பரிமாணம் (இதழ்): Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 7: Line 7:


ஞானி, [[எஸ்.என்.நாகராஜன்]] ஆகியோர் புதிய தலைமுறை இதழின் காலம் முதல் முன்வைத்துவந்த மேலைமார்க்சியம் (ஐரோப்பிய மார்க்சியம்) மற்றும் அன்னியமாதல் கோட்பாட்டை இவ்விதழின் கட்டுரைகள் முன்வைத்தன.
ஞானி, [[எஸ்.என்.நாகராஜன்]] ஆகியோர் புதிய தலைமுறை இதழின் காலம் முதல் முன்வைத்துவந்த மேலைமார்க்சியம் (ஐரோப்பிய மார்க்சியம்) மற்றும் அன்னியமாதல் கோட்பாட்டை இவ்விதழின் கட்டுரைகள் முன்வைத்தன.
உசாத்துணை
*[https://kovaignani.org/ கோவை ஞானி இணையதளம்]
*[https://www.hindutamil.in/news/opinion/columns/566117-kovai-gnani.html எஸ்.வி.ராஜதுரை- ஞானி பற்றி நினைவு]
*[https://www.hindutamil.in/news/opinion/columns/134149--8.html ஞானி பேட்டி]
*[https://www.dinamani.com/tamilnadu/2020/jul/24/life-history-of-tamil-writer-kovai-gnani-3440724.html காலத்தில் கரையாத ஞானி]
*[http://kovaignani.org/photographs ஞானி படங்கள்]
*https://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-13/27082-79
*[https://www.dinamani.com/specials/nool-aragam/2019/may/20/%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-3154720.html ஞானி சமதர்ம படைப்பாளுமை]
*https://www.hindutamil.in/news/blogs/566205-kovai-gnani-5.html
*[https://tamilvanakkam.com/2018/11/26/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF/ ஞானிக்கு இயல் விருது/]

Revision as of 07:50, 15 February 2022

பரிணாமம் (1979-1983) ஞானி கோவையில் இருந்து நடத்திய சிற்றிதழ். மார்க்சியச் சிந்தனைகளுக்காக இச்சிற்றிதழ் நடத்தப்பட்டது.

வரலாறு

ஞானி 1971 முதல் 1976 வரை வானம்பாடி இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். வானம்பாடி இதழின் அரசியல்கொள்கையாளர் ஞானி. அவர் அதை மார்க்சிய இலக்கிய இதழாக நிலைநிறுத்த முயன்றார். ஆனால் இந்தியாவில் இந்திராகாந்தியால் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டபோது வானம்பாடி கவிஞர்களில் ஒரு சாரார் மு.மேத்தா தலைமையில் அதை ஆதரித்தனர். பலர் அமைதியடைந்தனர். வானம்பாடி இதழ் நின்றது. அதிருப்தி அடைந்த ஞானி வானம்பாடி இயக்கத்தில் இருந்து விலகினார். வானம்பாடி இதழை சிற்பி பொள்ளாச்சியில் இருந்து நடத்தினார். ஞானி மார்க்சியச் சிந்தனைகலுக்காக பரிணாமம் இதழை தொடங்கினார். 1979 முதல் 1983 வரை மும்மாதத்திற்கு ஒருமுறை வெளிவந்த இவ்விதழ் மொத்தம் 8 இலக்கங்களே வெளியாயிற்று

பங்களிப்பு

ஞானி, எஸ்.என்.நாகராஜன் ஆகியோர் புதிய தலைமுறை இதழின் காலம் முதல் முன்வைத்துவந்த மேலைமார்க்சியம் (ஐரோப்பிய மார்க்சியம்) மற்றும் அன்னியமாதல் கோட்பாட்டை இவ்விதழின் கட்டுரைகள் முன்வைத்தன.

உசாத்துணை