first review completed

சோ. தர்மன்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:Cho.dharman.jpg|thumb|சோ.தர்மன்]]
[[File:Cho.dharman.jpg|thumb|சோ.தர்மன்]]
சோ தர்மராஜ் எனும்  சோ தர்மன் (பிறப்பு: ஆகஸ்ட் 8, 1953) நவீனத் தமிழிலக்கியத்தின் நாவல், சிறுகதை எழுத்தாளர். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையை களமாகக் கொண்டு எழுதிய படைப்பாளி. தமிழிலக்கியத்தில் தொண்ணூறுகளில் உருவான இயல்புவாத இலக்கிய அலையில் தனியிடம் பெற்றவர். சூல் என்னும் நாவலுக்காக 2019-ஆம் ஆண்டில் கேந்த்ரிய சாகித்ய அகாதெமி விருதைப்பெற்றார்.
சோ தர்மராஜ் எனும்  சோ தர்மன் (பிறப்பு: 8, ஆகஸ்ட் 1953) தமிழ் எழுத்தாளர். கரிசல்நில எழுத்தாளர்கள் என்று சொல்லப்படும் படைப்பாளிகளில் ஒருவர். நாவல், சிறுகதை, நாட்டாரியல் என செயல்பட்டு வருபவர். தமிழிலக்கியத்தில் தொண்ணூறுகளில் உருவான இயல்புவாத இலக்கிய அலையில் தனியிடம் பெற்றவர். சூல் என்னும் நாவலுக்காக 2019-ஆம் ஆண்டில் கேந்த்ரிய சாகித்ய அகாதெமி விருதைப்பெற்றார்.

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
சோ. தர்மன் மீ.சோலையப்பன்- பொன்னுத்தாய் ஆகியோருக்கு மகனாக ஆகஸ்ட் 8, 1953 அன்று பிறந்தார். விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவர். சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்திலுள்ள கடலையூருக்கு அருகில் உருளைகுடி .ஊராட்சி ஒன்றிய பள்ளி, உருளைகுடியுல் ஆரம்பக் கல்வி. உயர்நிலைக் கல்வி திருநெல்வேலி டயோசீசன் டிரஸ்ட் அசோசியேஷன் பள்ளி (TDTA), கடலையூர். மேல்நிலைக்கல்வி நாடார் மேல்நிலைப் பள்ளி நெல்லை. தொழிற்கல்வியை புனித மரியன்னை தொழில்நுட்ப பள்ளி, தூத்துக்குடியில் முடித்தார்
சோ. தர்மன் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்திலுள்ள கடலையூருக்கு அருகில் உருளைகுடி என்னும் ஊரில் மீ.சோலையப்பன்- பொன்னுத்தாய் ஆகியோருக்கு ஆகஸ்ட் 8, 1953 ல் பிறந்தார். புகழ்பெற்ற எழுத்தாளரான [[பூமணி]] இவருடைய தாய்மாமா.
 
உருளைக்குடி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆரம்பக் கல்வி. உயர்நிலைக் கல்வி திருநெல்வேலி டயோசீசன் டிரஸ்ட் அசோசியேஷன் பள்ளி (TDTA), கடலையூர். மேல்நிலைக்கல்வி நாடார் மேல்நிலைப் பள்ளி நெல்லை. தொழிற்கல்வியை புனித மரியன்னை தொழில்நுட்ப பள்ளி, தூத்துக்குடியில் முடித்தார்

== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
Line 9: Line 11:

== இலக்கியவாழ்க்கை ==
== இலக்கியவாழ்க்கை ==
சோ.தர்மன் எழுத்தாளர் [[பூமணி]]யின் மருமகன். கி.ராஜநாராயணன், சி.கனகசபாபதி, ஜோதிவினாயகம், தேவதச்சன் ஆகியோரால் வழிநடத்தப்பட்ட கோயில்பட்டியின் இலக்கியச் சூழலில் உருவானவர். சோ.தர்மன் கரிசல் காட்டின் முன்னோடி படைப்பாளியாகிய கி.ராஜநாராயணின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளர் ஆனவர். 1980-ல் மதுரையிலிருந்து வெளிவரும் மகாநதி இதழில் வெளியான விருவு என்பது முதல் சிறுகதை.  
சோ.தர்மன் தன் தாய்மாமனான எழுத்தாளர் பூமணியிடமிருந்து எழுத்தாளராகும் ஊக்கத்தை அடைந்தார். கி.ராஜநாராயணன், [[சி.கனகசபாபதி]], ஜோதிவினாயகம், [[தேவதச்சன்]] ஆகியோரால் வழிநடத்தப்பட்ட கோயில்பட்டியின் இலக்கியச் சூழலில் உருவானவர் சோ.தர்மன். கோயில்பட்டி பகுதியின் கரிசல் காட்டின் இலக்கிய முன்னோடியான கி.ராஜநாராயணின் எழுத்துக்களை முன்னுதாரணமாக கொண்டவர். கோயில்பட்டியில் எழுபதுகளில் தொடர்ச்சியாக நடந்துவந்த இலக்கிய உரையாடல்கள் சோ.தர்மனின் இலக்கியப்பார்வையை வடிவமைத்தன. தொழிற்சங்க அரசியலின் சிக்கல்களும் அவரை எழுதத் தூண்டின.

1980-ல் எழுதத் தொடங்கிய சோ.தர்மன், அன்பின் சிப்பி, ஈரம், சோகவனம், வனக்குமாரன் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும், நாவல்களையும் எழுதியுள்ளார். இதுவரை 13 நூல்கள், 8 சிறுகதைத் தொகுப்புகள், 4 நாவல்கள் வெளிவந்துள்ளன. முதல்நாவல் தூர்வை 1996-ல் சிவகங்கை அன்னம் பதிப்பகம் வெளியிட்டது. அதுவே முதல் நூல். கி. ராஜநாராயணன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், வெங்கட்சாமிநாதன் ஆகியோரை முன்னுதாரணமாக கருதுபவர், அவர்களுடன் உரையாடலில் இருந்தவர்.  
ஆனால் முக்கியமாக அவருடைய எழுத்துக்கான தூண்டுதல் கரிசல்நிலத்தில் நிகழ்ந்து வந்த தொடர்மாற்றங்களில் இருந்து எழுந்தது. வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட கரிசல்நிலத்தில் பருத்தி முதலிய கரிசல்பயிர்கள் இழப்பு தருவனவாக ஆயின. கண்மாய்கள் (ஏரிகள்) சார்ந்தே வேளாண்மை நடந்துவந்த கரிசலில் அந்நீர்நிலைகள் கைவிடப்பட்டு பராமரிப்பின்றி அழிந்தன. மக்கள் தொடர்ச்சியாக ஊரைவிட்டு வெளியேறவே கிராமங்கள் ஆளில்லாமல் விடப்பட்டன. மில் தொழிலாளியாக இருந்தாலும் சோ.தர்மன் தன்னை விவசாயியாகவே உணர்பவர். இந்த வீழ்ச்சி அவருள் வாழ்ந்த விவசாயியை துயரமும் சீற்றமும் கொள்ளச்செய்ததன் விளைவுகளே அவருடைய கதைகள். சோ.தர்மன் தன் பெரும்பாலான நாவல்களிலும் கதைகளிலும் உருளைக்குடி என்னும் சிற்றூரையே களமாக கொண்டு எழுதியிருக்கிறார்

வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி பற்றிய வாழ்க்கைவரலாற்று நூலும் எழுதியிருக்கிறார். 2019-ஆம் ஆண்டுக்கான மைய அரசின் சாகித்ய அக்காதமி விருதைப்பெற்றார். 2016-ஆம் ஆண்டு பிரசுரமான ‘சூல்’ நாவலுக்காகத்தான் இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது. சோ தர்மன் சுற்று சூழல் விழிப்புணர்வையும், இயற்கையோடு இயைந்த வாழ்வையும் மரபின் அறிவையும் பண்பாட்டையும் எடுத்துரைப்பதில் ஆர்வம் கொண்டவர். அரசின் குத்தகை கண்மாய்களில் ஆடு, மாடு நீர் அருந்த அனுமதிக்கப்படவில்லை. மேய்ப்பவர் அடித்து விரட்டப்படுகிறார் என்ற அவரின் ஆதங்கமான முக நூல் பதிவை மேற்கோள்காட்டி மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
1980-ல் மதுரையிலிருந்து வெளிவந்த [[மகாநதி]] இதழில் வெளியான விருவு என்பது சோ.தர்மனின் முதல் சிறுகதை. தொடர்ச்சியாக இலக்கியச் சிற்றிதழ்களில் சிறுகதைகளை எழுதினார். அன்பின் சிப்பி, ஈரம், சோகவனம், வனக்குமாரன் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும்,ஐந்து நாவல்களையும் எழுதியுள்ளார்.
 
சோ.தர்மனின்  முதல் நாவல் தூர்வை 1996-ல் சிவகங்கை அன்னம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அத்தியாயப் பகுப்புகள் இல்லாமல் ஒரே உரைநடை ஓட்டமாக எழுதப்பட்டது அந்நாவல். சோ.தர்மனின் நாவல்களில் முதன்மையாக கருதப்படுவது கூகை. ஒடுக்கப்பட்ட மக்களின் குறியீடாகவே கூகை அதன்பின்னர் மாறியது. பா.ரஞ்சித் முன்னெடுப்பில் தலித் இயக்க கலை அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டபோது அதற்கு கூகை என்று பெயரிடப்பட்டது. சூல் நாவலுக்காக 2019 க்கான சாகித்ய அக்காதமி விருது  அவர் எழுதிய சூல் நாவலுக்கு வழங்கப்பட்டது.
 
நாட்டாரியல் சார்ந்த செய்திகளை சேகரித்து ஆவணப்படுத்துவதில் ஈடுபாடு கொண்டவர் சோ.தர்மன். வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி பற்றிய வாழ்க்கைவரலாற்று நூல் எழுதியிருக்கிறார்.கி. ராஜநாராயணன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், வெங்கட்சாமிநாதன் ஆகியோரை இலக்கியத்தில் தனக்கு அணுக்குமாகக் கருதுபவர், அவர்களுடன் உரையாடலில் இருந்தவர்.  
 
சோ தர்மன் சுற்று சூழல் விழிப்புணர்வையும், இயற்கையோடு இயைந்த வாழ்வையும் மரபின் அறிவையும் பண்பாட்டையும் எடுத்துரைப்பதில் ஆர்வம் கொண்டவர். அரசின் குத்தகை கண்மாய்களில் ஆடு, மாடு நீர் அருந்த அனுமதிக்கப்படவில்லை. மேய்ப்பவர் அடித்து விரட்டப்படுகிறார் என்ற அவரின் ஆதங்கமான முக நூல் பதிவை மேற்கோள்காட்டி மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
[[File:சோ. தர்மன்.jpg|thumb|சோ. தர்மன் - பாரதி நினைவு இல்லம்]]
[[File:சோ. தர்மன்.jpg|thumb|சோ. தர்மன் - பாரதி நினைவு இல்லம்]]
சோ.தர்மனின் பெரும்பாலான நாவல்கள் உருளைக்குடி என்னும் அவருடைய சொந்த ஊரை களமாகக் கொண்டவை. சென்ற ஐம்பதாண்டுகளில் வேளாண்மையில் உருவான சரிவும், அதன் விளைவாக கிராமச் சமூக அமைப்பில் உருவான சிதைவும், அதன் வழியாக மானுட உறவுகளில் உருவாகும் சிக்கல்களுமே அவருடைய பேசுபொருள்:. சோ.தர்மனை இயல்புவாத அழகியல் கொண்ட படைப்பாளி என விமர்சகர் ஜெயமோகன் மதிப்பிடுகிறார். ஆசிரியரின் இடையீடின்றி மெய்யான தகவல்கள் வழியாகவும், உணர்ச்சியற்ற மிகையற்ற சித்தரிப்பு வழியாகவும் ஒரு நம்பகமான வாழ்க்கைக்களத்தை உருவாக்கி அதிலிருந்து வாசகர்கள் தங்கள் முடிவுகளுக்குச் செல்லச்செய்வது சோ.தர்மனின் எழுத்துமுறையாகும்.  

சோ.தர்மனின் தூர்வை (1996) மினுத்தான் – மாடத்தி என்னும் தலித் தம்பதியினரைச் சுற்றி உருளக்குடி கிராமத்து மக்களின் இரண்டு தலைமுறை வாழ்க்கையைச் சுற்றி நடைபெறும் கதை. கடைசியில் உருளக்குடி கிராமம் வரண்டு, தீப்பெட்டி தொழிற்சாலைகளும் சாக்குக் கம்பெனிகளும் ஆக்கிரமித்துக்கொள்கின்றன. நிலத்தில் உழைத்தவர்கள் தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள்.

கூகை நாவல் (தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்).  மாறாத விதி கொண்டவர்களுக்குத்தான் கூகை குறியீடாகிறது. கூகைக்கு பகலில் கண்தெரியாது. சின்னச் சின்ன பறவைகள் அதன் பலவீனம் தெரிந்து பகலில் அதைச் சுற்றி வந்து கொத்தி குதறும். கூகை பயந்து ஒடுங்கிக் கிடக்கும் செய்வதறியாது. இரவில்தான் அதன் ஆக்ரோஷம் வெடித்துச் சிதறும். அந்த குறியீட்டைக் கொண்டு இது கோயில்பட்டியை அடுத்த சித்திரம்பட்டி கிராமத்து தாழ்த்தப்பட்ட மக்களின் இரண்டு தலைமுறை வாழ்க்கையைச் சொல்கிறது. ஒரு காலத்தில் நிலத்தில் கூலி வேலை செய்து வயிறு நிரப்பிக்கொண்டிருந்தவர்களுக்கு, காலவோட்டத்தில் தீப்பெட்டி பட்டாசுத் தொழிற்சாலைகளும், ஜின்னிங் பாக்டரிகளில் மறுபடியும் கூலி வேலைதான் விதிக்கப்பட்டிருக்கிறது. அன்று பண்ணை முதலாளிகளாக இருந்தவர்கள் நிலத்தை விற்றுவிட்டு நகரத்துக்கு குடி பெயர்கிறார்கள் அல்லது இங்கு பாக்டரி முதலாளி ஆகிறார்கள். அவதாரங்கள் தான் மாறுகின்றன. விதி மாறுவதில்லை.  

Line 45: Line 51:
== படைப்புகள் ==
== படைப்புகள் ==

====== சிறுகதைகள் பட்டியல் ======
{| class="wikitable"
|'''சிறுகதைகள்'''
|-
|1. விருவு
|-
|2. வாழையடி
|-
|3. ம(னி)தம்(?)
|-
|4. தொக்கம்
|-
|5. முளைக்கும் சிறகுகள்
|-
|6. ஈரம்
|-
|7. சோறு
|-
|8. சருகுகள்
|-
|9. குருத்து
|-
|10. சிதைவுகள்
|-
|11. உதிரப்பூ
|-
|12. அழுக்கு
|-
|13. அப்பாவிகள்
|-
|14. தவம்
|-
|15. கோணல்கள்
|-
|16. கழிவுகள்
|-
|17. ஒச்சம்
|-
|18. மாடுகள்
|-
|19. அழுத்தம்
|-
|20. அடமானம்
|-
|21. சிகிச்சை
|-
|22. வலைகள்
|-
|23. சிருஷ்டி
|-
|24. மருந்து
|-
|25. ஊழ்
|-
|26. அவஸ்தை
|-
|27. சாபம்
|-
|28. இருந்தது
|-
|29. நீர்ப்பழி
|-
|30. மைதானம்
|-
|31. நிழல் பாவைகள்
|-
|32. சிலையல்ல கண்ணகி
|-
|33. சட்ட வேலிகள்
|-
|34. இறுக்கம்
|-
|35. மனம் என்னும் ஊஞ்சலிலே
|-
|36. எனக்கான அரிசி...
|-
|37. சிதறல்கள்
|-
|38. வனகுமாரன்
|-
|39. நடப்பு
|-
|40. விட்டு விலகி
|-
|41. நாசி
|-
|42. தற்காத்து...
|-
|43. கொடிகளின் நிறம்
|-
|44. பார்த்துக்கொண்டிருக்கும் பிரபஞ்சம்
|-
|45. வம்சம்
|-
|46. வார்த்தைகள்
|-
|47. விசாரம்
|-
|48. வதை
|-
|49. தண்ணீரும் பண்பாடும்
|-
|50. ரேகைகள் அழிவதில்லை
|-
|51. சங்கிலி
|-
|52. வாதை
|-
|53. வடிகால்
|-
|54. மையல் இப்பி
|-
|55. ராஜ மாதா
|-
|56. நாராய்... நாராய்
|-
|57. தழும்பு
|-
|58. இரவின் மரணம்
|-
|59. (அ)ஹிம்சை
|-
|60. நசுக்கம்
|-
|61. மனுஷம்
|-
|62. குறளி வித்தைக்காரன்
|-
|63. சோகவனம்
|-
|64. மிதவை
|-
|65. சார்... போஸ்ட்
|-
|66. சித்தியங்கள்
|-
|67. மணம்
|-
|68. அன்பின் சிப்பி
|}
====== நாவல்கள் ======
====== நாவல்கள் ======
* தூர்வை (1996)
* தூர்வை (1996)

Revision as of 19:45, 21 April 2022

சோ.தர்மன்

சோ தர்மராஜ் எனும் சோ தர்மன் (பிறப்பு: 8, ஆகஸ்ட் 1953) தமிழ் எழுத்தாளர். கரிசல்நில எழுத்தாளர்கள் என்று சொல்லப்படும் படைப்பாளிகளில் ஒருவர். நாவல், சிறுகதை, நாட்டாரியல் என செயல்பட்டு வருபவர். தமிழிலக்கியத்தில் தொண்ணூறுகளில் உருவான இயல்புவாத இலக்கிய அலையில் தனியிடம் பெற்றவர். சூல் என்னும் நாவலுக்காக 2019-ஆம் ஆண்டில் கேந்த்ரிய சாகித்ய அகாதெமி விருதைப்பெற்றார்.

பிறப்பு, கல்வி

சோ. தர்மன் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்திலுள்ள கடலையூருக்கு அருகில் உருளைகுடி என்னும் ஊரில் மீ.சோலையப்பன்- பொன்னுத்தாய் ஆகியோருக்கு ஆகஸ்ட் 8, 1953 ல் பிறந்தார். புகழ்பெற்ற எழுத்தாளரான பூமணி இவருடைய தாய்மாமா.

உருளைக்குடி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆரம்பக் கல்வி. உயர்நிலைக் கல்வி திருநெல்வேலி டயோசீசன் டிரஸ்ட் அசோசியேஷன் பள்ளி (TDTA), கடலையூர். மேல்நிலைக்கல்வி நாடார் மேல்நிலைப் பள்ளி நெல்லை. தொழிற்கல்வியை புனித மரியன்னை தொழில்நுட்ப பள்ளி, தூத்துக்குடியில் முடித்தார்

தனிவாழ்க்கை

சோ.தர்மன் மனைவி பெயர் மாரியம்மாள். இரு மகன்கள், வினோத் மாதவன் மற்றும் விஜய சீனிவாசன். இப்போது கோயில்பட்டியில் வசிக்கிறார். 1976 முதல் 1996 வரை இருபதாண்டுகள் கோவில்பட்டியிலுள்ள லாயல் டெக்ஸ்டைல் மில் என்னும் தனியார் தொழில்நிலையத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அதன் பின்னர் முழு நேர எழுத்தாளராக கோவில்பட்டியில் வசித்து வருகிறார். சோ.தர்மன் இருபதாண்டுகள் தொழிற்சங்கப்பணிகளில் இருந்தார். அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் அமைப்பின் பொறுப்பில் இருந்தார்.

இலக்கியவாழ்க்கை

சோ.தர்மன் தன் தாய்மாமனான எழுத்தாளர் பூமணியிடமிருந்து எழுத்தாளராகும் ஊக்கத்தை அடைந்தார். கி.ராஜநாராயணன், சி.கனகசபாபதி, ஜோதிவினாயகம், தேவதச்சன் ஆகியோரால் வழிநடத்தப்பட்ட கோயில்பட்டியின் இலக்கியச் சூழலில் உருவானவர் சோ.தர்மன். கோயில்பட்டி பகுதியின் கரிசல் காட்டின் இலக்கிய முன்னோடியான கி.ராஜநாராயணின் எழுத்துக்களை முன்னுதாரணமாக கொண்டவர். கோயில்பட்டியில் எழுபதுகளில் தொடர்ச்சியாக நடந்துவந்த இலக்கிய உரையாடல்கள் சோ.தர்மனின் இலக்கியப்பார்வையை வடிவமைத்தன. தொழிற்சங்க அரசியலின் சிக்கல்களும் அவரை எழுதத் தூண்டின.

ஆனால் முக்கியமாக அவருடைய எழுத்துக்கான தூண்டுதல் கரிசல்நிலத்தில் நிகழ்ந்து வந்த தொடர்மாற்றங்களில் இருந்து எழுந்தது. வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட கரிசல்நிலத்தில் பருத்தி முதலிய கரிசல்பயிர்கள் இழப்பு தருவனவாக ஆயின. கண்மாய்கள் (ஏரிகள்) சார்ந்தே வேளாண்மை நடந்துவந்த கரிசலில் அந்நீர்நிலைகள் கைவிடப்பட்டு பராமரிப்பின்றி அழிந்தன. மக்கள் தொடர்ச்சியாக ஊரைவிட்டு வெளியேறவே கிராமங்கள் ஆளில்லாமல் விடப்பட்டன. மில் தொழிலாளியாக இருந்தாலும் சோ.தர்மன் தன்னை விவசாயியாகவே உணர்பவர். இந்த வீழ்ச்சி அவருள் வாழ்ந்த விவசாயியை துயரமும் சீற்றமும் கொள்ளச்செய்ததன் விளைவுகளே அவருடைய கதைகள். சோ.தர்மன் தன் பெரும்பாலான நாவல்களிலும் கதைகளிலும் உருளைக்குடி என்னும் சிற்றூரையே களமாக கொண்டு எழுதியிருக்கிறார்

1980-ல் மதுரையிலிருந்து வெளிவந்த மகாநதி இதழில் வெளியான விருவு என்பது சோ.தர்மனின் முதல் சிறுகதை. தொடர்ச்சியாக இலக்கியச் சிற்றிதழ்களில் சிறுகதைகளை எழுதினார். அன்பின் சிப்பி, ஈரம், சோகவனம், வனக்குமாரன் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும்,ஐந்து நாவல்களையும் எழுதியுள்ளார்.

சோ.தர்மனின் முதல் நாவல் தூர்வை 1996-ல் சிவகங்கை அன்னம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அத்தியாயப் பகுப்புகள் இல்லாமல் ஒரே உரைநடை ஓட்டமாக எழுதப்பட்டது அந்நாவல். சோ.தர்மனின் நாவல்களில் முதன்மையாக கருதப்படுவது கூகை. ஒடுக்கப்பட்ட மக்களின் குறியீடாகவே கூகை அதன்பின்னர் மாறியது. பா.ரஞ்சித் முன்னெடுப்பில் தலித் இயக்க கலை அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டபோது அதற்கு கூகை என்று பெயரிடப்பட்டது. சூல் நாவலுக்காக 2019 க்கான சாகித்ய அக்காதமி விருது அவர் எழுதிய சூல் நாவலுக்கு வழங்கப்பட்டது.

நாட்டாரியல் சார்ந்த செய்திகளை சேகரித்து ஆவணப்படுத்துவதில் ஈடுபாடு கொண்டவர் சோ.தர்மன். வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி பற்றிய வாழ்க்கைவரலாற்று நூல் எழுதியிருக்கிறார்.கி. ராஜநாராயணன், ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன், வெங்கட்சாமிநாதன் ஆகியோரை இலக்கியத்தில் தனக்கு அணுக்குமாகக் கருதுபவர், அவர்களுடன் உரையாடலில் இருந்தவர்.

சோ தர்மன் சுற்று சூழல் விழிப்புணர்வையும், இயற்கையோடு இயைந்த வாழ்வையும் மரபின் அறிவையும் பண்பாட்டையும் எடுத்துரைப்பதில் ஆர்வம் கொண்டவர். அரசின் குத்தகை கண்மாய்களில் ஆடு, மாடு நீர் அருந்த அனுமதிக்கப்படவில்லை. மேய்ப்பவர் அடித்து விரட்டப்படுகிறார் என்ற அவரின் ஆதங்கமான முக நூல் பதிவை மேற்கோள்காட்டி மதுரை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலக்கிய இடம்

சோ. தர்மன் - பாரதி நினைவு இல்லம்

சோ.தர்மனின் பெரும்பாலான நாவல்கள் உருளைக்குடி என்னும் அவருடைய சொந்த ஊரை களமாகக் கொண்டவை. சென்ற ஐம்பதாண்டுகளில் வேளாண்மையில் உருவான சரிவும், அதன் விளைவாக கிராமச் சமூக அமைப்பில் உருவான சிதைவும், அதன் வழியாக மானுட உறவுகளில் உருவாகும் சிக்கல்களுமே அவருடைய பேசுபொருள்:. சோ.தர்மனை இயல்புவாத அழகியல் கொண்ட படைப்பாளி என விமர்சகர் ஜெயமோகன் மதிப்பிடுகிறார். ஆசிரியரின் இடையீடின்றி மெய்யான தகவல்கள் வழியாகவும், உணர்ச்சியற்ற மிகையற்ற சித்தரிப்பு வழியாகவும் ஒரு நம்பகமான வாழ்க்கைக்களத்தை உருவாக்கி அதிலிருந்து வாசகர்கள் தங்கள் முடிவுகளுக்குச் செல்லச்செய்வது சோ.தர்மனின் எழுத்துமுறையாகும்.

கூகை நாவல் (தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்). மாறாத விதி கொண்டவர்களுக்குத்தான் கூகை குறியீடாகிறது. கூகைக்கு பகலில் கண்தெரியாது. சின்னச் சின்ன பறவைகள் அதன் பலவீனம் தெரிந்து பகலில் அதைச் சுற்றி வந்து கொத்தி குதறும். கூகை பயந்து ஒடுங்கிக் கிடக்கும் செய்வதறியாது. இரவில்தான் அதன் ஆக்ரோஷம் வெடித்துச் சிதறும். அந்த குறியீட்டைக் கொண்டு இது கோயில்பட்டியை அடுத்த சித்திரம்பட்டி கிராமத்து தாழ்த்தப்பட்ட மக்களின் இரண்டு தலைமுறை வாழ்க்கையைச் சொல்கிறது. ஒரு காலத்தில் நிலத்தில் கூலி வேலை செய்து வயிறு நிரப்பிக்கொண்டிருந்தவர்களுக்கு, காலவோட்டத்தில் தீப்பெட்டி பட்டாசுத் தொழிற்சாலைகளும், ஜின்னிங் பாக்டரிகளில் மறுபடியும் கூலி வேலைதான் விதிக்கப்பட்டிருக்கிறது. அன்று பண்ணை முதலாளிகளாக இருந்தவர்கள் நிலத்தை விற்றுவிட்டு நகரத்துக்கு குடி பெயர்கிறார்கள் அல்லது இங்கு பாக்டரி முதலாளி ஆகிறார்கள். அவதாரங்கள் தான் மாறுகின்றன. விதி மாறுவதில்லை.

சூல் (2016) நாவலுக்காக 2016-ஆம் ஆண்டிற்கான சுஜாதா விருதைப் பெற்றார். சூல் என்னும் புதினத்திற்காக 2019-ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருதைப்பெற்றார். விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக இருந்த கண்மாய்களின் இன்றைய நிலை குறித்து எழுதப்பட்ட நாவல் இது. குழந்தைகளையும் உயிர்களையும் பிரசவிக்கும் தாயின் உருவமாகக் கண்மாய்களை வைத்து இந்த நாவலை எழுதியுள்ளார். எட்டாம் பிறை வடிவ ஊர்க் கண்மாயைத்தான் சூலியாக, ஒரு குறியீடாக, ஆழ்படிமமாக சோ.தர்மன் மாற்றியுள்ளார். கண்மாயை முன்வைத்து வரக்கூடிய எதிரும்புதிருமான பிரச்சினைகள்தான் நாவல். இப்பிராந்தியத்து மனிதர்கள் காலம்காலமாக அடைகாத்த கவலைகள் இந்த நாவலின் அத்தியாயங்களாக விரிகின்றன.

பதிமூன்றாவது மையவாடி (2020) நாவல் உருளைக்குடி கிராமத்திலிருக்கும் கருத்தமுத்துவை மையமாகக் கொண்ட கதையிது. ஒரு கிராமத்திலிருந்து கல்வியின் நிமித்தம் வெளியே சென்று உலகத்தை அவன் அனுபவங்களால் கற்றுக் கொள்வதாக கதை விரிகிறது.

சோ.தர்மன் பிறப்பால் தலித் என அடையாளப்படுத்தப்படும் சாதியைச் சேர்ந்தவர். ஆனால் அத்தகைய அடையாளங்கள் இலக்கியத்திற்கு எவ்வகையிலும் தேவையானவை அல்ல என்னும் கருத்து கொண்டவர். இடதுசாரி அமைப்புகளுடன் முப்பதாண்டுகள் இணைந்து செயல்பட்டவர். ஆனால் இடதுசாரிக் கருத்துக்களை இலக்கியத்தின் பேசுபொருள் ஆக்கக்கூடாது என்றும் இலக்கியவாதியின் பார்வையை அந்தக் கொள்கைகள் முடிவுசெய்யக்கூடாது என்றும் சொல்பவர். தன்னை தன் கிராமத்தின் கதையை இயல்பாக சொல்லமுற்படும் கதைசொல்லியாக உருவகம் செய்துகொள்பவர். இலக்கியத்தை கற்றறிந்தவராயினும் தன் எழுத்து சாமானியனின் குரலாக மட்டுமே ஒலிக்கவேண்டும் என எண்ணுபவர். சோ.தர்மனின் எழுத்தில் கி.ராஜநாராயணன்,பூமணி இருவருடைய செல்வாக்கும் உண்டு. தமிழிலக்கியத்தில் சாமானியனின் அறச்சீற்றத்தையும் வரலாற்றுணர்வையும் வெளிப்படுத்தியவை அவருடைய படைப்புக்கள்.

”கு.அழகிரிசாமி, கி.ரா., பூமணிக்கு அடுத்த நிலையில் கரிசல் மண்ணின் ஆளுமை சோ.தர்மன்” என்று எழுத்தாளர் கோணங்கி குறிப்பிடுகிறார்.

சோ. தர்மன் - கி.ரா மற்றும் அவரது மனைவியுடன்

விருதுகள்

  • 1992 மற்றும் 1994 ஆண்டுகளில் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான விருதினைப் பெற்றிருக்கிறார்.
  • கூகை என்னும் புதினத்திற்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005-ஆம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றிருக்கிறார்.
  • சூல் என்னும் புதினத்திற்காக 2016-ஆம் ஆண்டிற்கான சுஜாதா விருதைப் பெற்றார்.
  • சூல் என்னும் புதினத்திற்காக 2019-ஆம் ஆண்டில் சாகித்ய அகாதெமி விருதைப்பெற்றார்.
  • முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரிடமிருந்து மாநில அரசு விருதுகள்.
  • மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருது, சுந்தரனார் விருது.
  • கனடா தோட்ட விருது (2005)
  • சுஜாதா விருது (2016)
  • ஆனந்த விகடன் விருது (2019)

படைப்புகள்

நாவல்கள்
  • தூர்வை (1996)
  • கூகை
  • சூல் (2016)
  • பதிமூன்றாவது மையவாடி (2020)
சிறுகதைத்தொகுதிகள்
  • ஈரம் (சிறுகதைத்தொகுதி)
  • சோகவனம்
  • வனக்குமாரன்
  • அன்பின் சிப்பி
  • சோகவனம்
  • நீர்ப்பழி (முழு அறுபத்தெட்டு கதைகள் அடங்கிய தொகுப்பு - 2020 அடையாளம் பதிப்பகம்)
ஆய்வு நூல்
  • வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி (2014), மறைந்த வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி அவர்களைப்பற்றி ஒரு வரலாற்று நூல்.

இணைப்புகள்

🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.