being created

பெ. வரதராஜுலு நாயுடு: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 5: Line 5:
பெ. வரதராஜுலு நாயுடு தன் 24ஆம் வயதில் ருக்மணியை திருமணம் செய்து​கொண்டார்.​
பெ. வரதராஜுலு நாயுடு தன் 24ஆம் வயதில் ருக்மணியை திருமணம் செய்து​கொண்டார்.​
== அரசியல் வாழ்க்கை ==
== அரசியல் வாழ்க்கை ==
இளமையில் நாடெங்கும் பரவிய வந்தே​மாதரம் இயக்கம் இவரைக் கவர்ந்தது. "முற்போக்காளர் சங்கம்" எனும் ஓர் அமைப்பை மாணவர்களிடையே அமைத்தார்.​ அன்னியத் துணி விலக்கு,​​ சுதேசியம் எனும் தேசிய இலட்சியங்களை முழங்கியதால் பள்ளியில் இருந்து விலக வேண்​டிய சூழ்நிலை ஏற்பட்டது.​
இளமையில் நாடெங்கும் பரவிய வந்தே​மாதரம் இயக்கம் இவரைக் கவர்ந்தது. "முற்போக்காளர் சங்கம்" எனும் ஓர் அமைப்பை மாணவர்களிடையே அமைத்தார்.​ அன்னியத் துணி விலக்கு,​​ சுதேசியம் எனும் தேசிய இலட்சியங்களை முழங்கியதால் பள்ளியில் இருந்து விலக வேண்​டிய சூழ்நிலை ஏற்பட்டது. 1906முதல் இந்திய தேசிய இயக்கத்தில் ஈடுபட்டார். 1918இல் மதுரை ஹார்வி மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை ஊக்குவித்து ஆற்றிய பேச்சுக்காக முதல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.​ சொற்பொழிவில் அரசு நிந்தனைக்குரிய குற்றம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு, ​​பதினெட்டு மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்​பட்டது.​ விசாரணையில்​​ நாயுடுவின் சார்பில் சி. ராஜகோபாலாச்சாரி வாதாடி விடுதலை பெறச் செய்தார். 1923இல் பெரியகுளம் தாலுக்கா மாநாட்டில் தடை உத்தரவை மீறிப் பேசியதற்காக ஆறு​மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.​  

1906 முதல் இந்திய தேசிய இயக்கத்தில் ஈடுபட்டார். 1918 இல் மதுரை ஹார்வி மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை ஊக்குவித்து ஆற்றிய பேச்சுக்காக முதல் சிறைவாசம் விதிக்கப்பட்டது.​ சொற்பொழிவில் அரசு நிந்தனைக்குரிய குற்றம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு, ​​பதினெட்டு மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்​பட்டது.​ விசாரணையில்,​​ நாயுடுவின் சார்பில் சி. இராஜகோபாலாச்சாரி வாதாடினார். உயர்நீதி​மன்ற மேல் முறையீட்டில் இராஜாஜி எழுப்பிய சட்ட நுணுக்க​வாதத்தால்,​​ நாயுடு விடுதலை பெற்றார்.​ 1923இல் பெரியகுளம் தாலுக்கா மாநாட்டில் தடை உத்தரவை மீறிப் பேசியதற்காக ஆறு​மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.​ இது மூன்றாவது சிறைத்​தண்டனை. 1920 ஆகஸ்டில் காந்தியடிகள் திருப்பூர் வந்த​பொழுது,​​ வரதராஜுலு நாயுடு வீட்டில் தங்கினார். ​1921 இல் மீண்டும் சேலம் வந்த​பொழுது இவரது வீட்டில் தங்கினார்.​ காந்தியடிகள் அப்பொழுது நடைபெற்ற மகளிர் கூட்டமொன்றில் நாயுடுவின் மனைவி ருக்மணி தாம் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும்,​​ காந்தியடிகளிடம் கொடுத்து​விட்டார்.
1920 ஆகஸ்டில் [[காந்தி]] திருப்பூர் வந்த​போது​​ பெ. வரதராஜுலு நாயுடு வீட்டில் தங்கினார். ​1921இல் மீண்டும் சேலம் வந்த​பொழுது இவரது வீட்டில் தங்கினார்.​ காந்தி அப்பொழுது நடைபெற்ற மகளிர் கூட்டமொன்றில் பெ. வரதராஜுலு நாயுடுவின் மனைவி ருக்மணி தாம் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும்,​ காந்தியிடம் கொடுத்தார்.​ 1922இல் காந்தி சிறைப்படுத்தப்பட்ட​பொழுது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க அரசாங்கத்துக்​குரிய வருமான வரியைக் கட்ட மறுத்தார்.​ வரி மறுப்பைக் குறிப்பிட்டு நாயுடு அரசாங்கத்திற்கு எழுதிய கடிதம் காந்தியின் "யங் இந்​தியா"வில் வெளிவந்தது.​ 1930-32களில் காந்தி நடத்திய உப்பு சத்தியாகிரகத்தையும்,​​ சட்டமறுப்பு இயக்கம் முதலியவற்றையும் நாயுடு எதிர்த்தார். 1929இல் காங்கிரசோடு கருத்து வேற்றுமை கொண்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஆரிய சமாஜத்தில் இணைந்தார். ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்ட ​போது ​அதனை எதிர்த்து வரதராஜுலு​ பிரசாரம் செய்தார்.

1922இல் காந்தியடிகள் சிறைப்படுத்தப்பட்ட​பொழுது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க, அரசாங்கத்துக்​குரிய வருமான வரியைக் கட்ட மறுத்தார்.​ காந்தி விடுதலை செய்யப்பட்ட பிறகு​ தான் வரி​கட்ட முடியும் என அறிவித்துப் புதுமையை நிகழ்த்தினார். வரி மறுப்பைக் குறிப்பிட்டு டாக்டர் நாயுடு அரசாங்கத்திற்கு எழுதிய கடிதம்,​​ காந்தியின் "யங் இந்​தியா"வில் வெளிவந்தது.​
1929 இல் காங்கிரசோடு கருத்து வேற்றுமை கொண்டு காங்கிரசை விட்டு வெளியேறினார்.​ பின்னர் ஆரியசமாஜத்தில் இணைந்தார். ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்ட ​போது ​அதனை முறியடிப்பதற்கென்று வரதராஜுலு​ பிரசாரம் செய்தார். ஜி. சுப்பிரமணிய ஐயர்,​​ பாரதியார், திரு வி. க.வைத் தொடர்ந்து,​​ தேசியத் தமிழ் இதழியல் துறையை மேலும் வளர்த்தவர் நாயுடு.
1930-32களில் காந்தியடிகள் நடத்திய உப்பு சத்தியாகிரகத்தையும்,​​ சட்டமறுப்பு இயக்கம் முதலியவற்றையும் நாயுடு எதிர்த்தது இவருடைய அரசியல் வீழ்ச்சிக்கும்,​​ தமிழ்நாடு இதழின் நலிவிற்​கும் காரணமாயிற்று.​
== பொறுப்புகள் ==
== பொறுப்புகள் ==
1925இல் தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் கமிட்டியில் தலைவராக பணியாற்றினார்.​ விடுதலை பெற்ற இந்தியாவில் நாயுடு 1951இல் சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராக சேலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்​பட்டார்.​ 1952இல் நடை​பெற்ற பொதுத்​தேர்தலில்,​​ சேலம் நகரத்தில் போட்டியிட்டு கம்யூனிஸ்ட் வேட்பாளரான மோகன் குமாரமங்கலத்தைத் தோற்கடித்து சட்ட மன்ற உறுப்பினரானார்.​

Revision as of 11:34, 9 November 2023

பெ. வரதராஜுலு நாயுடு (ஜூன் 4, 1887 - ஜூலை 23, 1957) அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட வீரர், சித்த ஆயுர்வேத மருத்துவர், பத்திரிக்கையாளர், கட்டுரையாளர். சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு

சேலம் மாவட்டம் ராசிபுரத்தில் ஜூன் 4, 1887இல் பெருமாள் நாயுடு, குப்பம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். பத்தொன்பது வயதில் தேசிய அரசியலில் ஈடுபட்டார். ​அவர் சித்தவைத்தியம், ஆயுர்வேத வைத்தியம் இரண்டிலும் தேர்ச்சி பெற்று மருத்துவத் தொழிலில் ஈடுபட்டார்.

தனிவாழ்க்கை

பெ. வரதராஜுலு நாயுடு தன் 24ஆம் வயதில் ருக்மணியை திருமணம் செய்து​கொண்டார்.​

அரசியல் வாழ்க்கை

இளமையில் நாடெங்கும் பரவிய வந்தே​மாதரம் இயக்கம் இவரைக் கவர்ந்தது. "முற்போக்காளர் சங்கம்" எனும் ஓர் அமைப்பை மாணவர்களிடையே அமைத்தார்.​ அன்னியத் துணி விலக்கு,​​ சுதேசியம் எனும் தேசிய இலட்சியங்களை முழங்கியதால் பள்ளியில் இருந்து விலக வேண்​டிய சூழ்நிலை ஏற்பட்டது. 1906முதல் இந்திய தேசிய இயக்கத்தில் ஈடுபட்டார். 1918இல் மதுரை ஹார்வி மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்தை ஊக்குவித்து ஆற்றிய பேச்சுக்காக முதல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.​ சொற்பொழிவில் அரசு நிந்தனைக்குரிய குற்றம் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டு, ​​பதினெட்டு மாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்​பட்டது.​ விசாரணையில்​​ நாயுடுவின் சார்பில் சி. ராஜகோபாலாச்சாரி வாதாடி விடுதலை பெறச் செய்தார். 1923இல் பெரியகுளம் தாலுக்கா மாநாட்டில் தடை உத்தரவை மீறிப் பேசியதற்காக ஆறு​மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.​

1920 ஆகஸ்டில் காந்தி திருப்பூர் வந்த​போது​​ பெ. வரதராஜுலு நாயுடு வீட்டில் தங்கினார். ​1921இல் மீண்டும் சேலம் வந்த​பொழுது இவரது வீட்டில் தங்கினார்.​ காந்தி அப்பொழுது நடைபெற்ற மகளிர் கூட்டமொன்றில் பெ. வரதராஜுலு நாயுடுவின் மனைவி ருக்மணி தாம் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும்,​ காந்தியிடம் கொடுத்தார்.​ 1922இல் காந்தி சிறைப்படுத்தப்பட்ட​பொழுது அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க அரசாங்கத்துக்​குரிய வருமான வரியைக் கட்ட மறுத்தார்.​ வரி மறுப்பைக் குறிப்பிட்டு நாயுடு அரசாங்கத்திற்கு எழுதிய கடிதம் காந்தியின் "யங் இந்​தியா"வில் வெளிவந்தது.​ 1930-32களில் காந்தி நடத்திய உப்பு சத்தியாகிரகத்தையும்,​​ சட்டமறுப்பு இயக்கம் முதலியவற்றையும் நாயுடு எதிர்த்தார். 1929இல் காங்கிரசோடு கருத்து வேற்றுமை கொண்டு காங்கிரசை விட்டு வெளியேறி ஆரிய சமாஜத்தில் இணைந்தார். ஜஸ்டிஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்ட ​போது ​அதனை எதிர்த்து வரதராஜுலு​ பிரசாரம் செய்தார்.

பொறுப்புகள்

1925இல் தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் கமிட்டியில் தலைவராக பணியாற்றினார்.​ விடுதலை பெற்ற இந்தியாவில் நாயுடு 1951இல் சென்னை மாநிலச் சட்டமன்ற மேலவை உறுப்பினராக சேலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்​பட்டார்.​ 1952இல் நடை​பெற்ற பொதுத்​தேர்தலில்,​​ சேலம் நகரத்தில் போட்டியிட்டு கம்யூனிஸ்ட் வேட்பாளரான மோகன் குமாரமங்கலத்தைத் தோற்கடித்து சட்ட மன்ற உறுப்பினரானார்.​

இதழியல்

மங்கலம் ஷண்முக முதலியார் உரிமையாளராகவும்,​​ சுப்பிரமணிய சிவா ஆசிரியராகவும் நடத்தப்பட்ட "பிரபஞ்சமித்திரன்" மிகுந்த பொருள் இழப்பில் தத்தளித்த​பொழுது,​​ நாயுடு 1916 இல் அந்த இதழை வாங்கினார்.​ அவர் ஆசிரியரானார்.​ இரண்டாண்டுகள் வெளிவந்தது.​ 1918இல் நாயுடு சிறைப்பட்டபொழுது ஆயிரம் ரூபாய் ஈடு அரசால் கேட்கப்பட்டு பத்திரிகை முடக்கப்பட்டது.

பிரபஞ்சமித்திரனுக்குப் பிறகு 1919இல் சேலத்தில் வாரப்பதிப்பாக "தமிழ்நாடு" இதழைத் தொடங்கினார். அதில் அவர் எழுதிய இரு கட்டுரைகள்,​ அரசுத்​துரோகமானவை என்று குற்றம் சாட்டப்பட்டு விதிக்கப்பட்ட ஒன்பது மாதக் கடுங்காவல் தண்டனையால் இரண்டாம் சிறை தண்டனையை ஏற்றார்.​ 1925இல் தமிழ்நாடு வார செய்தி பத்திரிக்கையை துவக்கினார். 1931இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கிலப் பத்திரிகையின் சென்னைப் பதிப்பை துவக்கினார். பிற்காலத்தில் நிதிநெருக்கடியால் விற்பணை செய்யப்பட்டது.

இலக்கிய வாழ்க்கை

"தென்னாட்டுத் திலகராக"ப் புகழ்​பூத்த வ.உ.சி,​​ 1934இல் "தேசிய சங்க​நாதம்" எனும் தலைப்​பில் 32 பக்கங்களில் பி.வரதராஜுலு நாயுடு​வின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார்.​

மறைவு

பெ. வரதராஜுலு நாயுடு ஜூலை 23, 1957இல் காலமானார்.

உசாத்துணை

🔏Being Created

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.