under review

ம. நவீன்: Difference between revisions

From Tamil Wiki
Line 10: Line 10:
ம. நவீனின் தந்தை, தாய் இருவரும் வாசிக்கும் பழக்கம் உடையவர்கள். நவீனின் பதினாறு வயதில் எழுத்தாளர் [[எம். ஏ. இளஞ்செல்வன்|எம்.ஏ. இளஞ்செல்வனுடன்]] நட்பு ஏற்பட்டதும் வாசிப்பு பழக்கத்தில் ஈடுபாடு உருவானது. நவீனின் இலக்கியப் பயணத்திற்கு இளஞ்செல்வன் தூண்டுகோலாக அமைந்தார். பின்னர் கோலாலம்பூருக்கு இடம் பெயர்ந்த போது [[ம. சண்முகசிவா]]வின் வழி தீவிர இலக்கியம் அறிமுகமானது.

====== இலக்கியச் செயல்பாடுகள் ======
====== இலக்கியச் செயல்பாடுகள் ======
தொடர்ந்து பத்து ஆண்டுகளாக (2009- 2018) நண்பர்களின் ஒத்துழைப்புடன் ‘கலை இலக்கிய விழா’ எனும் நிகழ்வின் வழி மலேசிய சிங்கை ஆளுமைகளை அறிமுகம் செய்து வந்திருக்கிறார். ஓவியகண்காட்சி, நிழல்படக்கண்காட்சி, மேடைநாடகம், புத்தக வெளியீடுகள் எனக் கலையில் பலதளங்களிலும் இவர் செயல்பட்டுவருகிறார். இதுவரை 14 மலேசிய - சிங்கப்பூர் ஆளுமைகளின் ஆவணப் படங்களை இயக்கியுள்ளார்.
தொடர்ந்து பத்து ஆண்டுகளாக (2009- 2018) நண்பர்களின் ஒத்துழைப்புடன் ‘கலை இலக்கிய விழா’ எனும் நிகழ்வின் வழி மலேசிய சிங்கை ஆளுமைகளை அறிமுகம் செய்து வந்திருக்கிறார். ஓவியகண்காட்சி, நிழல்படக்கண்காட்சி, மேடைநாடகம், புத்தக வெளியீடுகள் எனக் கலையில் பலதளங்களிலும் இவர் செயல்பட்டுவருகிறார். இதுவரை 16 மலேசிய - சிங்கப்பூர் ஆளுமைகளின் ஆவணப் படங்களை இயக்கியுள்ளார்.
======இலக்கிய ஆக்கங்கள்======
======இலக்கிய ஆக்கங்கள்======
இதுவரை இவரது இரு நாவல்கள், மூன்று கவிதை நூல்கள், மூன்று சிறுகதை தொகுப்புகள், மூன்று பத்தி நூல்கள், மூன்று இலக்கிய விமர்சன நூல்கள், ஒரு நேர்காணல் தொகுப்பு மற்றும் ஒரு ஆசிரியர் அனுபவம் சார்ந்த கட்டுரைத் தொகுப்பு, ஒரு பயண நூல் என 16 நூல்கள் வெளிவந்துள்ளன.மேலும் நவீனின் படைப்புகள் அனைத்தும் அவரது தனி வலைத்தளத்தில்<ref>[https://vallinam.com.my/navin/ ம.நவீன் (vallinam.com.my)]</ref> தொகுக்கப்பட்டுள்ளன. நவீனின் நாவல்களான [[பேய்ச்சி]], [[சிகண்டி (நாவல்)|சிகண்டி]] ஆகியவை விமர்சன ஏற்பை பெற்றவை.

Line 24: Line 24:
மலேசியத் திரைப்படங்களான ‘ஜெராந்துட் நினைவுகள், மௌனம்’ ஆகியவற்றில் வசன கர்த்தாவாகவும், ‘வெண்ணிற இரவுகள்’ (மலேசியா), ஜகாட் (மலேசியா), கபாலி (தமிழகம்) போன்ற திரைப்படங்களில் திரைக்கதையை ஒட்டிய பங்களிப்பும் வழங்கியுள்ளார்.

== விவாதங்கள் ==
== விவாதங்கள் ==
ம.நவீன் மலேசியாவின் இலக்கியச் சூழலில் அரசாங்க ஆதரவுள்ள அமைப்புகள் சார்ந்து செய்யப்படும் முயற்சிகளின் போதாமையை கடுமையாக கண்டித்து வருபவர். அவை அவருக்கு எதிர்ப்புகளை உருவாக்கி அளித்தன
ம.நவீன் மலேசியாவின் இலக்கியச் சூழலில் அரசாங்க ஆதரவுள்ள அமைப்புகள் சார்ந்து செய்யப்படும் முயற்சிகளின் போதாமையை கடுமையாக கண்டித்து வருபவர். அவை அவருக்கு எதிர்ப்புகளை உருவாக்கின.

ம.நவீன் எழுதிய பேய்ச்சி நாவலில் கெட்டவார்த்தைகள் இடம்பெறுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்ததன்பேரில் 2020 ல் அந்நாவலை மலேசிய அரசாங்கம் தடைசெய்தது.
ம.நவீன் எழுதிய பேய்ச்சி நாவலில் கெட்டவார்த்தைகள் மற்றும் ஆபாசமான சித்தரிப்புகள் இடம்பெறுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்ததன்பேரில் 2020 ல் அந்நாவலை மலேசிய அரசாங்கம் தடைசெய்தது.
==இலக்கிய இடம்==
==இலக்கிய இடம்==
ம.நவீன் மலேசிய இலக்கியத்தில் இரண்டு வகையில் முக்கியத்துவம் கொண்டவர். ஒன்று இலக்கியவாதியாக அவருடைய செயல்பாடுகள். மலேசிய இலக்கியம் அங்குள்ள அயல்சூழல் காரணமாக அன்றாடவாழ்க்கையின் போராட்டங்களை எளிய அரசியல்பார்வையில் முன்வைக்கும் நோக்கம் கொண்டிருந்தது. அரசு சார்ந்த அமைப்புகளுடன் நயந்தும் இணைந்தும் இயங்கியது. சிறந்த படைப்பாளிகள் அவ்வப்போது உருவானாலும் பொதுப்போக்கு என்பது அதுவே
ம.நவீன் மலேசிய இலக்கியத்தில் இரண்டு வகையில் முக்கியத்துவம் கொண்டவர். ஒன்று இலக்கியவாதியாக அவருடைய செயல்பாடுகள். மலேசிய இலக்கியம் அங்குள்ள அயல்சூழல் காரணமாக அன்றாடவாழ்க்கையின் போராட்டங்களை எளிய அரசியல்பார்வையில் முன்வைக்கும் நோக்கம் கொண்டிருந்தது. அரசு சார்ந்த அமைப்புகளுடன் நயந்தும் இணைந்தும் இயங்கியது. சிறந்த படைப்பாளிகள் அவ்வப்போது உருவானாலும் பொதுப்போக்கு இலக்கியங்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

நவீன மலேசியச்சூழலில் நவீன இலக்கியத்திற்குரிய அகம்சார்ந்த நுட்பங்களையும், ஆசிரியர் என்னும் தனியாளுமையின் பார்வையையும், வரலாற்றுணர்வையும் முன்வைத்து விவாதித்து அதை இலக்கிய விழுமியமாக நிறுவியவர். நவீன இலக்கியத்தின் பிரிக்கமுடியாத கூறான விமர்சனம், எதிர்ப்பு ஆகியவற்றை முன்வைத்தவர். அதன்பொருட்டு இலக்கியவிமர்சனங்கள், இலக்கிய வரலாற்றுப் பதிவுகள், இலக்கிய இதழியல் என எல்லா தளங்களிலும் தீவிரமாக செயல்பட்டார். இலக்கியவாதிகளுடனான உரையாடல்கள், இலக்கிய பயிற்சிமுகாம்கள் வழியாக நிறுவினார்.

Revision as of 08:07, 4 May 2022

Naveen1.jpg

ம. நவீன் (பிறப்பு: ஜூலை 31, 1982) மலேசிய தமிழ் எழுத்தாளர், இதழாளர். மலேசிய அரசாங்கத் தமிழ் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். வல்லினம் இனைய இதழின் ஆசிரியராக உள்ளார்.வல்லினம் என்னும் இலக்கிய அமைப்பையும் அதன் துணையமைப்புகளான சடக்கு போன்றவற்றையும் நடத்துகிறார்

பிறப்பு, கல்வி

Naveen.jpg

ம. நவீன் மலேசியா கெடா மாநிலத்தில் உள்ள லுனாஸ் என்னும் சிற்றூரில் ஜூலை 31, 1982 அன்று மனோகரன் - பேச்சாயி இணையருக்குப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை “வெல்லஸ்லி லுனாஸ்” தோட்டத் தமிழ் பள்ளியில் பயின்றார். இடைநிலைக் கல்வியை லுனாஸ் இடைநிலைப் பள்ளியை முடித்தார். 2002-ஆம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இணைந்தார். மூன்று ஆண்டு காலம் ஆசிரியர் பயிற்சி கல்லூரி படிப்புக்கு பின் அத்துறையில் டிப்ளமோ பட்டம் பெற்றார். பின்னர் தமிழ் மொழியில் இளங்கலை பட்டமும், தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ம.நவீன் மணிமொழி என்பவரை 2009இல் மணந்தார். ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் மணமுறிவு ஏற்பட்டது. ஒரு அரசு தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் நவீன் மாணவர்களுக்கான நூல் பதிப்பிக்கும் பணியையும் செய்து வருகிறார்.

இலக்கியவாழ்க்கை

Naveen2.jpg

ம. நவீனின் தந்தை, தாய் இருவரும் வாசிக்கும் பழக்கம் உடையவர்கள். நவீனின் பதினாறு வயதில் எழுத்தாளர் எம்.ஏ. இளஞ்செல்வனுடன் நட்பு ஏற்பட்டதும் வாசிப்பு பழக்கத்தில் ஈடுபாடு உருவானது. நவீனின் இலக்கியப் பயணத்திற்கு இளஞ்செல்வன் தூண்டுகோலாக அமைந்தார். பின்னர் கோலாலம்பூருக்கு இடம் பெயர்ந்த போது ம. சண்முகசிவாவின் வழி தீவிர இலக்கியம் அறிமுகமானது.

இலக்கியச் செயல்பாடுகள்

தொடர்ந்து பத்து ஆண்டுகளாக (2009- 2018) நண்பர்களின் ஒத்துழைப்புடன் ‘கலை இலக்கிய விழா’ எனும் நிகழ்வின் வழி மலேசிய சிங்கை ஆளுமைகளை அறிமுகம் செய்து வந்திருக்கிறார். ஓவியகண்காட்சி, நிழல்படக்கண்காட்சி, மேடைநாடகம், புத்தக வெளியீடுகள் எனக் கலையில் பலதளங்களிலும் இவர் செயல்பட்டுவருகிறார். இதுவரை 16 மலேசிய - சிங்கப்பூர் ஆளுமைகளின் ஆவணப் படங்களை இயக்கியுள்ளார்.

இலக்கிய ஆக்கங்கள்

இதுவரை இவரது இரு நாவல்கள், மூன்று கவிதை நூல்கள், மூன்று சிறுகதை தொகுப்புகள், மூன்று பத்தி நூல்கள், மூன்று இலக்கிய விமர்சன நூல்கள், ஒரு நேர்காணல் தொகுப்பு மற்றும் ஒரு ஆசிரியர் அனுபவம் சார்ந்த கட்டுரைத் தொகுப்பு, ஒரு பயண நூல் என 16 நூல்கள் வெளிவந்துள்ளன.மேலும் நவீனின் படைப்புகள் அனைத்தும் அவரது தனி வலைத்தளத்தில்[1] தொகுக்கப்பட்டுள்ளன. நவீனின் நாவல்களான பேய்ச்சி, சிகண்டி ஆகியவை விமர்சன ஏற்பை பெற்றவை.

இதழியல்

2002-ல் தொடங்கி சுமார் இரண்டு ஆண்டுகள் “மன்னன்” எனும் ஜனரஞ்சக மாத இதழில்தான் ம.நவீன் இயங்கினார் (2002 - 2003). அது அவருக்கு வாசகர் மத்தியில் பெரும் கவனத்தைக் கொடுத்தாலும் தீவிர இலக்கிய வாசிப்பின் காரணமாக அதிலிருந்து விலகினார். 2006-ல் காதல் எனும் இலக்கிய மாத இதழுக்கு இணை ஆசிரியராகப் பொறுப்பெடுத்தார். அவ்விதழ் சுமார் 10 மாதங்கள் வெளிவந்தது.

2007-ல் வல்லினம் நவீனால் அச்சிதழாக தொடங்கப்பட்டு, 2009 முதல் இணைய இதழாக மாறித் தொடர்கிறது. 2014-ல் பறை எனும் ஆய்விதழ் ம.நவீன் மேற்பார்வையில் தொடங்கப்பட்டது. காலாண்டிதழாக வெளிவந்து 6 இதழ்களுடன் நின்றது. 2010-ல் முகவரி எனும் இருவார நாளிதழுக்கு ஆசிரியராக இருந்தார். தமிழ்நேசன் நிர்வாகத்தின்கீழ் இவ்விதழ் வெளிவந்தது.

வல்லினம் நண்பர்களின் இணைவில் இவர் சடக்கு[2] எனும் அகப்பக்கத்தை 2018-ல் உருவாக்கினார். இந்த அகப்பக்கம் மலேசிய இலக்கியவாதிகளின் புகைப்பட தொகுப்பாகவும் ஆவணப்பட தொகுப்பாகவும் இயங்கி வருகிறது.

பதிப்புத்துறை

வல்லினம் பதிப்பகத்தின் மூலம் 39 நூல்களைப் பதிப்பித்துள்ளார். யாழ் பதிப்பகம் என மாணவர்களுக்கான பதிப்பகம் ஒன்றை உருவாக்கி பயிற்சி நூல்களையும் பாடநூல்களையும் பதிப்பித்து வருகிறார்.

திரைத்துறை

மலேசியத் திரைப்படங்களான ‘ஜெராந்துட் நினைவுகள், மௌனம்’ ஆகியவற்றில் வசன கர்த்தாவாகவும், ‘வெண்ணிற இரவுகள்’ (மலேசியா), ஜகாட் (மலேசியா), கபாலி (தமிழகம்) போன்ற திரைப்படங்களில் திரைக்கதையை ஒட்டிய பங்களிப்பும் வழங்கியுள்ளார்.

விவாதங்கள்

ம.நவீன் மலேசியாவின் இலக்கியச் சூழலில் அரசாங்க ஆதரவுள்ள அமைப்புகள் சார்ந்து செய்யப்படும் முயற்சிகளின் போதாமையை கடுமையாக கண்டித்து வருபவர். அவை அவருக்கு எதிர்ப்புகளை உருவாக்கின.

ம.நவீன் எழுதிய பேய்ச்சி நாவலில் கெட்டவார்த்தைகள் மற்றும் ஆபாசமான சித்தரிப்புகள் இடம்பெறுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்ததன்பேரில் 2020 ல் அந்நாவலை மலேசிய அரசாங்கம் தடைசெய்தது.

இலக்கிய இடம்

ம.நவீன் மலேசிய இலக்கியத்தில் இரண்டு வகையில் முக்கியத்துவம் கொண்டவர். ஒன்று இலக்கியவாதியாக அவருடைய செயல்பாடுகள். மலேசிய இலக்கியம் அங்குள்ள அயல்சூழல் காரணமாக அன்றாடவாழ்க்கையின் போராட்டங்களை எளிய அரசியல்பார்வையில் முன்வைக்கும் நோக்கம் கொண்டிருந்தது. அரசு சார்ந்த அமைப்புகளுடன் நயந்தும் இணைந்தும் இயங்கியது. சிறந்த படைப்பாளிகள் அவ்வப்போது உருவானாலும் பொதுப்போக்கு இலக்கியங்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டது.

நவீன மலேசியச்சூழலில் நவீன இலக்கியத்திற்குரிய அகம்சார்ந்த நுட்பங்களையும், ஆசிரியர் என்னும் தனியாளுமையின் பார்வையையும், வரலாற்றுணர்வையும் முன்வைத்து விவாதித்து அதை இலக்கிய விழுமியமாக நிறுவியவர். நவீன இலக்கியத்தின் பிரிக்கமுடியாத கூறான விமர்சனம், எதிர்ப்பு ஆகியவற்றை முன்வைத்தவர். அதன்பொருட்டு இலக்கியவிமர்சனங்கள், இலக்கிய வரலாற்றுப் பதிவுகள், இலக்கிய இதழியல் என எல்லா தளங்களிலும் தீவிரமாக செயல்பட்டார். இலக்கியவாதிகளுடனான உரையாடல்கள், இலக்கிய பயிற்சிமுகாம்கள் வழியாக நிறுவினார்.

இலக்கிய ஆசிரியராக நவீன் இயல்புவாதத் தன்மை கொண்ட சிறுகதைகளை எழுதினார். அவருடைய இருநாவல்களும் மலேசிய பண்பாட்டு, வரலாற்றுச் சூழலை விரிவாகச் சித்தரிப்பவை. மானுடவாழ்க்கையின் அடிப்படைகளை நோக்கி கவித்துவம் வழியாக நகர்பவை என்பதனால் சிறந்த இலக்கியப்படைப்புகள்.

விருதுகள்

  • 2010 இளம் கவிஞருக்கான விருதினை சிலாங்கூர் மாநில அரசாங்கம் வழங்கியது
  • 2019-ஆம் ஆண்டு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் விருதினைப் பெற்றார்.

நூல்கள்

கவிதை
  • சர்வம்பிரமாஸ்மி (2007)
  • வெறி நாய்களுடன் விளையாடுதல் (2013)
  • மகாராணியின் செக்மெட் (2019)
சிறுகதை
  • மண்டை ஓடி (2015)
  • போயாக் (2018)
  • உச்சை (2020)
நாவல்
கட்டுரைகள்
  • கடக்க முடியாத காலம் (பத்தி தொகுப்பு, 2010)
  • விருந்தாளிகள்விட்டுச்செல்லும்வாழ்வு (விமர்சன கட்டுரைகள் தொகுப்பு, 2012)
  • வகுப்பறையின்கடைசிநாற்காலி (கட்டுரைத் தொகுப்பு, 2015)
  • உலகின் நாக்கு (இலக்கியக் கட்டுரைகள், 2017)
  • மீண்டு நிலைத்த நிழல்கள் (நேர்காணல் தொகுப்பு, 2018)
  • நாரின் மணம் (பத்திதொகுப்பு, 2018)
  • மலேசியா நாவல்கள் (தொகுதி 1, 2020)
பயணம்
  • மனசிலயோ (கேரள பயணக் கட்டுரை, 2020)

உசாத்துணை

இணைப்புகள்

✅Finalised Page