being created

தியடோர் பாஸ்கரன்: Difference between revisions

From Tamil Wiki
(முத்துகிருஷ்ணன் அளித்த தகவல்கள் கொண்டு உருவாக்கப்பட்டது)
 
(category & stage updated)
Line 59: Line 59:


== உசாத்துணை ==
== உசாத்துணை ==
* Roja Muthiah Research Library Annual Report (2008-09)
* Roja Muthiah Research Library Annual Report (2008-09)
* தொகுப்பு த. செ. ஞானவேல். (2006). தமிழ் மண்ணே வணக்கம். சென்னை: விகடன் பிரசுரம்.
* தொகுப்பு த. செ. ஞானவேல். (2006). தமிழ் மண்ணே வணக்கம். சென்னை: விகடன் பிரசுரம்.
* [https://www.jeyamohan.in/44649/ தியடோர் பாஸ்கரனுக்கு இயல் விருது, ஜெயமோகன்.இன்]
* [https://www.jeyamohan.in/44649/ தியடோர் பாஸ்கரனுக்கு இயல் விருது, ஜெயமோகன்.இன்]
* [http://www.worldcat.org/identities/lccn-n82007187/. About Theodore Baskaran on Worldcat]


* [http://www.worldcat.org/identities/lccn-n82007187/. About Theodore Baskaran on Worldcat]
{{being created}}
[[Category:Tamil Content]]

Revision as of 22:06, 20 February 2022

சு. தியடோர் பாஸ்கரன் (பி. 28/06/1940) தமிழக எழுத்தாளர், தமிழ்த் திரைப்பட வரலாற்றாளர், சூழியல் எழுத்து-செயல்பாட்டாளர்களில் முக்கியமானவர் என அறியப்படுபவர்.

பிறப்பு, இளமை

பாஸ்கரன் தாராபுரத்தில் 28/06/1940ல் பிறந்தார். பாளையங்கோட்டை புனித ஜான் கல்லூரியில் இடைநிலை வகுப்புப் படித்து பின்னர் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் முதுகலை (வரலாறு) பட்டம் பெற்றார்.

அரசுப்பணி

பட்டம் பெற்றவுடன், தமிழக அரசு ஆவணக் காப்பகத்தில் ஆய்வாளராக இரண்டாண்டுகள் பணி புரிந்தார். 1964ல் இந்திய தபால் துறையில் சேர்ந்தார். திருச்சியில் இரண்டாண்டுகள் கோட்ட மேலாளராகப் பணிபுரிந்தபின் வேலூருக்கும் பின்னர் மேகாலயாவிற்கும் பணிமாற்றம் செய்யப்பட்டார். அவர் மேகாலயாவிலிருந்த போது 1971ல் வங்காளதேச விடுதலைப் போர் மூண்டது. அப்போது பாஸ்கரன் தபால் தந்தித் துறையையும் பாதுகாப்புத் துறையையும் இணைக்கும் தனி அதிகாரியாக (Special Officer For War Efforts) நியமிக்கப்பட்டார். தபால் துறையில் பணிபுரிந்து கொண்டே திரைப்பட வரலாற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தபால் துறையில் படிப்படியாக உயர்ந்து தமிழ் நாட்டின் தலைமை தபால் அதிகாரியாக (Chief Postmaster General) ஓய்வு பெற்றார்.

ஓய்வு பெற்றபின், சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநராக மூன்றாண்டுகள் (1998 – 2001) பணியாற்றினார். ஐ.நா. சபையின் சார்பில் கென்யா நாட்டில் இரண்டு மாதம் ஆலோசகராகவும்  பணியாற்றியுள்ளார்.

தனிவாழ்க்கை

மனைவி திலகாவுடன் பெங்களூரில் வசிக்கிறார். இவர்களுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உண்டு.

பங்களிப்பு

சூழியல் துறை 

சூழியல் தளத்தில் இன்று பயின்றுவரும் பல கலைச்சொற்கள் தியடோர் பாஸ்கரனால் உருவாக்கப்பட்டவை – சூழியல் என்ற சொல் உட்பட. பறவைகள்,விலங்குகள், இயற்கை நிகழ்வுகள் என்று அவற்றுக்குரிய கலைச்சொற்களை உருவாக்கியாகவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ஒரு சிந்தனை அதற்கான மொழி இல்லையேல் ஒருபோதும் நீடிக்காது என்பதே அவரது தரப்பு. தமிழில் சூழியல் எழுதப்பட ஆரம்பித்த காலகட்டத்தில் தியடோர் பாஸ்கரன் எழுதவந்துவிட்டார். சூழியல்எழுத்து என்பது வெறுமே சூழியலழிவுகளைப்பற்றிய அறிவுறுத்தல்களோ பிரச்சாரமோ அல்ல என்பதை நிறுவியவை அவரது எழுத்துக்கள். இயற்கையைப்பற்றிய கவித்துவம் கொண்ட விவரணைகள் வழியாக ஒரு தலைமுறையையே சூழியல் நோக்கி கொண்டுவந்தார்.

நாற்பத்தாறு ஆண்டுகளாக சுற்றுசூழல் பற்றி  தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகின்றார். உயிர்மை பதிப்பகம் ‘இன்னும் பிறக்காத தலைமுறைக்காக (2006)’, ‘தாமரை பூத்த தடாகம் (2008)’ வானில் பறக்கும் புள்ளெலாம் (2011) ஆகிய நூல்களைப் பதிப்பித்தது. உல்லாஸ் கரந்தின் The Way of the Tiger என்ற நூலை ‘கானுறை வேங்கை’ ( காலச்சுவடு 2006) என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கின்றார். காட்டுயிர் பற்றி இவர் எழுதிய The Dance of the Sarus (ஆக்ஸ்போர்ட் பல்கலை பதிப்பதம்) 1996இல் வெளிவந்தது.  பெங்குயின் பதிப்பகம் இவரை தொகுப்பாசிரியராகக் கொண்டு The Sprint of the Blackbuck நூலை 2009 இல் வெளியிட்டது.

தமிழ்நாட்டில் மதிப்புறு காட்டுயிர் காவலராக பணியாற்றியிருக்கின்றார். இயற்கைக்கான உலக நிதியகத்தில் (WWF-India) அறங்காவலராக உள்ளார்.

திரைத்துறை எழுத்து

தமிழில் தியடோர் பாஸ்கரனின் இடம் இருவகையில் முன்னோடித் தகுதி கொண்டது. தமிழ் திரைப்படத்தை வெறுமே அரட்டைத் தகவல்களின் தொகையாக அல்லாமல் சமூகவியல், அரசியல் நோக்குடன் வரலாறாக எழுத ஆரம்பித்தார். அதற்காக சினிமாக்கலைச் சொற்களுக்கு ஈடான தமிழ்ச்சொற்களை உருவாக்கினார். எளிமையும் நேரடித்தன்மையும் கொண்ட மொழியை அமைத்தார். சினிமா என்ற கலைவடிவம் பண்பாட்டாய்வுக்கான பெரும் களம் என்பதை நிறுவினார்.

1980இல் வெளிவந்த இவரது நூல் Message Bearers (Cre-A) தமிழ்த்திரை ஆய்வில் முன்னோடித்தன்மை கொண்ட முயற்சியாக கருதப்படுகிறது.

விருதுகள்

  • தமிழ்சினிமா பற்றிய The Eye of the Serpent நூலுக்காக தேசிய விருதான ஸ்வர்ண கமல் விருதை 1997இல் பெற்றார்.
  • கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது 2013 பெற்றார்
  • வனவிலங்கு பாதுகாப்பில் அவரது பங்கு  சரணாலய இயற்கை அறக்கட்டளையால் சரணாலய வாழ்நாள் சேவை விருது 2020 வழங்கப்பட்டது.

நூல்கள்

தமிழ்
  • மழைக்காலமும் குயிலோசையும், காலச்சுவடு (2003) (தொகுப்பாசிரியர்)
  • எம் தமிழர் செய்த படம், உயிர்மை (2004)
  • சித்திரம் பேசுதடி, காலச்சுவடு (2004) (தொகுப்பாசிரியர்)
  • தமிழ் சினிமாவின் முகங்கள், கண்மணி (2004)
  • இன்னும் பிறக்காத தலைமுறைக்காக, உயிர்மை (2006)
  • தாமரை பூத்த தடாகம் உயிர்மை (2005)
  • கானுறை வேங்கை, காலச்சுவடு (2006) (மொழிபெயர்ப்பு)
  • வானில் பறக்கும் புள்ளெலாம், சூழலியல் கட்டுரைகள், உயிர்மை (2012)
  • சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே, திரைப்படக் கட்டுரைகள், காலச்சுவடு (2014)
  • கையில் இருக்கும் பூமி, சூழலியல் கட்டுரைகளின் மொத்த தொகுப்பு, உயிர்மை (2018)
  • கல் மேல் நடந்த காலம், நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (2016)
ஆங்கிலம்
  • தி மெசேஜ் பியரர்ஸ் - The Message Bearers: The nationalist politics and the entertainment media in South India, 1880-1945, Chennai: Cre-A (1981).
  • தி ஐ ஆஃப் தி செர்பெண்ட் - The Eye of the Serpent: An introduction to Tamil cinema, Chennai: East West Books (1996)
  • தி டான்ஸ் ஆஃப் தி சாரஸ் - The Dance of the Sarus: Essays of a Wandering Naturalist, Oxford University Press (1999)
  • ஹிஸ்டரி துரூ தி லென்ஸ் - History through the Lens - Perspectives on South Indian Cinema, Hyderabad: Orient Blackswan (2009)
  • சிவாஜி கணேசன் - Sivaji Ganesan: Profile of an Icon, Wisdom Tree, Delhi (2009)
  • தி ஸ்பிரிட் ஆஃப் தி பிளாக் பக் - (ed.) The Spirit of the Black Buck, Penguin (2010)
  • The Book of Indian Dogs - இந்திய நாய் இனங்கள் பற்றிய கட்டுரைகள்,

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.