under review

மகாமுனிவர்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(Added First published date)
 
Line 21: Line 21:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]
* [https://noolaham.net/project/10/962/962.pdf பாவலர் சரித்திர தீபகம்: அ. சதாசிவம்பிள்ளை: கொழும்பு தமிழ்ச்சங்கம்]


{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|12-Oct-2023, 06:00:54 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 13:54, 13 June 2024

மகாமுனிவர் (கடவுள் மகாமுனிவர்) (பொ.யு. 13-ம் நூற்றாண்டு) ஈழத்துத்தமிழ்ப் புலவர். திருவாதவூரார் புராணம் எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

மகாமுனிவர் கச்சியப்ப முனிவர் காலத்தில் வாழ்ந்த மகான். கல்விமான். குரூர நோய் தாக்கி அவதிக்குள்ளானபோது வாதவூரார் சரித்திரத்தை புராணமாய்ப் பாடினால் நோய் குணமாகும் என்று கச்சியப்ப முனிவர் சொன்னதால் திருவாதவூரார் புராணம் பாடி நோய் குணமடைந்தார் என்ற நம்பிக்கை உள்ளது. கடவுள் மகாமுனிவர், கடவுள் மாமுனி என்றும் அழைக்கப்பட்டார்.

இலக்கிய வாழ்க்கை

மகாமுனிவர் வாதவூரார் (மாணிக்கவாசகர்) சரித்திரத்தை புராணமாகப் பாடினார். இதில் ஏழு சுருக்கங்களும், ஐநூற்றி நாற்பத்தி நான்கு விருத்தங்களும் உள்ளன. காஞ்சிபுரம் குமாரசாமி தேசிகர், திருத்தணிகை கந்தசாமி ஐயர், விருத்தாசலம் குமாரத்தேவர், க. வேற்பிள்ளை, அ. குமாரசாமிப்புலவர் ஆகியோர் திருவாதவூரார் புராணத்திற்கு உரை எழுதினர்.

பாடல் நடை

  • வாதவூரார் புராணம்

பவளமால் வரையி னிலவெறிப் பதுபோற்
பரந்தநீற் றழகுபச் சுடம்பிற்
துவளமா துடனின் றடிய பரமன்
சிற்வனைப் பாரதப் பெரும்போர்
தவளமா மருப்பொன் றொடித்தொரு கரத்திற்
றந்துயர் சிலைப்புறத் தெழுதும்
கவளமா களிற்றின் றிருமுகம் படைத்த
கடவுள் நினைந்துகை தொழுவோம்

நூல் பட்டியல்

  • திருவாதவூரார் புராணம்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Oct-2023, 06:00:54 IST