under review

பரிமாணம் (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
(Added First published date)
 
Line 14: Line 14:
*[https://www.hindutamil.in/news/blogs/566205-kovai-gnani-5.html கோவை ஞானி எனும் தமிழ் நேயர்! | Kovai Gnani - hindutamil.in]
*[https://www.hindutamil.in/news/blogs/566205-kovai-gnani-5.html கோவை ஞானி எனும் தமிழ் நேயர்! | Kovai Gnani - hindutamil.in]
*[https://tamilvanakkam.com/2018/11/26/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF/ ஞானிக்கு இயல் விருது/]

{{Finalised}}
{{Finalised}}
{{Fndt|14-Sep-2023, 07:42:39 IST}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:இதழ்கள்]]
[[Category:இதழ்கள்]]
[[Category:சிற்றிதழ்கள்]]
[[Category:சிற்றிதழ்கள்]]

Latest revision as of 16:12, 13 June 2024

பரிமாணம் (1979-1983) ஞானி கோவையில் இருந்து நடத்திய சிற்றிதழ். மார்க்சியச் சிந்தனைகளுக்காக இச்சிற்றிதழ் நடத்தப்பட்டது.

வரலாறு

ஞானி 1971 முதல் 1976 வரை வானம்பாடி இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். வானம்பாடி இதழின் அரசியல்கொள்கையாளர் ஞானி. அவர் அதை மார்க்சிய இலக்கிய இதழாக நிலைநிறுத்த முயன்றார். ஆனால் இந்தியாவில் இந்திராகாந்தியால் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது வானம்பாடிக் கவிஞர்களில் ஒரு சாரார் மு.மேத்தா தலைமையில் அதை ஆதரித்தனர். பலர் அமைதியடைந்தனர். வானம்பாடி இதழ் நின்றது. அதிருப்தி அடைந்த ஞானி வானம்பாடி இயக்கத்தில் இருந்து விலகினார். வானம்பாடி இதழை சிற்பி பொள்ளாச்சியில் இருந்து நடத்தினார். ஞானி மார்க்சியச் சிந்தனைகளுக்காக பரிமாணம் இதழை தொடங்கினார். 1979 முதல் 1983 வரை மும்மாதத்திற்கு ஒருமுறை வெளிவந்த இவ்விதழ் மொத்தம் 8 இலக்கங்களே வெளியாயிற்று

பங்களிப்பு

ஞானி, எஸ்.என்.நாகராஜன் ஆகியோர் புதிய தலைமுறை இதழின் காலம் முதல் முன்வைத்துவந்த மேலைமார்க்சியம் (ஐரோப்பிய மார்க்சியம்) மற்றும் அன்னியமாதல் கோட்பாட்டை இவ்விதழின் கட்டுரைகள் முன்வைத்தன. பண்பாட்டை மார்க்ஸிய நோக்கில் புரிந்துகொள்ள முயன்றன.

உசாத்துணை

✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 14-Sep-2023, 07:42:39 IST