first review completed

அழகியநாயகி அம்மாள்: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
Line 24: Line 24:
* [https://www.amazon.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-Azhahiya-Nayahi-ebook/dp/B08WK5XQMW கவலை: (எங்கள் கதை) (Tamil Edition) Kindle Edition]
* [https://www.amazon.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-Azhahiya-Nayahi-ebook/dp/B08WK5XQMW கவலை: (எங்கள் கதை) (Tamil Edition) Kindle Edition]


{{Standardised}}
{{first review completed}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 14:12, 24 February 2022

அழகிய நாயகி அம்மாள்

அழகிய நாயகி அம்மாள் (1925 - 2008) தமிழ் நாவலாசிரியர்.  இவரது கவலை நாவல் தமிழில் எழுதப்பட்ட தன்வரலாற்று பாணியில் எழுதப்பட்ட முக்கியமான இலக்கிய ஆவணமாக கருதப்படுகிறது.

பிறப்பு, கல்வி

அழகிய நாயகி அம்மாள் 1925-ல் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்,  ஈத்தாமொழி கிராமத்தில் பிறந்தவர். தந்தை இளையநாடன். ஒரு அண்ணனும் ஒரு தங்கையும் உடன்பிறந்தவர்கள். அழகிய நாயகியின் சிறு வயதிலேயே அவரது தாய் இறந்துவிட்டார். பள்ளியில் ஏழாவது வரை படித்தவர். துகிலுரிதல், அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை, முத்துப்பட்டன் மாலை ஆகிய நாட்டுப்புற கலை இலக்கிய நூல்களைப் படித்தவர். மலையாளத்தில் ஓரளவு தேர்ச்சி பெற்றவர்.

தனிவாழ்க்கை

நாகர்கோவில், ஈத்தாமொழி கிராமத்திற்கு அருகிலுள்ள மணிக்கட்டி பொட்டலூரில் அம்மம் கொண்டாடியார் குடும்பத்தைச் சேர்ந்த  சிவ. பொன்னீலவடிவு என்பவருடன் அழகிய நாயகிக்கு திருமணமானது. கணவர் ஆசிரியர், காந்தியவாதி. சைவப் பின்னனி கொண்ட குடும்பம். தனது சொத்தையும் பணத்தையும் கொடுத்து பொட்டலூரில் உயர்நிலைப் பள்ளி கொண்டுவந்தவர். ஒரு மகன் பக்தவச்சலம் (எழுத்தாளர் பொன்னீலன்). மருமகள் கனி, அழகிய நாயகியின் சொந்த அண்ணன் மகள். அழகிய நாயகியின் இரண்டு மகள்களும் திருமண வயதில் இறந்துவிட்டனர். அழகிய நாயகி அம்மாள் தன்னுடைய நடுவயதில் கணவரை இழந்தார்.

11.png

நாவல் வரலாறு

அழகிய நாயகி அம்மாள் ’கவலை நாவலை ஜூன் 1976 முதல் மே 1977 வரை எழுதினார். அழகிய நாயகியின் குடும்பத்தின், சமூகத்தின் மூன்று தலைமுறை வரலாற்றையும், பெண்கள் மீது குடும்ப ஆண்கள் செலுத்திய வன்முறை, உறவினர்களிடம் பட்ட சிறுமை ஆகியவற்றைப் பற்றியும் இந்நாவல் பேசுகிறது. ”என் வாழ்க்கை பூராவுமே கவலையும் கஷ்டமும் கண்ணீருமாகக் கழிந்ததனால் இந்தக் கதைக்குக் கவலை என்ற பெயரை வச்சி எழுதினேன்” என அழகிய நாயகி அம்மாள் கூறுகிறார்.

பல நூறு பக்கங்கள் கொண்ட இந்தக்  குறிப்புகளைப் படித்த சுந்தர ராமசாமி இதை அப்படியே வெளியிடும்படிச் சொன்னார். படிக்கச் சிரமமான அந்தக் கையெழுத்துப் பிரதியை பூங்குணம் சேகர் முழுமையாக நகல் எடுத்தார். சி.மோகன் அழகிய நாயகி அம்மையாரின் பதிவுகளை சீர் செய்து ஒரு நாவலாக செம்மைப் படுத்தினார். செப்டம்பர் 1998-ல் தூய சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்று மையம் ‘கவலை’ நாவலை வெளியிட்டார்கள். 

மறைவு

அழகிய நாயகி அம்மாள் தனது 83-வது வயதில் 2008-ல் காலமானார்.

நினைவு விருது

  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனமும் இணைந்து சிறந்த நாவலுக்கான பரிசாக அழகிய நாயகி அம்மாள் நினைவுப் பரிசினை வழங்கிவருகிறார்கள்.

உசாத்துணை



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.