under review

அகரமுதல்வன்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
(Corrected error in line feed character)
Line 9: Line 9:
== இலக்கியவாழ்க்கை ==
== இலக்கியவாழ்க்கை ==
அகரமுதல்வனின் முதல் படைப்பு 2000-ல் பிரசுரமான கவிதை. இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளென கவிஞர் காசி ஆனந்தன், கவிஞர் புதுவை இரத்தினதுரை, கவிஞர் அம்புலி, கவிஞர் கஸ்தூரி, எழுத்தாளர் ஆதிலட்சுமி சிவக்குமார், மலைமகள், மு. தளையசிங்கம், சண்முகம் சிவலிங்கம் ஆகியோரை குறிப்பிடுகிறார்.

'மூன்று தசாப்தகாலமாக நிகழ்ந்த தமிழீழர்களின் ஆயுதமேந்திய விடுதலைப்போராட்டம் கண்டிருக்கிற வீழ்ச்சியையடுத்து கட்டமைக்கப்படும் அனைத்து பொய்க்கதைகளையும் தகர்க்கவல்ல பேருண்மையை என்னுடைய கதைமாந்தர்கள் சுமக்கிறார்கள்’என தன்புனைவெழுத்தின் நோக்கத்தைகுறிப்பிடுகிறார்<ref>[https://akaramuthalvan.blogspot.com/2018/03/blog-post_17.html பூமியின் புன்னகையை பழிவாங்கும் விரோதியாய் ஆக்கப்பட்டேன் - அடுத்து என்ன?]</ref>.

அகரமுதல்வன் ஜூனியர் விகடன் பத்திரிகையில் தொடராக எழுதிய கதை கடவுள் பிசாசு நிலம்.
அகரமுதல்வன் ஜூனியர் விகடன் பத்திரிகையில் தொடராக எழுதிய கதை கடவுள் பிசாசு நிலம்.
2021 செப்டம்பர் மாதம் முதல் 2022 ஏப்ரல் வரை 70 பகுதிகளாக வெளியானது.2023ல்  தொகுக்கப்பட்ட இதன் நூல் வடிவம் விகடன் பிரசுரமாக அதே பெயரில் வெளியானது
2021 செப்டம்பர் மாதம் முதல் 2022 ஏப்ரல் வரை 70 பகுதிகளாக வெளியானது.2023ல்  தொகுக்கப்பட்ட இதன் நூல் வடிவம் விகடன் பிரசுரமாக அதே பெயரில் வெளியானது
== இலக்கிய இடம் ==
== இலக்கிய இடம் ==
Line 43: Line 46:
== அடிக்குறிப்புகள் ==
== அடிக்குறிப்புகள் ==
<references />
<references />
{{Finalised}}
{{Finalised}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 20:08, 12 July 2023

To read the article in English: Akaramudhalvan. ‎

அகரமுதல்வன்
அகரமுதல்வன்

அகரமுதல்வன் (பிறப்பு: ஆகஸ்ட் 11, 1992) தமிழில் புனைவுகளும் கட்டுரைகளும் எழுதிவரும் எழுத்தாளர். திரைத்துறையில் பணியாற்றுபவர். இலங்கையில் பிறந்து இந்தியாவில் வாழ்பவர். ஈழநிலத்தின் பின்னணியில் படைப்புகளை உருவாக்குகிறார்.

பிறப்பு, கல்வி

அகரமுதல்வன் இலங்கையில் (ஈழம்) கிளிநொச்சி மாவட்டம் பளை என்னும் ஊரில் ஆகஸ்ட் 11, 1992 அன்று சுந்தரலிங்கம்-ஜெயசோதி இணையருக்குப் பிறந்தார். யாழ்ப்பாணம் (சைவ சன்மார்க்க வித்தியாசாலை), கிளிநொச்சி, முல்லைத்தீவு என பல ஊர்களிலாக பள்ளியிறுதி வரை படித்தார். போர்க்காலத்தில் பிறந்தமையால் இடம்பெயர்ந்தபடியே இருந்தார்.

தனிவாழ்க்கை

ஆகஸ்ட் 27, 2018 அன்று ஜெயப்பிரபாவை மணந்தார். ஆதீரன் என ஒரு மகன். திரைப்படத்துறையில் பணிபுரிகிறார். முழுநேர எழுத்தாளர்.

இலக்கியவாழ்க்கை

அகரமுதல்வனின் முதல் படைப்பு 2000-ல் பிரசுரமான கவிதை. இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்திய முன்னோடிகளென கவிஞர் காசி ஆனந்தன், கவிஞர் புதுவை இரத்தினதுரை, கவிஞர் அம்புலி, கவிஞர் கஸ்தூரி, எழுத்தாளர் ஆதிலட்சுமி சிவக்குமார், மலைமகள், மு. தளையசிங்கம், சண்முகம் சிவலிங்கம் ஆகியோரை குறிப்பிடுகிறார்.

'மூன்று தசாப்தகாலமாக நிகழ்ந்த தமிழீழர்களின் ஆயுதமேந்திய விடுதலைப்போராட்டம் கண்டிருக்கிற வீழ்ச்சியையடுத்து கட்டமைக்கப்படும் அனைத்து பொய்க்கதைகளையும் தகர்க்கவல்ல பேருண்மையை என்னுடைய கதைமாந்தர்கள் சுமக்கிறார்கள்’என தன்புனைவெழுத்தின் நோக்கத்தைகுறிப்பிடுகிறார்[1].

அகரமுதல்வன் ஜூனியர் விகடன் பத்திரிகையில் தொடராக எழுதிய கதை கடவுள் பிசாசு நிலம்.

2021 செப்டம்பர் மாதம் முதல் 2022 ஏப்ரல் வரை 70 பகுதிகளாக வெளியானது.2023ல் தொகுக்கப்பட்ட இதன் நூல் வடிவம் விகடன் பிரசுரமாக அதே பெயரில் வெளியானது

இலக்கிய இடம்

இலங்கையில் போர்ச்சூழலில் பிறந்து வளர்ந்து தமிழகத்தில் குடியேறிய அகரமுதல்வன் ஈழ அகதிகளின் துயர்களையும் ஈழப்போராட்டத்தின் வரலாற்றையும் தனிமனித வாழ்க்கைத்தருணங்களின் வழியாக புனைவாக முன்வைப்பவர். கட்டுரையாளராக ஈழ அரசியலையும் ஈழத்து இலக்கிய மரபையும் பேசிவருகிறார். 'அகரமுதல்வனின் கதைகள் அவரது வலிகளை நமக்கும் பெயர்க்கின்றன. புண்ணில் இருந்து தெறிக்கும் புழுவைப்போல பெரும்பாலான இந்தியத் தமிழ்மனம் ஈழப்பிரச்சனையை வெறுத்து ஒதுக்கும். அகரமுதல்வன் காட்சிப்படுத்தும் ஈழத் தமிழரின் வாழ்க்கை நம்மையே புண்ணாகவும் புழுவாகவும் உணரவைப்பது’ என்று நாஞ்சில்நாடன் குறிப்பிடுகிறார்.[2]

விருதுகள்

  • ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது
  • கோவை வாசகர் வட்ட கவிஞர் மீரா விருது
  • தமிழ்நூல் வெளியீடு மற்றும் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழும விருது

நூல்கள்

  • கடவுள் பிசாசு நிலம்
கவிதை
  • அத்தருணத்தில் பகை வீழ்த்தி
  • அறம் வெல்லும் அஞ்சற்க
  • டாங்கிகளில் சரியும் முல்லை நிலா
சிறுகதை
  • இரண்டாம் லெப்ரினன்ட்
  • முஸ்தபாவைச் சுட்டுக்கொன்ற ஓரிரவு
  • பான் கி மூனின் றுவாண்டா
  • மாபெரும் தாய்
குறுநாவல்
  • உலகின் மிக நீண்ட கழிவறை
நேர்காணல்
  • நன்றேது? தீதேது?
தொகுப்பாசிரியர்
  • ஜெயந்தனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
  • துயிலாத ஊழ் – ஈழச் சமகால சிறுகதைகள்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

✅Finalised Page