under review

அனோஜன் பாலகிருஷ்ணன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 20: Line 20:


== இணைப்புகள் ==
== இணைப்புகள் ==
அனோஜன் பாலகிருஷ்ணன் (annogenonline.com)
* அனோஜன் பாலகிருஷ்ணன் (annogenonline.com)
https://akazhonline.com/
* https://akazhonline.com/


<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section -->
<!-- This is an invisible comment. Please edit the section below when article is ready to be moved across stages. Do not remove the section -->

Revision as of 18:22, 25 January 2022

அனோஜன் பாலகிருஷ்ணன்
அனோஜன் பாலகிருஷ்ணன்

அனோஜன் பாலகிருஷ்ணன் (Annogen Balakrishnan, ஜூலை 30, 1992) தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், விமர்சகர், கட்டுரையாளர் மற்றும் இதழாசிரியர்.

தனிவாழ்க்கை

அனோஜன் பாலகிருஷ்ணன் யாழ்ப்பாணத்திலுள்ள அரியாலையில் ஜூலை 30, 1992ல் சிவகுருநாதன் பாலகிருஷ்ணன் மற்றும் சுரேந்தினி தம்பதியினருக்குக் கடை மகனாகப் பிறந்தார். ஒரு அண்ணாவும், இரண்டு அக்காக்களும் உடன் பிறந்தவர்கள். பூர்விகம் யாழ்ப்பாணப் பட்டிணம். எனினும் கொடிகாமம், நல்லூர், கொக்குவில், சுண்டுக்குளி மீண்டும் அரியாலை என்று இடம்பெயர்வு காரணமாக வாழ்க்கைச் சூழல் மாறிக்கொண்டே இருந்தது. அனோஜனின் பதின்ம வயதின் இறுதியில் போர் ஓய்வுக்கு வந்தது. யாழ்ப்பாணத்தில் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கொழும்பில் மேற்படிப்பைத் தொடர்ந்தார். இந்தக் காலப்பகுதியில் அதிகம் சிங்கள, முஸ்லீம் மக்களுடன் புழங்கும் வாய்ப்பு ஏற்பட்டது. சிங்களம் பேசவும் கற்றுக் கொண்டார்.

தன்னுடைய பள்ளிப்படிப்பை கொழும்பிலுள்ள சென் ஜோன்ஸ் கல்லூரியில் பயின்றார். 2012-2016ம் ஆண்டு கொழும்பில், நார்த்ஷோர் வணிக மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில், மின் மற்றும் மின்னணு பொறியியல் பயின்றார். 2017-2019ல் ‘சுற்றுச் சூழல் பொறியியலுக்கான’ முதுகலைப் பட்டப்படிப்பை இங்கிலாந்திலுள்ள Nottingham பல்கலைக்கழகத்தில் பயின்றார். மானெக்ஸ் இண்டர் நேஷனல் நிறுவனத்தில் “பண மோசடி அறிக்கையிடல்” (Money laundering Reporter) அதிகாரியாகப் பணிபுரிகிறார்.

இலக்கிய வாழ்க்கை

அனோஜன் பாலகிருஷ்ணனின் முதல் சிறுகதையான “இதம்” அகாட்டி மின்னிதழில் 2015ல் வெளிவந்தது. மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. 2020 செப்டம்பரிலிருந்து ”அகழ்” எனும் மின்னிதழை சுரேஷ் பிரதீப் மற்றும் செந்தூரனோடு இணைந்து நடத்தி வருகிறார். 2019ல் “லண்டன் இலக்கியக் குழுமம்” என்ற அமைப்பைத் தோற்றுவித்த நிறுவனர்களில் ஒருவர். இதன் மூலம் நூல் விமர்சன அரங்குகளும், கதை விவாதங்களையும் நிகழ்த்தி வருகிறார்.

இலக்கிய இடம்

காமம், காமப் பிறழ்வுகள், அதன் உறவுச் சுரண்டலை பேசும் சிறுகதைகளை எழுதுகிறார். பெரும்பாலான ஈழ எழுத்தாளர்கள் எழுதும் போர்ச்சூழலை தவிர்த்துவிட்டு அதற்கு அப்பாலுள்ள வாழ்வை எழுதக்கூடியவர்.

படைப்புகள்

சிறுகதைத் தொகுப்பு

  • சதைகள் 2016
  • பச்சை நரம்பு 2018
  • பேரீச்சை 2021

இணைப்புகள்



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.