பிய அசுரன் அவரை தனிப் போருக்கு அழைத்தான்.

மதுகைதபனின் சொல் கேட்டு திகைத்த பிரம்மனின் உடலிலிருந்து வியர்வை வழிந்தது. ஜாம்பவான் அந்த வியர்வைத் துளியிலிருந்து பிறந்து வந்து மதுகைதபனுடன் போர் செய்து வென்றான். தன் வியர்வையில் இருந்து பிறந்ததால் பிரம்மா அவனுக்கு அம்புஜதன் எனப் பெயரிட்டார். புடவி உருவாகாத அச்சமயத்தில் பிரம்மா அவனை ஜாம்பவ நாட்டிற்கு போகும் படி சொன்னார். ஜாம்பவ நாட்டில் முதலில் சென்றதால் அவன் பெயர் ஜாம்பவான் என்றானது. ஜாம்பவான் உதயமான போது புடவி இல்லாததால் காலமும் இல்லை அதனால் ஜாம்பவான் பிறந்த நேரத்தைக் கணிக்க முடியவில்லை. ஸ்ரீ இராமருக்கு உதவிய ஜாம்பவான் ஆறு மன்வந்தரமும் நூற்றி அறுபத்தி நான்கு சதுர்யுகம் (நான்கு யுகங்களின் காலம்) வயதானவன். ஜாம்பவான் மச்ச முதல் இராம அவதாரம் வரை விஷ்ணுவின் எல்லா அவதாரத்திலும் துணை இருந்தான் என்ற குறிப்பு கம்ப ராமாயணத்தின் பூர்வ பருவத்தில் வருகிறது.

இராம ஜாம்பவான்

இராமாயணக் கதையில் வரும் ஜாம்பவான் சுக்ரீவனின் அமைச்சர்களுள் ஒருவன். வால்மீகி இராமாயணத்தின் கிஷ்கிந்தக் காண்டத்தின் நாற்பத்தி ஒன்றாவது சர்கத்தில் இது பற்றிய குறிப்பு வருகிறது. நிலவு, அக்னியின் புதல்வன், அனுமன், ஜாம்பவன், சுகோத்திரன், சராரி, சரகுல்மன், கஜன், கவஸ்கன், கவயன், சுசேனன், ரிஷபன், மந்தன், திவிவிடன், விஜயன், கந்தமதனன், உள்காமுகன், அசங்கன், அங்கதன் என்பவர்கள் சுக்ரீவனின் அமைச்சர்களாக இருந்தனர்.

வானர படைகள் இராமேஸ்வரம் அடைந்த போது அங்கே கடலைக் கடக்க ஒவ்வொருவராக முன்வந்து தோல்வியுற்றனர். இதனைக் கண்ட ஜாம்பவான் அனுமனை அழைத்து கடலைத் தாண்டும்படிச் சொன்னான். அனுமன் தயக்கம் காட்டவே அவன் பிறப்பின் ரகசியத்தை ஜாம்பவான் விளக்கினான். அனுமன் பெற்ற வரத்தைப் பற்றியும் சொன்னான். ஜாம்பவானின் சொல் கேட்ட அனுமன் இராமேஸ்வரத்தில் இருந்து லங்கைக்குத் தாவிச் சென்றான் என்ற குறிப்பு வால்மீகி இராமாயணத்தின் கிஷ்கிந்தக் காண்டத்தில் வருகிறது.

வாமன ஜாம்பவான்

விஷ்ணுவின் வாமன அவதாரத்தில் ஜாம்பவான் விஷ்ணுவை சுற்றி இருந்தான். விஷ்ணு வாமன அவதாரம் கொண்டு மகாபலியை வெல்ல வந்த போது ஜாம்பவான் பெரும் வல்லமையுடன் இருந்தான். இராம அவதாரத்தில் ஜாம்பவானின் பலம் குன்றிவிட்டது. இதைப் பற்றி வானர படையும் ஜாம்பவான் சொல்லும் போது, “பண்டைய நாட்களில் என் ஆற்றில் நீங்கள் இப்போது காணும் என் ஆற்றிலை விட நூறாயிரம் மடங்கு பெரியது. மகாவிஷ்ணு வாமன அவதாரத்தில் மூவுலகையும் அளந்த போது அவருடன் நான் துணையாக மூவுலகையும் சுற்றி வந்தேன். இப்போது வயதாகி விட்டதால் என்னால் இந்த கடலைக் கூட கடக்க இயலவில்லை” என்றான்.

கிருஷ்ண ஜாம்பவான்

ஜாம்பவான் பற்றிய குறிப்பு விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ணனின் கதையிலும் வருகிறது. விஷ்ணுவின் ஒன்பது அவதாரத்தை கண்ட ஜாம்பவான் சியமந்தக மணியை உடையவனாக கிருஷண பாரதத்தில் வருகிறான். சூரிய தேவர் இந்த மணியை சத்ரஜித் மன்னனுக்கு கொடுக்கிறார். சத்ரஜித்தின் சகோதரன் பிரசன்னா அதனை அணிந்து காட்டிற்கு வேட்டைக்குச் சென்றான். காட்டில் புலி அவனைக் கொன்று மணியைக் கவ்விச் சென்றது. ஜாம்பவான் அந்த புலியைக் கொன்று மணியை எடுத்துவந்து தன் மகளின் கழுத்தில் இட்டான். கிருஷ்ணின் பகைவர்கள் சத்ரஜித் மன்னனிடம் பிரசன்னாவை கிருஷ்ணன் கொன்று சியமந்தக மணியை எடுத்ததாகக் கூறினர். அப்பழியை போக்க கிருஷ்ணன் சியமந்தக மணியைத் தேடி காட்டிற்குச் சென்றார்.

காட்டில் ஜாம்பவதியின் கழுத்தில் சியமந்தகம் இருப்பதைக் கண்ட கிருஷ்ணன் ஜாம்பவானுடன் போர் புரிந்தான். இருவருக்கும் இடையே பன்னிரெண்டு நாட்கள் துவந்தம் நிகழ்ந்தது. பன்னிரெண்டாம் நாள் இறுதியில் கிருஷ்ணன் ஜாம்பவானை வென்று ஜாம்பவதை திருமணம் செய்தார். மணக் கொடையாக சியமந்தக மணியைப் பெற்றுத் திரும்பினார்.

ஜைன இராமாயணம்

ஜைன இராமாயணத்திலும் ஜாம்பவான் பற்றிய குறிப்பு வருகிறது. ஜாம்பவான் இராவணனுடன் போர் செய்ய இராமனுக்கு துணைப் புரிந்ததாக ஸ்வயம்புதேவரின் பௌமாசரியத்தில் குறிப்பு வருகிறது. ஸ்வயம்பு தேவர் பொ.யு. ஒன்பதாம் நூற்றாண்டில் கர்நாடக பகுதியில் வாழ்ந்தவர். இதில் ஜாம்பவ படைகள் பற்றிய குறிப்புகளில் பல்லாயிரம் யானை, குதிரை, காலாட் படைகள் இருந்ததாக செய்தி உள்ளது.

ஜாம்பவான் சாபம்

வாமன அவதாரத்தில் ஜாம்பவான் அதீத சக்தி பெற்றவனாக இருந்தான். விஷ்ணு மூவுலகைக் அளந்த போது அச்செய்தியை சுமந்து மூவுலகும் பதினெட்டு மடங்கு வேகத்தில் பறந்து சென்றான். ஜாம்பவான் பூலோகத்தில் உள்ள மகாமேரு மலையைக் கடக்கும் போது கர்வம் கொண்டான். அதனை கண்ட மேரு, “உன் ஆற்றலாலும், இளமையாலும் கர்வம் கொண்டாய் இனி உனக்கு அவை இரண்டு இல்லாமல் ஆகுக. நீ இனி எப்போதும் முதுமையுடேனே இருப்பாய். உன் மனம் அறியும் வேகத்தை உடலால் செலுத்த முடியாது” என்றான். அதனால் இராம அவதாரத்தில் ஜாம்பவானால் பறந்து சென்று இராமனுக்கு உதவ முடியாமல் போனது.

ஜாம்பவதி

ஜாம்பவானுக்கு ஜாம்பவதி என்றொரு மகள் இருந்தாள். அவன் பாரத காலத்தில் கிருஷ்ணனை மணந்தாள்.

மறைவு

இராம பட்டாபிஷேக சத்சங்கத்தில் ஜாம்பவான் முக்தியடைந்தான் என்ற குறிப்பு விஷ்ணு புராணத்தில் உள்ளது.

உசாத்துணை

குறிப்புகள்

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.