under review

கிருஷ்ணமூர்த்தி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 17: Line 17:
* காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு(சிறுகதைகள்)
* காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு(சிறுகதைகள்)
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* பிருஹன்னளை வாங்க
{{ready for review}}
[[Category:Tamil Content]]

Revision as of 11:03, 13 May 2022

கிருஷ்ணமூர்த்தி

கிருஷ்ணமூர்த்தி (பிறப்பு: பிப்ரவரி 21, 1994) எழுத்தாளர். சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

கிருஷ்ணமூர்த்தி சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில், கணபதி சுப்ரமணியத்திற்கும், ரமாலஷ்மிக்கும் பிப்ரவரி 21, 1994-ல் மகனாகப் பிறந்தார். சேலத்திலுள்ள புனித ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பள்ளி கல்வி பயின்றார். கோவையில் நேரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் இளங்கலைப்பட்டம் பெற்றார். கயல்விழியை மார்ச் 10, 2019-ல் திருமணம் செய்து கொண்டார். ஆதிரன் என்ற மகன் உள்ளார். சென்னையிலுள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளாக அசோகமித்திரன், நகுலன், சாருநிவேதிதாவைக் கூறுகிறார். கிருஷ்ணமூர்த்தியில் முதல் படைப்பு ’பிருஹன்னளை’ என்ற நாவல் 2013-ல் வெளிவந்தது.

விருதுகள்

நற்றிணை பதிப்பகம் நடத்திய ப.சிங்காரம் நினைவு நாவல்போட்டியில் "அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள்" என்ற நாவல் மூன்றாம் பரிசு வென்றது.

நூல்கள்

நாவல்
  • பிருஹன்னளை(நாவல்)
  • அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள்(நாவல்)
  • பாகன் (நாவல்)
சிறுகதைகள்
  • சாத்தானின் சதைத் துணுக்கு(சிறுகத்தைக்ள்)
  • காணாமல்போனவர்கள் பற்றிய அறிவிப்பு(சிறுகதைகள்)

உசாத்துணை

  • பிருஹன்னளை வாங்க


இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.