under review

பூர்விக சங்கீத உண்மை: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 240: Line 240:


== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references/>
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:இசை நூல்கள்]]

Revision as of 16:29, 1 March 2022

பூர்விக சங்கீத உண்மை
பூர்விக சங்கீத உண்மை

பூர்விக சங்கீத உண்மை மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளையால் எழுதப்பட்ட இசை குறித்த நூல். தமிழக இசை வரலாற்றில் மேளகர்த்தா ராகங்கள் குறித்த ஒரு முக்கியமான கருத்தை முன்வைத்த நூல்.

ஆசிரியர்

மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை
மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை

இந்நூலை புகழ்பெற்ற நாதஸ்வர இசைக்கலைஞர் மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை எழுதினார்.

பதிப்பு

பொன்னுச்சாமிப் பிள்ளையின் மகன்கள் 1930-ல் பூர்விக சங்கீத உண்மை என்னும் நூலை வெளியிட்டனர்.

கூறைநாடு நடேச பிள்ளை, இலுப்பூர் பொன்னுசாமி , திருப்பாம்புரம் நடராச சுந்தரம் போன்ற பல புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கினார்கள்.

நூல் பின்புலம்

கர்னாடக இசையில் 22 சுருதிகளின் அடிப்படையில் 72 மேளகர்த்தா ராகங்கள்(சம்பூர்ண ராகங்கள்) என வரையறை செய்தவர் வேங்கடமகி. சில ஸ்வரங்கள் இரு வேறு பெயர் கொண்டிருந்தாலும் ஒரே ஒலியைத்தான் கொண்டவை என்பதால், மேளகர்த்தா ராகங்கள் 72 இல்லை என மறுத்து, 32 மேளகர்த்தா ராகங்களே இருக்கின்றன என்னும் கருத்தை மதுரை பொன்னுச்சாமிப் பிள்ளை கொண்டிருந்தார்.

அஹமதாபாத்தில் நடைபெற்ற அகில இந்திய இசை மாநாட்டுக்கு மைசூர் மன்னரின் உதவியோடு சென்று கலந்து கொண்டார்.இம்மாநாட்டில் இவர் கூறிய தாய் ராகங்கள் 32 என்கிற கொள்கை விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. இக்குழுவில் பம்பாய் பண்டிட், விஷ்ணு திகம்பர், போன்றவர்கள் கலந்து கொண்டு விவாதித்து ஏற்றனர். பிறகு பொன்னுச்சாமி பிள்ளை இக்கருத்தை பூர்வீக சங்கீத உண்மை என்னும் நூலாக எழுதி வெளியிட்டார்.

நூல் அமைப்பு

இந்நூல் ஐந்து பகுதிகளைக்(இயல்கள்) கொண்டது.

  1. நூல் மரபு
    • முதலாவது இயல் பன்னிரு ஸ்வரங்கள் குறித்தும், பன்னிரு ஸ்வரங்களும் பன்னிரு ராசிகளில் நிற்கும் முறையையும் விளக்குகிறது.
  2. கர்த்தா ராகத்தின் நிர்ணயம்
    • இரண்டாவது இயல் பழந்தமிழ் மக்கள் 32 தாய் ராகங்களில் பாடி வந்த மரபு குறித்தது.
  3. மூர்ச்சை பிரசுரம்
    • மூன்றாவது இயல் பண், பண்ணியல், திறம், திறத்திறம் போன்றவற்றை விளக்குகிறது.
  4. கர்த்தா ராகங்களும் அனுபவத்தில் இருக்கிற ஜன்ய ராகங்களும்
    • நான்காவது இயல் பரதர், சாரங்கதேவர், சோமநாதர், புண்டரீக விட்டலர், வெங்கடாத்ரி ராஜா, வேங்கடமகி ஆகியவர்களின்  இசை இலக்கண அமைப்புகளைக் குறிப்பிட்டு,  பொன்னுச்சாமி வரையறுக்கும் தாய் ராகங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன
  5. இசை நுணுக்கம் என்னும் சுதிபேத ராக சூட்சுமம்

நூல் சிறப்பு

  • பெரும்பண்கள், கிளைப்பண்கள், ஸ்வர அமைப்புகள், இசை நுணுக்கங்கள் ஆகியன குறித்து நுணுக்கமாக ஆராய்ந்து, இயற்றப்பட்ட நூல்.
  • தமிழிசை இலக்கண மரபு வழி நின்று, கர்நாடக இசையில் வழங்கிவரும் 72 மேளகர்த்தா ராகங்களைத் தர்க்கரீதியாக நிராகரித்து, அவற்றுள் 32 மேளகர்த்தாக்கள் மட்டுமே பெரும் பண்கள் என நிறுவ முனைந்த நூல்.

32 மேளகர்த்தா ராகங்கள்

பரதர், சாரங்கதேவர், சோமநாதர், புண்டரீக விட்டலர், வெங்கடாத்ரி ராஜா, வேங்கடமகி ஆகியவர்களின் இசை இலக்கண அமைப்புகளைக் குறிப்பிட்டு, பொன்னுச்சாமி 32 தாய் இராகங்கள் தெளிவுபடுத்தி, அவைகளை விளக்கியுள்ளார்.[1]

1 தோடி

ச ரி1 க1 ம1 ப த1 நி1 ச்

ச் நி1 த1 ப ம1 க1 ரி1 ச

2 தேனுகா

ச ரி1 க1 ம1 ப த1 நி2 ச்

ச் நி2 த1 ப ம1 க1 ரி1 ச

3 நாடகப்பிரியா

ச ரி1 க1 ம1 ப த2 நி1 ச்

ச் நி1 த2 ப ம1 க1 ரி1 ச

4 கோகுலப்பிரியா

ச ரி1 க1 ம1 ப த2 நி2 ச்

ச் நி2 த2 ப ம1 க1 ரி1 ச

5 வகுளாபரணம்

ச ரி1 க2 ம1 ப த1 நி1 ச்

ச் நி1 த1 ப ம1 க2 ரி1 ச

6 மாயாமாளவ கௌளை

ச ரி1 க2 ம1 ப த1 நி2 ச்

ச் நி2 த1 ப ம1 க2 ரி1 ச

7 சக்கரவாகம்

ச ரி1 க2 ம1 ப த2 நி1 ச்

ச் நி1 த2 ப ம1 க2 ரி1 ச

8 சூரியகாந்தம்

ச ரி1 க2 ம1 ப த2 நி2 ச்

ச் நி2 த2 ப ம1 க2 ரி1 ச

9 நடபைரவி

ச ரி2 க1 ம1 ப த1 நி1 ச்

ச் நி1 த1 ப ம1 க1 ரி2 ச

10 கீரவாணி

ச ரி2 க1 ம1 ப த1 நி2 ச்

ச் நி2 த1 ப ம1 க1 ரி2 ச

11 கரகரப்பிரியா

ச ரி2 க1 ம1 ப த2 நி1 ச்

ச் நி1 த2 ப ம1 க1 ரி2 ச

12 கௌரிமனோகரி

ச ரி2 க1 ம1 ப த2 நி2 ச்

ச் நி2 த2 ப ம1 க1 ரி2 ச

13 சாருகேசி

ச ரி2 க2 ம1 ப த1 நி1 ச்

ச் நி1 த1 ப ம1 க2 ரி2 ச

14 சரசாங்கி

ச ரி2 க2 ம1 ப த1 நி2 ச்

ச் நி2 த1 ப ம1 க2 ரி2 ச

15 ஹரிகாம்போதி

ச ரி2 க2 ம1 ப த2 நி1 ச்

ச் நி1 த2 ப ம1 க2 ரி2 ச

16 சங்கராபரணம்

ச ரி2 க2 ம1 ப த2 நி2 ச்

ச் நி2 த2 ப ம1 க2 ரி2 ச

17 பவப்பிரியா

ச ரி1 க1 ம2 ப த1 நி1 ச்

ச் நி1 த1 ப ம2 க1 ரி1 ச

18 சுபபந்துவராளி

ச ரி1 க1 ம2 ப த1 நி2 ச்

ச் நி2 த1 ப ம2 க1 ரி1 ச

19 சட்விதமார்க்கினி

ச ரி1 க1 ம2 ப த2 நி1 ச்

ச் நி1 த2 ப ம2 க1 ரி1 ச

20 சொர்ணாங்கி

ச ரி1 க1 ம2 ப த2 நி2 ச்

ச் நி2 த2 ப ம2 க1 ரி1 ச

21 நாமநாராயணி

ச ரி1 க2 ம2 ப த1 நி1 ச்

ச் நி1 த1 ப ம2 க2 ரி1 ச

22 காமவர்த்தினி

ச ரி1 க2 ம2 ப த1 நி2 ச்

ச் நி2 த1 ப ம2 க2 ரி1 ச

23 ராமப்பிரியா

ச ரி1 க2 ம2 ப த2 நி1 ச்

ச் நி1 த2 ப ம2 க2 ரி1 ச

24 கமனாஸ்ரமம்

ச ரி1 க2 ம2 ப த2 நி2 ச்

ச் நி2 த2 ப ம2 க2 ரி1 ச

25 சண்முகப்பிரியா

ச ரி2 க1 ம2 ப த1 நி1 ச்

ச் நி1 த1 ப ம2 க1 ரி2 ச

26 சிம்மேந்திரமத்யமம்

ச ரி2 க1 ம2 ப த1 நி2 ச்

ச் நி2 த1 ப ம2 க1 ரி2 ச

27 ஹேமவதி

ச ரி2 க1 ம2 ப த2 நி1 ச்

ச் நி1 த2 ப ம2 க1 ரி2 ச

28 தர்மவதி

ச ரி2 க1 ம2 ப த2 நி2 ச்

ச் நி2 த2 ப ம2 க1 ரி2 ச

29 ரிஷபப்பிரியா

ச ரி2 க2 ம2 ப த1 நி1 ச்

ச் நி1 த1 ப ம2 க2 ரி2 ச

30 லதாங்கி

ச ரி2 க2 ம2 ப த1 நி2 ச்

ச் நி2 த1 ப ம2 க2 ரி2 ச

31 வாசஸ்பதி

ச ரி2 க2 ம2 ப த2 நி1 ச்

ச் நி1 த2 ப ம2 க2 ரி2 ச

32 கல்யாணி

ச ரி2 க2 ம2 ப த2 நி2 ச்

ச் நி2 த2 ப ம2 க2 ரி2 ச

விவாதங்கள்

நாதஸ்வர கலைஞர் உறையூர் கோபாலஸ்வாமி பிள்ளை இசை இலக்கணத்திலும் சாஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற்றவர். அவர் 32 மேளகர்த்தா ராகங்களே இருக்கின்றன என்னும் கருத்தை மறுத்து அறிக்கையும் வெளியிட்டு பிற கலைஞர்களுக்கும் அனுப்பி வைத்தார்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.