under review

பொன்முடியார்: Difference between revisions

From Tamil Wiki
(Corrected text format issues)
No edit summary
Line 28: Line 28:
* [http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/purananooru/purananooru_310.html புறநானூறு 310]
* [http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/purananooru/purananooru_310.html புறநானூறு 310]
* [http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/purananooru/purananooru_312.html புறநானூறு 312]
* [http://www.tamilsurangam.in/literatures/ettuthogai/purananooru/purananooru_312.html புறநானூறு 312]
{{First review completed}}
{{Finalised}}
[[Category:புலவர்கள்]]
[[Category:புலவர்கள்]]
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 10:06, 4 November 2023

பொன்முடியார் சங்க காலப் பெண்பால் புலவர்களில் ஒருவர். இவர் இயற்றிய மூன்று பாடல்கள் சங்கத் தொகை நூலாக புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

பொன்முடியார் மறக்குடியில் பிறந்தவர். சேரநாட்டின் ஒரு பகுதியான குட்டநாட்டின் வடக்குப்பக்கத்தில் பொன்முடி நல்லூர் என்னும் ஊரில் பிறந்தவராக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அரசர் எவரேனும் புலமையைப் பாராட்டி பொன்முடி பரிசளித்ததால் பொன்முடியார் என்ற பெயரைப் பெற்றிருக்கலாம் என்று உ.வே.சா. குறிப்பிடுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

பொன்முடியார் இயற்றிய மூன்று பாடல்கள் சங்க இலக்கியத் தொகை நூலான புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. அவை புறநானூற்றின் 299, 310, 312- வது பாடல்களாக அமைந்துள்ளன.

பாடல்கள் வழி அறியவரும் செய்திகள்

  • குதிரைக்கு உளுந்துச்சக்கையை உணவாக அளித்தனர்.
  • மாதவிடாய்க் காலத்தில் மகளிர் சமையல் செய்வதையும், கோவிலுக்குள் செய்வதையும் தவிர்த்தனர்
  • வீரமரணம் அடைவதும், வீரத்துடன் போராடுவதும் பெருமையாகக் கருதப்பட்டன. நாட்டைக் காக்க போர் புரிவது ஆடவர் கடமையாகக் கருதப்பட்டது.
  • நாட்டிற்காக போர் புரிந்து இறந்த கணவனைக் கொண்ட மனைவியின் நிலை
  • மகனை போர்க்களத்தில் இழந்த தாய் அடையும் இன்ப வருத்தம்

பாடல் நடை

  • புறநானூறு 310 (திணை: தும்பை) (துறை: நூழிலாட்டு)

பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியொடு
உயவொடு வருந்தும் மனனே! இனியே
புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்,
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே; 5
உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு
மான்உளை அன்ன குடுமித்
தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே.

உசாத்துணை


✅Finalised Page