User:Ramya: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
Line 12: Line 12:
* [https://vallinam.com.my/version2/?p=8427 மெக்தலீன்]
* [https://vallinam.com.my/version2/?p=8427 மெக்தலீன்]
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [https://ramyasolomon.wordpress.com/ ரம்யா வலைத்தளம்]
* [https://ramyasolomon.wordpress.com/ ரம்யா வலைதளம்]

Revision as of 21:04, 3 May 2022

எழுத்தாளர் ஜெயமோகனுடன் ரம்யா

ரம்யா. ரா (பிறப்பு: 10 நவம்பர் 1990) சிறுகதையாசிரியர், கட்டுரையாளர். தமிழ் விக்கி இணைய கலைக்களஞ்சியத்தின் தமிழ் பதிப்பின் பங்களிப்பாளர்.

பிறப்பு, கல்வி

ரம்யா 10 நவம்பர், 1990இல் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் ராஜகுமார், ராதாருக்மணி தம்பதியருக்கு மூத்த மகளாகப் பிறந்தார். தொடக்கக் கல்வியை ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள டி.என்.டி.ஏ மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயின்றார். பள்ளி கல்வியை நீலகிரி மாவட்டத்தில் உள்ள அருவங்காடு செயிண்ட் ஆன்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பி.டெக். செராமிக் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ரம்யா வழக்கறிஞர் பா. பிரவினை 17 ஆகஸ்ட், 2018 இல் திருமணம் செய்து கொண்டார். இளங்கலைப் பட்டம் பெற்ற பின் இரண்டு ஆண்டுகள் சென்னை சி.டி.எஸ் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்தார். பின்னர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் தேர்ச்சிபெற்று தென்காசியில் சார்பதிவாளராகப் பணிபுரிகிறார்.

இலக்கிய வாழ்க்கை

எழுத்தாளர் ஜெயமோகன் வழி நவீன இலக்கியப் பரீட்சயம் பெற்றார். சிறுகதைகள், மொழிபெயர்ப்பு, விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். இவருடைய முதல் சிறுகதையான நீலத்தாவணி வனம் மின்னிதழில் 2022இல் வெளிவந்தது. தமிழ் விக்கி இணையதளத்தின் தமிழ் பக்கத்தின் பங்களிப்பாளராக உள்ளார்.

சிறுகதைகள்

வெளி இணைப்புகள்