under review

தொல்காப்பியர் காலம்: Difference between revisions

From Tamil Wiki
(Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(Added First published date)
 
Line 28: Line 28:
* [https://ilamaranwritings.blogspot.com/2011/06/1858.html பா. இளமாறன் (ஜெய்கணேஷ்): அறியப்பட வேண்டிய அரிய ஆவணங்கள் : தொல்காப்பிய முதல் முழுமைப்பதிப்பு (இ. சாமுவேல்பிள்ளை - 1858)]
* [https://ilamaranwritings.blogspot.com/2011/06/1858.html பா. இளமாறன் (ஜெய்கணேஷ்): அறியப்பட வேண்டிய அரிய ஆவணங்கள் : தொல்காப்பிய முதல் முழுமைப்பதிப்பு (இ. சாமுவேல்பிள்ளை - 1858)]
* [https://134804.activeboard.com/t59991225/topic-59991225/ தொல்காப்பியத்தின் காலம் - New Indian-Chennai News & More]
* [https://134804.activeboard.com/t59991225/topic-59991225/ தொல்காப்பியத்தின் காலம் - New Indian-Chennai News & More]
{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|17-Apr-2023, 07:43:10 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 16:23, 13 June 2024

தொல்காப்பியரின் காலம் பற்றி தமிழ் இலக்கியச்சூழலில் தொடர் விவாதங்கள் நிகழ்ந்தபடி உள்ளன. தொல்காப்பியத்திற்கு பானம்பாரனார் எழுதிய சிறப்புப் பாயிரம் தவிர அந்நூலின் ஆசிரியர், அதன் வரலாறு சார்ந்த செய்திகள் ஏதுமில்லை. பானம்பாரனார் தொல்காப்பியரின் உடன் பயின்ற மாணவர் என்று கதைகள் சொல்கின்றன. ஆனால் இவை அனைத்துமே நூலாதாரம் இல்லாத கூற்றுகள்தான். பானம்பாரனார் பற்றியு தெளிவான செய்திகள் ஏதுமில்லை.

தொல்காப்பியத்தின் காலத்தை கணிக்க அகச்சான்றுகள் மட்டுமே உள்ளன. இந்தியாவின் பிற இலக்கியங்களுடன் ஒப்பிட்டும், பழந்தமிழிலக்கியங்களின் சொல்லாட்சிகள் மற்றும் பேசுபொருட்களுடன் ஒப்பிட்டும் ஊகங்கள் செய்யப்படுகின்றன. இந்த ஊகங்களுக்கு பின்னணியில் அரசியல்நோக்கங்கள் உள்ளன. தங்கள் தொன்மையை பிற பண்பாடுகளுக்கும் முன்னர் கொண்டு செல்லும் திட்டத்துடன் செய்யப்பட்ட கணிப்புகள் உள்ளன. இக்காலக்கணிப்புகள் நிகழ்ந்த தொடக்க காலகட்டத்தில் வரலாற்றாய்வும் தொல்லியல் ஆய்வும் தொடக்கநிலையில் இருந்தன. ஆகவே காலக்கணிப்புகள் மிகத்தொன்மையான காலத்துக்குக்கூட செல்கின்றன. கீழ்க்கண்டவை புகழ்பெற்ற காலக்கணிப்புகள். இவற்றை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்

மிகத்தொல்காலம்

பொதுயுகத்திற்கு முந்தைய காலம்

பொதுயுகத்துக்குப்பின்

இம்முடிவுகள் ஆய்வாளர்களின் பார்வையை ஒட்டி மாறுபடுகின்றன. சங்ககாலம் என அழைக்கப்படும் பொ.மு. 2 முதல் பொ.யு. 2 வரையிலான காலகட்டத்தில் தொல்காப்பியம் தோன்றியிருக்கலாம் என்பதே பொதுவாக பொருந்திவரும் முடிவு

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 17-Apr-2023, 07:43:10 IST