first review completed

தருமபுரம் அபிராமிசுந்தரம் பிள்ளை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 48: Line 48:
[[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]]
[[Category:வாத்திய இசைக்கலைஞர்கள்]]


{{Standardised}}
{{first review completed}}


[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 13:16, 23 April 2022

தருமபுரம் அபிராமிசுந்தரம் பிள்ளை (1912 - நவம்பர் 3, 1962) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

அபிராமிசுந்தரம் பிள்ளை, தவில்காரர் தருமபுரம் ஸ்வாமிநாத பிள்ளை - அலமேலு அம்மாள் (திருவெண்காடு ராமகிருஷ்ண நட்டுவனாரின் மகள்) இணையருக்கு 1912-ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு பிச்சம்மாள் என்ற ஒரு சகோதரி இருந்தார்.

வண்டிக்காரத்தெரு ராமையா பிள்ளையிடம் இசை பயின்றார். சிலகால பயிற்சிக்குப் பிறகு மன்னார்குடி முத்துக்குமாரப் பிள்ளையிடம் பயின்றார்.

தனிவாழ்க்கை

நாதஸ்வரக் கலைஞர் நாகப்பட்டணம் சிவக்கொழுந்து பிள்ளையின் மகள் சாரதாம்பாளைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கோவிந்தராஜ பிள்ளை என்ற மகனும் மூன்று மகள்களும் பிறந்தனர்.

  • கோவிந்தராஜ பிள்ளை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைக்கல்லூரியில் படித்து ‘ஸங்கீத பூஷணம்’ என்ற பட்டம் பெற்றார். பல வர்ணங்கள், இசைப்பாடல்கள் இயற்றியவர், மதுரை அரசு இசைக்கல்லூரியில் நாதஸ்வர விரிவுரையாளராக பணி புரிந்தார்.
  • ராஜேந்திரன் - ஐந்தாவதாகப் பிறந்த மகன், லேவாதேவி

மகள்கள்:

  • தையல்நாயகி (கணவர்: இசைக்கலைஞர் குருராமலிங்கம் பிள்ளை)
  • தருமாம்பாள் (கணவர்: தவில் கலைஞர் பாலுப்பிள்ளை)
  • பானுமதி (கணவர்: ஷண்முகசுந்தரம், வங்கிப் பணி)

இசைப்பணி

அபிராமிசுந்தரம் பிள்ளை பல்லவி வாசிப்பதில் நிபுணர் எனப் பெயர் பெற்றிருந்தார். இவருடைய பல்லவிகள் சற்று நீளமானதாகவும் கடினமாகவும் இருக்கும். சாஹித்யப் பல்லவி[1]களை சிறப்பாக வாசித்தாலும், தத்தகாரப் பல்லவி[2]கள் இவரது தனிச்சிறப்பு. பல்லவிகளுக்கு ஸ்வரம் வாசிப்பதில் ஒரு புதிய பாணியை தோற்றுவித்தார்.

தருமபுரம், குன்றக்குடி முதலிய ஆதீனங்களில் வித்வானாக இருந்தார். ராமநாதபுரம், புதுக்கோட்டை சமஸ்தானங்களில் தங்கப் பதக்கங்கள், சாதராக்கள் போன்ற பல பரிசுகளைப் பெற்றிருக்கிறார். அபிராமிசுந்தரம் பிள்ளை இளைஞர்களை மிகவும் ஊக்குவிப்பவர். வேதாரண்யம் வேதமூர்த்தி பிள்ளை, திருமெய்ஞானம் நடராஜசுந்தரம் பிள்ளை முதலியோரைத் தன்னுடன் இணைந்து வாசிக்க வைத்து ஆதரவளித்தார்.

நாதஸ்வரக் கச்சேரிகள் தவிர வாய்ப்பாட்டுக் கச்சேரிகளும் செய்திருக்கிறார். கொன்னக்கோலிலும் வல்லவர்.

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

தருமபுரம் அபிராமிசுந்தரம் பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

  • நீடாமங்கலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளை
  • திருச்செங்காட்டாங்குடி ருத்ராபதி பிள்ளை
  • திருமுல்லைவாயில் முத்துவீர் பிள்ளை
  • கும்பகோணம் தங்கவேல் பிள்ளை
  • நாச்சியார் கோவில் ராகவப்பிள்ளை
  • வடபாதிமங்கலம் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை

மறைவு

தருமபுரம் அபிராமிசுந்தரம் பிள்ளை நவம்பர் 3, 1962 அன்று மறைந்தார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013

அடிக்குறிப்புகள்

  1. வார்த்தைகளோடு அமைந்தவை - உதாரணமாக ‘அழகுள்ள துரை இவர் யாரடி’ என்பது போல அமைந்த பல்லவிகள் சாஹித்யப் பல்லவி
  2. ’தகிடதாம் தகதிமிதாம் தத்தாம்’ என்பது போன்ற லய வாத்தியத்துக்குரியவை தத்தகாரப் பல்லவிகள்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.