under review

மதுரை வேளாசான்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
Line 19: Line 19:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* [https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0001884_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_39_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf புலவர் கா. கோவிந்தன்: திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்: சங்கத் தமிழ்ப் புலவர் வரிசை: பேயனார் முதலிய 39 புலவர்கள்]

{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|16-Nov-2023, 01:34:12 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Latest revision as of 14:06, 13 June 2024

மதுரை வேளாசான் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

மதுரை வேளாசான் மதுரையில் பிறந்தவர். ஆசான் என்பது ஆசிரியரைக் குறிப்பது. அந்தணர்.

இலக்கிய வாழ்க்கை

மதுரை வேளாசான் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் 305-ஆவது பாடலாக உள்ளது. வாகைத் திணைப்பாடல். துறை: பார்ப்பன வாகை.

பாடல் வழி அறிய வரும் செய்திகள்
  • பார்ப்பான் பசலைக்கொடி போல் வாடிய இடுப்பினை உடையவன். மென்மையாக ஊர்ந்து நடப்பவன். பச்சை மனம் கொண்டவன். அவன் இரவு வேளையில் வந்தான். அரண்மனை வாயிலில் யாராலும் தடுத்து நிறுத்தப்படாமல் உள்ளே சென்றான். ஏதோ சில சொல் சொன்னான். அதனைக் கேட்டதும் முற்றுகை இட்டவர் மதிலில் ஏறச் சாத்திய ஏணியை எடுத்துவிட்டனர். அடைக்கப்பட்டிருந்த கோட்டைக் கதவின் சீப்பு (கீழ்த்தாழ்ப்பாள்) திறந்து விடப்பட்டது. போர் நின்றது.
  • அறிவுடையரின் சொல்லின் வன்மை பற்றிய பாடல்

பாடல் நடை

  • புறநானூறு 305 (திணை: வாகை; துறை : பார்ப்பன வாகை)

வயலைக் கொடியின் வாடிய மருங்கின்,
உயவல் ஊர்திப் , பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்,
சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி,
மாண்வினை யானையும் மணிகளைந் தனவே.

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 16-Nov-2023, 01:34:12 IST