எம்.சி.ராஜா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 5: Line 5:

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
எம்.சி.ராஜா சென்னையிலுள்ள செயிண்ட் தாமஸ் மவுண்டி (பறங்கிமலை )யில் மயிலை சின்னத்தம்பிப்பிள்ளை - இணையருக்கு 17 ஜூன் 1883ல் பிறந்தார். சின்னத்தம்பிப்பிள்ளை சென்னை  லாரன்ஸ் காப்பகத்தில் மேலாளராக வேலை பார்த்தார். ராயப்பேட்டையிலுள்ள வெஸ்லி மிஷன் பள்ளியில் ஆரம்பக்கல்வியும் பின் வெஸ்லி கல்லுரியில்  உயர்நிலைப் படிப்பு முடித்து சென்னை கிருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவுசெய்தார்.  
எம்.சி.ராஜா சென்னையிலுள்ள செயிண்ட் தாமஸ் மவுண்டி (பறங்கிமலை )யில் மயிலை சின்னத்தம்பிப் பிள்ளைக்கு 17 ஜூன் 1883ல் பிறந்தார். சின்னத்தம்பிப்பிள்ளை சென்னை  லாரன்ஸ் காப்பகத்தில் மேலாளராக வேலை பார்த்தார். ராயப்பேட்டையிலுள்ள வெஸ்லி மிஷன் பள்ளியில் ஆரம்பக்கல்வியும் பின் வெஸ்லி கல்லுரியில்  உயர்நிலைப் படிப்பு முடித்து சென்னை கிருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவுசெய்தார்.வெஸ்லி கல்லூரியிலும் கிறித்தவக் கல்லூரியிலும் படிக்கும் நாட்களில் ராஜா மிகச் சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காராக கல்லூரியால் போற்றப்பட்டவராக இருந்தார். கிறித்தவக் கல்லூரி முதல்வர் முனைவர் [[வில்லியம் மில்லர்]]ரின் அன்புக்குரிய மாணவராக இருந்தார். 

== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
எம்.சி.ராஜாவின் தனிவாழ்க்கையில் தீவிரமான செல்வாக்கு செலுத்தியவர்களில் [[திரு.வி. கல்யாணசுந்தர முதலியார்]] குறிப்பிடத்தக்கவர்.இருவரும் இராயப்பேட்டையிலேயே வாழ்ந்தவர்கள். வெஸ்லி கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள். இருவருமே வெஸ்லி கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்தார்கள். அங்கே ராஜா முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை உள்ள பகுதியின் மேற்பார்வையாளர் ஆனார். திரு.வி.க. தமிழ்ப் பேராசிரியர்.  ராஜா 1916 ஆம் ஆண்டில் ஜஸ்டிஸ் கட்சியில் இணைந்து ரசியலில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார். திரு.வி.க.வின் மனம் காங்கிரஸ் ஆதரவாளரானார். ‘தேசபக்தன்’ என்ற இதழை நடத்துவதற்காக அவர் கல்லூரிப் பணியை உதறியபோது, எம்.சி.ராஜா வேலையை விட்டுவிட வேண்டாம் என்று திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரை விலக்கினார். திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் அதைப் பொருட்படுத்தவில்லை.
எம்.சி.ராஜா படிப்பு முடித்து வெஸ்லி பள்ளியில் ஆசிரியரானார். அக்காலத்தில் சென்னை ராஜதானியில் பள்ளி வகுப்புகளுக்குப் பாடமாக அமைந்த பல நூல்கள் ராஜாவால் எழுதப்பட்டவை. 1917இல் ஆளுநர் பென்ட்லான்ட் பிரபுவால் ஆரம்பப் பள்ளிக் கல்விக்குழுவுக்கு நியமனம் செய்ப்பட்ட எம்.சி.ராஜா 1919இல் ஆரம்பக் கல்வி மசோதாவிற்கான பொதுக்குழுவிலும் பணியாற்றினார். உயர்நிலைப்பள்ளி கல்வி மறுசீரமைப்புக்குழுவிலும் செயல்பட்டார். சாரணர் இயக்கத்திலும் ஈடுபட்டார்.

== அரசியல்வாழ்க்கை ==
== அரசியல்வாழ்க்கை ==
எம்.சி.ராஜாவின் தந்தை மயிலை சின்னத்தம்பி ப்பிள்ளை 1887இல் உருவாக்கப்பட்ட ஆதிதிராவிடர் மகாஜன சபையின் செயலாளராக இருந்தவர். தந்தையின் அரசியலுக்கு எம்.சி.ராஜா மாணவர் வாழ்க்கையிலேயே நுழைந்தார். தந்தைக்கு பின்னர் 1916ல் ஆதிதிராவிடர் மகாசன சபைக்குத் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1917ல் மாண்டேகு செம்ஸ்போர்டு அரசமைப்புக் குழுவிடம் ஒடுக்ககப்பட்டோருக்கான உரிமைகளை வலியுறுத்தி கூட்டு மனு ஒன்றை அளித்து இந்திய அளவில் கவனம்பெற்றார். 1919 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சென்னை மாகாணச் சட்டசபையின் மேலவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.  
எம்.சி.ராஜாவின் தந்தை மயிலை சின்னத்தம்பி ப்பிள்ளை 1887இல் உருவாக்கப்பட்ட ஆதிதிராவிடர் மகாஜன சபையின் செயலாளராக இருந்தவர். தந்தையின் அரசியலுக்கு எம்.சி.ராஜா மாணவர் வாழ்க்கையிலேயே நுழைந்தார். தந்தைக்கு பின்னர் 1916ல் ஆதிதிராவிடர் மகாசன சபைக்குத் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1917ல் மாண்டேகு செம்ஸ்போர்டு அரசமைப்புக் குழுவிடம் ஒடுக்ககப்பட்டோருக்கான உரிமைகளை வலியுறுத்தி கூட்டு மனு ஒன்றை அளித்து இந்திய அளவில் கவனம்பெற்றார். 1919இல் மாநில சட்டமன்றத்திற்கு உறுப்பினராக நியமனம் செய்தார். 1921, 1925, 1926 ஆம் ஆண்டுகளிலும் சட்டமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்.

எம்.சி.ராஜா நீதிக்கட்சி ஆதரவாளராக இருந்தார். 1921ல் பனகல் அரசரின் நீதிக்கட்சியரசு அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தது. அதில் பட்டியல் பிரிவு மக்களுக்கு எந்தவொரு சலுகையும் தரப்படவில்லை என்பதனால் எம்.சி.ராஜா பட்டியல் பிரிவு மக்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டுமென வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தார். அப்போராட்டங்களில் உருவான புளியந்தோப்பு கலவரத்திற்கு தலித் மக்கள் காரணம் என நீதிக்கட்சி குற்றம்சாட்டி நடவடிக்கை எடுக்கவே ராஜா நீதிக்கட்சியில் 1923ல் விலகினார்.  

1922 ல் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சம்மேளனம் என்னும் அமைப்பின் நிறுவனத்தலைவராகவும் அதன் முதல் செயலாளராகவும் விளங்கினார். இந்திய அளவில் பணிகளை விரிவாக்கிக்கொண்டார்.1923-ல் சென்னை ஆளுநர் வெலிங்டன் பிரபு, கவர்னர் ஜெனரல் ரீடிங் பிரபு ஆகியோரையும், 1925-ல் கோஷென் பிரபுவையும் சந்தித்து நாடு முழுவதுமுள்ள ஒடுக்கப் பட்டோருக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கோரினார். இதற்காக சென்னை மாகாணம் மட்டும் அல்லாமல், டெல்லி வரை சென்று 500-க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களையும், 100-க்கும் மேற்பட்ட மாநாடுகளையும் நடத்தி ஒடுக்கப்பட்டோரை ஒன்றிணைத்தார்.
1922இல் பிரிட்டிஷ் அரசு அவருக்கு இராவ் பகதூர் பட்டத்தை அளித்தது.1922 ல் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சம்மேளனம் என்னும் அமைப்பின் நிறுவனத்தலைவராகவும் அதன் முதல் செயலாளராகவும் விளங்கினார். இந்திய அளவில் பணிகளை விரிவாக்கிக்கொண்டார்.1923-ல் சென்னை ஆளுநர் வெலிங்டன் பிரபு, கவர்னர் ஜெனரல் ரீடிங் பிரபு ஆகியோரையும், 1925-ல் கோஷென் பிரபுவையும் சந்தித்து நாடு முழுவதுமுள்ள ஒடுக்கப் பட்டோருக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கோரினார். இதற்காக சென்னை மாகாணம் மட்டும் அல்லாமல், டெல்லி வரை சென்று 500-க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களையும், 100-க்கும் மேற்பட்ட மாநாடுகளையும் நடத்தி ஒடுக்கப்பட்டோரை ஒன்றிணைத்தார்.

1930ல் மையச் சட்டசபையான நாடாளுமன்றத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தலித் மக்களின் முதல் பிரதிநிதி அவரே. 1922-ல் பறையர், பஞ்சமர் என்னும் பெயர்களுக்குப் பதிலாக அதிகாரபூர்வமாக, ‘ஆதிதிராவிடர், ஆதி ஆந்திரர்’ எனக் குறிப்பிட வேண்டும் எனத் தீர்மானம் கொண்டுவந்தார். 1934 ல்  நாடாளுமன்ற அவைக்கு தற்காலிக சபா நாயகராக இருந்தார். நாடாளுமன்றத்தில் தீண்டாமையை சட்டபூர்வமாக விலக்கும் மசோதா ஒன்றை1933ல் கொண்டு வந்தார். அது அவையில் தோற்கடிக்கப்பட்டது.

Line 33: Line 36:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==

* https://www.hindutamil.in/news/opinion/columns/231825-.html
* பெருந்தலைவர் எம்.சி.ராஜா சிந்தனைகள்’ தொகுப்பு வே.அலெக்ஸ்
*[https://www.keetru.com/kavithaasaran/jul06/mc_raja.php ஒடுக்கப்பட்ட இந்துக்கள் எம்.சி.ராஜா]
*https://www.jeyamohan.in/5516/
*https://www.hindutamil.in/news/opinion/columns/231825-.html
* https://swarajyamag.com/politics/rajah-moonje-pact-the-forgotten-model-for-social-justice-and-integration-of-dalits
* https://swarajyamag.com/politics/rajah-moonje-pact-the-forgotten-model-for-social-justice-and-integration-of-dalits
* https://gsannah.wordpress.com/2013/02/20/mcraja-dalit-histor/
* https://gsannah.wordpress.com/2013/02/20/mcraja-dalit-histor/

Revision as of 10:53, 16 March 2022

எம்.சி.ராஜா
எம்.சி.ராஜா மனைவியுடன்
எம்.சி.ராஜா

எம்.சி.ராஜா (17 ஜூன் 1883 – 20 ஆகஸ்ட் 1943) ராவ் பகதூர் மயிலை சின்னத்தம்பிப்பிள்ளை ராஜா தமிழ்நாட்டு சிந்தனையாளர்களில் ஒருவர், தலித் இயக்க முன்னோடி, இதழாளர்.

பிறப்பு, கல்வி

எம்.சி.ராஜா சென்னையிலுள்ள செயிண்ட் தாமஸ் மவுண்டி (பறங்கிமலை )யில் மயிலை சின்னத்தம்பிப் பிள்ளைக்கு 17 ஜூன் 1883ல் பிறந்தார். சின்னத்தம்பிப்பிள்ளை சென்னை லாரன்ஸ் காப்பகத்தில் மேலாளராக வேலை பார்த்தார். ராயப்பேட்டையிலுள்ள வெஸ்லி மிஷன் பள்ளியில் ஆரம்பக்கல்வியும் பின் வெஸ்லி கல்லுரியில் உயர்நிலைப் படிப்பு முடித்து சென்னை கிருத்துவக் கல்லூரியில் பட்டப்படிப்பை நிறைவுசெய்தார்.வெஸ்லி கல்லூரியிலும் கிறித்தவக் கல்லூரியிலும் படிக்கும் நாட்களில் ராஜா மிகச் சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காராக கல்லூரியால் போற்றப்பட்டவராக இருந்தார். கிறித்தவக் கல்லூரி முதல்வர் முனைவர் வில்லியம் மில்லர்ரின் அன்புக்குரிய மாணவராக இருந்தார்.

தனிவாழ்க்கை

எம்.சி.ராஜாவின் தனிவாழ்க்கையில் தீவிரமான செல்வாக்கு செலுத்தியவர்களில் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் குறிப்பிடத்தக்கவர்.இருவரும் இராயப்பேட்டையிலேயே வாழ்ந்தவர்கள். வெஸ்லி கல்லூரியில் சேர்ந்து படித்தார்கள். இருவருமே வெஸ்லி கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்தார்கள். அங்கே ராஜா முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை உள்ள பகுதியின் மேற்பார்வையாளர் ஆனார். திரு.வி.க. தமிழ்ப் பேராசிரியர். ராஜா 1916 ஆம் ஆண்டில் ஜஸ்டிஸ் கட்சியில் இணைந்து ரசியலில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார். திரு.வி.க.வின் மனம் காங்கிரஸ் ஆதரவாளரானார். ‘தேசபக்தன்’ என்ற இதழை நடத்துவதற்காக அவர் கல்லூரிப் பணியை உதறியபோது, எம்.சி.ராஜா வேலையை விட்டுவிட வேண்டாம் என்று திரு.வி.கல்யாணசுந்தர முதலியாரை விலக்கினார். திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் அதைப் பொருட்படுத்தவில்லை.

எம்.சி.ராஜா படிப்பு முடித்து வெஸ்லி பள்ளியில் ஆசிரியரானார். அக்காலத்தில் சென்னை ராஜதானியில் பள்ளி வகுப்புகளுக்குப் பாடமாக அமைந்த பல நூல்கள் ராஜாவால் எழுதப்பட்டவை. 1917இல் ஆளுநர் பென்ட்லான்ட் பிரபுவால் ஆரம்பப் பள்ளிக் கல்விக்குழுவுக்கு நியமனம் செய்ப்பட்ட எம்.சி.ராஜா 1919இல் ஆரம்பக் கல்வி மசோதாவிற்கான பொதுக்குழுவிலும் பணியாற்றினார். உயர்நிலைப்பள்ளி கல்வி மறுசீரமைப்புக்குழுவிலும் செயல்பட்டார். சாரணர் இயக்கத்திலும் ஈடுபட்டார்.

அரசியல்வாழ்க்கை

எம்.சி.ராஜாவின் தந்தை மயிலை சின்னத்தம்பி ப்பிள்ளை 1887இல் உருவாக்கப்பட்ட ஆதிதிராவிடர் மகாஜன சபையின் செயலாளராக இருந்தவர். தந்தையின் அரசியலுக்கு எம்.சி.ராஜா மாணவர் வாழ்க்கையிலேயே நுழைந்தார். தந்தைக்கு பின்னர் 1916ல் ஆதிதிராவிடர் மகாசன சபைக்குத் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1917ல் மாண்டேகு செம்ஸ்போர்டு அரசமைப்புக் குழுவிடம் ஒடுக்ககப்பட்டோருக்கான உரிமைகளை வலியுறுத்தி கூட்டு மனு ஒன்றை அளித்து இந்திய அளவில் கவனம்பெற்றார். 1919இல் மாநில சட்டமன்றத்திற்கு உறுப்பினராக நியமனம் செய்தார். 1921, 1925, 1926 ஆம் ஆண்டுகளிலும் சட்டமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார்.

எம்.சி.ராஜா நீதிக்கட்சி ஆதரவாளராக இருந்தார். 1921ல் பனகல் அரசரின் நீதிக்கட்சியரசு அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தது. அதில் பட்டியல் பிரிவு மக்களுக்கு எந்தவொரு சலுகையும் தரப்படவில்லை என்பதனால் எம்.சி.ராஜா பட்டியல் பிரிவு மக்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டுமென வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்தார். அப்போராட்டங்களில் உருவான புளியந்தோப்பு கலவரத்திற்கு தலித் மக்கள் காரணம் என நீதிக்கட்சி குற்றம்சாட்டி நடவடிக்கை எடுக்கவே ராஜா நீதிக்கட்சியில் 1923ல் விலகினார்.

1922இல் பிரிட்டிஷ் அரசு அவருக்கு இராவ் பகதூர் பட்டத்தை அளித்தது.1922 ல் அகில இந்திய ஒடுக்கப்பட்டோர் சம்மேளனம் என்னும் அமைப்பின் நிறுவனத்தலைவராகவும் அதன் முதல் செயலாளராகவும் விளங்கினார். இந்திய அளவில் பணிகளை விரிவாக்கிக்கொண்டார்.1923-ல் சென்னை ஆளுநர் வெலிங்டன் பிரபு, கவர்னர் ஜெனரல் ரீடிங் பிரபு ஆகியோரையும், 1925-ல் கோஷென் பிரபுவையும் சந்தித்து நாடு முழுவதுமுள்ள ஒடுக்கப் பட்டோருக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தைக் கோரினார். இதற்காக சென்னை மாகாணம் மட்டும் அல்லாமல், டெல்லி வரை சென்று 500-க்கும் மேற்பட்ட பொதுக் கூட்டங்களையும், 100-க்கும் மேற்பட்ட மாநாடுகளையும் நடத்தி ஒடுக்கப்பட்டோரை ஒன்றிணைத்தார்.

1930ல் மையச் சட்டசபையான நாடாளுமன்றத்தில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தலித் மக்களின் முதல் பிரதிநிதி அவரே. 1922-ல் பறையர், பஞ்சமர் என்னும் பெயர்களுக்குப் பதிலாக அதிகாரபூர்வமாக, ‘ஆதிதிராவிடர், ஆதி ஆந்திரர்’ எனக் குறிப்பிட வேண்டும் எனத் தீர்மானம் கொண்டுவந்தார். 1934 ல் நாடாளுமன்ற அவைக்கு தற்காலிக சபா நாயகராக இருந்தார். நாடாளுமன்றத்தில் தீண்டாமையை சட்டபூர்வமாக விலக்கும் மசோதா ஒன்றை1933ல் கொண்டு வந்தார். அது அவையில் தோற்கடிக்கப்பட்டது.

1932ல் இந்திய தேசிய காங்கிரசின் வலதுசாரிகளான டாக்டர் பி. எஸ். மூஞ்சே மற்றும் ஜாதவுடன் ராஜா ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி ராஜா அவர்களுக்கு ஆதரவளிக்கவேண்டும் என்றும் அதற்குப் பதில் அவர்கள் பட்டியல் வகுப்பினருக்கு இடஒதுக்கீடு ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தது. இந்த ஏற்பாடுதான் அனைத்திந்திய அளவில் தேர்தலில் பட்டியல் பிரிவு மக்களுக்கென்று தனித்தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டுமென அம்பேத்கார் அதிகாரபூர்வமாகக் கோரத் தூண்டுதலாய் அமைந்தது.

1937ல் ஏப்ரல் முதல் ஜூலை வரை சென்னை மாகாணத்தில் சிறிதுகாலமே ஆட்சியிலிருந்த கூர்ம வெங்கட ரெட்டி நாயுடுவின் தற்காலிக இடைக்கால அமைச்சரவையில் வளர்ச்சித்துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

அம்பேத்கருடன் முரண்பாடு

எம்.சி.ராஜா இந்திய தலித் அரசியல்வாதிகளில் முன்னரே களத்திலிறங்கியவர், அம்பேத்கருக்கு முன்னரே புகழ்பெற்றவர். ஆயினும் 1930 ஆண்டு தொடங்கிய வட்டமேசை மாநாடுகளில் கலந்துக் கொள்வதற்கான வாய்ப்பு டாக்டர்.அம்பேத்கருக்கும் ரெட்டமலை சீனிவாசம் அளிக்கப்பட்டது. இதனால் எம்.சி.ராஜா அம்பேத்கருடன் முரண்பட்டார். இரட்டை வாக்குரிமை பற்றி அவர்களுக்கிடையே நிகழ்ந்த விவாதத்தில் முதலில் எம்.சி.ராஜா அதை வரவேற்றார், அம்பேத்கர் எதிர்த்தார். வட்டமேஜை மாநாட்டுக்குப்பின் அம்பேத்கர் அதை ஆதரித்தார், ஆனால் நாடெங்கும் உருவான மனநிலையை கண்டபின் எம்.சி.ராஜா எதிர்த்தார். இது அவர்களுக்கிடையே நேரடியான அரசியல் போட்டியாகவும் மாறியது. 1942-ம் ஆண்டு புணேவில் நடந்த அம்பேத்கரின் பிறந்த நாள் கூட்டத்தில் பங்கேற்ற எம்.சி.ராஜா பின்னர் கிரிப்ஸ் குழுவில் அம்பேத்கருடன் இணைந்து செயல்பட்டார்.

இலக்கியப்பணிகள்

எம். சி. ராசா பல பள்ளிப் புத்தகங்களை எழுதியுள்ளார். ஆர். ரங்கநாயகி அம்மாள் என்பவருடன் இணைந்து Kindergarten Room என்ற தலைப்பில் மழலையர் பள்ளிப் பாடநூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். இதன் மூன்றாம் பதிப்பு 1930 ஆம் ஆண்டில் வெளியானது.

மறைவு

23 ஆக்ஸ்ட் 1945ல் எம்.சி.ராஜா சென்னை, செயிண்ட் தாமஸ் மவுண்டில், ராஜா தெருவிலிருந்த தனது வீட்டில் காலமானார்.

உசாத்துணை