being created

மகாஸ்வேதா தேவி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 26: Line 26:
மகாசுவேத்தாதேவி ஜூலை 23, 2016 சூலைஇல் மாரடைப்பு ஏற்பட்டு கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூலை 28, 2016இல்(90 வயது) காலமானார்.
மகாசுவேத்தாதேவி ஜூலை 23, 2016 சூலைஇல் மாரடைப்பு ஏற்பட்டு கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூலை 28, 2016இல்(90 வயது) காலமானார்.
== நூல் பட்டியல் ==
== நூல் பட்டியல் ==
* மஹாஸ்வேதா தேவியின் சிறுகதைகள்
* [https://archive.org/details/MahaswetaDeviyinSirukathaigal மஹாஸ்வேதா தேவியின் சிறுகதைகள்]
===== தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை =====
===== தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை =====



Revision as of 11:27, 19 November 2023

மகாஸ்வேதா தேவி (ஜனவரி 14, 1926 - ஜூலை 2016) எழுத்தாளர், சமூக செயல்பாட்டாளர்.

வாழ்க்கைக் குறிப்பு

மகாஸ்வேதா தேவி ஜனவரி 14, 1926இல் டாக்கா -வில் (பங்களாதேஷ் நாட்டின் தலைநகரம்) பிறந்தார். மஹாஸ்வேதா தேவியின் பெற்றொர் இருவருமே எழுத்தாளர்கள். கொல்கத்தா பலகலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

மகாஸ்வேதா தேவி ஆசிரியராகவும், பத்திரிகையாளராகவும் பணி புரிந்தார்.

சமூக செயல்பாடு

வங்காள எழுத்தாளர் மற்றும் பீகார், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் முதலான பகுதிகளின் பழங்குடி மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட சமூக ஆர்வலர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்டவர். இவர் இலக்கியக் குடும்பத்தில் பிறந்தவர்.

இலக்கிய வாழ்க்கை

வங்காள மொழியில் இவர் நூறு நாவல்களும், இருபது சிறுகதைத் தொகுப்புகளும் எழுதினார்.

இலக்கிய இடம்

”நான் பெண்களுக்காக மட்டும் எழுதவில்லை. சாதிப் பிரிவுகள், சுரண்டல் பற்றியே என் எழுத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு எழுத்தாளனுக்கும் சமூகப் பிரக்ஞை வேண்டும். உண்மை வரலாறு என்பது சாதாரண மனிதர்களின் உருவாக்கம்தான். நாட்டுப் பாடல்கள், தொன்மை, பழமை என்பவை சாதாரண மக்களால் தான் பரவுகிறது. மீள் பார்வை அடைகிறது. சுரண்டப்பட்டவர்கள் பயன்படுத்திக் கொள்ளப் பட்டவர்களாக இருந்தாலும் அவர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக் கொள்ளாத மனிதர்கள். அவர்கள் தான் எனது எழுத்துக்களுக்கு பலம். இம்மனிதர்களைப் பற்றிச் சொல்ல ஏராளமான வியக்கத்தகு செய்திகள் உண்டு. எனக்கு நன்றாகத் தெரிந்ததை விட்டு விட்டு வேறு ஒன்றை நான் ஏன் தேட வேண்டும்? சில சமயங்களில் என் எழுத்தே அவர்கள் தான் என்று தோன்றுகிறது” என தன் எழுத்தைப் பற்றி மகாஸ்வேதா தேவி மதிப்பிடுகிறார்.

விருதுகள்

  • 1979இல் அரன்யெர் அதிகார் நாவலுக்காக சாகித்திய அகாதமி விருது (வங்காள மொழி) பெற்றார்.
  • 1986: சமூகப்பணிக்காக பத்மஸ்ரீ விருது
  • 1996: ஞானபீட விருது
  • 1997: ரமன் மக்சேசே விருது
  • 1999: மதிப்புறு முனைவர் பட்டம் – இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
  • 2006: பத்ம விபூஷண்
  • 2009: மேன் புக்கர் பன்னாட்டுப் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார்
  • 2010: யஷ்வந்த்ராவ் சவான் தேசிய விருது
  • 2011: மேற்கு வங்க அரசின் வங்க பிபூஷண் விருது

மறைவு

மகாசுவேத்தாதேவி ஜூலை 23, 2016 சூலைஇல் மாரடைப்பு ஏற்பட்டு கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூலை 28, 2016இல்(90 வயது) காலமானார்.

நூல் பட்டியல்

தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை

உசாத்துணை

  • அஞ்சலி-மகாஸ்வேதா தேவி: ஜெயமோகன் தளம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.