தமிழ் கலைக்களஞ்சியம்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 3: Line 3:
[[File:TS Avinashilingam.jpg|thumb|டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார்]]

தமிழ்க் கலைக்களஞ்சியம் ( ) தமிழில் வெளியான முதல் நவீனக் கலைக்களஞ்சியம். இந்திய மொழிகளில் வெளிவந்த முதல் கலைக்களஞ்சியமும் இதுதான். டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார் தமிழகத்தின் கல்வியமைச்சராக இருந்தபோது பெரியசாமித் தூரன் ஆசிரியராக இருந்து இந்த கலைக்களஞ்சியத்தை தயாரித்து வெளியிட்டார்

== கலைக்களஞ்சியங்கள் ==
== கலைக்களஞ்சியங்கள் ==
இந்திய மொழிகளில் மரபான முறையில் அமைந்த கலைக்களஞ்சியங்களும் அகராதிக்களும் உள்ளன. அகராதிகளும் சிறிய கலைக்களஞ்சியங்களும் நிகண்டுக்கள் எனப்பட்டன. கோசம் (தொகைநூல்) என்னும் பெயருடைய சிறு கலைக்களஞ்சியங்கள் வெவ்வேறு துறைகள் சார்ந்து உருவாக்கப்பட்டிருந்தன. எல்லா தலைப்புகளையும் உள்ளடக்கியதும் ஆங்கில கலைக்களஞ்சிய முறைப்படி அகரவரிசையில் அமைந்ததுமான தமிழின் முதல் கலைக்களஞ்சியம் என்று கூறத்தக்கது [[அபிதான கோசம்|அபிதான கோசம்.]] 1902ல் ஈழத்து தமிழறிஞரான   மானிப்பாய் [[ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை]] இதை உருவாக்கினார். தொடர்ந்து [[ஆ.சிங்காரவேலு முதலியார்]] உருவாக்கிய [[அபிதான சிந்தாமணி]] இன்னும் விரிவான கலைக்களஞ்சியமாக வெளிவந்தது.

என்சைக்ளோப் பீடியா பிரிட்டானிகா போல அறிவியல், பண்பாடு, கலை, வரலாறு என அத்தனை பேசுபொருட்களையும் உள்ளடக்கிய முழுமையான ஒரு கலைக்களஞ்சியம் தமிழுக்கு தேவை என்று உணர்ந்து உருவாக்கப்பட்டது [[பெரியசாமித் தூரன்]] ஆசிரியராக தொகுத்த தமிழ் கலைக்களஞ்சியம். இதுவே தமிழின் முதல் நவீனக் கலைக்களஞ்சியம். இந்திய மொழிகளிலும் இதுவே முதலில் வெளிவந்த கலைக்களஞ்சியம்

=== தொடக்கம் ===
=== தொடக்கம் ===
சென்னையில் நடந்த எழுத்தாளர் மாநாடு ஒன்றில் (1947) தலைமை தாங்கிய பெரியசாமித் தூரன் ஆங்கிலமொழியில் உள்ள Encyclopedia Britanciaவுக்குச் சமமாகத் தமிழில் கலைக்களஞ்சியம் வெளியிட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். (அப்போது அவர் பொருட்களஞ்சியம் என்னும் சொல் தொடரையே பயன்படுத்தினார்). அந்த மாநாட்டில் தங்குதுரி பிரகாசம் மற்றும் ஓ. பி. ராமசாமி ரெட்டியார் முதல்வர்களாக இருந்த சென்னை மாகாண அரசில் (1946 -1949) கல்வி அமைச்சராகப் பணியாற்றி வந்த [[தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார்]] பங்கெடுத்தார். அவர் தூரனுக்கு அணுக்கமானவர். அவர் நிறுவிய ராமகிருஷ்ணா கல்விநிலையங்களில் தூரன் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். அவினாசிலிங்கம் செட்டியார் அந்த மாநாட்டிலேயே ஒரு கலைக்களஞ்சியப் பணியை தொடங்கும் செய்தியை அறிவித்தார்.

1946 ல் அவினாசிலிங்கம் செட்டியார் முயற்சியில் தமிழ் வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பு நிறுவப்பட்டு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை பரப்பவும், அறிவியலை தமிழில் கற்பிக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. கலைக்களஞ்சியம் உருவாக்க ஒரு துணையமைப்பு உருவாக்கப்பட்டு கலைக்களஞ்சியத்தின் முதன்மை ஆசிரியராக 1948-ல் பெரியசாமித் தூரன் நியமிக்கப்பட்டார்.

==பணி==
==பணி==
கலைக்களஞ்சியப் பணி ஆரம்பித்து முதல் தொகுதி ஆறு ஆண்டுகள் கழித்து வந்தது. பின் தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு தொகுதி என 9 தொகுதிகள் வந்தது. ஒரு தொகுதியில் 750 பக்கங்கள், பத்து தொகுதிகள்; 1200க்கு மேற்பட்ட அறிஞர்கள் எழுதிய 15000க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 20,000 கலைச்சொற்கள் என அமைந்த தமிழ்க் கலைக்களஞ்சியம் தான் இந்திய மொழிகளில் வெளிவந்த முதல் கலைக்களஞ்சியம்.
தூரனின் கலைக்களஞ்சியப் பணியில் ஓரிரு மாணவர்களும் உதவியாளர்களும் உதவினாலும் மிகப்பெரும்பாலும் அவரே முழு எழுத்துப்பணியை ஆற்றினார். பழைய முறையில் அட்டைகளில் தலைப்புக்களை எழுதி அவற்றுடன் குறிப்புகளை இணைத்து அகரவரிசையில் அமைந்த பெட்டிகளில் சேமித்து உருவாக்கப்பட்டது இந்தக் கலைக்களஞ்சியம். அக்காலத்தில் தமிழக வரலாறு, அறிவியல் உட்பட பெரும்பாலான செய்திகள் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டன. தமிழ்வழிக் கல்வி அன்று இல்லை என்பதனால் துறைநிபுணர்கள் ஆங்கிலம் அறியாதவர்களாக இருந்தனர். ஆகவே ஆங்கிலத்தில் அளிக்கப்பட்ட கட்டுரைகளை தூரன் தமிழாக்கம் செய்தார். ஏறத்தாழ கைப்பிரதியில் எழுபதாயிரம் பக்கங்கள் கைப்பிரதியில் அவர் எழுதியதாகச் சொல்லப்படுகிறது.
 
கலைக்களஞ்சியப் பணி ஆரம்பித்து முதல் தொகுதி ஆறு ஆண்டுகள் கழித்து வந்தது. பின் தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு தொகுதி என 9 தொகுதிகள் வந்தன. ஒரு தொகுதியில் 750 பக்கங்கள் வீதம் பத்து தொகுதிகள்; 1200க்கு மேற்பட்ட அறிஞர்கள் எழுதிய 15000க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 20,000 கலைச்சொற்கள் என அமைந்த தமிழ்க் கலைக்களஞ்சியம் கல்விநிலையங்கள் தோறும் கொண்டுசெல்லப்பட்டது
 
== குழந்தைகள் கலைக்களஞ்சியம் ==
1963 ல் பொதுக் கலைக்களஞ்சியப் பணி முடிந்ததும் குழந்தைகள் கலைக்களஞ்சியத் தொகுப்பின் பொறுப்பை ஏற்கும்படி அரசு கேட்டுக்கொண்டதற்கேற்ப அதன் முதன்மை ஆசிரியர் ஆனார் தூரன். அந்த வேலை ஏழு ஆண்டுகள் நடந்தது (1969-1976). ஒரு தொகுதி 100 பக்கங்கள் என 10 தொகுதிகள் வெளிவந்தன.
 
== பாராட்டுக்கள், விருதுகள் ==
 
* 1963ல் பொதுக் கலைக்களஞ்சியம் முழுதும் வந்தபோது அப்போதைய முதலமைச்சர் காமராசர் தலைமையில் தூரனுக்குப் பாராட்டுக் கூட்டம் நடந்தது.
 
* 1968 இந்திய குடியரசுத் தலைவர் வழங்கிய பத்ம பூஷன் விருது வழங்கி தூரனை கௌரவித்தார்.
 
==தொடர்ச்சிகள்==
கலைக்களஞ்சியங்கள் அறிவியக்க வளர்ச்சிக்கு ஏற்ப தொடர்ச்சியாக புதுப்பிக்கப் படுத்தப்பட்டு மேம்படுத்தப்படவேண்டியவை. தமிழில் அறுபதுகளுக்குப்பின்னர் நவீன இலக்கியம், அறிவியல்தமிழ், இதழியல் ஆகியவற்றில் பெரும் வளர்ச்சி உருவானது. தமிழ்வழிக் கல்வி பட்டப்படிப்பு வரை கொண்டுசெல்லப்பட்டமையால் எல்லா துறைகளிலும் புதிய கலைச்சொற்கள் உருவாயின. ஆனால் அதற்கேற்ப பின்னர் இக்கலைக்களஞ்சியம் புதுப்பிக்கப்படவில்லை. மாறாக வேறுபெயர்களில் புதிய கலைக்களஞ்சியத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. அவை எவையும் உரியமுறையில் முழுமைப்படுத்தப்படவோ, அறிவியமுறைப்படி சீரான ஆசிரியநெறியுடன் உருவாக்கப்படவோ இல்லை. வெவ்வேறு கல்வியாளர்கள் வெவ்வேறு தரநிலைகளில் எழுதிய, மேற்பார்வையும் மறுதொகுப்பும் செய்யப்படாத கட்டுரைக்குவியல்களாகவே அவை அமைந்தன. ஆகவே தூரனின் கலைக்களஞ்சியமே இன்றும் தமிழின் ஒரே அதிகாரபூர்வ கலைக்களஞ்சியமாக நீடிக்கிறது.
 
== பயன்கள் ==
தமிழில் அறிவியல்சார்ந்த கல்விக்கு மிகப்பெரிய அடித்தளம் அமைத்தது தமிழ்க்கலைக்களஞ்சியம். தமிழ்ப்பண்பாட்டுச் செய்திகளை ஓரிடத்தில் தொகுத்ததன் வழியாக தமிழ்பண்பாடு குறித்த ஒரு பெருஞ்சித்திரத்தை வரலாற்றிலேயே முதல்முறையாக உருவாக்கியது.இக் கலைக்களஞ்சியத் தொகுதிகள் வரத்தொடங்கிய பின்னரே தமிழில் பொதுஅறிவுத் துறைசார்ந்த பல்லாயிரம் நூல்கள் இதையொட்டி எழுதப்பட்டன. மருத்துவம் இயற்பியல் போன்ற துறைகளில் கூட அடித்தள மாணவர்களுக்கு உதவக்கூடிய எளிய நூல்கள் முதல் பலவகையான நூல்கள் வெளிவந்தன. நவீனத் தமிழ் அறிவியக்கத்தின் அடித்தளநூல் என்று இக்கலைக்களஞ்சியத்தைச் சொல்லலாம்.

பொதுக் கலைக்களஞ்சியப் பணி முடிந்ததும் குழந்தைகள் கலைக்களஞ்சியத் தொகுப்பின் பொறுப்பை ஏற்கும்படி அரசு கேட்டுக்கொண்டதற்கேற்ப அதன் முதன்மை ஆசிரியர் ஆனார் தூரன். இந்த வேலை 7 ஆண்டுகள் நடந்தது (1969-1976). ஒரு தொகுதி 100 பக்கங்கள் என 10 தொகுதிகள் வந்தன. பொதுக் கலைக்களஞ்சியம் முழுதும் வந்தபோது (1963) முதலமைச்சர் காமராசர் தலைமையில் தூரனுக்குப் பாராட்டுக் கூட்டம் நடந்தது.
== உசாத்துணை ==
=====சிக்கல்கள்=====
பெரும்பாலும் தூரனின் கலைக்களஞ்சியத்தை நீர்த்துப்போன மொழியில் நகலெடுத்திருக்கிறார்கள் ஆசிரியர்கள். அவற்றின் பெரும்பாலான கட்டுரைகள் கலைக்களஞ்சியம் என்ற தகுதிக்குள் வராதவை.
=====பயன்கள்=====
அவரது கலைக்களஞ்சியங்கள் வரத்தொடங்கியபின்னரே தமிழில் பொது அறிவு துறைசார்ந்த பல்லாயிரம் நூல்கள் எழுதப்பட்டன. மருத்துவம் இயற்பியல் போன்ற துறைகளில் கூட அடித்தள மாணவர்களுக்கு உதவக்கூடிய எளிய நூல்கள் முதல் பலவகையான நூல்கள் வெளிவந்தன. அவற்றை பெரும்பாலும் தமிழாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். அவையெல்லாமே தூரனின் கலைக்களஞ்சியத்தின் மறு பிறப்புகள்.

Revision as of 12:24, 1 May 2022

கலைக்களஞ்சியம்
தூரன்
டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார்

தமிழ்க் கலைக்களஞ்சியம் ( ) தமிழில் வெளியான முதல் நவீனக் கலைக்களஞ்சியம். இந்திய மொழிகளில் வெளிவந்த முதல் கலைக்களஞ்சியமும் இதுதான். டி.எஸ்.அவினாசிலிங்கம் செட்டியார் தமிழகத்தின் கல்வியமைச்சராக இருந்தபோது பெரியசாமித் தூரன் ஆசிரியராக இருந்து இந்த கலைக்களஞ்சியத்தை தயாரித்து வெளியிட்டார்

கலைக்களஞ்சியங்கள்

இந்திய மொழிகளில் மரபான முறையில் அமைந்த கலைக்களஞ்சியங்களும் அகராதிக்களும் உள்ளன. அகராதிகளும் சிறிய கலைக்களஞ்சியங்களும் நிகண்டுக்கள் எனப்பட்டன. கோசம் (தொகைநூல்) என்னும் பெயருடைய சிறு கலைக்களஞ்சியங்கள் வெவ்வேறு துறைகள் சார்ந்து உருவாக்கப்பட்டிருந்தன. எல்லா தலைப்புகளையும் உள்ளடக்கியதும் ஆங்கில கலைக்களஞ்சிய முறைப்படி அகரவரிசையில் அமைந்ததுமான தமிழின் முதல் கலைக்களஞ்சியம் என்று கூறத்தக்கது அபிதான கோசம். 1902ல் ஈழத்து தமிழறிஞரான மானிப்பாய் ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை இதை உருவாக்கினார். தொடர்ந்து ஆ.சிங்காரவேலு முதலியார் உருவாக்கிய அபிதான சிந்தாமணி இன்னும் விரிவான கலைக்களஞ்சியமாக வெளிவந்தது. என்சைக்ளோப் பீடியா பிரிட்டானிகா போல அறிவியல், பண்பாடு, கலை, வரலாறு என அத்தனை பேசுபொருட்களையும் உள்ளடக்கிய முழுமையான ஒரு கலைக்களஞ்சியம் தமிழுக்கு தேவை என்று உணர்ந்து உருவாக்கப்பட்டது பெரியசாமித் தூரன் ஆசிரியராக தொகுத்த தமிழ் கலைக்களஞ்சியம். இதுவே தமிழின் முதல் நவீனக் கலைக்களஞ்சியம். இந்திய மொழிகளிலும் இதுவே முதலில் வெளிவந்த கலைக்களஞ்சியம்

தொடக்கம்

சென்னையில் நடந்த எழுத்தாளர் மாநாடு ஒன்றில் (1947) தலைமை தாங்கிய பெரியசாமித் தூரன் ஆங்கிலமொழியில் உள்ள Encyclopedia Britanciaவுக்குச் சமமாகத் தமிழில் கலைக்களஞ்சியம் வெளியிட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். (அப்போது அவர் பொருட்களஞ்சியம் என்னும் சொல் தொடரையே பயன்படுத்தினார்). அந்த மாநாட்டில் தங்குதுரி பிரகாசம் மற்றும் ஓ. பி. ராமசாமி ரெட்டியார் முதல்வர்களாக இருந்த சென்னை மாகாண அரசில் (1946 -1949) கல்வி அமைச்சராகப் பணியாற்றி வந்த தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார் பங்கெடுத்தார். அவர் தூரனுக்கு அணுக்கமானவர். அவர் நிறுவிய ராமகிருஷ்ணா கல்விநிலையங்களில் தூரன் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். அவினாசிலிங்கம் செட்டியார் அந்த மாநாட்டிலேயே ஒரு கலைக்களஞ்சியப் பணியை தொடங்கும் செய்தியை அறிவித்தார். 1946 ல் அவினாசிலிங்கம் செட்டியார் முயற்சியில் தமிழ் வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பு நிறுவப்பட்டு பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியை பரப்பவும், அறிவியலை தமிழில் கற்பிக்கவும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. கலைக்களஞ்சியம் உருவாக்க ஒரு துணையமைப்பு உருவாக்கப்பட்டு கலைக்களஞ்சியத்தின் முதன்மை ஆசிரியராக 1948-ல் பெரியசாமித் தூரன் நியமிக்கப்பட்டார்.

பணி

தூரனின் கலைக்களஞ்சியப் பணியில் ஓரிரு மாணவர்களும் உதவியாளர்களும் உதவினாலும் மிகப்பெரும்பாலும் அவரே முழு எழுத்துப்பணியை ஆற்றினார். பழைய முறையில் அட்டைகளில் தலைப்புக்களை எழுதி அவற்றுடன் குறிப்புகளை இணைத்து அகரவரிசையில் அமைந்த பெட்டிகளில் சேமித்து உருவாக்கப்பட்டது இந்தக் கலைக்களஞ்சியம். அக்காலத்தில் தமிழக வரலாறு, அறிவியல் உட்பட பெரும்பாலான செய்திகள் ஆங்கிலத்திலேயே எழுதப்பட்டன. தமிழ்வழிக் கல்வி அன்று இல்லை என்பதனால் துறைநிபுணர்கள் ஆங்கிலம் அறியாதவர்களாக இருந்தனர். ஆகவே ஆங்கிலத்தில் அளிக்கப்பட்ட கட்டுரைகளை தூரன் தமிழாக்கம் செய்தார். ஏறத்தாழ கைப்பிரதியில் எழுபதாயிரம் பக்கங்கள் கைப்பிரதியில் அவர் எழுதியதாகச் சொல்லப்படுகிறது.

கலைக்களஞ்சியப் பணி ஆரம்பித்து முதல் தொகுதி ஆறு ஆண்டுகள் கழித்து வந்தது. பின் தொடர்ந்து ஆண்டுக்கு ஒரு தொகுதி என 9 தொகுதிகள் வந்தன. ஒரு தொகுதியில் 750 பக்கங்கள் வீதம் பத்து தொகுதிகள்; 1200க்கு மேற்பட்ட அறிஞர்கள் எழுதிய 15000க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 20,000 கலைச்சொற்கள் என அமைந்த தமிழ்க் கலைக்களஞ்சியம் கல்விநிலையங்கள் தோறும் கொண்டுசெல்லப்பட்டது

குழந்தைகள் கலைக்களஞ்சியம்

1963 ல் பொதுக் கலைக்களஞ்சியப் பணி முடிந்ததும் குழந்தைகள் கலைக்களஞ்சியத் தொகுப்பின் பொறுப்பை ஏற்கும்படி அரசு கேட்டுக்கொண்டதற்கேற்ப அதன் முதன்மை ஆசிரியர் ஆனார் தூரன். அந்த வேலை ஏழு ஆண்டுகள் நடந்தது (1969-1976). ஒரு தொகுதி 100 பக்கங்கள் என 10 தொகுதிகள் வெளிவந்தன.

பாராட்டுக்கள், விருதுகள்

  • 1963ல் பொதுக் கலைக்களஞ்சியம் முழுதும் வந்தபோது அப்போதைய முதலமைச்சர் காமராசர் தலைமையில் தூரனுக்குப் பாராட்டுக் கூட்டம் நடந்தது.
  • 1968 இந்திய குடியரசுத் தலைவர் வழங்கிய பத்ம பூஷன் விருது வழங்கி தூரனை கௌரவித்தார்.

தொடர்ச்சிகள்

கலைக்களஞ்சியங்கள் அறிவியக்க வளர்ச்சிக்கு ஏற்ப தொடர்ச்சியாக புதுப்பிக்கப் படுத்தப்பட்டு மேம்படுத்தப்படவேண்டியவை. தமிழில் அறுபதுகளுக்குப்பின்னர் நவீன இலக்கியம், அறிவியல்தமிழ், இதழியல் ஆகியவற்றில் பெரும் வளர்ச்சி உருவானது. தமிழ்வழிக் கல்வி பட்டப்படிப்பு வரை கொண்டுசெல்லப்பட்டமையால் எல்லா துறைகளிலும் புதிய கலைச்சொற்கள் உருவாயின. ஆனால் அதற்கேற்ப பின்னர் இக்கலைக்களஞ்சியம் புதுப்பிக்கப்படவில்லை. மாறாக வேறுபெயர்களில் புதிய கலைக்களஞ்சியத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. அவை எவையும் உரியமுறையில் முழுமைப்படுத்தப்படவோ, அறிவியமுறைப்படி சீரான ஆசிரியநெறியுடன் உருவாக்கப்படவோ இல்லை. வெவ்வேறு கல்வியாளர்கள் வெவ்வேறு தரநிலைகளில் எழுதிய, மேற்பார்வையும் மறுதொகுப்பும் செய்யப்படாத கட்டுரைக்குவியல்களாகவே அவை அமைந்தன. ஆகவே தூரனின் கலைக்களஞ்சியமே இன்றும் தமிழின் ஒரே அதிகாரபூர்வ கலைக்களஞ்சியமாக நீடிக்கிறது.

பயன்கள்

உசாத்துணை