நடை: Difference between revisions
(Created page with "நடை (1968-1969) சி.மணி நடத்திய சிற்றிதழ். கவிதையை முன்னிறுத்தியதும் கவிதை சார்ந்த உரையாடலை உருவாக்கியதும் இவ்விதழின் பங்களிப்புகள். == வரலாறு == சேலத்திலிருந்து அக்டோபர் 1968இல் வெளியீட...") |
No edit summary |
||
Line 1: | Line 1: | ||
நடை (1968-1969) சி.மணி நடத்திய சிற்றிதழ். கவிதையை முன்னிறுத்தியதும் கவிதை சார்ந்த உரையாடலை உருவாக்கியதும் இவ்விதழின் பங்களிப்புகள். | [[File:Nad.png|thumb|நடை]] | ||
நடை (1968-1969) [[சி.மணி]] நடத்திய சிற்றிதழ். கவிதையை முன்னிறுத்தியதும் கவிதை சார்ந்த உரையாடலை உருவாக்கியதும் இவ்விதழின் பங்களிப்புகள். | |||
== வரலாறு == | == வரலாறு == |
Revision as of 01:12, 16 February 2022
நடை (1968-1969) சி.மணி நடத்திய சிற்றிதழ். கவிதையை முன்னிறுத்தியதும் கவிதை சார்ந்த உரையாடலை உருவாக்கியதும் இவ்விதழின் பங்களிப்புகள்.
வரலாறு
சேலத்திலிருந்து அக்டோபர் 1968இல் வெளியீட்டைத் தொடங்கியது நடை காலாண்டிதழ். ஆசிரியர் கோ. கிருஷ்ணசாமி என்றபோதிலும் அது சி. மணியின் பத்திரிகையாக வெளி வந்தது. "தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் திறனாய்வு வளர்ச்சிக்கும் ஒரு புதிய வாய்ப்பை அளித்து அவற்றின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதே நடையின் நோக்கம்" என்று முதல் இதழின் ஆசிரியர் குறிப்பு தெரிவித்தது. மொத்தம் எட்டு இதழ்களே வெளிவந்தன.
உள்ளடக்கம்
வே. மாலி, செல்வம், ஓலூலூ என்னும் பெயர்களில் சி. மணி கவிதைகள் - கட்டுரைகள் எழுதினார். இலக்கிய இதழில் நவீன ஓவியங்களை முதலில் அறிமுகப்படுத்தியது நடைதான். ஞானக்கூத்தன் புதுக்கவிதை எழுதத் தொடங்கியதும் நடையில்தான்.சி. மணியின் 'யாப்பியல்' என்னும் நீண்ட கட்டுரை அன்றைய சூழலில் முக்கியமானதாகக் கருதப்பட்டது.