மீரா (கவிஞர்): Difference between revisions

From Tamil Wiki
Line 1: Line 1:
[[File:மீரா.jpg|thumb|மீரா]]
மீரா: தமிழ்ப் புதுக்கவிஞர். அன்னம் - அகரம் பதிப்பகத்தை நிறுவி நடத்திய பதிப்பாளர். தமிழாசிரியர். சிவகங்கையில் இருந்து நூல்களை வெளியிட்ட அன்னம்- அகரம் பதிப்பகம் தமிழ்நவீன இலக்கியத்தில் பெரும்தாக்கத்தைச் செலுத்தியது.

== பிறப்பு ,கல்வி ==
== பிறப்பு ,கல்வி ==
கவிஞர் மீராவின் இயற்பெயர் மீ.ராஜேந்திரன். சிவகங்கையில் 10 அக்டோபர்1938-ல் எஸ். மீனாட்சிசுந்தரம்- இலட்சுமி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். இவருடைய உடன் பிறந்த தம்பி மீ.மனோகரன் வரலாற்றாய்வாளர். சிவகங்கையில் பள்ளிப்படிப்பை முடித்தபின் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் எம்.ஏ.படித்தார். அங்கே கவிஞர் [[அபி]] , [[பா.செயப்பிரகாசம்]] , [[நா.காமராசன்]] போன்றவர்களுக்கு அணுக்கமானவராக இருந்தார்.
கவிஞர் மீராவின் இயற்பெயர் மீ.ராஜேந்திரன். சிவகங்கையில் 10 அக்டோபர்1938-ல் எஸ். மீனாட்சிசுந்தரம்- இலட்சுமி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். இவருடைய உடன் பிறந்த தம்பி மீ.மனோகரன் வரலாற்றாய்வாளர். சிவகங்கையில் பள்ளிப்படிப்பை முடித்தபின் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் எம்.ஏ.படித்தார். அங்கே கவிஞர் [[அபி]] , [[பா.செயப்பிரகாசம்]] , [[நா.காமராசன்]] போன்றவர்களுக்கு அணுக்கமானவராக இருந்தார். கல்லூரியில் இவருடன் பணியாற்றியவர் மொழிபெயர்ப்பாளர் நா.தர்மராஜன்

== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
மீரா சிவகங்கை மன்னர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியேற்றார். மதுரைப் பல்கலைக் கழகக் கல்லூரி ஆசிரியர்களின் தொழிற்சங்கமான மூட்டா (MUTA) இயக்கத்தில் தீவிரப் பங்காற்றினார். அவ்வமைப்பின் இதழின் ஆசிரியராக பணியாற்றினார். போராட்டம் நடத்தியதனால் கல்லூரியினரால் இருமுறை பணி நீக்கம் செய்யப் பட்டார். அப்போதுதான் அன்னம் பதிப்பகத்தை தொடங்கினார். தன் நண்பர் அபியின் ‘மெளனத்தின் நாவுகள்' என்ற தொகுப்பை முதலில் வெளியிட்டார்.
மீரா சிவகங்கை மன்னர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். மதுரைப் பல்கலைக் கழகக் கல்லூரி ஆசிரியர்களின் தொழிற்சங்கமான மூட்டா (MUTA) இயக்கத்தில் தீவிரப் பங்காற்றினார். அவ்வமைப்பின் இதழின் ஆசிரியராக பணியாற்றினார். போராட்டம் நடத்தியதனால் கல்லூரியினரால் இருமுறை பணி நீக்கம் செய்யப் பட்டார். அப்போதுதான் அன்னம் பதிப்பகத்தை தொடங்கினார். தன் நண்பர் அபியின் ‘மெளனத்தின் நாவுகள்' என்ற தொகுப்பை முதலில் வெளியிட்டார்.
[[File:Kavignar Meera (1).jpg|thumb|மீரா மனைவியுடன்]]
மீரா இரா.சுசீலாவை 10.செப்டெம்பர்1964 ல்  மணந்தார். கண்மணி, செல்மா, கதிர் என மூன்று வாரிசுகள். கதிர் மீரா நடத்திய அன்னம் -அகரம் பதிப்பகத்தை தொடர்ந்து நடத்துகிறார்.

மீரா இரா.சுசீலாவை 10.செப்டெம்பர்1964 ல்  மணந்தார். கண்மணி, செல்மா, கதிர் என மூன்று வாரிசுகள். கதிர் மீரா நடத்திய அன்னம் -அகரம் பதிப்பகத்தை தொடர்ந்து நடத்துகிறார்
== அரசியல் ==
மீரா கல்லூரிப் படிப்பின்போது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார். திராவிட இயக்க ஆதரவாளராக இருந்தார். திராவிட இயக்க இதழ்களில் கவிதைகள் எழுதினார். பின்னர் வானம்பாடி இயக்கம் வழியாக இடதுசாரி அரசியல் ஈடுபாடு கொண்டார். இடதுசாரி தொழிற்சங்கமான மூட்டாவில் பணியாற்றினார். இறுதிவரை மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சி ஆதரவாளராக நீடித்தார்
 
== இலக்கியவாழ்க்கை ==
1969 ‘காஞ்சி’ இதழின் பொங்கல் மலரில் அண்ணாத்துரை தம்பிக்கு எழுதிய கடிதம் பகுதியில்
 
''கைபட்டு வாய்பட்ட்துண்டோ  பொங்கல்? கண்மட்டும் ஓயாமல் பொங்கும் பொங்கும்.''
 
''தெய்வங்கள் திருநாட்கள் எங்கட்கு இல்லை ! தெருவோரச் சாக்கடையில் வருமா தெப்பம்?''
 
என முடியும் மீ.ராவின் கவிதையை மேற்கோள்காட்டியிருந்தார். அக்கவிதை வழியாக மீரா பெரும்புகழ்பெற்றார். தொடர்ந்து திராவிட இயக்கத்தின் இதழ்களில் மரபுக் கவிதைகள் எழுதினார். 1969ல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தபோது அதிலிருந்து விலக்கம் பெற்றவர்களில் மீராவும் ஒருவர். 1972 ல் வானம்பாடி இதழ் தொடங்கப்பட்டபோது அதில் ஆர்வம் கொண்டு புதுக்கவிதைகள் எழுதினார். கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள் என்னும் அவருடைய தொகுதி இளைஞர்கள் நடுவே பெரும்புகழ் பெற்றது. பின்னாளில் பதிப்பாளரான பிறகு குறைவாகவே எழுதினார்.

== பதிப்பு ==
== பதிப்பு ==
மீரா அன்னம் பதிப்பகத்தை மீரா 1978 ல் தொடங்கினார். முதல்நூலாக அபி எழுதிய மௌனத்தின் நாவுகள் என்னும் கவிதைநூலை வெளியிட்டார். பின்னர் இணைப்பதிப்பகமாக அகரம் தொடங்கப்பட்டது. சிவகங்கையில் அன்னம் அச்சகமும் அலுவலகமும் அமைந்திருந்தது (தெற்கு சிவன்கோயில் தெரு) மதுரை மேலமாசி வீதியில் அன்னம் விற்பனையகம் இருந்தது. சிலகாலம் சென்னையிலும் விற்பனையகம் இருந்தது. கி.ராஜநாராயணன், வண்ணதாசன், அப்துல் ரகுமான் போன்றவர்கள் அன்னம் பதிப்பகத்தில் அதிகமாக விற்பனையான படைப்பாளிகள். ஆனால் மீரா எல்லா நல்ல படைப்புகளும் அச்சாகவேண்டும் என்னும் எண்ணம் கொண்டிருந்தார். இளம்படைப்பாளிகளை அறிமுகம் செய்தார். கவிதைநூல்களை தொடர்ந்து வெளியிட்டார். பாரதி நூற்றாண்டை ஒட்டி அன்னம்நவகவிதை வரிசை என்னும் பெயரில் அவர் அறிமுகம் செய்து முதல்தொகுப்பை வெளியிட்ட படைப்பாளிகள் பின்னர் பெரிய தாக்கத்தை உருவாக்கினர். ஜெயமோகன், கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அவரால் அறிமுகம் செய்யப்பட்டவர்கள்.

== இதழியல் ==
== இதழியல் ==
Line 72: Line 86:
* [http://kavignarmeera.blogspot.com/ கவிஞர் மீரா இணையப்பக்கம்]

* [http://kavignarmeera.blogspot.com/2011/04/blog-post_26.html மீரா மனைவி பேட்டி]

*https://www.youtube.com/watch?v=Pmkxo4cJSV0
*http://tamilonline.com/thendral/article.aspx?aid=3212
*[http://maalan.co.in/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE/ மாலன் மீரா நினைவுகள்]

Revision as of 09:57, 10 March 2022

மீரா

மீரா: தமிழ்ப் புதுக்கவிஞர். அன்னம் - அகரம் பதிப்பகத்தை நிறுவி நடத்திய பதிப்பாளர். தமிழாசிரியர். சிவகங்கையில் இருந்து நூல்களை வெளியிட்ட அன்னம்- அகரம் பதிப்பகம் தமிழ்நவீன இலக்கியத்தில் பெரும்தாக்கத்தைச் செலுத்தியது.

பிறப்பு ,கல்வி

கவிஞர் மீராவின் இயற்பெயர் மீ.ராஜேந்திரன். சிவகங்கையில் 10 அக்டோபர்1938-ல் எஸ். மீனாட்சிசுந்தரம்- இலட்சுமி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். இவருடைய உடன் பிறந்த தம்பி மீ.மனோகரன் வரலாற்றாய்வாளர். சிவகங்கையில் பள்ளிப்படிப்பை முடித்தபின் மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ் எம்.ஏ.படித்தார். அங்கே கவிஞர் அபி , பா.செயப்பிரகாசம் , நா.காமராசன் போன்றவர்களுக்கு அணுக்கமானவராக இருந்தார். கல்லூரியில் இவருடன் பணியாற்றியவர் மொழிபெயர்ப்பாளர் நா.தர்மராஜன்

தனிவாழ்க்கை

மீரா சிவகங்கை மன்னர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார். மதுரைப் பல்கலைக் கழகக் கல்லூரி ஆசிரியர்களின் தொழிற்சங்கமான மூட்டா (MUTA) இயக்கத்தில் தீவிரப் பங்காற்றினார். அவ்வமைப்பின் இதழின் ஆசிரியராக பணியாற்றினார். போராட்டம் நடத்தியதனால் கல்லூரியினரால் இருமுறை பணி நீக்கம் செய்யப் பட்டார். அப்போதுதான் அன்னம் பதிப்பகத்தை தொடங்கினார். தன் நண்பர் அபியின் ‘மெளனத்தின் நாவுகள்' என்ற தொகுப்பை முதலில் வெளியிட்டார்.

மீரா மனைவியுடன்

மீரா இரா.சுசீலாவை 10.செப்டெம்பர்1964 ல் மணந்தார். கண்மணி, செல்மா, கதிர் என மூன்று வாரிசுகள். கதிர் மீரா நடத்திய அன்னம் -அகரம் பதிப்பகத்தை தொடர்ந்து நடத்துகிறார்.

அரசியல்

மீரா கல்லூரிப் படிப்பின்போது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டார். திராவிட இயக்க ஆதரவாளராக இருந்தார். திராவிட இயக்க இதழ்களில் கவிதைகள் எழுதினார். பின்னர் வானம்பாடி இயக்கம் வழியாக இடதுசாரி அரசியல் ஈடுபாடு கொண்டார். இடதுசாரி தொழிற்சங்கமான மூட்டாவில் பணியாற்றினார். இறுதிவரை மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சி ஆதரவாளராக நீடித்தார்

இலக்கியவாழ்க்கை

1969 ‘காஞ்சி’ இதழின் பொங்கல் மலரில் அண்ணாத்துரை தம்பிக்கு எழுதிய கடிதம் பகுதியில்

கைபட்டு வாய்பட்ட்துண்டோ  பொங்கல்? கண்மட்டும் ஓயாமல் பொங்கும் பொங்கும்.

தெய்வங்கள் திருநாட்கள் எங்கட்கு இல்லை ! தெருவோரச் சாக்கடையில் வருமா தெப்பம்?

என முடியும் மீ.ராவின் கவிதையை மேற்கோள்காட்டியிருந்தார். அக்கவிதை வழியாக மீரா பெரும்புகழ்பெற்றார். தொடர்ந்து திராவிட இயக்கத்தின் இதழ்களில் மரபுக் கவிதைகள் எழுதினார். 1969ல் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தபோது அதிலிருந்து விலக்கம் பெற்றவர்களில் மீராவும் ஒருவர். 1972 ல் வானம்பாடி இதழ் தொடங்கப்பட்டபோது அதில் ஆர்வம் கொண்டு புதுக்கவிதைகள் எழுதினார். கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள் என்னும் அவருடைய தொகுதி இளைஞர்கள் நடுவே பெரும்புகழ் பெற்றது. பின்னாளில் பதிப்பாளரான பிறகு குறைவாகவே எழுதினார்.

பதிப்பு

மீரா அன்னம் பதிப்பகத்தை மீரா 1978 ல் தொடங்கினார். முதல்நூலாக அபி எழுதிய மௌனத்தின் நாவுகள் என்னும் கவிதைநூலை வெளியிட்டார். பின்னர் இணைப்பதிப்பகமாக அகரம் தொடங்கப்பட்டது. சிவகங்கையில் அன்னம் அச்சகமும் அலுவலகமும் அமைந்திருந்தது (தெற்கு சிவன்கோயில் தெரு) மதுரை மேலமாசி வீதியில் அன்னம் விற்பனையகம் இருந்தது. சிலகாலம் சென்னையிலும் விற்பனையகம் இருந்தது. கி.ராஜநாராயணன், வண்ணதாசன், அப்துல் ரகுமான் போன்றவர்கள் அன்னம் பதிப்பகத்தில் அதிகமாக விற்பனையான படைப்பாளிகள். ஆனால் மீரா எல்லா நல்ல படைப்புகளும் அச்சாகவேண்டும் என்னும் எண்ணம் கொண்டிருந்தார். இளம்படைப்பாளிகளை அறிமுகம் செய்தார். கவிதைநூல்களை தொடர்ந்து வெளியிட்டார். பாரதி நூற்றாண்டை ஒட்டி அன்னம்நவகவிதை வரிசை என்னும் பெயரில் அவர் அறிமுகம் செய்து முதல்தொகுப்பை வெளியிட்ட படைப்பாளிகள் பின்னர் பெரிய தாக்கத்தை உருவாக்கினர். ஜெயமோகன், கோணங்கி, எஸ்.ராமகிருஷ்ணன் போன்றவர்கள் அவரால் அறிமுகம் செய்யப்பட்டவர்கள்.

இதழியல்

மீரா இரண்டு இலக்கிய இதழ்களை நடத்தினார்

  • கவி
  • அன்னம் விடு தூது

விருதுகள்

  • தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு
  • பாவேந்தர் விருது
  • சிற்பி இலக்கிய விருது
  • தமிழ்ச் சான்றோர் பேரவை விருது

மறைவு

1.செப்டெம்பர் 2002 ல் மறைந்தார்.

இணைப்புகள்

மீராவின் நாட்டுடைமை ஆக்கப்பட்ட நூல்கள் இணைய நூலகம்

நூல்கள்

திறனாய்வு
  • மண்ணியல் சிறுதேர்-ஒருமதிப்பீடு
கவிதை
  • மீ.இராசேந்திரன் கவிதைகள்
  • மூன்றும் ஆறும்
  • மன்னர் நினைவில்
  • கனவுகள்+கற்பனைகள்= காகிதங்கள்
  • ஊசிகள்
  • கோடையும் வசந்தமும்
  • குக்கூ
கட்டுரைகள்
  • வா இந்தப் பக்கம்
  • எதிர்காலத் தமிழ்க்கவிதை
  • மீரா கட்டுரைகள்
முன்னுரைகள்
  • முகவரிகள்

கலந்துரையாடல்

  • கவிதை ஒரு கலந்துரையாடல் - மீராவும் பாலாவும்

தொகுத்தவை

  • தேன்சுவை (மீரா, அப்துல்ரகுமான் உள்ளிட்டவர்களின் மரபுக் கவிதைகள்)
  • பாரதியம் (கவிதைகள்)
  • பாரதியம் (கட்டுரைகள்)
  • சுயம்வரம் (கதை, கட்டுரை, கவிதை ஆகியவற்றின் கதம்பம்)

உசாத்துணை