ந.சி. கந்தையா பிள்ளை: Difference between revisions
(Created page with "ந.சி. கந்தையா பிள்ளை (1893 - 1967) தமிழிலக்கியத் துறையில் செயலாற்றியவர். உரைநடையில் தமிழ் இலக்கியங்களை வழங்கினார். == பிறப்பு, கல்வி == ந. சி. கந்தையாபிள்ளை யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தரோடை...") |
No edit summary |
||
| Line 1: | Line 1: | ||
ந.சி. கந்தையா பிள்ளை (1893 - 1967) தமிழிலக்கியத் துறையில் செயலாற்றியவர். உரைநடையில் தமிழ் இலக்கியங்களை | ந.சி. கந்தையா பிள்ளை (1893 - 1967) தமிழறிஞர், தமிழிலக்கியத் துறையில் செயலாற்றியவர். உரைநடையில் தமிழ் இலக்கியங்களை எழுதினார். | ||
== பிறப்பு, கல்வி == | == பிறப்பு, கல்வி == | ||
ந. சி. கந்தையாபிள்ளை யாழ்ப்பாணத்தில் உள்ள | ந.சி. கந்தையாபிள்ளை யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தரோடையில் 1893இல் நன்னியர் சின்னத்தம்பியின் மகனாகப் பிறந்தார். அவ்வூரில் தன் கல்வி பயின்றார். | ||
== தனிவாழ்க்கை == | == தனிவாழ்க்கை == | ||
கந்தரோடையில் ஆசிரியப்பணி செய்தார். ஆசிரியப் பணியிலிருக்கும்போது ஈழத்தில் பெரும் புலவர்களின் அறிமுகத்தில் தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார். சில காலம் மலேயாவில், பிருத்தானியா ரயில்வேத்துறையில் பணியாற்றினார். இலங்கை திரும்பி தமிழ்மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டார். | |||
இவர் நவாலியூர் மருதப்பு என்பவரின் மகளான இரத்தினம்மாவைத் திருமணம் செய்தார். பிள்ளைகள் திருநாவுக்கரசு மற்றும் மங்கையற்கரசி. | |||
== இலக்கிய வாழ்க்கை == | == இலக்கிய வாழ்க்கை == | ||
==== தமிழ் அகராதிகள் ==== | ==== தமிழ் அகராதிகள் ==== | ||
தமிழியம் பற்றிய ஆய்வை மேற்கொண்ட | தமிழியம் பற்றிய ஆய்வை மேற்கொண்ட அறிஞர்களுள் ஒருவர். பொது அறிவுத் துறையிலும், அகராதித் துறையிலும் பங்களிப்பு செய்தார். செந்தமிழ் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி, தமிழ்ப் புலவர் அகராதி, காலக்குறிப்பு அகராதி, திருக்குறள் அகராதி போன்ற அகராதிகளை எழுதினார். ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். | ||
==== தமிழ் ஆராய்ச்சி ==== | ==== தமிழ் ஆராய்ச்சி ==== | ||
தமிழ்மொழி, தமிழ்நாகரிகம், சிவவழிபாடு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தமிழ்நாடு சென்று தமிழ்நூல்களை, தொல்பொருள் ஆதாரங்களைப் பெற்று ஆராய்ந்தார். இவற்றை ஆதாரமாகக் கொண்டு பல ஆராய்ச்சி நூல்களை எழுதினார். தமிழ் நாட்டில் வீரபாகுப் பிள்ளையால் நடத்தப்பட்ட ஒற்றுமை நிலையம் மூலமாகத் தனது நூல்களை வெளியிட்டார். முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகிய பதிப்பகங்களும் ந.சி. கந்தையாவின் நூல்களை வெளியிட்டன. | |||
== நூல் பட்டியல் == | == நூல் பட்டியல் == | ||
Revision as of 13:48, 11 March 2022
ந.சி. கந்தையா பிள்ளை (1893 - 1967) தமிழறிஞர், தமிழிலக்கியத் துறையில் செயலாற்றியவர். உரைநடையில் தமிழ் இலக்கியங்களை எழுதினார்.
பிறப்பு, கல்வி
ந.சி. கந்தையாபிள்ளை யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தரோடையில் 1893இல் நன்னியர் சின்னத்தம்பியின் மகனாகப் பிறந்தார். அவ்வூரில் தன் கல்வி பயின்றார்.
தனிவாழ்க்கை
கந்தரோடையில் ஆசிரியப்பணி செய்தார். ஆசிரியப் பணியிலிருக்கும்போது ஈழத்தில் பெரும் புலவர்களின் அறிமுகத்தில் தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார். சில காலம் மலேயாவில், பிருத்தானியா ரயில்வேத்துறையில் பணியாற்றினார். இலங்கை திரும்பி தமிழ்மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
இவர் நவாலியூர் மருதப்பு என்பவரின் மகளான இரத்தினம்மாவைத் திருமணம் செய்தார். பிள்ளைகள் திருநாவுக்கரசு மற்றும் மங்கையற்கரசி.
இலக்கிய வாழ்க்கை
தமிழ் அகராதிகள்
தமிழியம் பற்றிய ஆய்வை மேற்கொண்ட அறிஞர்களுள் ஒருவர். பொது அறிவுத் துறையிலும், அகராதித் துறையிலும் பங்களிப்பு செய்தார். செந்தமிழ் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி, தமிழ்ப் புலவர் அகராதி, காலக்குறிப்பு அகராதி, திருக்குறள் அகராதி போன்ற அகராதிகளை எழுதினார். ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
தமிழ் ஆராய்ச்சி
தமிழ்மொழி, தமிழ்நாகரிகம், சிவவழிபாடு ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தமிழ்நாடு சென்று தமிழ்நூல்களை, தொல்பொருள் ஆதாரங்களைப் பெற்று ஆராய்ந்தார். இவற்றை ஆதாரமாகக் கொண்டு பல ஆராய்ச்சி நூல்களை எழுதினார். தமிழ் நாட்டில் வீரபாகுப் பிள்ளையால் நடத்தப்பட்ட ஒற்றுமை நிலையம் மூலமாகத் தனது நூல்களை வெளியிட்டார். முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகிய பதிப்பகங்களும் ந.சி. கந்தையாவின் நூல்களை வெளியிட்டன.
நூல் பட்டியல்
- தமிழ்மொழி
- தமிழர் வரலாறு
- தமிழர் நாகரிகம்
- தமிழகம்
- தமிழ் இந்தியா
- திராவிட நாகரிகம்
- சிவவழிபாடு
- முச்சங்கங்கள்
- சிந்துவெளி நாகரிகம்
- ஆரியர் தமிழர் கலப்பு
- பத்துப்பாட்டு
- பதிற்றுப்பத்து
- கலித்தொகை
- பரிபாடல்
- அகநானூறு
- புறப்பொருள் விளக்கம்
- கலிங்கத்துப் பரணி
- விறலிவிடுதூது
- பெண்கள் உலகம்
- பெண்கள் சமூகம் அன்றும் இன்றும்
- பெண்கள் புரட்சி
- பொது அறிவு
- பொது அறிவு வினா விடை
- உலக அறிவியல் நூல்
- உங்களுக்குத் தெரியுமா
- அறிவுக் கட்டுரைகள்
- நூலகங்கள்
- அறிவு மாலை
- அறிவுரைக் கோவை
- தமிழர் சமயம் எது?
- சைவ சமய வரலாறு
- சிவன்
- இந்து சமய வரலாறு
- தமிழர் பண்பாடு
- நமது தாய்மொழி
- நமது மொழி
- நமது நாடு
- திராவிட மொழிகளும் இந்தியும்
- தமிழ் பழமையும் புதுமையும்
- முச்சங்கம்
- தமிழ்க் கடவுளுக்கு ஆரியப் பாடலா?
- ஆரியத்தால் விளைந்த கேடு
- புரோகிதர் ஆட்சி
- இராமாயணம் நடந்த கதையா?
- ஆரியர் வேதங்கள்
- திராவிடம் என்றால் என்ன?
- திராவிட இந்தியா
- மறைந்த நாகரிகம்
- ஆதி மனிதன்
- ஆதி உயிர்கள்
- மனிதன் எப்படித் தோன்றினான்?
- மரணத்தின் பின்
- பாம்பு வணக்கம்
- தமிழர் யார்?
- உலக நாகரிகத்தில் தமிழர் பங்கு
- சிந்துவெளித் தமிழர்
- தென்னிந்நியக் குலங்களும் குடிகளும்
- தமிழர் சரித்திரம்
- வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட தமிழர்
- திருவள்ளுவர்
- திருக்குறள்
- தமிழகம்
- தமிழ் இந்தியா
- திருக்குறள் அகராதி
- தமிழ்ப் புலவர் அகராதி
- தமிழ் இலக்கிய அகராதி
- காலக்குறிப்பு அகராதி
- செந்தமிழ் அகராதி
- கலிவர் யாத்திரை
- இராபின்சன் குரூசோ
- அகத்தியர்
- தமிழ் ஆராய்ச்சி
- தமிழ் விளக்கம்
- நீதிநெறி விளக்கம்