under review

நகரத்தார் இதழ்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 20: Line 20:


*நகரத்தார் கலைக்களஞ்சியம், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு, பதிப்பாசிரியர்: ச. மெய்யப்பன்; இணை ஆசிரியர்கள்: கரு. முத்தய்யா, சபா. அருணாசலம். பதிப்பு: 2002.
*நகரத்தார் கலைக்களஞ்சியம், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு, பதிப்பாசிரியர்: ச. மெய்யப்பன்; இணை ஆசிரியர்கள்: கரு. முத்தய்யா, சபா. அருணாசலம். பதிப்பு: 2002.
{{First review completed}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 04:39, 7 June 2024

நகரத்தார் இதழ் (1987), நகரத்தார் சமூகம் சார்ந்த இதழ். இதன் ஆசிரியர் சுப. செந்தமிழன்.

பிரசுரம், வெளியீடு

நகரத்தார் சமூகம் சார்ந்த இதழாக, ’நகரத்தார் இதழ்’ , ஜூன் 1987 முதல் வெளிவந்தது. தொடக்கத்தில் சிவகங்கையிலிருந்து வெளிவந்த இவ்விதழ் பின்னர் மதுரையிலிருந்து வெளியானது.  சுப. செந்தமிழன், இவ்விதழின் ஆசிரியர். தொடக்கத்தில் தனி இதழின் விலை ஒரு ரூபாய் 75 காசாக இருந்தது. பின்னர் தனி இதழ் விலை நான்கு ரூபாய் 25 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. டெம்மி 1×8 அளவில் 28 பக்கங்கள் கொண்டதாக இவ்விதழ் வெளிவந்தது.

உள்ளடக்கம்

தமிழ்நாடே வாழ்க - எம்
தாய்நாடே வாழ்க
அமிழ்தாகிய இயலிசை கூத்தென்னும்
தமிழாகிய உயிர்தழையும் விழுமிய
தமிழ்நாடே வாழ்க

- என்னும் பாரதிதாசன் வரிகளைக் குறிக்கோளாகக் கொண்டு  நகரத்தார் இதழ் செயல்பட்டது. நகரத்தார் சமூகம் சார்ந்த செய்திகள், கட்டுரைகள், நகரத்தார் இனச் சாதனையாளர்கள் பற்றிய தகவல்கள், அருந்தொண்டாற்றிய நகரத்தார் பற்றிய விவரங்கள் ஆகியன இடம்பெற்றன. நகரத்தார்களின் ஒன்பது நகரக் கோவில் பற்றிய சிறப்பிதழ்கள், வட்டகைச் சிறப்பிதழ்கள், நகரத்தார் வாழும் ஊர்ச் சிறப்பிதழ்கள் போன்றவற்றையும் நகரத்தார் இதழ் வெளியிட்டது.

மதிப்பீடு

நகரத்தார் சமூகம் சார்பாக தனித்தமிழ் உணர்வோடு வெளிவந்த இதழ்களுள் ஒன்றாக நகரத்தார் இதழ் அறியப்படுகிறது.

உசாத்துணை

  • நகரத்தார் கலைக்களஞ்சியம், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு, பதிப்பாசிரியர்: ச. மெய்யப்பன்; இணை ஆசிரியர்கள்: கரு. முத்தய்யா, சபா. அருணாசலம். பதிப்பு: 2002.


✅Finalised Page