அலெக்ஸ் ஹேலி: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "thumb|354x354px|அலெக்ஸ் ஹேலி - 1977 அலெக்ஸ் ஹேலி கறுப்பின வம்சாவளியைச்சேர்ந்த ஒரு அமெரிக்க எழுத்தாளர். 1976 ஆம் ஆண்டு வெளியான ‘வேர்கள்’ (Roots: The Saga of an American Family) எனும் உலகப்புகழ்பெற்ற...")
 
No edit summary
Line 1: Line 1:
[[File:அலெக்ஸ் ஹேலி.jpg|thumb|354x354px|அலெக்ஸ் ஹேலி - 1977]]
[[File:அலெக்ஸ் ஹேலி.jpg|thumb|354x354px|அலெக்ஸ் ஹேலி (1977)]]
அலெக்ஸ் ஹேலி கறுப்பின வம்சாவளியைச்சேர்ந்த ஒரு அமெரிக்க எழுத்தாளர்.  1976 ஆம் ஆண்டு வெளியான ‘வேர்கள்’ (Roots: The Saga of an American Family) எனும் உலகப்புகழ்பெற்ற புதினத்தின் மூலம் அறியப்படுபவர்.  
அலெக்ஸ் ஹேலி கறுப்பின வம்சாவளியைச்சேர்ந்த ஒரு அமெரிக்க எழுத்தாளர்.  1976 ஆம் ஆண்டு வெளியான ‘வேர்கள்’ (Roots: The Saga of an American Family) எனும் உலகப்புகழ்பெற்ற புதினத்தின் மூலம் அறியப்படுபவர்.  



Revision as of 16:52, 15 May 2024

அலெக்ஸ் ஹேலி (1977)

அலெக்ஸ் ஹேலி கறுப்பின வம்சாவளியைச்சேர்ந்த ஒரு அமெரிக்க எழுத்தாளர். 1976 ஆம் ஆண்டு வெளியான ‘வேர்கள்’ (Roots: The Saga of an American Family) எனும் உலகப்புகழ்பெற்ற புதினத்தின் மூலம் அறியப்படுபவர்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

அலெக்ஸாண்டர் முர்ரே பால்மர் ஹேலி ஆகஸ்ட் 11, 1921 அன்று அமெரிக்காவின் இதாக்கா நகரில் பிறந்தார். அவருடைய தந்தை சைமன் ஹேலி, உலகப் போர் வீரராகவும், வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். ஹேலியின் பிறந்த நேரத்தில், அவரது தந்தை கார்னெல் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவராக இருந்தார். இதன் விளைவாக, ஹேலி அவரது தாயார் பெர்த்தா ஜார்ஜ் ஹெலி, தாய்வழி தாத்தா மற்றும் பாட்டியுடன் டென்னஸி மாகாணத்தில் உள்ள ஹென்னிங் என்னும் நகரில் வளர்ந்தார்.

அமெரிக்க கப்பல் படையில் அலெக்ஸ் ஹேலி

மிசிசிபி மாகாணத்தில் உள்ள கருப்பின மக்களுக்கான அல்கார்ன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆனால் ஓராண்டிலேயே அங்கிருந்து வெளியேறி வடக்கு காரோலினா மாகாணத்தின் எலிசபெத் நகரில் உள்ள கருப்பின மக்களுக்கான எலிசபெத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அடுத்த ஆண்டே அங்கிருந்தும் வெளியேறினார். இதைப்பார்த்த ஹேலியின் தந்தை ஹேலியை இராணுவத்தில் சேர சம்மதிக்க வைத்தார். அதன் விளைவாக மே 24, 1939 அன்று அலெக்ஸ் ஹேலி அமெரிக்க கடலோர காவல்படையில் தனது 20 வருட வாழ்க்கையைத் துவங்கினார்.

இராணுவ வாழ்க்கை

ஆரம்பத்தில் கப்பல் படையில் உதவியாளராக சேர்ந்தார். இருப்பினும் கொஞ்சம் கொஞ்சமாக அடுத்தடுத்த பதவிகளில் முன்னேறினார். பசிபிக் கடல்பகுதியில் இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் தான் ஹேலி கதைகள் எழுதும் கலையை தானே கற்றுக்கொண்டார். மேலும், அவர் பணியில் சேர்ந்தபோது மற்ற மாலுமிகள் தங்கள் தோழிகளுக்கு காதல் கடிதங்கள் எழுத அவருக்கு பணம் கொடுத்தனர்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஹேலி தன்னை பத்திரிகைத் துறைக்கு மாற்றும்படி அமெரிக்க கடலோர காவல்படையிடம் மனு அளித்தார். இதன் விளைவாக1949 ஆம் ஆண்டு, அவர் பத்திரிகையாளர் மதிப்பீட்டில் ஒரு முதல் தர துணை அதிகாரியாக ஆனார். பின்னாளில் முதன்மை அதிகாரியாக பதவி உயர்வு பெற்று 1959 இல் கடலோர காவல்படையில் இருந்து ஓய்வு பெறும் வரை அப்பதவியை வகித்தார். கடலோரக் காவல்படையிலிருந்து தலைமைப் பத்திரிகையாளரான முதல் நபர் இவர் தான்.

உசாத்துணை