first review completed

ஜனநாயகச் சோதனைச்சாலையில் (கட்டுரைத் தொகுப்பு): Difference between revisions

From Tamil Wiki
(Moved to Standardised)
No edit summary
Line 33: Line 33:
* https://ashvanthashmitha.blogspot.com/2021/10/blog-post.html
* https://ashvanthashmitha.blogspot.com/2021/10/blog-post.html
* https://www.dinamalar.com/news_detail.asp?id=1522223
* https://www.dinamalar.com/news_detail.asp?id=1522223
{{Standardised}}
{{first review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 07:38, 27 March 2022

ஜனநாயகச் சோதனைச்சாலையில் (கட்டுரைத் தொகுப்பு) - ஜெயமோகன்

ஜனநாயகச் சோதனைச்சாலையில் (கட்டுரைத் தொகுப்பு) என்ற இந்தப் புத்தகம் ஜனநாயகத்தைப் பற்றியும் இந்திய வாக்காளர்களின் மனநிலையைப் பற்றியும் எளிமையாக விளக்குகிறது. புதிய வாக்காளர்களுக்கு இந்தப் புத்தகம் ஜனநாயகத்தைப் பற்றிய விரிவான கையேடு. வாக்காளரிடம் இருக்கும் அறியாமையை, அலட்சியத்தை, சுயநலங்களை இந்த நூல் சுட்டிக்காட்டுகிறது. அரசியல் சாராத ஆனால், இந்திய அரசியல்வாதிகள், வாக்காளப் பெருமக்கள் ஆகியோரின் மனநிலைகளை விவரிக்கும் முக்கியமான புத்தகம் இது.

பதிப்பு

தினமலர் நாளிதழில் 2016 சட்ட சபைத் தேர்தலை முன்னிட்டு எழுத்தாளர் ஜெயமோகன் தொடர்ந்து எழுதிய நாற்பது கட்டுரைகளைத் தொகுத்து, ‘ஜனநாயகச் சோதனைச்சாலையில்’ என்ற பெயரில் நூலாக்கியுள்ளனர். இதன் முதல் பதிப்பு-2016. வெளியிட்டோர் - தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிட்டெட், மதுரை.

ஆசிரியர்

இந்த நூலை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர் இந்திய தமிழ் மரபை நவீனக் காலகட்டத்தின் அறத்துக்கு ஏற்ப மறு வரையறை செய்தவர்.

நூல் சுருக்கம்

எழுத்தாளர் ஜெயமோகன்

இந்த நூல் 40 கட்டுரைகளை உள்ளடக்கியது. இவை ஜனநாயகம் என்பதன் அடிப்படைகள் எவை, அது செயல்படும் விதிகள் எவை, அவற்றை வெற்றிகரமாகக் கையாள்வது எப்படி என்பதைப் பற்றிப் பேசுகின்றன- வரையறுக்கின்றன. நம்முடைய அறியாமை, நம்முடைய அலட்சியம், நம்முடைய சுயநலம் போன்றவைதான் ஜனநாயகத்தை நம்மால் சரியாகப் பயன்படுத்த முடியாமைக்குரிய காரணம் என்பதை அழுத்தமாகச் சொல்வதே இந்தக் கட்டுரைகளின் நோக்கம். இவை புரட்சிகரமான கட்டுரைகள்.

“ஜனநாயகத்தின் அடிப்படை இரண்டே. ஒன்று, பன்முகத் தன்மை. அனைவருக்கும் இடமளிக்கும் இயல்பு. அனைவருக்கும் நடுவே ஒரு சமரசமாக, ஒத்திசைவாகச் செயல்படும் தன்மை. இரண்டு, முரணியக்கம். பல்வேறு சக்திகள் ஒன்றோடொன்று மோதி விவாதித்து முன்னகரும் இயல்பு. அவற்றைப் புரிந்துகொண்டால் மட்டுமே ஜனநாயகத்தை நம்மால் கையாள முடியும்” - எழுத்தாளர் ஜெயமோகன்

நூல் பின்புலம்

எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய இணைய தளத்தின் வழியாக இலக்கியம், மதம், தத்துவம், வரலாறு முதலானவற்றைப் பற்றிப் பல்லாயிரம் பக்கங்கள் எழுதியவர். ஆனால், அவர் திரைத்துறையைச் சார்ந்தும் அரசியல் சார்ந்தும் எதனையும் அந்தத் தளத்தில் எழுதியதில்லை. ஜனநாயகத்தின் அடிப்படைகளைப் பற்றி வாசகரோடு உறவாடுவதற்காகவே தினமலர் நாளிதழில் இந்தக் கட்டுரைகளை எழுதினார்.

மதிப்பீடு

தனிநபர்கள் தங்களின் அனைத்துத் தோல்விகளுக்கும் சிக்கல்களுக்கும் அரசியல்வாதிகளையும் இந்திய நாட்டின் ஜனநாயக முறையையும் நமது தேசவிடுதலைக்காகப் பாடுபட்டோரையும் தேச முன்னேற்றத்துக்காக உழைத்தவர்களையும் குறைசொல்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் ‘இதில் தங்களின் குறை என்ன?’ என்பதைப் பற்றிச் சிந்திப்பதே இல்லை. அவர்களை அவ்வாறு சிந்திக்கத் தூண்டும் புத்தகம் இது என்ற வகையில் இது ஜனநாயகத்துக்கான கையேடாக மிளிர்கிறது.

“இந்தக் கட்டுரைகள் வாக்குரிமை உள்ள அனைவருக்கும் அத்தியாவசிய கல்வி” - கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு, துணை ஆசிரியர், தினமலர்.

“வாக்களிக்கப்பதற்குப் போகும் முன் இந்தப் புத்தகத்தை ஒரு முறை வாசித்து விட்டுச் செல்லும் ஓர் இந்திய வாக்காளர் நிச்சயம் தனக்கான ஒரு நல்ல மக்கள் சேவகரைத் தேர்ந்தெடுப்பார்” - வேலு மலையான், தர்மபுரி.

“ஜனநாயகம், அரசியல் என்கிற இந்த முகாந்திரத்தோடேயே, பொருளாதாரம், சமூகவியல், கொஞ்சம் வரலாறு என்றும் தொட்டுச் செல்வது உங்களுக்கு சுவாரசியமான வாசிப்பை உறுதிப்படுத்தும். அடிப்படைகளை, தெரியாதவர்களுக்கு அறிமுகப்படுத்தும்; தெரிந்தவர்களுக்கு நினைவுபடுத்தும் ஒரு புத்தகம்” - ரமேஷ் வைத்யா, பத்திரிகையாளர்.

அரசியல் சாராத ஆனால், இந்திய அரசியல்வாதிகள், வாக்காளப் பெருமக்கள் ஆகியோரின் மனநிலைகளை விவரிக்கும் முக்கியமான புத்தகம் இது. இந்தப் புத்தகத்தைப் படிப்பவர்களுக்கு ஜனநாயகம் பற்றிய தெளிவு கிடைக்கும்; இந்திய தேசத்தின் மீது நம்பிக்கை பிறக்கும்; முக்கியமாக அரசியல் பிடிக்கும். இந்தப் புத்தகம் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் தாக்குரவு இவையே.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.