பட்டினத்து அடிகள்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "பட்டினத்து அடிகள் (குருபூஜை நாள் ஜூலை 30) பொ.யு 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர். பதினொன்றாம் திருமுறை முதலான ஐந்து பிரபந்தங்களை எழுதியவர். == பிறப்பு == பட்டினத்து அடிகளின் காலம்...")
 
No edit summary
Line 2: Line 2:

== பிறப்பு ==
== பிறப்பு ==
பட்டினத்து அடிகளின் காலம் பொ.யு 10ஆம் நூற்றாண்டின் தொடக்கம். இவர் ஒரு சிவனடியார். காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் இவர் அவதரித்தார். பெற்றோர் திருவெண்காடர் எனப் பெயர் சூட்டி வளர்த்தனர். திருவெண்காடர் வளர்ந்து சிறந்து வாணிகத்தால் பெரும் பொருள் ஈட்டி சிவபத்தியில் சிறந்தவராய், சிவனடியார்களுக்கு வேண்டுவன அளிக்கும் பண்பினராய் விளங்கினார். நிறைந்த செல்வம் உடையவராய் வாழ்ந்து வந்த இவருக்கு இளம் வயதிலேயே துறவர வாழ்வு கொண்டதால் இவருக்கு மக்கட் செல்வம் வாய்த்திலது.
பட்டினத்து அடிகளின் காலம் பொ.யு 10ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம். இவர் ஒரு சிவனடியார். காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் பிறந்தார். சிவநேசருக்கும், ஞானகலாம்பகைக்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் திருவெண்காடர். வாணிகத்தொழில் செய்து வந்தார். சிவகலை என்பவரை மணம் புரிந்தார். பிள்ளைப்பெயரில்லாமையால் மருதவாணரைத் தத்தெடுத்துக் கொண்டார்.  
திருவெண்காடரின் மகனாக வந்தடைந்த மருதவாணர் வளர்ந்து சிறந்து வாணிபத்தில் வல்லவராய்ப் பெரும் பொருள் ஈட்டித் தம் பெற்றோரை மகிழ்வித்து வந்தார்.  

== சிவசமாதி ==
== திருவொற்றியூர் கோவில் ==
திருவெண்காட்டு அடிகள் திருஒற்றியூரில் தங்கியிருந்த போது, கடற்கரையில் விளையாடும் சிறுவர்களோடு தாமும் சேர்ந்து மணலில் புதைதல் பின் வெளிப்படல் போன்ற விளையாட்டுக்களை நிகழ்த்தினார். முடிவில் சிறுவர்களைக் கொண்டு மணலால் தன்னை மூடச் செய்தார். நெடுநேரம் ஆகியும் அவர் வெளிப்படாதிருத்தலைக் கண்டு சிறுவர்கள் மணலை அகழ்ந்து பார்த்தபோது அடிகள் சிவ லிங்கமாக வெளிப்பட்டருளினார்.
திருவொற்றியூரில்தான் தனக்கு முக்தி என்பதை உணர்ந்து அங்கு லிங்க வடிவாக மாறி சிவசமாதி அடைந்ததாக நம்பப்படுகிறது. முக்தியும் பெற்றார். பின்னாட்களில் இங்கே கோயில் எழுப்பப் பட்டது. வங்காளவிரிகுடாக் கடலைப் பார்த்த வண்ணம் காட்சி தரும் பட்டினத்தார் தனிச் சந்நிதியில் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். பட்டினத்தார் முக்தியடைந்த ஆடி உத்திராடம் குருபூஜை விழாவாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.  
 
== திருவொற்றியூர் ==
திருவொற்றியூரில்தான் தனக்கு முக்தி என்பதை உணர்ந்து கொண்ட பட்டினத்தார், அங்கு இருந்த சிலரை அழைத்துத் தன்னை ஒரு பாத்திரத்தால் மூடும்படி வேண்ட அவர்களும் அப்படியே மூடினார்கள். மூடப்பட்ட பட்டினத்தார் லிங்க வடிவாக மாறினார். முக்தியும் பெற்றார். பின்னாட்களில் இங்கே கோயில் எழுப்பப் பட்டது. வங்காளவிரிகுடாக் கடலைப் பார்த்த வண்ணம் காட்சி தரும் பட்டினத்தார் தனிச் சந்நிதியில் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். பட்டினத்தார் முக்தியடைந்த ஆடி உத்திராடம் குருபூஜை விழாவாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.  

== வேறு பெயர்கள் ==
== வேறு பெயர்கள் ==
Line 28: Line 24:
* கச்சித்திரு அகவல்
* கச்சித்திரு அகவல்

== இதர இணைப்புகள் ==
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* பட்டினத்து அடிகள் வரலாறு: thevaram.org
*

Revision as of 14:13, 15 March 2022

பட்டினத்து அடிகள் (குருபூஜை நாள் ஜூலை 30) பொ.யு 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புலவர். பதினொன்றாம் திருமுறை முதலான ஐந்து பிரபந்தங்களை எழுதியவர்.

பிறப்பு

பட்டினத்து அடிகளின் காலம் பொ.யு 10ஆம் நூற்றாண்டின் தொடக்க காலம். இவர் ஒரு சிவனடியார். காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகர் குலத்தில் பிறந்தார். சிவநேசருக்கும், ஞானகலாம்பகைக்கும் மகனாகப் பிறந்தார். பெற்றோர் வைத்த பெயர் திருவெண்காடர். வாணிகத்தொழில் செய்து வந்தார். சிவகலை என்பவரை மணம் புரிந்தார். பிள்ளைப்பெயரில்லாமையால் மருதவாணரைத் தத்தெடுத்துக் கொண்டார்.

திருவொற்றியூர் கோவில்

திருவொற்றியூரில்தான் தனக்கு முக்தி என்பதை உணர்ந்து அங்கு லிங்க வடிவாக மாறி சிவசமாதி அடைந்ததாக நம்பப்படுகிறது. முக்தியும் பெற்றார். பின்னாட்களில் இங்கே கோயில் எழுப்பப் பட்டது. வங்காளவிரிகுடாக் கடலைப் பார்த்த வண்ணம் காட்சி தரும் பட்டினத்தார் தனிச் சந்நிதியில் லிங்க வடிவில் சதுர பீடத்துடன் காட்சி தருகிறார். பட்டினத்தார் முக்தியடைந்த ஆடி உத்திராடம் குருபூஜை விழாவாக ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படுகிறது.

வேறு பெயர்கள்

  • திருவெண்காடர்
  • திருவெண்காட்டு அடிகள்
  • பட்டினத்துப் பிள்ளையார்

பாராட்டு

  • பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்துப்பிள்ளை போல் யாரும் துறப்பதரிதரிது

நூல் பட்டியல்

  • பதினொன்றாம் திருமுறைப் பிரபந்தங்கள்
  • திருக்கழுமல மும்மணிக்கோவை
  • கோயில் நான்மணிமாலை
  • நினைமின்மனனே
  • திருவேகம்பமுடையார் திருவந்தாதி
  • திருவேகம்பமாலை
  • கச்சித்திரு அகவல்

உசாத்துணை

  • பட்டினத்து அடிகள் வரலாறு: thevaram.org