standardised

நீலாம்பிகை அம்மையார்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:நீலாம்பிகை அம்மாள்.jpg|thumb|நீலாம்பிகை அம்மையார்]]
[[File:நீலாம்பிகை அம்மாள்-modified.jpg|thumb|நீலாம்பிகை அம்மையார்]]
நீலாம்பிகை அம்மையார் (நாகை நீலாம்பிகை அம்மையார், திருவரங்க நீலாம்பிகை அம்மையார்) (செப்டம்பர் 6, 1903 - நவம்பர் 5, 1945) [[மறைமலையடிகள்|மறைமலையடிகளின்]] மகள். தனித்தமிழ் இயக்க செயற்பாட்டாளார், கட்டுரையாளர், தமிழறிஞர்.  
நீலாம்பிகை அம்மையார் (நாகை நீலாம்பிகை அம்மையார், திருவரங்க நீலாம்பிகை அம்மையார்) (செப்டம்பர் 6, 1903 - நவம்பர் 5, 1945) [[மறைமலையடிகள்|மறைமலையடிகளின்]] மகள். தனித்தமிழ் இயக்க செயற்பாட்டாளார், கட்டுரையாளர், தமிழறிஞர்.  
== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==

Revision as of 16:56, 29 April 2022

நீலாம்பிகை அம்மையார்

நீலாம்பிகை அம்மையார் (நாகை நீலாம்பிகை அம்மையார், திருவரங்க நீலாம்பிகை அம்மையார்) (செப்டம்பர் 6, 1903 - நவம்பர் 5, 1945) மறைமலையடிகளின் மகள். தனித்தமிழ் இயக்க செயற்பாட்டாளார், கட்டுரையாளர், தமிழறிஞர்.

பிறப்பு, கல்வி

இவர் மறைமலையடிகள் அவர்களுக்கும், சவுந்தரவல்லியம்மையாருக்கும் நாகப்பட்டினத்தில் செப்டம்பர் 6, 1903 அன்று மகளாகப் பிறந்தார். இவருடன் நான்கு ஆண்களும், ஒரு பெண்ணும் உடன் பிறந்தவர்கள் ஆவர். நீலாம்பிகை அம்மையார் 1911-ஆம் ஆண்டு தன் குடும்பத்துடன் சென்னையை அடுத்த பல்லாவரத்தில் குடிபெயர்ந்து ஐந்தாம் வகுப்பு வரை சென்னையிலும், பல்லாவரத்திலும் படித்தார். தந்தையிடம் தமிழும் சம்ஸ்கிருதமும் கற்றார். 1918-ஆம் ஆண்டு சென்னை லேடி வில்லிங்டன் கல்லூரியில் ஆங்கிலம் கற்றார்.

நீலாம்பிகை அம்மையார் பல்லாவரம் கல்லூரியில் 1920-ஆம் ஆண்டு முதல் இரண்டாண்டுகள் தமிழாசிரியராக பணிபுரிந்தார். பின்னர், சென்னை ராயபுரத்தில் உள்ள நார்த்விக் மகளிர் கல்லூரியில் 1928 வரை தமிழாசிரியராக பணிபுரிந்தார்.

நூல் 7.png

தனிவாழ்க்கை

சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை உருவாக்கிய திருவரங்கம் பிள்ளை அவர்களை 1918-லிருந்து காதலித்து, தந்தையின் சம்மதத்துடன் செப்டம்பர் 2, 1927- ல் திருமயிலை கபாலீஸ்வரர் கோவிலில் மணம் புரிந்துகொண்டார். பின் 1928-ல் பாளையங்கோட்டைக்கு தன் கணவருடன் குடிபெயர்ந்தார். இவர்களுக்கு எட்டு பெண் பிள்ளைகளும், மூன்று ஆண் பிள்ளைகளும் பிறந்தனர்.

நீலாம்பிகை அம்மையார் 1920-ஆம் ஆண்டு முதல் கடுமையான ஆஸ்துமா (இளைப்பிருமல்) நோயினால் அவதிப்பட்டுவந்தார். இதை 1930-ஆம் ஆண்டு பிச்சாண்டியா பிள்ளை என்பவர் சில அரிய தமிழ் மருத்துவ முறைகளின் மூலம் குணப்படுத்தினார். இதற்கு கைம்மாறாக இவர் இவருடைய முப்பெண்மணிகள் வரலாறு என்ற நூலை பிச்சாண்டியாபிள்ளைக்கு அற்பணித்துள்ளார்.

பங்களிப்பு

நீலாம்பிகை அம்மையார்

நீலாம்பிகை அம்மையார் 1925-ஆம் ஆண்டு தனித்தமிழ்க் கட்டுரைகள் என்னும் நூலை எழுதி வெளியிட்டார். தனித்தமிழ் பற்றியும், பெண்கள் முன்னேற்றம் குறித்தும் பல சொற்பொழிவுகள் ஆற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தனது தந்தையின் தூண்டுதலின் பேரில் தனித்தமிழில் பேச,எழுத ஆரம்பித்து, தமிழில் கலந்துள்ள வடமொழியை அறியும் பொருட்டு வடமொழியை கற்றார். பின் தமிழ் மொழியில் கலந்துள்ள வடமொழி சொற்களை அறிந்து கொள்ள வடசொல்தமிழ் அகரவரிசை[1] என்ற நூலை எழுதி 1939-ல் வெளியிட்டார்.

நீலாம்பிகை அம்மையார் 1938-ஆம் ஆண்டு தமிழ் நாட்டுப் பெண்கள் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ்நாடும் தமிழ்மொழியும் முன்னேறுவது எப்படி? என்ற கட்டுரையை வாசித்தார். பெண்களுக்கான அறிவுச்செயல்பாடுகளை முன்னிறுத்துவதில் ஆர்வம் கொண்ட நீலாம்பிகை அம்மையார் மேல் நாட்டுப் பெண்களைப்பற்றியும், பழந்தமிழ் பெண்களையும் பற்றியும் பொது வாசகர்களுக்கு புரியும் வண்ணம் பல நூல்கள் எழுதி வெளியிட்டர்.

மறைவு

நீலாம்பிகை அம்மையார் நவம்பர் 5, 1945 அன்று தன்னுடைய 38-வது வயதில் மறைந்தார்.

நூல் 5.png

நூல்கள்

  • முப்பெண்மணிகள் வரலாறு
  • எலிசபெத் பிரை
  • தமிழ்நாடும் தமிழ்மொழியும் முன்னேறுவது எப்படி?
  • ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் (ஆங்கிலப் பழமொழிகளும்)
  • வடசொல்தமிழ் அகரவரிசை
  • ஜோன் வரலாறு
  • பிளாரன்ஸ் நைட்டிங்கேல்
  • அருஞ்செயன் மூவர்
  • மேனாட்டுப் பெண்மணிகள்
  • பழந்தமிழ் மாதர்
  • நால்வர் வரலாறு

உசாத்துணை

குறிப்புகள்


⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.