டி.எஸ்.சொக்கலிங்கம்: Difference between revisions

From Tamil Wiki
(Created page with "டி. எஸ். சொக்கலிங்கம் ( 3 மே 1899 - 6 ஜனவரி 1966) இதழியலாளர், எழுத்தாளர், மொழிபெயப்பாளர் மற்றும் விடுதலைப்போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டாளரும் காந்தியவாதியுமாக இருந்தார்...")
 
No edit summary
Line 2: Line 2:


பிறப்பு, கல்வி
பிறப்பு, கல்வி
டி.எஸ்.சொக்கலிங்கம் தென்காசியில் சங்கரலிங்கம் பிள்ளை - லெட்சுமியம்மாள் இணையருக்கு மூன்று சகோதரர்கள் இரண்டு சகோதரிகளுடன் பிறந்தார். மடத்துக்கடை என்ற மளிகைக்கடையை சொக்கலிங்கத்தின் தந்தை நடத்தி வந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு சொக்கலிங்கத்தின் சகோதரர் சிதம்பரம்பிள்ளை அங்காடியை நடத்தி வந்தார். வாஞ்சி ஐயரின் நண்பராக இருந்த சிதம்பரம் பிள்ளையை 1911ல் ஆஷ் துரை கொலை வழக்கில்  தொடர்புபடுத்தி போலீஸார் கைது செய்தனர். அவர் சிறைமீள நெடுங்காலம் ஆகியது. சங்கரலிங்கம் பிள்ளை உளம் நலிந்து மறைந்தார். ஆறாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு குடும்பத்தினர் நடத்தி வந்த மடத்துக்கடையை சொக்கலிங்கம் மேற்பார்வைப் பொறுப்பை ஏற்றார்.
தனிவாழ்க்கை
இளமையிலேயே தனிப்பட்ட முறையில் ஆசிரியர்களிடமிருந்து டி.எஸ். சொக்கலிங்கம் தமிழ் கற்றார். [[சுதேசமித்திரன்]] இதழின் முகவராக இருந்தார். 1916ல் [[ஆனந்தபோதினி]] இதழில் அவருடைய முதல் கட்டுரை வெளியாகியது. தேசிய இயக்கச் செய்திகளை படித்துவந்த சொக்கலிங்கம் தன் 18 ஆவது வயதில் எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றுவிட்டார். சிதம்பரம் பிள்ளை வந்து அவரை திரும்பா அழைத்துச் சென்றார். தென்காசியில் அண்ணனுடன் இணைந்து மளிகைக்கடையை நடத்தினார். தனியாக ஸ்டார் கம்பெனி என்ற பேரில் ஒரு மளிகைக் கடையை வெற்றிகரமாக நடத்தினார்.
அரசியல்
குற்றாலத்தில் அருவிகளில் வெள்ளையர் அல்லாதோர் குளிக்க ஆங்கில அரசு கட்டுப்பாடுகளை போட்டது. அதைக் கண்டித்து ’நீராடுவதற்கும் நிர்ப்பந்தமா?’ என்ற துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டார். நண்பர்களை திரட்டி குற்றாலம் சென்று போராடினார். அரசு கட்டுப்பாடுகளை திரும்பப் பெற்றது. இதுவே டி.எஸ்.சொக்கலிங்கத்தின் முதல் அரசியல் நடவடிக்கை. தொடர்ந்து கள்ளுக்கடை மறியல், அன்னியத்துணி மறுப்பு போன்ற போராட்டங்களை நடத்தினார். 1920 காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்றார்.சேலம் வரதராஜுலு நாயுடுவை அழைத்துவந்து கூட்டங்கள் நடத்தினார். இக்காலகட்டத்தில் [[தேசபக்தன்]] இதழுக்கு கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். 1922ல் [[திரு.வி.கல்யாணசுந்தர முதலியார்]] -ஐ அழைத்துவந்து தென்காசியில் அரசியல் கூட்டங்கள் நடத்தினார்.

Revision as of 17:31, 18 February 2022

டி. எஸ். சொக்கலிங்கம் ( 3 மே 1899 - 6 ஜனவரி 1966) இதழியலாளர், எழுத்தாளர், மொழிபெயப்பாளர் மற்றும் விடுதலைப்போராட்ட வீரர். காங்கிரஸ் கட்சியின் செயல்பாட்டாளரும் காந்தியவாதியுமாக இருந்தார். விடுதலைப்போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். காந்தி என்னும் இதழை நடத்தினார். தினமணி இதழின் ஆசிரியராக இருந்தார். பின்னர் தினசரி, மணிக்கொடி ஆகிய இதழ்களை நடத்தினார். டால்ஸ்டாயின் போரும் அமைதியும் நாவலை முழுமையாக மொழியாக்கம் செய்தார்

பிறப்பு, கல்வி

டி.எஸ்.சொக்கலிங்கம் தென்காசியில் சங்கரலிங்கம் பிள்ளை - லெட்சுமியம்மாள் இணையருக்கு மூன்று சகோதரர்கள் இரண்டு சகோதரிகளுடன் பிறந்தார். மடத்துக்கடை என்ற மளிகைக்கடையை சொக்கலிங்கத்தின் தந்தை நடத்தி வந்தார். தந்தையின் மறைவுக்குப் பிறகு சொக்கலிங்கத்தின் சகோதரர் சிதம்பரம்பிள்ளை அங்காடியை நடத்தி வந்தார். வாஞ்சி ஐயரின் நண்பராக இருந்த சிதம்பரம் பிள்ளையை 1911ல் ஆஷ் துரை கொலை வழக்கில் தொடர்புபடுத்தி போலீஸார் கைது செய்தனர். அவர் சிறைமீள நெடுங்காலம் ஆகியது. சங்கரலிங்கம் பிள்ளை உளம் நலிந்து மறைந்தார். ஆறாம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு குடும்பத்தினர் நடத்தி வந்த மடத்துக்கடையை சொக்கலிங்கம் மேற்பார்வைப் பொறுப்பை ஏற்றார்.

தனிவாழ்க்கை

இளமையிலேயே தனிப்பட்ட முறையில் ஆசிரியர்களிடமிருந்து டி.எஸ். சொக்கலிங்கம் தமிழ் கற்றார். சுதேசமித்திரன் இதழின் முகவராக இருந்தார். 1916ல் ஆனந்தபோதினி இதழில் அவருடைய முதல் கட்டுரை வெளியாகியது. தேசிய இயக்கச் செய்திகளை படித்துவந்த சொக்கலிங்கம் தன் 18 ஆவது வயதில் எவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கிளம்பி காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்றுவிட்டார். சிதம்பரம் பிள்ளை வந்து அவரை திரும்பா அழைத்துச் சென்றார். தென்காசியில் அண்ணனுடன் இணைந்து மளிகைக்கடையை நடத்தினார். தனியாக ஸ்டார் கம்பெனி என்ற பேரில் ஒரு மளிகைக் கடையை வெற்றிகரமாக நடத்தினார்.

அரசியல்

குற்றாலத்தில் அருவிகளில் வெள்ளையர் அல்லாதோர் குளிக்க ஆங்கில அரசு கட்டுப்பாடுகளை போட்டது. அதைக் கண்டித்து ’நீராடுவதற்கும் நிர்ப்பந்தமா?’ என்ற துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டார். நண்பர்களை திரட்டி குற்றாலம் சென்று போராடினார். அரசு கட்டுப்பாடுகளை திரும்பப் பெற்றது. இதுவே டி.எஸ்.சொக்கலிங்கத்தின் முதல் அரசியல் நடவடிக்கை. தொடர்ந்து கள்ளுக்கடை மறியல், அன்னியத்துணி மறுப்பு போன்ற போராட்டங்களை நடத்தினார். 1920 காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்றார்.சேலம் வரதராஜுலு நாயுடுவை அழைத்துவந்து கூட்டங்கள் நடத்தினார். இக்காலகட்டத்தில் தேசபக்தன் இதழுக்கு கட்டுரைகள் எழுதிக்கொண்டிருந்தார். 1922ல் திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் -ஐ அழைத்துவந்து தென்காசியில் அரசியல் கூட்டங்கள் நடத்தினார்.