under review

தாமஸ் புரூய்க்ஸ்மா: Difference between revisions

From Tamil Wiki
(Corrected errors in article)
(Added links to Disambiguation page)
Line 1: Line 1:
{{OtherUses-ta|தாமஸ்|[[தாமஸ் (பெயர் பட்டியல்)]]}}
{{Read English|Name of target article=Thomas_Pruiksma|Title of target article=Thomas Pruiksma}}
{{Read English|Name of target article=Thomas_Pruiksma|Title of target article=Thomas Pruiksma}}
[[File:புரூய்க்ஸ்மா.jpg|thumb|புரூய்க்ஸ்மா]]
[[File:புரூய்க்ஸ்மா.jpg|thumb|புரூய்க்ஸ்மா]]

Revision as of 21:37, 26 September 2024

XYZ என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: XYZ

To read the article in English: Thomas Pruiksma. ‎

புரூய்க்ஸ்மா

தாமஸ் புரூய்க்ஸ்மா (Thomas Hitoshi Pruiksma) ( தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஷிமா). அமெரிக்க தமிழறிஞர். ஜப்பானிய வம்சாவளியைச் சேர்ந்தவர். திருக்குறளை ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்தவர்.

PRUIKSMA

வாழ்க்கை

தாமஸ் ஹிடோஷி புரூய்க்ஸ்மா அமெரிக்கத் தமிழறிஞர். பன்மொழி அறிஞர். 1998-ல் தன் கல்லூரிப் படிப்பை முடித்ததும் தமிழகத்தில் மதுரை அருகே ஒரு சிற்றூரில் தங்கி பேராசிரியர் கே.வி.ராமகோடியிடம் தமிழ் பயின்றார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தார். ஔவையார் பாடல்களையும் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

புருய்க்ஸ்மா National Endowment for the Arts, 4Culture, Artist Trust, and the U. S. Fulbright Program போன்ற அமைப்புகளின் நிதியுதவியுடன் மொழிகள் கற்பது, மொழியாக்கம் செய்வது, மேடைகளில் கவிதை நிகழ்வுகளை நடத்துவது ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது ஸ்பானிஷ் மொழியிலிருந்து பெட்ரோ பரோமா நாவலை மொழியாக்கம் செய்கிறார். முந்தைய மொழியாக்கம் சரியானபடி அமையவில்லை என்று கருதும் புரூய்க்ஸ்மா பண்பாட்டுக் குறிப்புகளை ஆராய்ந்து தன் மொழியாக்கத்தை நிகழ்த்தி வருகிறார்.

பங்களிப்பு

புருய்க்ஸ்மாவின் குறள் மொழியாக்கம் பண்பாட்டு நுட்பங்களை கருத்தில் கொண்டு மேலும் கூர்மையாகச் செய்யப்பட்டது. அறம் என்னும் சொல்லை மொழியாக்கம் செய்ய அந்தந்த இடத்துக்கு ஏற்ப ethics அல்லது virtue என வெவ்வேறு சொற்களை அவர் பயன்படுத்துவதை உதாரணமாக கொண்டு இதை சுட்டிக்காட்டலாம். பழந்தமிழ் இலக்கியங்களை மொழியாக்கம் செய்த ஐரோப்பியர்களான ஜி.யூ.போப், எச்.ஏ.பாப்லி ஆகியோரின் வரிசையில் வருபவர் புருய்க்ஸ்மா.

நூல்கள்

  • The Kural (translated from the Tamil)
  • The Safety of Edges (poems)
  • Give, Eat, and Live: Poems of Avvaiyar (translated from the Tamil)
  • Body and Earth (with the artist C.F. John)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:35:08 IST