கலீல் அவ்ன் மௌலானா: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
கலீல் அவ்ன் மௌலானா  
கலீல் அவ்ன் மௌலானா ஈழத்து தமிழ் அறிஞர். "வாப்பா நாயகம்" என்று அழைக்கப்படுபவர். ஹக்கியதுல் காதிரியாவின் ஆன்மீக தலைவர். ஆசிரியர், எழுத்தாளர், கவிஞர்

== பிறப்பு, கல்வி ==
== பிறப்பு, கல்வி ==
தென் மாகாணம் மாத்தறை வெலிகமை கல்பொக்கையைச் சேர்ந்தவர். இவர்கள் 1937 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் திகதி (ஹிஜ்ரி 1356ஆம் வ‌ருட‌ம் ஷ‌வ்வால் மாத‌ம் பிறை 16) திங்க‌ட்கிழ‌மை காலை 8.30 மணிக்கு இலங்கையில் வெலிகமை எனும் ஊரில் பிறந்தார்கள். இவர்கள் கண்மணி நாயகம் அன்னவர்களின் 34 ஆம் பரம்பரையிலும் கௌதுல் அஃலம் முஹிய்யதீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 21 ஆம் பரம்பரையிலும் பிறந்தவர்கள்.  இவர்களின் தந்தையார் அறிஞர் ஷெய்க் ஜமாலியா ஸைய்யித் யாசீன் மௌலானா அவர்களாவார்கள்.
கலீல் அவ்ன் மௌலானா டிசம்பர் 20, 1937இல் இலங்கை, தென் மாகாணம் மாத்தறை வெலிகமை எனும் ஊரில் ஷெய்க் ஜமாலியா ஸைய்யித் யாசீன் மௌலானாவிற்கு மகனாகப் பிறந்தார். இவர் கண்மணி நாயகம் அன்னவர்களின் 34ஆம் பரம்பரையிலும், கௌதுல் அஃலம் முஹிய்யதீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 21ஆம் பரம்பரையிலும் பிறந்தவர்.  

இளம் வயதிலேயே அவர்கள் திருக்குர்ஆனை முழுவதுமாக‌ ஓதி முடித்து விட்டார்கள். மற்ற எல்லா அரபுக் கலைகளையும் அவர்களின் தந்தையிடம் முறைப்படி கற்றார்கள்.
இளம் வயதிலேயே அவர்கள் திருக்குர்ஆனை முழுவதுமாக‌ ஓதி முடித்தார். மற்ற எல்லா அரபுக் கலைகளையும் அவர்களின் தந்தையிடம் முறைப்படி கற்றார். தப்ஸீர், ஹதீஸ், உஸூல் ஹதீஸ், பிக்ஹு, உஸூல் பிக்ஹு, அகாஇத், தஸவ்வுப், அதப் இன்ஷா, பலாகத், தாரீக், ஸர்பு, நஹ்வு, மன்திக், இல்முல் மஆனி, பதீஉ, பல்ஸபா, ஹிஸாப், அரூள் ஆகிய  பாடங்களை தம் தந்தையிடமிருந்து கற்றார். ​​இவர்கள் பன்மொழிப் பாண்டித்தியம் பெற்றவர். இலங்கையில் வெலிகமை என்னும் ஊரில் அறபா சிரேஷ்ட வித்தியாலயத்தில் S.S.C. வரை ஆங்கில மொழியில் கற்றார். S.S.C. தேர்வை தமிழிலும் எழுதினார். பண்டிதப் பரீட்சை எழுதி தேர்ச்சி பெற்றார். தமிழ் இலக்கண இலக்கியங்கள், சங்ககால நூல்களையும் கற்றார்

கலீல் அவ்ன் மௌலானா அவர்கள் தம் தந்தையிடம் கற்ற பாடங்கள்: தப்ஸீர், ஹதீஸ், உஸூல் ஹதீஸ், பிக்ஹு, உஸூல் பிக்ஹு, அகாஇத், தஸவ்வுப், அதப் இன்ஷா, பலாகத், தாரீக், ஸர்பு, நஹ்வு, மன்திக், இல்முல் மஆனி, பதீஉ, பல்ஸபா, ஹிஸாப், அரூள் முதலானவை ஆகும்.
== தனி வாழ்க்கை ==
==== ஆசிரியப்பணி ====
ஹக்கியதுல் காதிரியாவின் ஆன்மீக தலைவராவார்கள். S.S.C. தேர்வுக்குப் பின் இரண்டு ஆண்டுகள் அவர்கள் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்தார். காலி என்னும் ஊரில் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் படித்து வெற்றி பெற்று 1962  இல்  ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் பெற்றார். ஆசிரியர் பயிற்சி முடிய, 1963இல் அவர்கள் ஊரிலேயே உள்ள அரசு அரபா மத்திய கல்லூரியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். இங்கு 10 ஆண்டுகள் பணிபுரிந்தார். கிண்டர்கார்டன் முதல் 12ஆம் வகுப்புகள் வரை பாடம் கற்பித்தார்.

​​இவர்கள் பன்மொழிப் பாண்டித்தியம் பெற்றவர்கள். இலங்கையில் வெலிகமை என்னும் ஊரில் அறபா சிரேஷ்ட வித்தியாலயத்தில் S.S.C. வரை ஆங்கில மொழியில் கற்று தேர்ந்தார்கள்.
==== பிற பணி ====
1972இல் அவர்களுக்கு அதிபராகப் பதவி உயர்வு கிடைக்கப்பெற்று 'குருணாகல்' என்னும் ஊரிலுள்ள பண்டாகொஸ்வத்தைக்கு மாற்றப்பட்டார். ஒரு வருடத்திற்குப் பின்னர் வட்டாரக் கல்வி அதிகாரியாக(CEO) பதவி உயர்வு பெற்றார். 1973இலிருந்து ஐந்தாண்டு காலம் சிலாபம், புத்தளம் வட்டாரங்களில் வட்டாரக் கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்தார். பின்னர் 1978ஆம் ஆண்டு அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு பணியில் இருந்த சமயம் அவர்களுக்கு E.O. கல்வித்துறை அதிகாரியாக பதவி உயர்வு கிடைத்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று ஆன்மீகப் பணியில் ஈடுபடுகிறார்.

பின்னர் தமிழின் மேல் அவர்களுக்கு இருந்த தனிப்பட்ட ஆர்வத்தால் மீண்டும் S.S.C. தேர்வை தமிழிலும் எழுதி தேறினார்கள். அவர்களின் சொந்த முயற்சியால் பண்டிதப் பரீட்சை எழுதி தேர்ச்சி பெற்றார்கள்.
1998ஆம் ஆண்டு முதல் துபாய் சென்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அங்குள்ள முரீத்களுக்கு ஆன்மீக அறிவு போதித்து வருகிறார். 2002ஆம் ஆண்டு முதல் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று பலநூறு முரீத்களுக்கு ஆன்மீக அறிவும் வழங்கி வருகிறார்.
 
பாடசாலையில் பயிற்று மொழி ஆங்கிலமாக இருந்தும் தமிழின் மீது அவர்களுக்கு இருந்த ஆர்வமிகுதியால் தமிழ் இலக்கண இலக்கியங்கள் மட்டுமல்லாது சங்ககால ஏனைய நூல்களையும் தாங்களாகவே கற்றுக் கொள்வதில் பேராசை கொண்டு அதில் மகத்தான வெற்றியும் பெற்றார்கள்.
 
== தனிவாழ்க்கை ==
"வாப்பா நாயகம்" என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் ஷெய்க் கலீல் அவ்ன் மௌலானா அவர்கள் ஹக்கியதுல் காதிரியாவின் ஆன்மீக தலைவராவார்கள்.
 
S.S.C. தேர்வுக்குப் பின் இரண்டு ஆண்டுகள் அவர்கள் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்கள். பின்னர் காலி என்னும் ஊரில் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் படித்து வெற்றி பெற்று ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் பெற்றார்கள்.
 
ஆசிரியர் பயிற்சி 1962  இல் முடிய, 1963 ஆம் ஆண்டில் அவர்கள் ஊரிலேயே உள்ள அரசு அரபா மத்திய கல்லூரியில் ஆசிரியர் பணியில் அமர்ந்தார்கள். இங்கு 10 ஆண்டுகள் பணிபுரிந்தார்கள். கிண்டர்கார்டன் முதல் 12ஆம் வகுப்புகள் வரை பாடம் கற்பித்துள்ளார்கள்.
 
அதன்பின் 1972 ஆம் ஆண்டு அவர்களுக்கு அதிபராகப் பதவி உயர்வு கிடைக்கப்பெற்று 'குருணாகல்' என்னும் ஊரிலுள்ள பண்டாகொஸ்வத்தைக்கு மாற்றப்பட்டார்கள். அங்கு ஒரு வருடம் சேவை செய்தார்கள். பின்னர் அங்கிருந்து வட்டாரக் கல்வி அதிகாரியாக (CEO) பதவி உயர்வு பெற்றார்கள்.
 
1973 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 5 ஆண்டு காலம் சிலாபம், புத்தளம் வட்டாரங்களில் C.E.O. ஆக பணிபுரிந்தார்கள். பின்னர் 1978ஆம் ஆண்டு அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டார்கள். அங்கு பணியில் இருந்த சமயம் அவர்களுக்கு E.O. Education Officerஆக பதவி உயர்வு கிடைத்தது.
 
தொடர்ந்து 12 ஆண்டுகள் அங்கு கல்வி அதிகாரியாக பணிபுரிந்தும் அவர்களுக்கு மாற்றம் கிடைக்காத காரணத்தால் பணியிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார்கள். அன்று முதல் அல்லாஹ் அவர்களை ஆன்மீகப் பணிக்கு முற்றிலுமாகத் திருப்பி விட்டான் போல.
 
ஷெய்கு நாயகம் அவர்கள் இந்தியாவிற்கு 1966 ஆம் ஆண்டு அவர்களின் தந்தை நாயகம் மறைந்த 40ஆவது நாள் அன்று முதல் விஜயம் செய்தார்கள். அதன்பின்னர் 1968ஆம் ஆண்டு முதல் வருடா வருடம் இந்திய விஜயத்தை மேற்கொண்டு சுமார் 3 மாதங்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்து பலநூறு முரீத்களுக்கு ஆன்மீக அறிவு புகட்டி வருகிறார்கள்.
 
இதேபோல் 1998ஆம் ஆண்டு முதல் துபாய் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அங்குள்ள பலநூறு முரீத்களுக்கு ஆன்மீக அறிவு போதித்து வருகிறார்கள்.
 
இன்னும் 2002ஆம் ஆண்டு முதல் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு திருவிஜயம் செய்து அங்குள்ள பலநூறு முரீத்களுக்கு ஆன்மீக அறிவும் வழங்கி வருகிறார்கள்.

== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
பன்மொழிப் பாண்டித்தியம் பெற்றவர். பாரம்பரிய இலக்கிய மரபான மரபுக் கவிதையிலேயே தனது செய்யுள்களை யாப்பமைதி பிறழாமல் எழுதிவருபவர். 1964 இல் இவரது முதற் படைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை இலக்கியப் பரப்பினர் 1967 இல் நடத்திய கவியரங்கில் இவரது கவிதை சிலாகித்துப் பேசப்பட்டிருந்தது. அதன் பின்னர் அவரது கவிதை நூலுருவில் வெளியிடப்பட்டுள்ளது. பல உரைநடை நூல்களை இலங்கை, இந்தியா நாடுகளில் வெளியிட்டுள்ளார். அவரது தந்தை யாசின் மெளலானாவின் காமூஸ் எனும் அரபு - தமிழ் அகராதியை இவர் தொகுத்து வெளியிட்டுள்ளார்.
பன்மொழிப் புலவர். மரபுக் கவிதைகள் எழுதி வருகிறார். 1964இல் இவரது முதற் படைப்பு வெளிவந்தது. இலங்கை இலக்கியப் பரப்பினர் 1967இல் நடத்திய கவியரங்கில் இவரது கவிதை சிலாகித்துப் பேசப்பட்டிருந்தது. அதன் பின்னர் அவரது கவிதை நூலுருவில் வெளியிடப்பட்டுள்ளது. பல உரைநடை நூல்களை இலங்கை, இந்தியா நாடுகளில் வெளியிட்டார். அவரது தந்தை யாசின் மெளலானாவின் காமூஸ் எனும் அரபு-தமிழ் அகராதியை தொகுத்து வெளியிட்டார்.
 
முழுக்க முழுக்க ஞானத்தையே கருப்பொருளாகக் கொண்டு வெளிவரும் மாத இதழ் ஒன்றை மறைஞானப் பேழை என்ற பெயரில் வெளியிடச் செய்துள்ளார்கள். இவர்கள் ஏற்படுத்திய ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையானது இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, துபாய்,  குவைத், கத்தார் போன்ற நாடுகளில் இயங்கி வருகிறது.
 
​​இந்த சபையின் வழிநடத்தலில் இந்தியாவில் திருச்சியில் மதரசதுல் ஹுஸனைன் பீ ஜாமியா யாசீன் என்னும் அரபு கலாசாலை இயங்கி வருகிறது. இந்த கலாசாலை உலக மற்றும் இஸ்லாமிய கல்வியை இலவசமாக சிறுவர்களுக்கு வழங்கி வருகிறது. அதேபோல் "அவ்னியா உலக சமாதான அறக்கட்டளை" என்னும் அறக்கட்டளை மூலம் பல சமுதாய மேம்பாட்டு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

ஜிஹாத் என்பது நப்ஸ் உடன் போராடி வெல்லுவதே என்று போதிக்கும் மௌலானா அவர்கள் உலகெங்கும் வாழும் தமது ஆயிரக்கணக்கான முரீதுகளுக்கு அல் குர்ஆன், அல் ஹதீஸின் அடிப்படையில் இஸ்லாமிய ஆன்மீக கல்வியை ஊட்டி அவர்களை பரிபக்குவப்படுதுகிறார்கள். இவர்களின் முரீதுகள் இலங்கை, இந்தியா குறிப்பாக தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா மற்றும் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர்.  
== ஆன்மீகம் ==
மறைஞானப் பேழை என்ற ஆன்மீக மாத இதழை வெளியிட்டார். ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையை இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, துபாய்,  குவைத், கத்தார் போன்ற நாடுகளில் ஏற்படுத்தியுள்ளார். ​​இந்த சபையின் வழிநடத்தலில் இந்தியாவில் திருச்சியில் மதரசதுல் ஹுஸனைன் பீ ஜாமியா யாசீன் என்னும் அரபு கலாசாலை இயங்கி வருகிறது. இந்த கலாசாலை உலக மற்றும் இஸ்லாமிய கல்வியை இலவசமாக சிறுவர்களுக்கு வழங்கி வருகிறது. அதேபோல் "அவ்னியா உலக சமாதான அறக்கட்டளை" என்னும் அறக்கட்டளை மூலம் பல சமுதாய மேம்பாட்டு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. உலகெங்கும் வாழும் தமது ஆயிரக்கணக்கான முரீதுகளுக்கு அல் குர்ஆன், அல் ஹதீஸின் அடிப்படையில் இஸ்லாமிய ஆன்மீக கல்வியை அளித்து வருகிறார். இவர்களின் முரீதுகள் இலங்கை, இந்தியா குறிப்பாக தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா மற்றும் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர்.  

== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
Line 76: Line 47:

== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* https://ta.xn----7sbiewaowdbfdjyt.pp.ua/121257/1/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%80-%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%8D-%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE.html
* http://www.mailofislam.com/tam_bio_-_shaykh_kaleel_awn_moulana

Revision as of 16:43, 8 March 2022

கலீல் அவ்ன் மௌலானா ஈழத்து தமிழ் அறிஞர். "வாப்பா நாயகம்" என்று அழைக்கப்படுபவர். ஹக்கியதுல் காதிரியாவின் ஆன்மீக தலைவர். ஆசிரியர், எழுத்தாளர், கவிஞர்

பிறப்பு, கல்வி

கலீல் அவ்ன் மௌலானா டிசம்பர் 20, 1937இல் இலங்கை, தென் மாகாணம் மாத்தறை வெலிகமை எனும் ஊரில் ஷெய்க் ஜமாலியா ஸைய்யித் யாசீன் மௌலானாவிற்கு மகனாகப் பிறந்தார். இவர் கண்மணி நாயகம் அன்னவர்களின் 34ஆம் பரம்பரையிலும், கௌதுல் அஃலம் முஹிய்யதீன் அப்துல் காதிர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் 21ஆம் பரம்பரையிலும் பிறந்தவர்.

இளம் வயதிலேயே அவர்கள் திருக்குர்ஆனை முழுவதுமாக‌ ஓதி முடித்தார். மற்ற எல்லா அரபுக் கலைகளையும் அவர்களின் தந்தையிடம் முறைப்படி கற்றார். தப்ஸீர், ஹதீஸ், உஸூல் ஹதீஸ், பிக்ஹு, உஸூல் பிக்ஹு, அகாஇத், தஸவ்வுப், அதப் இன்ஷா, பலாகத், தாரீக், ஸர்பு, நஹ்வு, மன்திக், இல்முல் மஆனி, பதீஉ, பல்ஸபா, ஹிஸாப், அரூள் ஆகிய பாடங்களை தம் தந்தையிடமிருந்து கற்றார். ​​இவர்கள் பன்மொழிப் பாண்டித்தியம் பெற்றவர். இலங்கையில் வெலிகமை என்னும் ஊரில் அறபா சிரேஷ்ட வித்தியாலயத்தில் S.S.C. வரை ஆங்கில மொழியில் கற்றார். S.S.C. தேர்வை தமிழிலும் எழுதினார். பண்டிதப் பரீட்சை எழுதி தேர்ச்சி பெற்றார். தமிழ் இலக்கண இலக்கியங்கள், சங்ககால நூல்களையும் கற்றார்

தனி வாழ்க்கை

ஆசிரியப்பணி

ஹக்கியதுல் காதிரியாவின் ஆன்மீக தலைவராவார்கள். S.S.C. தேர்வுக்குப் பின் இரண்டு ஆண்டுகள் அவர்கள் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்தார். காலி என்னும் ஊரில் அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் படித்து வெற்றி பெற்று 1962 இல் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் பெற்றார். ஆசிரியர் பயிற்சி முடிய, 1963இல் அவர்கள் ஊரிலேயே உள்ள அரசு அரபா மத்திய கல்லூரியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். இங்கு 10 ஆண்டுகள் பணிபுரிந்தார். கிண்டர்கார்டன் முதல் 12ஆம் வகுப்புகள் வரை பாடம் கற்பித்தார்.

பிற பணி

1972இல் அவர்களுக்கு அதிபராகப் பதவி உயர்வு கிடைக்கப்பெற்று 'குருணாகல்' என்னும் ஊரிலுள்ள பண்டாகொஸ்வத்தைக்கு மாற்றப்பட்டார். ஒரு வருடத்திற்குப் பின்னர் வட்டாரக் கல்வி அதிகாரியாக(CEO) பதவி உயர்வு பெற்றார். 1973இலிருந்து ஐந்தாண்டு காலம் சிலாபம், புத்தளம் வட்டாரங்களில் வட்டாரக் கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்தார். பின்னர் 1978ஆம் ஆண்டு அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு பணியில் இருந்த சமயம் அவர்களுக்கு E.O. கல்வித்துறை அதிகாரியாக பதவி உயர்வு கிடைத்தது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்று ஆன்மீகப் பணியில் ஈடுபடுகிறார்.

1998ஆம் ஆண்டு முதல் துபாய் சென்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அங்குள்ள முரீத்களுக்கு ஆன்மீக அறிவு போதித்து வருகிறார். 2002ஆம் ஆண்டு முதல் மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று பலநூறு முரீத்களுக்கு ஆன்மீக அறிவும் வழங்கி வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

பன்மொழிப் புலவர். மரபுக் கவிதைகள் எழுதி வருகிறார். 1964இல் இவரது முதற் படைப்பு வெளிவந்தது. இலங்கை இலக்கியப் பரப்பினர் 1967இல் நடத்திய கவியரங்கில் இவரது கவிதை சிலாகித்துப் பேசப்பட்டிருந்தது. அதன் பின்னர் அவரது கவிதை நூலுருவில் வெளியிடப்பட்டுள்ளது. பல உரைநடை நூல்களை இலங்கை, இந்தியா நாடுகளில் வெளியிட்டார். அவரது தந்தை யாசின் மெளலானாவின் காமூஸ் எனும் அரபு-தமிழ் அகராதியை தொகுத்து வெளியிட்டார்.

ஆன்மீகம்

மறைஞானப் பேழை என்ற ஆன்மீக மாத இதழை வெளியிட்டார். ஏகத்துவ மெய்ஞ்ஞான சபையை இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, துபாய், குவைத், கத்தார் போன்ற நாடுகளில் ஏற்படுத்தியுள்ளார். ​​இந்த சபையின் வழிநடத்தலில் இந்தியாவில் திருச்சியில் மதரசதுல் ஹுஸனைன் பீ ஜாமியா யாசீன் என்னும் அரபு கலாசாலை இயங்கி வருகிறது. இந்த கலாசாலை உலக மற்றும் இஸ்லாமிய கல்வியை இலவசமாக சிறுவர்களுக்கு வழங்கி வருகிறது. அதேபோல் "அவ்னியா உலக சமாதான அறக்கட்டளை" என்னும் அறக்கட்டளை மூலம் பல சமுதாய மேம்பாட்டு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. உலகெங்கும் வாழும் தமது ஆயிரக்கணக்கான முரீதுகளுக்கு அல் குர்ஆன், அல் ஹதீஸின் அடிப்படையில் இஸ்லாமிய ஆன்மீக கல்வியை அளித்து வருகிறார். இவர்களின் முரீதுகள் இலங்கை, இந்தியா குறிப்பாக தமிழ்நாடு, சிங்கப்பூர், மலேசியா மற்றும் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர்.

நூல் பட்டியல்

  • யாசீன் நாயகம் ரலி வரலாறு
  • பரமார்த்தத் தெளிவு
  • நாயகர் பன்னிரு பாடல் கவிதை
  • உண்மை விளக்கம்
  • பேரின்பப்பாதை ஞான அறிமுக நூல்
  • பர்ஜன்ஸி மவுலிது தமிழாக்கம்
  • அருள்மொழிக் கோவை தமிழ் ஆங்கிலம்
  • கஸீதத்துல் அஹ்மதிய்யா அரபு - தமிழ் வாரிதாத்
  • தாகிபிரபம்
  • பதுருசஹாபாக்கள் மவுலிது தமிழாக்கம்
  • காமூஸ் அரபு-தமிழ் அகராதி
  • மகானந்தாலங்கார மாலை சித்திரக்கவி
  • மனிதா அமுத மொழிகள் தொகுப்பு
  • ஒளியை மறைக்கத் துணியும் தூசி
  • அற்புத அகிலநாதர் கவிதை
  • குத்புகள் திலகம் யாசீன் மௌலானா ரலி-கவிதை
  • இறைவலிய் செய்யிது முஹம்மது மௌலானா கவிதை
  • துஹ்பத்துல் முர்ஸலா அரபுமூலம் தமிழ்மொழிபெயர்ப்பு
  • ஈழ வள நாட்டில் பயிர் பெருக்க வாரீர்!
  • குறிஞ்சிச் சுவை தமிழ் இலக்கிய நூல்
  • மருள்நீக்கிய மாநபி
  • இறையருட்பா கவிதை
  • ரிஸாலத்துல் கௌதிய்யா அரபுமூலம் தமிழ்மொழிபெயர்ப்பு

உசாத்துணை