ஞானி: Difference between revisions

From Tamil Wiki
No edit summary
No edit summary
Line 1: Line 1:
[[File:ஞானி1.png|thumb|ஞானி]]
[[File:ஞானி1.png|thumb|ஞானி]]
ஞானி ( 1 ஜூலை 1935 ஜூலை 22, 2020) கோவை ஞானி (கி.பழனிச்சாமி) தமிழில் செயல்பட்ட இலக்கிய ஆய்வாளர், இதழாளர், மார்க்ஸியச் சிந்தனையாளர். வானம்பாடி இயக்கத்தின் கோட்பாட்டாளார். புதிய தலைமுறை, நிகழ் , தமிழ்நேயம் ஆகிய சிற்றிதழ்களை நடத்தியவர். மார்க்ஸியக் கோணத்தில் இலக்கிய விமர்சனங்களை முன்வைத்தவர்.பண்பாட்டை வெறுமே பொருளியல் அடிப்படையில் ஆராயும் செவ்வியல் மார்க்சியத்துக்கு எதிரானவர். அண்டோனியோ கிராம்ஷி , அல்தூஸர் போன்ற நவமார்க்சியர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர். இளம் மார்க்ஸ் முன்வைத்த அன்னியமாதல் கோட்பாட்டின் அடிப்படையில் மார்க்சியத்தை விளக்க முயன்றவர்.
ஞானி (1 ஜூலை 1935 -ஜூலை 22, 2020) கோவை ஞானி (கி.பழனிச்சாமி) தமிழில் செயல்பட்ட இலக்கிய ஆய்வாளர், இதழாளர், மார்க்ஸியச் சிந்தனையாளர். வானம்பாடி இயக்கத்தின் கோட்பாட்டாளார். புதிய தலைமுறை, நிகழ் , தமிழ்நேயம் ஆகிய சிற்றிதழ்களை நடத்தியவர். மார்க்ஸியக் கோணத்தில் இலக்கிய விமர்சனங்களை முன்வைத்தவர்.பண்பாட்டை வெறுமே பொருளியல் அடிப்படையில் ஆராயும் செவ்வியல் மார்க்சியத்துக்கு எதிரானவர். அண்டோனியோ கிராம்ஷி , அல்தூஸர் போன்ற நவமார்க்சியர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர். இளம் மார்க்ஸ் முன்வைத்த அன்னியமாதல் கோட்பாட்டின் அடிப்படையில் மார்க்சியத்தை விளக்க முயன்றவர்.


== பிறப்பு,கல்வி ==
== பிறப்பு,கல்வி ==
கி. பழனிச்சாமி என்னும் இயற்பெயர் கொண்ட ஞானி கோயம்புத்தூர் மாவட்டம், சோமனூரில் கிருஷ்ணசாமி, மாரியம்மாள் ஆகியோருக்கு எட்டுப் பிள்ளைகளில் ஒருவராகப் பிறந்தார். கோவையிலும், பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் தமிழிலக்கியத்தில் புலவர் பட்டம் பெற்றார்.  
கி. பழனிச்சாமி என்னும் இயற்பெயர் கொண்ட ஞானி 1 ஜூலை 1935 ல்  கோயம்புத்தூர் மாவட்டம், சோமனூரில் கிருஷ்ணசாமி, மாரியம்மாள் ஆகியோருக்கு எட்டுப் பிள்ளைகளில் ஒருவராக  பிறந்தார். கோவையில் பள்ளி இறுதி முடித்தபின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியத்தில் பி.ஓ.எல் பட்டம் பெற்றார்.  


== தனிவாழ்க்கை ==
== தனிவாழ்க்கை ==
தமிழாசிரியராக கோவையில் 30 ஆண்டு காலம் பணியாற்றினார். நீரிழிவு நோய் காரணமாக தனது கண்பார்வை இழந்தால் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது துணைவியார் மு. இந்திராணி, உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் 2012 இல் புற்றுநோயால் காலமானார். இவர்களுக்கு பாரிவள்ளல், மாதவன் என இரு மகன்கள்.
தமிழாசிரியராக கோவையில் 30 ஆண்டு காலம் பணியாற்றினார். நீரிழிவு நோய் காரணமாக கண்பார்வை இழந்ததால் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது துணைவியார் மு. இந்திராணி, உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் 2012 இல் புற்றுநோயால் காலமானார். இவர்களுக்கு பாரிவள்ளல், மாதவன் என இரு மகன்கள்.


== அரசியல் வாழ்க்கை ==
== அரசியல் வாழ்க்கை ==
ஞானி கல்லூரி நாட்களில் தமிழியக்கத்தின் ஆதரவாளர் ஆனார். திராவிட இயக்கச்சார்பும் [[பெரியாரியம்]] சார்ந்த ஈடுபாடும் உருவானது. பின்னர் மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சி ஆதரவாளர் ஆனார். மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் கலையிலக்கிய அமைப்புகளில் பங்கேற்றார். 1966ல் மார்க்ஸிய ஆய்வாளரான [[எஸ். என். நாகராஜன்]] தொடர்பு கிடைத்தது. கட்சிசார்பான மார்க்ஸியத்தின் விமர்சகராக ஆனார். இடதுசாரி தீவிர இயக்கங்களுடன் (நக்சலைட் இயக்கம்) அவரை கவர்ந்தது.
ஞானி கல்லூரி நாட்களில் தமிழியக்கத்தின் ஆதரவாளர் ஆனார். திராவிட இயக்கச்சார்பும் [[பெரியாரியம்]] சார்ந்த ஈடுபாடும் உருவானது. பின்னர் மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சி ஆதரவாளர் ஆனார். மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் கலையிலக்கிய அமைப்புகளில் பங்கேற்றார். 1960-களில் கோவையில் செயல்பட்ட  ‘சிந்தனை மன்றம்’ என்னும் அமைப்பு [[எஸ்.வி.ராஜதுரை]], [[எஸ்.என் நாகராஜன்]] போன்றவர்கள் ஒருங்கிணைந்து விவாதிக்க களம் அமைத்தது. அந்த மன்றத்தில்தான் எஸ்.என்.நாகராஜன் மார்க்ஸின் ‘அந்நியமாதல்’ கருத்தாக்கத்தையும் விளக்கிக்கூறி, மார்க்ஸியம் பற்றிய  புரிதலில் ஒரு திருப்புமுனையை உருவாக்கினார் என எஸ்.வி.ராஜதுரை குறிப்பிடுகிறார். ஜோசப் நீதாம் (Joseph Needham) எழுதிய [https://archive.org/details/timerefreshingri00need Time: the refreshing river] (1932-1942) என்னும் நூல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த ஞானியை மிகவும் கவர்ந்தது என்றும் மார்க்ஸியத்தையும் ஆன்மிகத்தையும் இணைத்துப் பார்ப்பதில் ஞானிக்கு உள்உந்துதல் தந்தவர் நீதாம்தான் என்றும் எஸ்.வி.ராஜதுரை குறிப்பிடுகிறார். அண்டோனியோ கிராம்ஷியின் சிந்தனைகள் எஸ்.என்.நாகராஜன், ஞானி, எஸ்.வி.ராஜதுரை ஆகியோரை பெரிதும் கவர்ந்தன. வழக்கமான மார்க்ஸியப் பார்வை கலையிலக்கியம் பற்றியும் ஆன்மிகம் பற்றியும் கொண்டிருந்த எல்லைகளை கடக்க அவர்களுக்கு கிராம்ஷி உதவினார்.
 
சீனாவில் மாவோ 1966-ல் பாட்டாளி வர்க்கக் கலாச்சாரப் புரட்சியைத் தொடங்கி வைத்திருந்தார். உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் புரட்சிப் போராட்டங்கள் நடைபெற்றுவந்த காலம் அது. சின்னஞ்சிறு வியத்நாம், உலகின் மிகப் பெரும் ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தியது. 1968-ல் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மாணவர் போராட்டங்கள் முகிழ்த்தெழுந்தன. அந்த ஆண்டில் பிரான்ஸில் மாணவர்களும் இளம் தொழிலாளர்களும் அதிகாரபூர்வமான கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்புக்கிடையில் நடத்திய புரட்சிகரப் போராட்டம், அங்கு மாபெரும் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்னும் நம்பிக்கையை எங்களுக்குத் தந்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் தோன்றிய நக்ஸலைட் இயக்கம் எங்களை ஈர்த்ததில் வியப்பில்லை.
 
 
1966ல் மார்க்ஸிய ஆய்வாளரான [[எஸ். என். நாகராஜன்]] தொடர்பு கிடைத்தது. கட்சிசார்பான மார்க்ஸியத்தின் விமர்சகராக ஆனார். இடதுசாரி தீவிர இயக்கங்களுடன் (நக்சலைட் இயக்கம்) அவரை கவர்ந்தது.


எஸ்.என்.நாகராஜனின் தொடர்பால் ஞானி மார்க்ஸியம் சார்ந்த சமூக மாற்றம் என்பது பண்பாட்டு அடிப்படைகளில் உருவாகும் வளர்ச்சிமாற்றம் வழியாகவே நிகழமுடியும் என்னும் எண்ணத்தை அடைந்தார். அதற்கு தத்துவக் கல்வியும், கலையிலக்கியங்களில் மாற்றுச்சிந்தனையும் உருவாகவேண்டும் என எண்ணினார். அதன்பொருட்டு புதிய தலைமுறை என்னும் கோட்பாட்டு இதழை எஸ்.என்.நாகராஜனுடன் இணைந்து நடத்தினார். [[வானம்பாடி]] இலக்கிய இதழ், பரிமாணம் மார்க்ஸிய இதழ், நிகழ் கலையிலக்கிய இதழ் ஆகியவற்றை நடத்தினார்
எஸ்.என்.நாகராஜனின் தொடர்பால் ஞானி மார்க்ஸியம் சார்ந்த சமூக மாற்றம் என்பது பண்பாட்டு அடிப்படைகளில் உருவாகும் வளர்ச்சிமாற்றம் வழியாகவே நிகழமுடியும் என்னும் எண்ணத்தை அடைந்தார். அதற்கு தத்துவக் கல்வியும், கலையிலக்கியங்களில் மாற்றுச்சிந்தனையும் உருவாகவேண்டும் என எண்ணினார். அதன்பொருட்டு புதிய தலைமுறை என்னும் கோட்பாட்டு இதழை எஸ்.என்.நாகராஜனுடன் இணைந்து நடத்தினார். [[வானம்பாடி]] இலக்கிய இதழ், பரிமாணம் மார்க்ஸிய இதழ், நிகழ் கலையிலக்கிய இதழ் ஆகியவற்றை நடத்தினார்
Line 25: Line 30:


== இலக்கிய வாழ்க்கை ==
== இலக்கிய வாழ்க்கை ==
ஞானி தொடக்கத்தில் மரபான மார்க்ஸிய நோக்கில் இலக்கியத்தை வர்க்கப்போராட்டத்திற்கான கருத்துக்களை புனைவுகள் வழியாக முன்வைக்கவேண்டிய அறிவுத்துறை என்னும் வரையறையுடனேயே அணுகினார். வர்க்கப்புரட்சிக்கு நேரடியாக உதவாத எழுத்துக்களை எதிர்த்தரப்பின் குரல் என வரையறை செய்தார். 1982ல் வானம்பாடி இதழின் முடிவுக்காலம் வரை அவருடைய அணுகுமுறை அதுவாகவே இருந்தது. வானம்பாடி குழுவினரில் ஒரு சாரார் பின்னர் [[பிரமிள்]], [[க.நா.சுப்ரமணியம்]] போன்றவர்களிடம் ஓர் உரையாடலுக்கு முயன்றார்கள். ஞானி அந்த உரையாடலில் முன்னின்றார். கலையிலக்கியம் தனக்கான தனிப்போக்கு கொண்டது என்றும், அரசியல் அல்லது பொருளியல் சார்ந்த பார்வையால் அதை அணுகக்கூடாது என்றும் எண்ணனாலானார். எஞ்சிய வாழ்க்கை முழுக்க ஞானியின் இலக்கியப் பணி என்பது தத்துவ நோக்கில் இலக்கியத்தையும் மதத்தையும் ஆன்மிகத்தையும் புரிந்துகொள்வதற்கும் வகுத்துரைப்பதற்குமான முயற்சிதான்.   
ஞானி தொடக்கத்தில் மரபான மார்க்ஸிய நோக்கில் இலக்கியத்தை வர்க்கப்போராட்டத்திற்கான கருத்துக்களை புனைவுகள் வழியாக முன்வைக்கவேண்டிய அறிவுத்துறை என்னும் வரையறையுடனேயே அணுகினார். வர்க்கப்புரட்சிக்கு நேரடியாக உதவாத எழுத்துக்களை எதிர்த்தரப்பின் குரல் என வரையறை செய்தார். 1982ல் வானம்பாடி இதழின் முடிவுக்காலம் வரை அவருடைய அணுகுமுறை அதுவாகவே இருந்தது. வானம்பாடி குழுவினரில் ஒரு சாரார் பின்னர் [[பிரமிள்]], [[க.நா.சுப்ரமணியம்]] போன்றவர்களிடம் ஓர் உரையாடலுக்கு முயன்றார்கள். ஞானி அந்த உரையாடலில் முன்னின்றார். கலையிலக்கியம் தனக்கான தனிப்போக்கு கொண்டது என்றும், அரசியல் அல்லது பொருளியல் சார்ந்த பார்வையால் அதை அணுகக்கூடாது என்றும் எண்ணனாலானார். எஞ்சிய வாழ்க்கை முழுக்க ஞானியின் இலக்கியப் பணி என்பது தத்துவ நோக்கில் இலக்கியத்தையும் மதத்தையும் ஆன்மிகத்தையும் புரிந்துகொள்வதற்கும் வகுத்துரைப்பதற்குமான முயற்சிதான். ஞானி மார்க்சியப் பார்வையில் நவீனத்தமிழிலக்கியம் சார்ந்து விரிவான விமர்சனத்தை முன்வைத்தார். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கொள்கைகள், சித்தர் மரபு, ஈ.வே.ராமசாமி பெரியார் கருத்துக்கள் ஆகியவற்றை மார்க்ஸிய தத்துவ அடிப்படையில் மதிப்பிட்டார். அதன் பொருட்டு கட்டுரைகள் எழுதியும், உரைகள் ஆற்றியும் தொடர்ந்து செயல்பட்டார்.   


== விருதுகள் ==
== விருதுகள் ==
* தமிழ்நாடு அரசின், தமிழ் வளர்ச்சித் துறை விருது 2006 (''மார்க்சியம் பெரியாரியம்)''புதுமைப்பித்தன் ‘விளக்கு விருது’ (1998)
* தமிழ்நாடு அரசின், தமிழ் வளர்ச்சித் துறை விருது 2006 (''மார்க்சியம் பெரியாரியம்)''புதுமைப்பித்தன் ‘விளக்கு விருது’ (1998)
* கனடா–தமிழிலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது (2010)
* கனடா–தமிழிலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது (2010)
Line 98: Line 102:
* நிகழ் நூல் திறனாய்வுகள் 100 - 2001
* நிகழ் நூல் திறனாய்வுகள் 100 - 2001
* பெண்கள் வாழ்வியலும் படைப்பும் - 2003
* பெண்கள் வாழ்வியலும் படைப்பும் - 2003
== உசாத்துணை ==
*[https://www.hindutamil.in/news/opinion/columns/566117-kovai-gnani.html எஸ்.வி.ராஜதுரை- ஞானி பற்றி நினைவு]

Revision as of 18:49, 14 February 2022

ஞானி

ஞானி (1 ஜூலை 1935 -ஜூலை 22, 2020) கோவை ஞானி (கி.பழனிச்சாமி) தமிழில் செயல்பட்ட இலக்கிய ஆய்வாளர், இதழாளர், மார்க்ஸியச் சிந்தனையாளர். வானம்பாடி இயக்கத்தின் கோட்பாட்டாளார். புதிய தலைமுறை, நிகழ் , தமிழ்நேயம் ஆகிய சிற்றிதழ்களை நடத்தியவர். மார்க்ஸியக் கோணத்தில் இலக்கிய விமர்சனங்களை முன்வைத்தவர்.பண்பாட்டை வெறுமே பொருளியல் அடிப்படையில் ஆராயும் செவ்வியல் மார்க்சியத்துக்கு எதிரானவர். அண்டோனியோ கிராம்ஷி , அல்தூஸர் போன்ற நவமார்க்சியர்களை தமிழுக்கு அறிமுகம் செய்தவர். இளம் மார்க்ஸ் முன்வைத்த அன்னியமாதல் கோட்பாட்டின் அடிப்படையில் மார்க்சியத்தை விளக்க முயன்றவர்.

பிறப்பு,கல்வி

கி. பழனிச்சாமி என்னும் இயற்பெயர் கொண்ட ஞானி 1 ஜூலை 1935 ல் கோயம்புத்தூர் மாவட்டம், சோமனூரில் கிருஷ்ணசாமி, மாரியம்மாள் ஆகியோருக்கு எட்டுப் பிள்ளைகளில் ஒருவராக பிறந்தார். கோவையில் பள்ளி இறுதி முடித்தபின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழிலக்கியத்தில் பி.ஓ.எல் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

தமிழாசிரியராக கோவையில் 30 ஆண்டு காலம் பணியாற்றினார். நீரிழிவு நோய் காரணமாக கண்பார்வை இழந்ததால் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது துணைவியார் மு. இந்திராணி, உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றியவர். இவர் 2012 இல் புற்றுநோயால் காலமானார். இவர்களுக்கு பாரிவள்ளல், மாதவன் என இரு மகன்கள்.

அரசியல் வாழ்க்கை

ஞானி கல்லூரி நாட்களில் தமிழியக்கத்தின் ஆதரவாளர் ஆனார். திராவிட இயக்கச்சார்பும் பெரியாரியம் சார்ந்த ஈடுபாடும் உருவானது. பின்னர் மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சி ஆதரவாளர் ஆனார். மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் கலையிலக்கிய அமைப்புகளில் பங்கேற்றார். 1960-களில் கோவையில் செயல்பட்ட ‘சிந்தனை மன்றம்’ என்னும் அமைப்பு எஸ்.வி.ராஜதுரை, எஸ்.என் நாகராஜன் போன்றவர்கள் ஒருங்கிணைந்து விவாதிக்க களம் அமைத்தது. அந்த மன்றத்தில்தான் எஸ்.என்.நாகராஜன் மார்க்ஸின் ‘அந்நியமாதல்’ கருத்தாக்கத்தையும் விளக்கிக்கூறி, மார்க்ஸியம் பற்றிய புரிதலில் ஒரு திருப்புமுனையை உருவாக்கினார் என எஸ்.வி.ராஜதுரை குறிப்பிடுகிறார். ஜோசப் நீதாம் (Joseph Needham) எழுதிய Time: the refreshing river (1932-1942) என்னும் நூல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த ஞானியை மிகவும் கவர்ந்தது என்றும் மார்க்ஸியத்தையும் ஆன்மிகத்தையும் இணைத்துப் பார்ப்பதில் ஞானிக்கு உள்உந்துதல் தந்தவர் நீதாம்தான் என்றும் எஸ்.வி.ராஜதுரை குறிப்பிடுகிறார். அண்டோனியோ கிராம்ஷியின் சிந்தனைகள் எஸ்.என்.நாகராஜன், ஞானி, எஸ்.வி.ராஜதுரை ஆகியோரை பெரிதும் கவர்ந்தன. வழக்கமான மார்க்ஸியப் பார்வை கலையிலக்கியம் பற்றியும் ஆன்மிகம் பற்றியும் கொண்டிருந்த எல்லைகளை கடக்க அவர்களுக்கு கிராம்ஷி உதவினார்.

சீனாவில் மாவோ 1966-ல் பாட்டாளி வர்க்கக் கலாச்சாரப் புரட்சியைத் தொடங்கி வைத்திருந்தார். உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் புரட்சிப் போராட்டங்கள் நடைபெற்றுவந்த காலம் அது. சின்னஞ்சிறு வியத்நாம், உலகின் மிகப் பெரும் ஏகாதிபத்திய நாடான அமெரிக்காவை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தியது. 1968-ல் அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் மாணவர் போராட்டங்கள் முகிழ்த்தெழுந்தன. அந்த ஆண்டில் பிரான்ஸில் மாணவர்களும் இளம் தொழிலாளர்களும் அதிகாரபூர்வமான கம்யூனிஸ்ட் கட்சியின் எதிர்ப்புக்கிடையில் நடத்திய புரட்சிகரப் போராட்டம், அங்கு மாபெரும் சமூக, பொருளாதார, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்னும் நம்பிக்கையை எங்களுக்குத் தந்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் தோன்றிய நக்ஸலைட் இயக்கம் எங்களை ஈர்த்ததில் வியப்பில்லை.


1966ல் மார்க்ஸிய ஆய்வாளரான எஸ். என். நாகராஜன் தொடர்பு கிடைத்தது. கட்சிசார்பான மார்க்ஸியத்தின் விமர்சகராக ஆனார். இடதுசாரி தீவிர இயக்கங்களுடன் (நக்சலைட் இயக்கம்) அவரை கவர்ந்தது.

எஸ்.என்.நாகராஜனின் தொடர்பால் ஞானி மார்க்ஸியம் சார்ந்த சமூக மாற்றம் என்பது பண்பாட்டு அடிப்படைகளில் உருவாகும் வளர்ச்சிமாற்றம் வழியாகவே நிகழமுடியும் என்னும் எண்ணத்தை அடைந்தார். அதற்கு தத்துவக் கல்வியும், கலையிலக்கியங்களில் மாற்றுச்சிந்தனையும் உருவாகவேண்டும் என எண்ணினார். அதன்பொருட்டு புதிய தலைமுறை என்னும் கோட்பாட்டு இதழை எஸ்.என்.நாகராஜனுடன் இணைந்து நடத்தினார். வானம்பாடி இலக்கிய இதழ், பரிமாணம் மார்க்ஸிய இதழ், நிகழ் கலையிலக்கிய இதழ் ஆகியவற்றை நடத்தினார்

1992ல் சோவியத் ருஷ்யாவின் உடைவுக்குப்பின் ஞானியின் அரசியல் பார்வையில் பெரும் மாற்றம் உருவானது. மார்க்சிய விடுதலை என்பது தேசிய இனங்களின் விடுதலையின் வழியாகவே அடையப்பட முடியும் என்னும் எண்ணத்தை அடைந்தார். ஆகவே தமிழியக்கச் சிந்தனைகளுக்கு அணுக்கமானவரானார். தமிழ்நேயம் என்னும் சிற்றிதழை வெளியிட்டார். தமிழியக்கம், பெரியாரியம், ஆகியவற்றை மார்க்ஸியப்பார்வையுடன் இணைக்கமுயன்றார்

இதழியல்

ஞானி 1968 முதல் தொடர்ச்சியாக அரசியல் மற்றும் இலக்கியச் சிற்றிதழ்களை நடத்தி வந்தார்.ஞானி நடத்திய சிற்றிதழ்கள்

  • புதிய தலைமுறை (1968-70)
  • வானம்பாடி (1971- 1982)
  • பரிமாணம் (1979-83
  • நிகழ் (1988-96)
  • தமிழ்நேயம் (1998-2012)

இலக்கிய வாழ்க்கை

ஞானி தொடக்கத்தில் மரபான மார்க்ஸிய நோக்கில் இலக்கியத்தை வர்க்கப்போராட்டத்திற்கான கருத்துக்களை புனைவுகள் வழியாக முன்வைக்கவேண்டிய அறிவுத்துறை என்னும் வரையறையுடனேயே அணுகினார். வர்க்கப்புரட்சிக்கு நேரடியாக உதவாத எழுத்துக்களை எதிர்த்தரப்பின் குரல் என வரையறை செய்தார். 1982ல் வானம்பாடி இதழின் முடிவுக்காலம் வரை அவருடைய அணுகுமுறை அதுவாகவே இருந்தது. வானம்பாடி குழுவினரில் ஒரு சாரார் பின்னர் பிரமிள், க.நா.சுப்ரமணியம் போன்றவர்களிடம் ஓர் உரையாடலுக்கு முயன்றார்கள். ஞானி அந்த உரையாடலில் முன்னின்றார். கலையிலக்கியம் தனக்கான தனிப்போக்கு கொண்டது என்றும், அரசியல் அல்லது பொருளியல் சார்ந்த பார்வையால் அதை அணுகக்கூடாது என்றும் எண்ணனாலானார். எஞ்சிய வாழ்க்கை முழுக்க ஞானியின் இலக்கியப் பணி என்பது தத்துவ நோக்கில் இலக்கியத்தையும் மதத்தையும் ஆன்மிகத்தையும் புரிந்துகொள்வதற்கும் வகுத்துரைப்பதற்குமான முயற்சிதான். ஞானி மார்க்சியப் பார்வையில் நவீனத்தமிழிலக்கியம் சார்ந்து விரிவான விமர்சனத்தை முன்வைத்தார். ஜே.கிருஷ்ணமூர்த்தியின் கொள்கைகள், சித்தர் மரபு, ஈ.வே.ராமசாமி பெரியார் கருத்துக்கள் ஆகியவற்றை மார்க்ஸிய தத்துவ அடிப்படையில் மதிப்பிட்டார். அதன் பொருட்டு கட்டுரைகள் எழுதியும், உரைகள் ஆற்றியும் தொடர்ந்து செயல்பட்டார்.

விருதுகள்

  • தமிழ்நாடு அரசின், தமிழ் வளர்ச்சித் துறை விருது 2006 (மார்க்சியம் பெரியாரியம்)புதுமைப்பித்தன் ‘விளக்கு விருது’ (1998)
  • கனடா–தமிழிலக்கியத் தோட்ட ‘இயல்’ விருது (2010)
  • எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராயம் வழங்கிய ‘பரிதிமாற் கலைஞர்’ விருது (2013)
  • இந்து தமிழ் திசை வழங்கிய சாதனையாளர் விருது (2019)

மறைவு

கோவை ஞானி 22 ஜூலை 2020 அன்று தனது 86-வது வயதில் கோவை, துடியலூர் வி. ஆர். வி நகரில் காலமானார்.

நூல்கள்

இலக்கிய விமர்சனம்
  • மார்க்சியமும் தமிழ் இலக்கியமும் - 1988
  • தமிழகத்தில் பண்பாட்டு நெருக்கடிகள் - 1994
  • எண்பதுகளில் தமிழ் நாவல்கள் - 1994
  • படைப்பியல் நோக்கில் தமிழிலக்கியம் -
  • தமிழில் நவீனத்துவம் பின்நவீனத்துவம் - 1997
  • நானும் என் தமிழும் - 1999
  • தமிழன் வாழ்வும் வரலாறும் - 1999
  • தமிழில் படைப்பியக்கம் - 1999
  • மறுவாசிப்பில் தமிழ் இலக்கியம் - 2001
  • எதிர் எதிர் கோணங்களில் - 2002
  • மார்க்சிய அழகியல் - 2002
  • கவிதையிலிருந்து மெய்யியலுக்கு - 2002
  • தமிழ் தமிழர் தமிழ் இயக்கம் - 2003
  • தமிழ் நாவல்களில் தேடலும் திரட்டலும் - 2004
  • வரலாற்றில் தமிழர் தமிழ் இலக்கியம் - 2004
  • தமிழ் வாழ்வியல் தடமும் திசையும் - 2005
  • தமிழன்பன் படைப்பும் பார்வையும் - 2005
  • வள்ளுவரின் அறவியலும் அழகியலும் - 2007
  • தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும் - 2008
  • நெஞ்சில் தமிழும் நினைவில் தேசமும் - 2009
  • செவ்வியல் நோக்கில் சங்க இலக்கியம் - 2010
  • தமிழிலக்கியம் இன்றும் இனியும் - 2010
  • வானம்பாடிகளின் கவிதை இயக்கம் - 2011
  • ஏன் வேண்டும் தமிழ்த் தேசியம் - 2012
  • அகமும் புறமும் புதுப்புனல் - 2012
  • அகமும் புறமும் தமிழ்நேயம் - 2012
  • ஞானியின் எழுத்துலகம் - 2005
  • ஞானியோடு நேர்காணல் - 2012
மெய்யியல்
  • மார்க்சியத்திற்கு அழிவில்லை - 2001
  • மார்க்சியமும் மனித விடுதலையும் - 2012
  • இந்திய வாழ்க்கையும் மார்க்சியமும் - 1975
  • மணல் மேட்டில் ஓர் அழகிய வீடு - 1976
  • கடவுள் ஏன் இன்னும் சாகவில்லை - 1996
  • நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும் - 2006
கவிதை
  • கல்லிகை - 1995
  • தொலைவிலிருந்து - 1989
  • கல்லும் முள்ளும் கவிதைகளும் - 2012

தொகுப்பு நூல்கள்

  • தமிழ்த் தேசியம் பேருரைகள் - 1997
  • அறிவியல் அதிகாரம் ஆன்மீகம் - 1997
  • மார்க்சியத்தின் எதிர்காலம் - 1998
  • படைப்பிலக்கியம் சில சிகரங்களும் வழித்தடங்களும் - 1999
  • மார்க்சியத்தின் புதிய பரிமாணங்கள் - 1999
  • விடுதலை இறையியல் - 1999
  • இந்தியாவில் தத்துவம் கலாச்சாரம் - 2000
  • மார்க்சியம் தேடலும் திறனாய்வும் - 2000
  • நிகழ் நூல் திறனாய்வுகள் 100 - 2001
  • பெண்கள் வாழ்வியலும் படைப்பும் - 2003

உசாத்துணை