தேவதச்சன்: Difference between revisions
Line 35: | Line 35: | ||
* [https://www.youtube.com/watch?v=dZIKBvpeesQ&ab_channel=ShrutiTV உலகக் கவிதைகளும் தேவதச்சனும் | எஸ்.ராமகிருஷ்ணன் | S. Ramakrishnan] | * [https://www.youtube.com/watch?v=dZIKBvpeesQ&ab_channel=ShrutiTV உலகக் கவிதைகளும் தேவதச்சனும் | எஸ்.ராமகிருஷ்ணன் | S. Ramakrishnan] | ||
* [https://write2maanee.blogspot.com/2018/08/blog-post_50.html தேவதச்சன்: writermaanee] | * [https://write2maanee.blogspot.com/2018/08/blog-post_50.html தேவதச்சன்: writermaanee] | ||
* தேவதச்சனின் கவிதையுலகம்: இரசவாதம் | * [https://nowshadonline.wordpress.com/2017/12/05/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/ தேவதச்சனின் கவிதையுலகம்: இரசவாதம்] | ||
{{Being created}} | {{Being created}} | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:கவிஞர்கள்]] | [[Category:கவிஞர்கள்]] |
Revision as of 07:32, 3 January 2024
தேவதச்சன் (ஏ.எஸ். ஆறுமுகம்) (பிறப்பு: நவம்பர் 6, 1952) நவீனத் தமிழ்க் கவிஞர். தினசரி வாழ்வில் தொட்டு அறியக்கூடிய ஒவ்வொன்றிலும் இப்புடவியின் ரகசியங்களை திறந்து பார்ப்பவையாக உள்ளன.
வாழ்க்கைக்குறிப்பு
தேவதச்சனின் இயற்பெயர் ஏ.எஸ். ஆறுமுகம். தேவதச்சன் நவம்பர் 6, 1952இல் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எம்.எஸ்.ஏ. சேதுராமலிங்கம், சாரதா இணையருக்குப் பிறந்தார். கோவில்பட்டியில் பள்ளிப்படிப்பு பயின்றார். இளங்கலை பட்டப்படிப்பு, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
ஆன்மிக வாழ்க்கை
இளமையில் ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளால் கவரப்பட்டார். பின்னர் ஸர்கத மகராஜ் (Nisargadatta Maharaj), குர்ஜீஃப்(Gurdjieff) ஆகியோரின் சிந்தனைகளாலும் கவர்ப்பட்டார். நிஸர்கத மகராஜை அவருடைய சீடரான செய்லர் பாப் ஆடம்ஸன் (Sailor Bod Adamson) வழியே வாசித்து அறிந்து கொண்டார்.
இலக்கியவாழ்க்கை
தேவதச்சன் 1970களில் 'கசடதபற’ என்ற இலக்கிய பத்திரிகையில் அறிமுகமானார். தொடர்ந்து 'ழ’ என்ற கவிதை இதழிலும் அதிகமாக எழுதி வந்ததார். காலச்சுவடு, கல்குதிரை, உயிர்மை போன்ற இலக்கிய இதழ்கள் இவரது கவிதைகள் வெளிவந்தன. தேவதச்சனின் முதல் கவிதைத்தொகுப்பு ”கைமணல்” 1982இல் வெளியானது. 2000ல் இரண்டாவது தொகுப்பு “அத்துவான வேளை” வெளியானது.
இலக்கிய இடம்
"அறம், பாவம் என்னும் அருங்கயிற்றுக் கட்டிலிருந்து தமிழ்க் கவிதையை முற்றிலுமாக விடுவித்தவர் தேவதச்சன். தேவதச்சனின் கண்கள் துண்டிக்கப்பட்ட காண்நிலைகளை, உணர்நிலைகளை அதன் வேதிவினை தொடங்கும்போதே பார்க்கிறது. இலக்கியப்பூர்வமான உரைநடையோடு பேச்சுமொழியைச் சரியாக வைப்பதும் தேவதச்சன் தரும் அபூர்வ புலன் அனுபவங்களில் ஒன்றே. தேவதச்சனின் கவிதைகள், தொடக்க அனுபவமாக வசீகர ஒழுங்கையும் மகிழ்ச்சியையும் ருசியையும் மென்மையையும் தருவதாகவும், ஆழத்தில் பிரபஞ்சத்தில் தொடர்ந்து நிகழும் பெரும் குழப்படி, துயரம், காம மூர்க்கத்தைக் கொண்டதாகவும் உள்ளன. தேவதச்சனின் சமீபத்திய கவிதைகள் தரையிறங்கி, பூமியின் அழுக்கையும் மனிதர்களின் கண்ணீரையும் ஏற்றவையாக இருக்கின்றன." என ஷங்கர்ராமசுப்ரமணியன் மதிப்பிடுகிறார்.
ஆவணப்படம்
2015ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது விழாவையொட்டி கவிஞர் தேவதச்சன் பற்றிய ஆவணப்படத்தை சரவணவேல் இயக்கினார். துணை இயக்குனர்கள் யானிதரன், பாலுமகேந்திரா. சண்முகநாதன் ஒளிப்பதிவு செய்தார். படத்தொகுப்பு மேகநாதன். நேர்காண்டவர் செந்தில் குமார் தேவன், பின்னணி பேசியவர் ராஜகோபாலன். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தயாரித்த இந்த ஆவணப்படம் இயக்குனர் வெற்றிமாறனால் வெளியிடப்பட்டு திரையிடப்பட்டது.
ஆவணப்படம்: நிசப்தத்தின் சப்தம் - கவிஞர் தேவதச்சன்
விருதுகள்
- அமெரிக்கத் தமிழர்களின் கலாச்சார அமைப்பு வழங்கிய விளக்கு விருது (2010)
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய இயல் விருது (2011)
- கோவை விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு வழங்கிய விஷ்ணுபுரம் விருது (2015)
- கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளை வழங்கிய கவிக்கோ விருது (2017)
- கவிஞர் சிற்பி அறக்கட்டளை வழங்கிய சிற்பி இலக்கிய விருது (2018)
கவிதை தொகுதிகள்
- அவரவர் கை மணல் (1982)
- அத்துவான வேளை (2000)
- கடைசி டினோசார் (2004)
- யாருமற்ற நிழல் (2006)
- ஹோம்ஸ் என்ற காற்று (2010)
- இரண்டு சூரியன் (2012)
- எப்போதும் விடிந்து கொண்டிருக்கிறது (2013)
- மர்மநபர் (முழு தொகுப்பு) (2017)
இணைப்புகள்
- 'அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி - எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)
- கவிதையில் மட்டுமே அனாதைத்தன்மை சாத்தியம்: தேவதச்சன்: உரையாடல்: விஷால் ராஜா
- தேவதச்சன் கவிதைகள்: தமிழ் மொழியின் அழகிய பறவைகள்: ஷங்கர்ராமசுப்ரமணியன்
- Devathachan - Poetry World | தினசரி வாழ்வின் கவித்துவம் | சபரிநாதன் உரை
- உலகக் கவிதைகளும் தேவதச்சனும் | எஸ்.ராமகிருஷ்ணன் | S. Ramakrishnan
- தேவதச்சன்: writermaanee
- தேவதச்சனின் கவிதையுலகம்: இரசவாதம்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.